‘இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான்’ – சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kஇனப் பற்றுள்ள எந்தத் தமிழனும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தத் திட்டமும் இராணுவத் தளபதியிடம் இல்லை. இறுதிவரை யுத்தம் நடத்திய ஓர் இராணுவத் தளபதியைத் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிப்பது துர்ப்பாக்கியம் என்றும் தேசிய தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஓர் இராணுவ அதிகாரி அரசாங்க அதிபராக இருந்தபோது, வடமாகாணத்துக்கு ஓர் இராணுவத் தளபதியை நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த சம்பந்தன், நாட்டின் தலைவராகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்கும் ஓர் இராணுவத் தளபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை மக்களைத் தவறாக வழிநடத்தும் முடிவாகும். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடப்பதை மறுக்க முடியாது. இந்தத் தேர்தலில் ‘தமிழ் மக்களின் சுயத்தை வெளிப்படுத்தவே தனித்துப் போட்டியிடு கிறேன்’ என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    /nallurkanthan on January 9, 2010 2:53 pm
    Sambanthan company decision to support SF is nothing but the traditional tamil leaders sworn alignment with the UNP.If you back to history the role of tamil leders can be understood.They always were part of the UNP govt.They wanted to do the same thing when UNP came to power in 1977…./—கலைஞர் மு.கருணாநிதி, தோற்கின்ற குதிரையில் எப்போதுமே பணம் கட்ட மாட்டார், “குதிரை ரேஸ்” நடத்தும் அண்ணாமலை செட்டியாரைக் (எம்.ஏ.எம்.ஆர்.)கேட்டால் தெரியும்!. ஆகையால்தான், மகள் கனிமொழியை (தலித்தியம் + பெண்ணியம்) முன்னேற்ப்பாடாக, “மகிந்த ராஜபக்ஷேவுக்கு சால்வை அணிவிக்க வைத்தார்”. இப்பகுதியில் எஞ்சியிருக்கும், அனுபவம் மிக்க, அரசியல் “குயுக்தி மூளை”, ஜே.ஆர்.ஜெயவர்த்த்னேவுக்குப் பிறகு, கலைஞர் கருணாநிதிதான்!. ஆனால் அவருடைய மூளைக்கு தகுந்த பதவி இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் ஒன்றான தமிழக முதல்வர்தான், அதனால்தான், 2010 ஜூன் மாதத்திலிருந்து, “இலங்கைப் பிரச்சனை என்ற விஷப்பரிட்சையில்” இறங்குகிறார், எப்படி…

    யு.என்.பி.யும், ஜே.ஆர்.ஜெயவர்தனேயும், “தலித்துக்களை (பிரேமதாஸாவை)” பயன்படுத்திய மாதிரி!. ராஜீவ் காந்தி மற்றும் விடுதலைப் புலிகளின் அனுபவமின்மையை வைத்து, தன்னுடைய “காரியங்களை” இந்திய இராணுவத்தை வைத்து முடித்துக் கொண்ட பின்பு, சாணக்கியமாக “பிரேமதாசாவை” ஜனாதிபதியாக கொண்டுவந்து, இந்திய ராணுவத்தி வெளியேற்றினார். கொழும்பு “கெசல்வத்தை தொடர்புகளினால்” “தலித்துகளை பயன்படுத்திய” புலிகளுக்கு தற்காலிக வெற்றி என்றாலும், தலித்துகள் அளவுக்கு தமிழர்கள் மதிக்கும்”தென்னிலங்கை இராணுவ மூடர்களிடம்” ரணிலை வைத்து? 2005ல் ஆடிய சதுரங்கம் விஷப்பரீட்சை ஆனதே!. விடுதலை செய்யப்படும் ஆயிரங்கணக்கான புலி உறுப்பினர்களின் “அனுதபத்தை பெறுவது” பலருடைய நோக்காக இருக்கிறது. அவர்களை சிறந்த “மெய்க்காப்பாளர்களாகவும்”,”அடியாட்களாகவும்” பணம் இருக்கும் அனைவரும் பயன் படுத்துவதற்கு வியூகம் வகுக்கிறார்கள். தலித்துகளின் பிரச்சனை இந்தியா முழுவதும் ஒரே தீர்வு காணப்படவேண்டும்,நாட்டின் கலாச்சாரத்தின் எல்லைகளை மீறி,”தலித்துகளை வைத்து தமிழ் தேசிய விளையாட்டு விளையாடுவது விஷப்பரிட்சை” என்பது மூத்த சாணக்கிய வாதிகளுக்கு தெரிந்திருந்தும், எதையோ எதிப் பார்க்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.

