ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இதில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் அவர்களுடன் வாக்குகளை பிரிக்க என்றுமாக, 22 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.
ஜனாதிபதி எந்தக் கட்சியாக இருந்தாலும் அல்லது கட்சியற்ற பொன்சேகா பதவிக்கு வந்தாலும் தன்னந் தனியனாக நிர்வாகம் நடத்துவதில்லை. தனது கட்சி உறுப்பினர்கள், அல்லது தனக்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்கள் என்று அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை வைத்தே நிர்வாகம் செய்யப்படும்.
இதில் மூன்றாம் நபராக உள்ள விக்கிரமபாகு கதைக்கின்ற சுயநிர்ணயம் கேட்க நல்லாகத்தான் இருக்கிறது. சாத்தியமா என்பதற்கான விளக்கம் இல்லை. அத்தோடு இவர் சார்ந்த கட்சி ஒரு பலமான கட்டமைப்பை கொண்ட கட்சியுமல்ல. இவருக்கு வாக்களித்து எமது மக்களின் அடிப்படை, அத்தியாவசியமான பிரச்சினைகளை இவரால் தீர்க்க முடியாது.
இரண்டாம் நபர் சரத் பொன்சேகா. இவருக்கு கட்சி இல்லை. இவரை ஆதரிக்கின்ற இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. தங்களுடைய இன்றைய தேவைகளுக்கே இவரை ஆதரிக்கின்றனர். இவரோ ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்கிறார். கட்சியும் இல்லை, ஜனாதிபதியும் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்யப் போகிறார். அன்னப்பறவையில் அன்னக் காவடியா?
மற்றையது இவர் ஒரு இராணுவ உயர் அதிகாரி. சீருடையைக் கழட்டியதால் மட்டும் இவரிடம் உள்ள இராணுவமாயை அகன்று விட்டது என்பது அல்ல.
இந்திய இராணுவம் வந்தபோதும் எமது மக்கள் கும்பம் வைத்து ஆலாத்தி எடுத்து தான் வரவேற்றார்கள். அதற்காக அவர்கள் கங்கையில் குளித்து விட்டு வந்த காந்திகள் அல்ல. அவர்களின் இயல்பான குணாம்சம் தானாகவே வந்து சேரும். பாக்கிஸ்தானைப் பார்த்த பின்புமா நாங்கள் திருந்தவில்லை. மகிந்தாவிற்கு சவாலாக ஒருவரை உருவாக்க சரத் என்ற தெரிவு விஷப்பரீட்சை. புலி ஆதரவாளர்கள், புலி ஊடகங்கள் ஏன் சரத்தை ஆதரிக்க வேண்டும். இவர்தானே அவர்களின் அழிவிலும் பங்காற்றியவர். மீண்டும் இலங்கையில் அமைதியின்மையை உருவாக்கி அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் கடைவிரிக்க ஆதரிக்கிறார்கள். மகிந்த கட்சிக்கு சவாலாக எதிர்க்கட்சி உருவாகலாம். அது ஆரோக்கியமானது. மீண்டும் ஒரு குண்டு வெடிப்போ ஆயுதக்கலாச்சாரமோ எங்கள் சந்ததிக்கு வேண்டவே வேண்டாம்.
இன்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை முகாம்களில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டியதும், வெளியே வந்தவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தலுமாகும். இது ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிற விடயம். இதை யாருமே குழப்பக் கூடாது. இன்று வட கிழக்கில் சிறுசிறு அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒரு இயல்பு நிலை தோன்றியுள்ளது. கடந்த முப்பது வருடங்களைப் பின்னோக்கிப் பாருங்கள். 2008 2007 2006 …….. இப்படியே பின்னோக்கிப் போய் ஒவ்வொரு ஜனவரியிலும் நடந்த கொலைகளைப் பாருங்கள். இந்த ஜனவரியில் அவ்வாறு எத்தனை நடந்தள்ளது? குண்டு வெடிப்புகளும் இல்லை. குண்டுத் தாக்குதல்களும் இல்லை. செல் வீச்சுகளும் இல்லை. வெள்ளை வான் கடத்துவதில்லை. பொட்டு வைக்க பொட்டர் இல்லாததால் ஒரு ஜயரோ, பேராசிரியரோ, பல்கலைக்கழக மாணவனோ தனது சொந்தக் கருத்தை முன்வைக்கக் கூடிய நிலைமையுள்ளது.
