வே பிரபாகரனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (டிசம்பர் 20) இடம்பெற்று அவரது பூதவுடல் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் சகோதரர் அவருக்கு கொள்ளியிட்டார். மரணச் சடங்குகள் திரு வேலுப்பிள்ளையின் மகள் வினோதினி ராஜேந்திரனின் வீட்டில் (வேலுப்பிள்ளையின் வீட்டிலிருந்து 150 யார் தூரத்தில் உள்ளது) நடைபெற்றது. இந்த சடங்குகளுக்கு முன்பு இவரது உடல் வல்வெட்டித்துறை ரீமலில் – குமரப்பா – புலேந்திரன் தூபிகள் உள்ள மாவீரர் சதுக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
மரணச் சடங்கில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் முதல் பரம எதிரி அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் தலைவர் சித்தார்த்தனும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தனது அஞ்சலியைச் செலுத்தினார்.
இறுதி அஞ்சலியில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினாவின் புதிய இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சமல், பத்திரகையாளர் தர்மசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கே தர்மசிறி இலங்கையில் இரண்டு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று பேசத் தொடங்கியதும் வல்வெட்டித்துறைப் பொலிசார் ஒலிபெருக்கியை நிறுத்தி தர்மசிறியை கைது செய்ததாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் பொலிசார் ஒலிபெருக்கி உரிமையாளரையும் ஓட்டோ சாரதியையும் கைது செய்ததாகவும் தான் பொலீஸ் நிலையம் சென்று தலையிட்டதின் காரணமாக தர்மசிறி விடுவிக்கப்பட்டதாகவும் மற்றைய இருவரும் நாளை நீதிமன்றில் ஆஜராகும்படி கேட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை ஏற்றுக்கொண்ட நேரம் முதல் திரு ஜிவாஜிலிங்கமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதிவரையில் மரணச்சடங்கில் இருந்துள்ளனர். இன்று (டிசம்பர் 10) காலை ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதன் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். நேற்று மாலை (டிசம்பர் 9) ரிஎன்ஏ பா உ க்களான சிறீகாந்தா, சம்பந்தர், துரைரட்ணசிங்கம், வில்லியம் தோமஸ், அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிறில், சுரேஸ் பிரேமச்சந்திரன், சேனாதிராஜா மற்றும் கல்முனை நகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் போன்றோர்கள் உட்பட 15 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் அறியப்படுகிறது.
பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறைக்கு ஓடுகின்ற 751 ம் இலக்க பஸ் சேவையிலீடுபடவில்லை என்றும் அதனால் இறுதிநிகழ்வில் மக்கள் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழப்பாணத்தில் பெருமளவு பஸ்கள் மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டத்திற்காகத் திசை திருப்ப்பட்டு இருந்ததாகவும் ஏம் கெ சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டினார்.
Kusumpu
இவரை ஏன் சிறைக்குள் போட்டு கொன்றீர்கள்? இவர் என்ன குண்டைக் கட்டிக்கொண்டு குதிக்கிற வயதா இது. பாவம் வயதானவர்களை விட்டிருக்கலாம். ஏதோ தாங்கள் ஏதோ செய்ய ஏலாததைச் செய்ததுபோல் அரசுக்கு யாழ்ப்பாணத்தில் பிரசாரம் வேறை.
Arasaratnam
குசும்பு பல்லி சந்தானம் போன்ற தேசத்தின் பின்னூட்டக்காரர்கள் சிவாஜி இந்த மரணச்சடங்கை வைத்து அரசியலாக்குகிறார் என்று எழுதினீர்கள் இன்று மேலே உள்ள படங்களை பார்க்கவும் அதில் மகிந்தாவின் சால்வையில் தொங்குபவர்களும் சரத்தின் யுனிபோமில் தொங்குபவர்களும் இன்று அதே அரசியல் வியாபாரம்தான் செய்கிறார்கள் இனி என்ன? எழுதப்போகிறீர்கள்
வல்வெட்டி
சிவாஜிலிங்கம் இவ்விடயத்தை பொறுப்பு எடுத்திருக்காவிட்டால் இன்று வல்வெட்டித்துறையில் இந்த தகனக் கிரியைகள் நடைபெற்றிராது.