    Reply
  • thurai
    thurai

    தழிழர்களையே துரோகிகள் என்று சொல்லி கொலைகளைச் செய்து கொண்டிருந்த புலிகளை ஆதரித்த போது, தமிழர்களின் உயிரிலும் சிவாஜிலிஙகத்தின் உயிர் பெரியது. தன்னைக் காப்பாற்றுவதற்காக வாய் மூடிக்கொண்டிருந்தார்.

    சரத்பொன்சேகா முன்னால் நின்று தமிழர்களை அழித்தார் என்றால், புலிகளின் பின்னால் நின்று சிவாஜிலிஙக்ம் தமிழரை அழித்தார்.

    துரை

    Reply
  • ssganendran
    ssganendran

    சிவாஜி என்ன சொல்லவாரார்? இனப்பற்றுள்ள எல்லாத்தமிழரும் தனக்கு வாக்களிப்பதன் மூலம் வடக்கு கிழக்கு வாக்குகளை சரத்திற்கு போகவிடாமல் மகிந்தவை வெல்லவைக்கும் முயற்சியாகத்தான் தெரிகிண்றது. ஏதோ ஆண்டவனின் பூமியிலே ஏண்டவனின் பாடு

    Reply
  • rohan
    rohan

    //தழிழர்களையே துரோகிகள் என்று சொல்லி கொலைகளைச் செய்து கொண்டிருந்த புலிகளை ஆதரித்த போது, தமிழர்களின் உயிரிலும் சிவாஜிலிஙகத்தின் உயிர் பெரியது. தன்னைக் காப்பாற்றுவதற்காக வாய் மூடிக்கொண்டிருந்தார். சரத்பொன்சேகா முன்னால் நின்று தமிழர்களை அழித்தார் என்றால், புலிகளின் பின்னால் நின்று சிவாஜிலிஙக்ம் தமிழரை அழித்தார்.//

    ஆனால், தமிழில் பேசும் போது சிவாஜி அண்ணர் இன்னமும், “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” என்று முடிக்கிறாரே? இது ஒரு பக்சுவல் ஸ்ரேற்மென்ற் என்று ‘அங்கே’ க்ளெய்ம் பண்ணுவார் போலும். “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்று முடித்தால் அது தன்னையும் சேர்த்ததாகி விடும் அன்று பயப்படுகிறாரோ என்னவோ.

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த இனபற்று கிலோ என்ன விலை என பல்லி தெரியலாமா?? சிவாஜிஅண்ணை உங்களிடம் இருபது இனபற்றல்ல வினைபற்று, ஒரு மனிதன்
    எப்படியெல்லாம் பேசவோ அல்லது வாழவோ முடியும் என்பதுக்கு பல்லி வாழும் காலத்தில் உங்களை விட்டால் யாரையும் உதாரனம் சொல்ல
    முடியாது;