அதற்காக நிபந்தனை அற்ற ஆதரவு என்கிற பதத்தை நாம் தவிர்க்க வேண்டும். மக்களுடன் சேர்ந்து இயங்கும் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்தவின் முன் நிபந்தனைகளை வைத்து ஆதரவளிக்க வேண்டும். அதற்காக மதகு கட்டவும், வோட்டு போடவும் தான் நாங்கள் போராடப் புறப்பட்டோம் என்பதல்ல. 36 வருடமாக நன்றாக இருந்த மதகுக்கு குண்டுவைத்தும், ஒழுங்காக இருந்த ரோட்டில் கண்ணி வெடி வைத்தும் நாங்கள் கண்டதென்ன? அன்று நவீன சந்தை கட்டிய துரையப்பாவை போட்டுத்தள்ளாமல் இருந்திருந்தால் இன்று சீனப்பெருஞ்சுவரே கட்டியிருக்கலாம்.
பிரச்சினையும் தீர்வும் அந்த மக்களுக்கு தான். இங்கு ரிவி க்கு முன் கோட்டு போட்டு வந்து ஆய்வு செய்பவர்களுக்கோ, வெள்ளவத்தையிலும் பம்பலப்பிட்டியிலும் சொகுசாக வாழ்ந்து கொண்டு பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர்களுக்கோ அல்ல. எல்லாவற்றையும் தொலைத்துப்போட்டு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்குத்தான் தீர்வு.
அந்த மக்களுக்கு இன்று செய்ய வேண்டியது என்ன?. வன்னியிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை ஓடி முகாம்களில் இருந்து சொல்லொணாத் துன்பங்களை தாங்கி நின்ற போது, அவர்களைக் காப்பாற்றாமல் புலிகளைக் காப்பாற்ற பாடுபட்ட கூட்டமைப்பு – தங்கள் தலைவர்களை கொன்றவர்களுடன் கை கோர்த்த கூட்டமைப்பு – மூன்று மாதமாக முடிவு எடுக்கத் தெரியாத கூட்டமைப்பு – இலங்கைத் தேர்தலில் லண்டன் வந்து விளக்கம் சொல்லும் கூட்டமைப்பு – எந்த முகத்துடன் வோட்டு கேட்க முடியும். இவர்களுடன் ஒப்பிட்டால் சிறீதரனும் சித்தார்த்தனும் எவ்வளவோ மேல்.
எனவே வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று தங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் தலைமைகள் யாருக்கு வோட்டு போடச் சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே வோட்டுப்போட்டு இந்த ஆறு மாதம் போல் இன்னும் 6 வருடம் கழிந்தால் அவர்களும் அத்தியாவசியப் பிரச்சினையிலிருந்து நீங்கி கொஞ்சம் நிமிர்ந்து வாழ்வார்களே! அதுதான் இன்றைய தேவை!!.
palli
எல்லோரும் மகிந்தாவின் முகத்தில் குத்துங்கள் என்பதுக்காய் ஒரு கட்டுரை, அதுக்கான வாதம் மிக சிறப்பு; ஆனாலும் சரத்தின் அல்லது விக்கர இவர்களின் சிறப்பு சொன்ன அளவுக்கு மகிந்தாவின் திருவிளையாடல் சொல்லபட்டிருக்கலாம்; இருப்பினும் இது தேசத்துக்கு கட்டணம் செலுத்தபடாத விளம்பரம்; எது எப்படியோ ஜெயராஜ் தனது கட்ச்சிக்காய் மிகவும் கஸ்ற்றப்பட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார், அவரது பார்வையில் அது நியாயமானதும் கூட,
shan
Yes I m totally agree with you
Poorni
பொட்டு வைக்க பொட்டர் இல்லாததால் ஒரு ஜயரோ, பேராசிரியரோ, பல்கலைக்கழக மாணவனோ தனது சொந்தக் கருத்தை முன்வைக்கக் கூடிய நிலைமையுள்ளது.
