நாடுகளுக் கிடையிலான ஆப்பிரிக்கக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக டோகோ அணியினர் பயணித்த பேருந்து துப்பாக்கிதாரிகளால் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதை அடுத்து, அந்த சுற்றுப் போட்டியில் இருந்து விலகுவது என்று டோகோவின் தேசிய விளையாட்டு அணியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக அங்கோலாவில் இருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.
இதில் கொல்லப்பட்ட ஓட்டுனரை அடுத்து மேலும் காயமடைந்த ஒரு ஊடக அதிகாரியும், துணை பயிற்றுவிப்பாளரும் மரணமானதால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.
மேலும் ஆறு பேர் இதில் காயமடைந்துள்ளனர்.
காங்கோ பிரசவில்லில் இருந்து அங்கோலிய கபிந்த பகுதிக்கு பேருந்து நுழைந்தபோது துப்பாக்கிதாரிகள் அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிரிவினைவாதத் தீவிரவாதிகள் தாமே இந்தத்தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.