வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று

prabakaeans-father.jpgபிரபாக ரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பூதவுடல் வல்வெட்டித்துறை பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பனாகொட இராணுவ முகாமில் காலமான அவரின் சடலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று வல்வெட்டித்துறைக்குக் கொண்டுவந்தார்.

இதேநேரம் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • Appu hammy
    Appu hammy

    தமிழ் மக்களின் வாக்கை பெறப்போவதாக கூறும் சிவாஜிலிங்கம் என்ற கூட்டமைப்பின் அரசியல் கோமாளி, மகிந்தாவின் வழிகாட்டலின் கீழ் மறைமுகமாக மகிந்தாவை ஆதரித்து களத்தில் இறங்கியுள்ளார். அரசுக்கு எதிராக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக விழும் வாக்கை பிரிக்கும் முயற்சியில் தான், மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தேர்தலில் சிவாஜிலிங்கத்தை நிறுத்தியுள்ளது. இப்படி யுத்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், தமிழ்மக்களின் உரிமைக்கு எதிராகவும் ஒரு சதி அரசியலை, சிவாஜிலிங்கம் மூலம் மகிந்தா அரசு தமிழ் மக்கள் மேல் நடத்துகின்றது. இங்கு பிரபாகரனின் தந்தையின் உடல் மூலம், இந்தச் சதி அரசியலை மகிந்தா சிவாஜிலிங்கம் மூலம் நுட்பமாக்கி நகர்த்துகின்றார்.

    Reply
  • Ramesh
    Ramesh

    இன்று வேலுபிள்ளையின் சடலம் எரிக்கப்பட்ட இதே ஊரணி சுடலையில் தான் மே 09, 1985 அன்று புலிகளால் மேஜர் சிறிமால் மென்டிஸ் கொல்லப்பட்டதுக்கு பதிலடியாக சரத் பொன்சேகாவினால் கிறநைட் வீசி வாசிகசாலையிலும் கேணியடியிலும் என வல்வெட்டித்துறை பொலிகண்டி உடுப்பிட்டி பகுதியில் கொல்லப்பட்ட எழுபத்தைந்து இளைஞர்கள் தகனம் செய்யபட்டார்கள் அம்நேஸ்தீ இன்டர்நேஷனல் அறிக்கையிலும் சரத் பொன்சேகாவின் இந்த படுகொலை பற்றி தெரிவிக்கபட்டிருக்கிறது. இந்த படுகொலைகளின் போது தனது அம்மன் கோவிலடி வீட்டிலிருந்து ஊரணி ஆஸ்பத்திரிக்கு தப்பி ஓடிய ஜனாதிபதி வேட்பாளர் TNA எம்பி சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை சுடலையில் வைத்து பின்புறம் கைகளால் கட்டப்பட்ட இளைஞர்களை சரத் பொன்சேகா சுடுவதை நேரில் கண்ட சாட்சி களில் ஒருவர்.
    1990 யாழ் கோட்டையை மீட்பதற்கான ஆபரேஷன் திரிவிட பலயவின் போது சரத் பொன்சேகாவினால் மண்டைதீவில் கொல்லப்பட்ட 12 தமிழர் ஊர்காவற்துறையில் பொன்சேகாவினால் எரிக்கப்பட்ட நூற்றுகணக்கான வீடுகள் சரத் பொன்சேகாவின் தமிழருக்கெதிரான இரத்த வெறியின் சாட்சியங்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /nallurkanthan on January 9, 2010 2:27 pm
    Dear readers,
    tamil people,particularly Jaffna people have just started to reap the benfits of the post Prabhaharan period.I have read father of VP, ws a good man and an honest public servant.I have been told my friends in vadamaradchy that the temple administered by the father Velupillai has not permitted the lower caste tamils equal worshipping rights in the temple.Is it true.
    /—- Your answer is here – dbsjeyaraj.com/dbsj/archives/1295தலித்துக்களை கோயிலின் உள்ளே விடுவதில்லை என்ற பிரச்சனை இந்தியா முழுவதும் பல ஆயிரம் வருடங்களாக உள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் “நந்தனார் சரித்திரம்” இதைதான் கூறுகிறது!.இதனால்தான் தந்தைப் பெரியார் “வைக்கம் போராட்டம்” போன்றவற்றை நடத்தி கோயில் நுழைவை பொதுவுடைமையாக்கினார்!.சமூக நீதி போராட்டம் இலங்கையில் நடைப் பெறவில்லை.என்னுடைய இளமைக் காலம் முழுவதும் என் தந்தையின் இத்தகைய கோயில் நுழைவு போராட்டத்தினால், மிரட்டலும், வீட்டிற்கு கல்லெறி வாங்குத்லுமாகவே இருந்தது.இதில் கலைஞர் கருணாநிதி வியாபாரம் செய்தாரே தவிர,போராட்டத்தின் பரிணாம வளர்ச்சி அல்ல.தொல்.திருமாவளவனும் அப்படிதான்!. பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் போல்,இப்போது “தலித்திய சர்வாதிகாரம்” – “சமூக நீதி அல்ல”. இந்திய முஸ்லீம்களின் சிறுபான்யின உரிமைக்கு, ஐ.நா.சபை வரை காலனித்துத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது போல்,”தமிழ் தேசியம்” என்ற பெயரில்,”சரத் பொன்சேகாவின் தலைமையில்”,டி.பி.எஸ்.ஜெயராஜ் கும்பலால்,இலங்கையில் நிறைவேறிய “கெனிபாலிஸம்” இந்தியாவுக்குள் நுழைகிறது!.பிரபாகரனின் “கிளான்” ஒரு கிளாசிக்கல் இந்தியன் “கிராம மாடலை” கொண்டு,”ஜாதி அமைப்பு இல்லாத” “சிங்கள புத்த மத” “இறைமையை(என்டிட்டி)” எதிர்த்து சிறுபான்மையினர் தளத்திலிருந்து மோதியது அரசியல் பிழை!.ஜாதி அடிப்படையிலான பிரச்சனைகளை இந்தியா முழுவதும் “சமூக பிரச்சனையாக” தீர்வு காணும் போதே,பிரபாகரன் ஜாதியினர் “தமிழ் தேசியத்தை” கையில் எடுத்திருக்க வேண்டும். ”உசுப்பேத்திவிட்டார்கள்” என்பதற்காக,”தரப்படுதல் பிரச்சனையை” “தமிழ் தேசிய பிரச்சனையாக மாற்றியிருக்க கூடாது”.இப்போது என்ன நடந்தது,”கூண்டோடு கைலாசம் போன பின்பு” இப்போது தரப்படுதல்வாதிகள் “தமிழ்தேசிய தலித்தியத்தை” டி.பி.எஸ்ஜெயராஜ் மூலமாக ஒத்து ஊதுகிறார்கள்!.