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சோமாலியவில் பிரச்சனைகள் முடிந்து இவ்வளவு வருடம் ஆகியும், உள்நாட்டு இடம்பெயர்ந்தவர்கள், இடம்பெயர்ந்த இடத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் பல நிதி நிறுவனங்களும் ஏராளமான பண்த்தை நிவாரணங்களுக்காக கொட்டியும், இடையில் உள்ள்வர்கள் சுர்ட்டிக்கொண்டு, மீண்டும் தாங்கள் “புகலிடம் தேடிய” நடுகளுக்கே அந்தப் பணத்தை தங்கள் சுக போகங்களுக்கு கொண்டு வந்துவிட்டனர். 2007ல் பிரச்சனை முடிந்த “செச்சினியாவிலும்”, “ரஷியா மட்டும்”, இரண்டு பில்லியன் டாலர்களை நிவாரணத்திற்கு தந்துள்ளது, அதில், 230 “மில்லியன்” டாலர்கள் மட்டுமே, “உள்நாட்டு அகதிகளுக்கு” செலவிடப்பட்டுள்ளது, மிச்ச பணமெல்லாம் திரும்பவும் ஐரோப்பாவில் புகலிடம் தேடியவர்கள் கைகளில், பென்ஸ் காராக ஓடுகிறது!. இதனால் “நவீன முதலாலித்துவத்தின் மீள்கட்டுமானம் கூட தத்தளிக்கிறது”. இதனால்,உள்நாட்டு அகதி முகாம்களில், ஆள்கடத்தல்காரர்கள், கப்பம்,”பயங்கரவாதிகள்” ஆகியோரின் உற்பத்தி நிலையமாக உள்ளது. இதைத்தான் “தமிழ்த் தேசிய வியாபாரிகள்” விரும்புகிறார்களோ:

    Reply
  • santhanam
    santhanam

    சிவாஜி நடிப்பில் கருணாநிதியின் சொற்கட்டே குழம்பிவிட்டது.

    Reply
  • Ajith
    Ajith

    Voting to Sarath Fonseka does not mean supporting Sarath Fonseka. The whole world, India and Sinhala politicians including capitalists and marxists played their game in politics. Whats wrong TNF playing a political game? TNF says vote for Sarath Fonseka to remove Rajapakse & Co. If tamils want to see Rajapakse & Co inside the cage where the whole tamil community were held for the last 4 years, it is acceptable to Vote for Rajapakse. It is not election or referendam to determine our right of self determination. Tamils have always voted in favour of self-determination and that will remain same whoever comes to power. Mr. Sivagi, we respect your stand on tamil struggle for freedom and we humbly request not to be a factor directly or indirectly to help Rajapakse to come back to the power.

    Reply
  • rohan
    rohan

    தமிழன் இனப் பற்று இல்லாதவன் என்பது தெளிவு, சிவஜி அண்ணே. அதனால் தான் மகிந்த ஐயா யாழ்ப்பாணத்துக்கு தீர்த்த யாத்திரை போயுள்ளாரோ?

    Reply
  • sumi
    sumi

    இனப்பற்றுள்ள எந்த தமிழனும் பொன்சேக்காவை ஆதரிக்க மாட்டான் என்றால்,சம்பந்தருக்கு இனப்பற்று இல்லை, இவர் தமிழரே இல்லையென்று சிவாஜி அண்ணன் சொல்லாமல் சொல்லுகின்றாரா? பூனையில்லாத வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டமாம். என்ன செய்ய தம்பி இருந்திருந்தால் தெரியும் இவர்களது வாய் வீச்செல்லாம். இதற்காகவாவது தம்பி மீண்டும் வரவேண்டும். ஏன் எங்காவது இருப்பதாகவாவது அறிக்கை விட்டாலே போதும். சிவாஜி அண்ணே லண்டனுக்கும் சம்பந்தன் ஐயா இந்தியாவுக்கும் பறந்திடுவாங்க இல்லே. அப்ப தெரியும் இனப்பற்று.