Yes, You r absolutly right
kilakkaan
மக்களோடு இருந்து, மக்களை கடத்தி கொலை செய்து, அது தாங்காமல் யாழ் சிறைச்சாலைகளில் சனங்கள் அடைக்கலம் புகுந்த வரலாறு தெரியாதோ. வர்ற நாடாளுமன்ற தேர்தலில் தெரியும் மக்கள் இவர்களுக்கு வழங்கும் தீர்ப்பு. இனி புலி -கிளி இல்லைத்தானே. ஆயுதங்களை மகிந்தரிட்ட ஒப்படைச்சிட்டு சனநாய அரசியல் செய்யட்டும்.l
nallurkanthan
Very reasonable appeal to the tamil people.
NANTHA
திரு. ஜெயராஜின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடுகள் அதிகம் உண்டு. கண்டுபிடிக்க முடியாத “தமிழ் உரிமைகள்” பற்றி அலட்டி கண்முன்னே இருந்த காணி நிலங்களை விட்டு “அகதி” அந்தஸ்துப் பெற்ற பின்னரும் நாங்கள் இந்த “தமிழ்” மாயாஜாலம் பற்றி கனாக் கண்டால் நாங்கள் இன்னமும் திருந்தவில்லை என்றே எண்ணுகிறேன்.
நாங்கள் “தமிழ்” என்று கோஷம் எழுப்பினால் தென் பகுதியில் “சிங்களம்” என்று கோஷம் புறப்படும். அதன் பாதிப்பு யாருக்கு? தமிழருக்குத்தான் என்று இப்போது நன்கு புரிந்துள்ளது. தேர்தல் காலங்களில் மாத்திரம் “வீராவேசம்” கொண்டு புறப்படும் எங்கள் “ராஜராஜ சோழன்கள்” தேர்தல் முடிந்த பின்னர் கொழும்பு யாத்திரையின் சுகபோகங்களை நன்கு அனுபவிப்பார்கள். ஆனால் வாக்குப் போட்டவர்களோ தங்கள் வாழ்வுக்கு “தாங்களே” மல்லாட வேண்டும் அல்லது சிங்கள மக்களின் ஆதரவினால் வந்த அரசிடம் யாசகம் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை உண்மையும் அனுபவமும்.
காலம் கடந்து விடவில்லை. திருந்த முயற்சிப்போம். மாற்றங்களை அனுசரித்து எங்கள் வாழ்வாதாரங்களான விவசாயம், மீன்பிடி, கல்வி என்பனவற்றை அபிவிருத்தி செய்ய யார் உதவுகிறார்கள் என்பதை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு வாக்களிப்போம். பிரச்சனைகளை உண்டாக்கி குளிர் காய்ந்தவர்களை விரட்டுவோம்.
Rohan
“எனவே வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று தங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் தலைமைகள் யாருக்கு வோட்டு போடச் சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே வோட்டுப்போட்டு இந்த ஆறு மாதம் போல் இன்னும் 6 வருடம் கழிந்தால் அவர்களும் அத்தியாவசியப் பிரச்சினையிலிருந்து நீங்கி கொஞ்சம் நிமிர்ந்து வாழ்வார்களே! அதுதான் இன்றைய தேவை!!” என்று சொன்ன ஜெயராஜ், வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று கொண்டிருக்கும் தலைமைகளையும் பெயரிட்டிருக்கலாம்!
மாற்றங்களை அனுசரித்து எங்கள் வாழ்வாதாரங்களான விவசாயம், மீன்பிடி, கல்வி என்பனவற்றை அபிவிருத்தி செய்ய யார் உதவுகிறார்கள்?
அப்படி யாரும் இல்லை என்பது தானே உண்மை.
By the way, well commeted, Palli. It was an unpaid advertisement and an easy way to demonstrate his எஜமான விசுவாசம்!