    Reply
  • santhanam
    santhanam

    தயவு செய்து ஒரு மனிதனின் இறப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள் அவருடடை வாழ்வியலின் நல்ல விடயங்களைம் ஆத்தமசாந்திக்கும் பிரார்த்திக்கவும் இறப்பில் வியாபாரம் செய்தகாலம் போதும் போதும்……..

    Reply
  • rohan
    rohan

    //இந்திய முஸ்லீம்களின் சிறுபான்யின உரிமைக்கு, ஐ.நா.சபை வரை காலனித்துத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது போல்,”தமிழ் தேசியம்” என்ற பெயரில்,”சரத் பொன்சேகாவின் தலைமையில்”,டி.பி.எஸ்.ஜெயராஜ் கும்பலால்,இலங்கையில் நிறைவேறிய “கெனிபாலிஸம்” இந்தியாவுக்குள் நுழைகிறது!.//

    இதில் டி.பி.எஸ். ஜெயராஜ் எங்கு வருகிறார்?

    //இப்போது என்ன நடந்தது,”கூண்டோடு கைலாசம் போன பின்பு” இப்போது தரப்படுதல்வாதிகள் “தமிழ்தேசிய தலித்தியத்தை” டி.பி.எஸ்ஜெயராஜ் மூலமாக ஒத்து ஊதுகிறார்கள்!.//