    Reply
  • பல்லி
    பல்லி

    சுமி தம்பி இருந்தால் தெரியும் என்னும் சண்டிதனமே அவரை சர்வதேசம் கைவிட்டது; சிவாஜிக்கோ அல்லது சம்பந்தருக்கோ அரசியல் சொல்ல தம்பி என்ன அரசியல் வாதியா?? தம்பியை விட உங்கள் கருத்து இருவருக்கும் சொல்லலாம்; தம்பி தனது கருத்தை தனக்கே சொல்ல தெரியாத ஒரு இரும்பு வியாபாரி;

    Reply
  • thurai
    thurai

    தம்பி ஒரு மூட்டைப்பூச்சி மருந்துமாதிரி, தமிழர் யாரையும் கொல்வதற்குப் பாவிக்கல்லாம். தம்பியால் தமிழர் வாழ முடியாது.

    துரை

    Reply
  • rohan
    rohan

    // தம்பி இருந்தால் தெரியும் என்னும் சண்டிதனமே அவரை சர்வதேசம் கைவிட்டது; சிவாஜிக்கோ அல்லது சம்பந்தருக்கோ அரசியல் சொல்ல தம்பி என்ன அரசியல் வாதியா?? //பல்லி

    உங்கள் சில கருத்துகள் மதிப்புடன் படிக்கப்படுகின்றன என்பதால் எதிலும் விரும்பியபடி எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    பிரபாகரனின் தவறுகள் பலருக்குத் தெரிந்தவை தான். ஆனால், சர்வதேசம் கை விட்டது என்பது உங்கள் தவறான விளக்கம்.

