புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொரகொட, டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்கா, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Kusumpu
காலம் கனிந்திருக்கிறது. தேர்தல் காலத்தில் வாங்கிறதை வாங்கிக்கொண்டு விட்டுவிடவேணும். தருகிறதை எல்லாம் தாருங்கள்.
பல்லி
உன்மை குசும்பு; தருகிறதை மட்டுமல்ல தேவையானதை கேட்டும் வாங்கும் நேரம் இது;
Appu hammy
2010 NEW JOKES!
கடந்தவாரம் ஜனாதிபதிக்கும் புளொட் தூதுக்குழுவினருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின்போது புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்ட மற்றும் சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது பெற்றோர்களிடம் இணைந்து வாழவைப்பதே சிறந்த புனர்வாழ்வாகும் என்று புளொட் சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.
santhanam
சிங்களவன் காலில் தமிழன் இது யாரால் சுயநலன் மிக்க தமிழனால் வாக்கு வேட்டைக்கு வடக்கு கிழக்கில் தமிழ் சிங்களஅரசியல்வாதிகள் வெற்றி பெற்றவுடன் கொழும்பிலும் புலம்பெயர் தேசத்திலும் சொகுசு வாழ்க்கை…….
DEMOCRACY
“சொகுசு போர்க்கப்பல் என்பது இதுதான்”–yarl.com/forum3/index.php?showtopic=67572