    நீங்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

    Reply
  • பல்லி
    பல்லி

    உலகம் ஒரு நாடக மேடை அதில் சிவாஜி தனது பெயருக்கு ஏற்றாபோல் நடிக்கிறார்: நாமும் நம்மால் முடிந்தவரை எமது கதாபாத்திரத்தை
    செய்ய முனைகிறோம்; இத்தனையிலும் உன்மையான நடிகர் அமரர் வேலுப்பிள்ளை மட்டுமே; மற்றவர்கள் அனைவரும் பல்லி உட்பட நடிக்க வேண்டிய நடிகர்கள்தான்; சில வினாடிகள் நடிப்பை ஒத்திவைத்துவிட்டு அவரது ஆத்மா சாந்தியடைய அவர் வணங்கும் ஆண்டவனை
    குடும்பத்துடன் வேண்டுகிறேன்;

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    பல்லி, கடைசியாய் உண்மையை சொல்லி விட்டீர்கள். உங்களை இப்போது மெச்சுகிறேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    அண்ணை கந்தசாமி பல்லியை அனுப்புவதிலேயே கவனமாக இருக்கிறியள் போல இருக்கு; அது என்ன கடசியாய்???

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    மிஸ்டர் ரோகன்!, நான் ஏற்கனவே எழுதியுள்ளேன், “பிரபாகரன் என்பது இலங்கைத் தமிழரது ஆசை அபிலாசைகளின் பரிணாம வளர்ச்சி என்பது”. இதில் கூட்டணி, இக்பால் அததாஸ், டி.பி.எஸ்.ஜெயராஜ், சிவாஜிலிங்கம் அனைவருமே அடங்குவார்கள்!. இக்பால் அத்தாஸும், டி.பி.எஸ்.ஜெயராஜும், மறைந்த தராக்கி சிவராமும், மேலோட்டமாக எழுதுபவர்கள் அல்ல பிரச்சனையின் வேரிலிருந்து எழுதுபவர்கள். இக்பாலும்,தராக்கியும், “தீர்வில் பங்கு வகிப்பவர்கள்” ஆனால் ஜெயராஜ், “பிரச்சனையில் பங்கு வகிப்பவர்”. அவர் எழுத்தை ,ஜெயவர்த்தனே காலத்தில், “யாழ்ப்பாண தாக்குத்லின் போது” அங்கிருந்து,”த இந்து” பத்திரிக்கைகளில் அவர் எழுதும் போதிலிருந்தே படித்து வருகிறேன். இயங்கியலின் விதியை தனி நபர்கள் தீர்மானிப்பதில்லை, “இலங்கையில் சமூக நீதி போராட்டம் நடைப் பெறவில்லை!” – திராவிட இயக்க தோற்றத்தில் இலங்கைத் தமிழர் காரணாமாயிருந்தாலும்(பார்க்க க.சிவத்தம்பியின் இலக்கிய வரலாறு), சமூகநீதி என்பது, “இந்து மதத்தின் ஒரு இயங்கியல்”, ஆனால், இலங்கைத் தமிழரின் சைவ மதம், ஒரு வகை மேற்கத்திய திரிபுக்குள்(ஹத்த யோகா) இயல்பாக வந்துவிட்டது. ஹவாய் தீவின் “சுப்பிரமனியம் சுவாமி” இதற்கு உதாரணம்.இதன் அடிப்படையில் ஜாதிப் பிரச்சனையை அணுகுவது,”ஒரு விஷக் கிருமியை” சமுதாயத்தில் புகுத்துவது போல் ஆகும்(சோஷியல் வெஃபன்) – அதாவது,”கெனிபாலிசம்”.முப்பது ஆண்டுகால போராட்ட வரலாறு இதற்கு உதாரணம். மீசையில் மண் ஒட்டவில்லை என்று இதை பிரபாகரனின் வல்வெட்டித் துறை சமூக சூழலை பலிக்கடா ஆக்குவது, சமூக நீதி போராட்டத்தை தமிழ் தேசியத்திற்குள் புகுத்துவது விஷமத்தனமாகும்!. சமூக நீதிக்கு போராடியது தமிழ்தேசியவாதிகள் (கிருஸ்துவ மிஷனரிகள், திராவிடவாதிகள், காலனியவாதிகள்)அல்ல, “ஏலியன் ஐடியாலஜி அழுத்தங்களினால்” எழுந்த ஒரு “இந்துத்துவ வெளிப்பாடே”. விஷக் கிருமியை புகுத்துவதை ஆட்சேபிக்கவில்லை, ஆனால் அதன் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கவேண்டும்!.-

    Reply