பல்லி
அரசரத்தினம் பல்லியோ அல்லது குசும்புவோ அல்லது சந்தானமோ மேதைகள் அல்ல பின்னோட்டகாரர்தான் ஆகயால் எமக்கு எது சரியென படுகுதோ அதையே எழுதுகிறோம்: எங்கள் எழுத்து ஒரு எச்செரிக்கைதானே தவிர கட்டளையல்ல;
:://சிவாஜி இந்த மரணச்சடங்கை வைத்து அரசியலாக்குகிறார் என்று எழுதினீர்கள் //
இதில் பல்லிக்கு இன்றும் கருத்து மாறு இல்லை;
//அதில் மகிந்தாவின் சால்வையில் தொங்குபவர்களும் சரத்தின் யுனிபோமில் தொங்குபவர்களும் இன்று அதே அரசியல் வியாபாரம்தான் செய்கிறார்கள்//
இது எமக்கு அவமானமா அல்லது அந்த நபர்களுக்கு அவமானமா என்பது எனக்கு புரியவில்லை;
:// இனி என்ன? எழுதப்போகிறீர்கள்//
தொடர்ந்தும் எமது கருத்துக்களை மட்டுமே;
பல்லி
//சிவாஜிலிங்கம் இவ்விடயத்தை பொறுப்பு எடுத்திருக்காவிட்டால் இன்று வல்வெட்டித்துறையில் இந்த தகனக் கிரியைகள் நடைபெற்றிராது//
பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழருக்கு தலமையே இல்லையே என்பதை கூட சிலர் சொல்லி பலர் கேட்டோமே;
Arasaratnam
பல்லி – பிரபாகரனோ அல்லது மற்றவர்களோ செய்த இராணுவ அரசியலிலோ அல்லது அமிர் செல்வா போன்றோர் செய்த அரசியலிலோ விளைவுகள் தமிழ் இனத்தையே தாக்குகின்றது. அதில் உள்ள சரியும் பிழையும், நன்மை தீமையும் ஒவ்வொரு தமிழ் மகனையும் தாக்குகிறது.
அதுபோலவே இவர்களின் இன்றய செயல் அவமானம் என நீங்கள் கருதினால் அது எல்லா தமிழருக்குமே அவமானம்.
இன்று ஒரு லட்சம் தமிழ் மக்கள் போராட்டத்தின் பெயரால் பலிகொடுத்துள்ளோம். ஆனால் இன்று இந்த பெரியவர் மரணச்சடங்கில் அனைத்து அரசியல்வாதிகளும் நிற்கிறார்கள் என்றால் வேலுப்பிள்ளையும் அரசியலில் சம்பந்தப்பட்டவராகிறார்.
அவரது பிள்ளைகள் மரணச்சடங்கிற்கு வரமுடியாமல் இருக்கும் துக்ககரமான சந்தர்ப்பமும் ஒரு அரசியலே!
பல்லி
இல்லை அரசரட்னம் அனைத்து அரசியல் கிறுக்கரும் மக்களை கேடயமாகதான் தேர்தலில் வைக்கிறார்கள்; அதுக்காக மக்கள் அரசியல் செய்கிறார்கள் என சொல்ல முடியுமா., ,,? அது போல்தான் பிரபாவின் தகப்பன் என்னும் ஒரு தகுதியே இந்த ஆர்பாட்டத்துக்கு காரனம்: அதுவும் சரத்தின் அதிசய அரசியல் வரவு எனலாம்; ஏன் இதே வேலுப்பிள்ளையும் மனைவியும் பிரபாவின் தாய் தந்தை என சிறை பிடிக்கபட்ட போது இவர்கள் எங்கே போனார்கள் என பல்லி கேக்க கூடாதா??
athen
ஒரு தந்தையின் இழப்பிற்கு ஒரு சராசரி மனிதனாக குடும்பத்தவருக்கும் உறவினர்களுக்கும் எனது அனுதாபங்கள்.
Kandaswamy
//பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழருக்கு தலமையே இல்லையே என்பதை கூட சிலர் சொல்லி பலர் கேட்டோமே// பல்லி.
இப்ப மட்டும் என்னவாம்..? சரியான அரசியலில் சொல்வதென்றால் “பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழருக்கு தலமையே இல்லையே என்பதை கூட பலர் சொல்லி சிலர் கேக்காமல் விட்டார்கள்” என்று தான் வர வேனும்.