    முள்ளிவாய்க்காலின் இறுதிக் கட்டம் வரை ‘சர்வதேசம்’ அவருடன் தொடர்பில் இருந்தது. நடேசன் கடைசிநாள் வரையாரிடம் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தால் சிலர் மலைத்துப் போவீர்கள். இலங்கை அரசு பல்லாயிரம் மக்களைப் படுகொலை செய்யும் என்று நீங்கள் சொல்லும் சர்வதேசம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் இருக்கிறது என்று நினைத்திருந்தார்கள். இந்தியா காலை வாரி விட்டதும் அமெரிக்காவின் ஒரு பெரிய ஏமாற்றம். ஜோர்ஜ் புஷ் காலத்தைய பாணியில் இயங்கும் மனநிலையில் அமெரிக்கா இருந்திருந்தால் அவர்கள் எப்படி இயங்கியிருப்பார்கள் என்பது ‘விடயம் தெரிந்தவர்களுக்குத்’ தெரியும். விடயம் தெரிந்தோர் கமுக்கமாக இருக்கிறார்கள். இதை இந்த இடத்தில் விட நான் விரும்புகிறேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //உங்கள் சில கருத்துகள் மதிப்புடன் படிக்கப்படுகின்றன என்பதால் எதிலும் விரும்பியபடி எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள் //
    நான் பலதடவை சொல்லி விட்டேன் நான் எழுதும் கருத்து எனது நிலைபாடுதான், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும் போது சரியெனவும் எதிராக இருக்கும் போது உவப்பாகவும் இருபதுக்கு நான் என்ன செய்ய முடியும்; பல்லி மக்களாகவே எழுதுகிறேன், நீங்களும் மக்களாய் படியுங்கள்; தவறை சுட்டி காட்டுங்கள் ஏற்று கொள்கிறேன்;
    //ஆனால், சர்வதேசம் கை விட்டது என்பது உங்கள் தவறான விளக்கம்//
    இருக்கலாம் அப்படியாயின் சரியான விளக்கம் என்ன???
    :://சர்வதேசம்’ அவருடன் தொடர்பில் இருந்தது.//
    இது எனக்கு தேவையில்லை; கைவிட்டதா இல்லையா??
    :://. நடேசன் கடைசிநாள் வரையாரிடம் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தால் சிலர் மலைத்துப் போவீர்கள்.//
    இவர் யாருடன் பேசிகொண்டிருந்தார் என்பதை தாங்கள் அறிந்தால் கூனி குறுகி போய்விடுவீர்கள்; இவர் கடைசிவரை பேசிய நபர் நம்பியார்; நம்பியார் ரஜீவின் மிக நெருங்கிய நண்பர் மட்டுமல்ல புலிகளின் விரோதியான நாராயணனின் உறவுக்காரரும் கூட, இவர் KP மூலம் தான் நடேசனுடன்
    பேசினார் என்பதில் இருந்து KPக்கும் கருனாவுக்கும் உள்ள தொடர்புவரை எமக்கும் ஓர் அளவு தெரியும்; நம்பியார்தான் சர்வதேசம் என கணக்கு பண்ணும் அளவுக்கு புலியின் உளவு மோசமாகிவிட்டதா??
    //இலங்கை அரசு பல்லாயிரம் மக்களைப் படுகொலை செய்யும் என்று நீங்கள் சொல்லும் சர்வதேசம் எதிர்பார்க்கவில்லை.:://
    சர்வதேசம் தமது இனத்தையே பலிகடவாக முன்னரங்கில் புலிகள் நிற்பாட்டுவார்கள் என நாமே நினைக்காத போது சர்வதேசம் நினைத்திருக்குமா??
    //இந்தியா காலை வாரி விட்டதும் அமெரிக்காவின் ஒரு பெரிய ஏமாற்றம்//
    அமெரிக்கா இந்தியாவை மீறி இலங்கைக்கோ அல்லது தமிழருக்கோ எதுவும் செய்யமுடியாது என்பது பலர் அறிந்த உன்மை; இங்கேயும் உளவுதுறை அம்பேல்;
    //ஜோர்ஜ் புஷ் காலத்தைய பாணியில் இயங்கும் மனநிலையில் அமெரிக்கா இருந்திருந்தால் அவர்கள் எப்படி இயங்கியிருப்பார்கள் என்பது ‘விடயம் தெரிந்தவர்களுக்குத்’ தெரியும். //
    ஈராக்கை வைத்து கொண்டு ஈழத்தை கணக்கிட்டது சரியல்ல; புஸ் அல்ல முடிவுகளை(ராணுவ) எடுப்பது அதுக்கு முன் அமெரிக்க உளவுதுறை அரசியல் ஆலோசகர்கள் பொருளாதார நிபுணர்கள் மருத்துவதுறையை சார்ந்தவர்கள் என ஒரு பெரிய படையே முடிவு எடுத்த பிந்தான் எதையும் செய்வார்கள் (இதில் எதிர் கட்ச்சியும் அடங்கும்) அதுதான் எமக்கு தெரியாதே பொட்டர் கேப்பார் போடவா என; இன்னும் போடவில்லையா? என தலை கேக்கும்; போட்டபின் ஆலோசகர் பளசுகளை கிண்டாதையுங்கோ என தத்துவம் பேசுவார், அதையும் புலம்பெயர் புண்ணாக்குகள் தலையின்
    சிந்தனையே தனி என பரபரப்பாய் பேசுவார்கள்;
    //விடயம் தெரிந்தோர் கமுக்கமாக இருக்கிறார்கள்//
    ஏன்?எங்கே? எப்போது வருவார்கள்? இதில் நாடு கடந்த ஏலக்காரர் அடங்கவில்லையா??
    :://இதை இந்த இடத்தில் விட நான் விரும்புகிறேன்.//
    நல்லது உங்களுக்கு பல விடயம் தெரியும் என்பதால் பல்லியை பரபரப்பு வாசகனாயோ அல்லது இலவசமாய் ஒரு பேப்பர் வேண்டி படிப்பவனாய் தாங்கள் மதிப்பீடு செய்வது வருத்தமாக இருக்கிறது; இந்த தேசத்தை படித்தாலே பல விடயங்கள் தெரிந்து விடும்; பல்லி நமது தேசத்தையும் இந்த தேசத்தையும் நாள்தோறும் படிக்கிறேன்;

    Reply