NANTHA
தற்போதைய ஜனாதிபதி மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த போது மீன் பிடிப்போருக்கு 60 சதவீத மான்ய விலையில் வள்ளங்களும், மீன் பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இந்த வள்ளங்களை “கள்ள கடத்தல்” கோஷ்டிகள் மீனவர் என்றபெயரில் லஞ்சம் வழங்கி ஒரு லட்சம் பெறுமதியான வள்ளங்களை நாட்பதினாயிரம் ரூபாவிற்கு பெற்று சமூக விரோதம் செய்தனர்.
அதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் “மிளகாய்”, “வெங்காயம்” இறக்குமதியை நிறுத்தி யாழ் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான வருமானத்தை பெற்றுக் கொடுத்ததும் ராஜபக்சவின் கட்சியான சுதந்திரக் கட்சி என்பது வரலாறு அறிந்தவர்களுக்குப் புரியும்.
வன்னியின் மூலை முடுக்கெல்லாம் பாடசாலைகளை கட்டி கிராமப்புற பிள்ளைகளுக்கு “அறிவு” வழங்கியவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பதை யாரவது மறுக்க முடியுமா?
யாழ்ப்பாண பலகலைக் கழகத்தை வழங்கியவர்களும் அதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர்தான். யாழ் பல்கலைக் கழக திறப்பு விழாவிற்கு வந்த அன்றைய பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரனாயக்காவிட்கு “தமிழ்” கட்சிகள் கறுப்புக் கொடிதான் காட்டினார்கள்.
வெறும் “புலி” பிரச்சாரங்களை படித்து மூளை சலவை செய்து கொண்டவர்களுக்கு வரலாறு எங்கே புரியப் போகிறது?
மாயா
தலைப்புக் கட்டுரை தொடர்பாக எனக்கு உடன்பாடு உண்டு. நந்தா கூட திரும்பி பார்க்க சில உதாரணங்களை வைத்துள்ளார். நாம் நல்லவைகளை சிந்திக்காமல் , உணர்ச்சிகளை கொட்டுவோரோடு இணைந்து நமது மக்களை அழிப்பதையே தொடர்ந்தும் செய்து வந்துள்ளோம். இதை யாரும் மறுப்பதற்கில்லை. மேலே உள்ள வள்ளக் கதை புரியாதவர்கள் யாரும் இல்லை.
வீழ்ந்தவர்கள் எழும்பக் கூட சந்தர்ப்பம் அளிக்காமல் என்பதை விட, மூச்சு கூட விட முடியாமல் தமிழ் உணர்வுக்காக சாவதை நாம் தியாகம் என அப்பாவிகளை பலி வாங்க எத்தனித்தால் அதைப் போல துரோகம் வேறில்லை. மக்கள் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, மகிந்த வரக் கூடாது என்பது மூடர்களில் முள்ளிவாய்க்கால் ஞானம்தான்.
மகிந்த , பெரிதாக எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இந்த மக்களுக்கு சுதந்திரமாக சில காலம் இப்படியே வாழ விட்டாலும் அதுவே இப்போதைக்கு போதும். பிரபாகரன் இருந்திருந்தால் மட்டும் என்ன? அடைபட்டு இருக்கும் புலிகள் குண்டைக் கட்டிக் கொண்டோ, அல்லது போரிலோ இறங்கி அடுத்த மாவீரர் தினத்துக்கு படத்தில் மாலையோடு வந்திருப்பார்கள். எதிரியை கொல்வது சரி. தன் இனத்தையே கொல்வது எந்த வகையில் நமக்கு நியாயம் எனப்படுகிறதோ தெரியாது. இப்போதைய தேவை மகிந்த அதிபராவதைத் தவிர வேறு எதுவுமில்லை.
BC
இவ்வளவு காலமும் மக்களை கொடுமைபடுத்தி சுருட்டி புலிகள் தங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தனர். இப்போ 6 மாதமாக தான் மக்கள் அபிவிருத்தியடையும் சர்ந்தர்ப்பமே ஏற்பட்டுள்ளது.
ஜெயராஜா கூறியது சரி.
palli
// இதில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் அவர்களுடன் வாக்குகளை பிரிக்க என்றுமாக, 22 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.// இதில் பல்லிக்கும் உடன்பாடுதான் ஆனால்;;;
//ஜனாதிபதி எந்தக் கட்சியாக இருந்தாலும் அல்லது கட்சியற்ற பொன்சேகா பதவிக்கு வந்தாலும் தன்னந் தனியனாக நிர்வாகம் நடத்துவதில்லை.// தெரியும் ஆனால் குடும்ப நிர்வாகம் நடதுவதும் இல்லை என்பதுவும் உன்மைதானே?