பல்லி
ஆகா கந்தசாமி தங்கள் கவலை இப்போது புரிகிறது; இதுக்கான பதிலை சந்திரராசாதான் இலகுவாக தருவார்; இருப்பினும் பல்லிவை வினாவியதால் நீங்க சொல்லும் தலை இல்லாததால் போக்குவரத்துகள் கூட இப்போது இலகுவாக இருக்காமே; ஆக உங்க தலை தமிழர் வாழ்வை மட்டுமல்ல போக்குவரத்துக்கு கூட இடையூறு செய்துள்ளார்; அத்துடன் நீங்க சொல்லும் பலர் மூன்றாய் பிரிந்து அதில் சிலர் இரண்டாய் பிளந்து இப்போ தனிதவில் வாசிப்பது கூடவா கந்தசாமிக்கு தெரியாது??
kumar
அரசரட்னம்
யுத்தகாலகட்டங்களில் தமிழ் அப்பாவிகள் இடைத்தங்கல் முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் , உயிரிழந்தபோது அவர்களின் உடன்பிறந்த உரித்துடையோர் அருகிலிருந்து உடலங்களை ஏற்க முயற்சித்தபோதும் , அவ்வுடலங்கள் அரச செலவில் அநாதைப் பிணங்களாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள் பலவுண்டு. இந்நிலையில் வேலுப்பிள்ளையின் சடலம் உரித்துடையோரால் ஏற்கப்பட்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை. சிவாஜிலிங்கத்தின் அரசியல் வியாபாரத்திற்கு தொடர்ந்தும் எம் சமுகத்தின் அழிவில் அவர்கள் இன்பம் காணத் துடிக்கின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது. இவ்வாறு இறந்த பிணத்தை கூட வைத்து பித்தலாட்டம் ஆடும் கும்பல்களுக்கு ஆதரவாக தமிழ் இணையங்களும் சாமரம் வீசிக்கொண்டிருப்பதை காணமுடிகின்றது.
சாந்தன்
//…ஆக உங்க தலை தமிழர் வாழ்வை மட்டுமல்ல போக்குவரத்துக்கு கூட இடையூறு செய்துள்ளார்; …./
பல்லி,
மிக்க நன்றி, இப்படித்தான் பாலஸ்தீன இயக்கத்தையும் பொருளாதாரத்தடை, நீர்வினியோகத்தடை,போக்குவரத்துத்தடை எனப்போட்டு இஸ்ரேல் அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது! வாழ்க உங்கள் வாதம்!
rohan
இனவாத தென்னாபிரிக்க அரசுக்கு எதிராக எழுந்து நின்ற நெல்சன் மன்டெலாவும் ஆபிரிக்க தேசிய கொங்கிரசும் தான் உலகம் அந்த நாட்டுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடைகளுக்கெல்லாம் காரணம் என்று வெள்ளை அரசாங்கம் சொன்னதையும் நான் அறிவேன்.
பல்லி
//வாழ்க உங்கள் வாதம்!//
சாந்தன் எனது வாதம் வாழ்வது சரிதான்;
ஆனால் தமிழர் வாழ்வு பக்கவாதத்தால் சிக்குண்டதை தாங்கள் கவனத்தில் எடுக்காவே மாட்டீர்களா?? பல ஆண்டு கால போராட்டத்துக்கு பின்னும் பலஸ்தீனம் கொடிகட்டி பறக்கவில்லை; ஆனால் அதே ஸ்ரேல்(யூதர்) வளர்ச்சி பற்றி புலம்பி அதை புள்ளியாய் வைத்துதான் நாடு கடந்த ஏலம் போகுது என்பதை சாந்தனுடன் பல்லியும் அறிவேன், நான் கூறிய போக்குவரத்து தடைக்கு அரசு மட்டுமா காரணம், கொழும்புக்கு புற்றுநோய்க்கு மருத்துவம் செய்ய வருபவர்கள் கூட புலியிடம் பாஸ் எடுக்க வேண்டும் என்பதை தாங்கள் அறியவிலையா?? இன்று அந்த நிலை மாறிவிட்டதே, அரசு சரியென எந்தகாலத்திலும் பல்லி சொல்லியதில்லை, ஆனால் எமது சீர்கேட்டுக்கு தருதலைகள் காரனம் என சொல்ல பூத கண்ணாடி தேவையில்லை, இதுவரை நாம் அழிவைதவிர எமக்காக என்ன செய்தோம்: எதிரியை அழிப்பதை விட எம்மினத்தை வாழவைப்பதே ஒரு சரியான போராளிக்கு வெற்றி; இதுவே எனது கருத்தும் கூட;;
BC
//பல்லி-தமிழர் வாழ்வு பக்கவாதத்தால் சிக்குண்டதை…//
பக்கவாதத்தை விட மோசமான நோயால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். உடலின் immune தன் சொந்த உடலையே தாக்கி அழிக்கும், செயல் இழக்க பண்ணும். ஆங்கிலத்தில் Multiple Sclerosis. தமிழில் தமிழீழவிடுதலை புலிகள்.