//தனது கட்சி உறுப்பினர்கள், அல்லது தனக்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்கள் என்று அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை வைத்தே நிர்வாகம் செய்யப்படும்.//
இதுதான் நடைமுறை, ஆனால் இங்குதான் அமைச்சர் பதவி கிடைத்தவுடன் அமைப்பை கலைத்துவிட்டு வீட்டோடு மாப்பிள்ளையாக சிலரும் வீணையின் இசையைவிட வெத்திலைதான் உடல்நலத்துக்கு பலம் எனவும் அனைத்து அதிகாரம் கூடிய ஜனாதிபதியின் ஆட்ச்சியில் அனைத்து செயலுக்கும் அதிகாரம் பொருந்திய உறவுகளுடன் கை கோர்ப்பதால் எதிர்கருத்துகள் கூட ஏழனம் செய்யும் நிலை தொடர்வதால் அது சரியான நிலைபாடா என்பதே பல்லியின் கேள்வி??
//இதில் மூன்றாம் நபராக உள்ள விக்கிரமபாகு கதைக்கின்ற சுயநிர்ணயம் கேட்க நல்லாகத்தான் இருக்கிறது. சாத்தியமா என்பதற்கான விளக்கம் இல்லை.//
இது அவருக்குமட்டுமல்ல மகிந்தா சரத்துக்கும் பொருந்தும்; என்ன விக்கிரமபாகுவின் நிலை இப்பவே கணிக்கிறோம்: மற்றவர்கள் இருவரும் வந்தபின்பு பார்ப்போம்; சாத்தியமா என்பது சரியோ தெரியவில்லை; ஆனால் அவர்கள் முயற்ச்சியை நாம் தடுக்க முடியாது;
//இரண்டாம் நபர் சரத் பொன்சேகா. இவருக்கு கட்சி இல்லை. இவரை ஆதரிக்கின்ற இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. தங்களுடைய இன்றைய தேவைகளுக்கே இவரை ஆதரிக்கின்றனர். இவரோ ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்கிறார். கட்சியும் இல்லை, ஜனாதிபதியும் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்யப் போகிறார். அன்னப்பறவையில் அன்னக் காவடியா?/
கட்டுரையின் பலவீனம் இங்கேதான் தொடங்கிறது; கட்டுரையாளரே இரண்டாம் நபர் என சான்றிதழ் கொடுத்துவிட்டு பின்பு அன்னகாவடியா? என கேள்வி எழுப்பியது புரியவில்லை; ஜனாதிபதி என்பதுக்கும் அனைத்து அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதுக்கும் கட்டுரையாளருக்கு விளக்கம் தேவைபடுகிறது,
//சிருடையைக் கழட்டியதால் மட்டும் இவரிடம் உள்ள இராணுவமாயை அகன்று விட்டது என்பது அல்ல//
உன்மைதான் ஆனால் அவர் தன்பாட்டுக்கு ஆட்டம்போடதான் அவரிடம் கட்சி இலையே, அத்துடன் அவர் 30வருட காலத்துக்கு மேலாக சீருடையில்தான் இருந்தார், மகிந்தாவின் வெள்ளைவேட்டி அவருடன் கைகோர்த்த பின்புதான் அவர் தனது சீருடையின் திமிரை தமிழர் மீது காட்டினார், உங்கள் பாணியில் புலிகள்மீது; ஆக அதே சீருடையை வைத்து ஆட்ச்சியை செழிமைபடுத்தும் மகிந்தா நல்லவர்; சீருடைகழட்டிய சரத்??
//மீண்டும் ஒரு குண்டு வெடிப்போ ஆயுதக்கலாச்சாரமேக் எங்கள் சந்ததிக்கு வேண்டவே வேண்டாம்.//
உன்மைதான் இதுக்கு முதலில் அனைத்து தமிழ் அமைப்புகளும் ஆயுதங்களை கைவிட வேண்டும்; குறிப்பாக கருணா, தோழர், புளொட், இதை நான் சொல்லவில்லை சங்கரியரின் கருத்து,
//பல்கலைக்கழக மாணவனோ தனது சொந்தக் கருத்தை முன்வைக்கக் கூடிய நிலைமையுள்ளது.//
சந்தோஸம்; இந்த நிலையிலும் கூட ஒரு மாகாணசபை உறுப்பினர் மிகநல்ல அரசியல்வாதி துரைரத்தினம் தனது கருத்தை அங்கு சொல்ல முடியாமல் தவிப்பது ஏனோ?;
//எனவே வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று தங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் தலைமைகள் யாருக்கு வோட்டு போடச் சொல்லுகிறார்களோ,//
இதை இப்படி எழுதி இருக்கலாம்: தோழரும் கருனாவும் பிள்ளையானும் யாருக்கு வோட்டுபோட சொல்லுகிறார்களோ அவர்களுக்கு போட வேண்டும்;;;;
மகிந்தாவோ சரத்தோ யார் வேண்டுமானாலும் வரட்டும்; ஆனால் அனைத்து அதிகாரம் ஒருவரிடம் வேண்டாமே, அதை மகிந்தாகூட நிறைவேற்றலாம், சரத்தை விட மிக கேவலமானவர்தான் மகிந்தாவின் சகோதரர் கோத்தய ராஸபட்ச்சா, இவர் மகிந்தாவின் நிழல்; அவரது செயல்பாடே மகிந்தா இன்று மிக போட்டியான ஒரு தேர்தலை சந்திக்க நேரிட்டது, இருப்பினும் அவர் மகிந்தாவுடன் தொடர்ந்து தனது வீர விளையாட்டுக்களை நடத்தவே ஆசை கொள்வார்; மகிந்தா குடும்பம் வெற்றிபெற்றவுடன் சட்டத்துக்கு தண்டனை கொடுக்கும், ஆனால் சரத் சட்டத்தை மதிப்பார் என நினைக்கிறேன், காரனம் அவர் பலரை நம்பி ஆட்ச்சி செய்ய வருபவர், மகிந்தா குடும்பத்தை வைத்து ஆட்ச்சி அமைப்பவர், இது எனது கருத்துதான்; மகிந்தாவோ சரத்தோ யார் வேண்டுமானாலும் வரட்டும் நிர்வாகம் மனிதனேயம் உள்ளவர்களிடம் போகட்டும் அதுவே பல்லியின் அவா?? இது யார் ஆட்ச்சியில் சாத்தியம்??
chandran.raja
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்றால் புலிகள் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப் படவேண்டும் என குரல் கொடுத்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே…. புலம்பெயர் தமிழரால் தேசியத் தலைவர் என்று அழைக்கப் பட்ட பிரபாகரனால் குமுதினிபடகு வெலிக்கடைசிறை கொலைவிட பலமடங்கு மோசமான கொலைகளையும் நிகழ்வுகளையும் ஏற்படுத்தி வைக்கப் பட்டது.
இதில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால் தமிழ்மக்கள் தமது சொந்த இனத்தாலேயே கொலையுண்டு போனது “தமிழர் போராட்டம் ” என்ற பெயரோடு. இதுவே கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது. இதையெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பராமுகமாக இருந்தவர்கள் தமிழ்மக்களின் தலைவர்களாக தம்மை காட்டிக்கொள்வதை என்னவென்று சொல்வது?
இனகலவரமாக இருக்கட்டும் எரிப்புவேலைகளாக இருக்கட்டும் தமிழ்பிரதேசங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களே! சொந்தஇனத்தில் நடந்த அழிவுகளுக்கு பாராமுகமாக இருந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் புலிகளுடன் கூட்டுவைத்தவர்களே இன்று ஐக்கியதேசியக் கட்சிக்கும் சரத்பொன்சேகராவுக்கும் ஆதரவு வழங்கிறார்கள்.
தமிழ்மக்களின் பழமைவாதங்களும் மூடத்தனமும் சம்பந்தன் ஹக்கீம் மனோகணேசன் போன்றவர்களில் (இவர் தன்னை மனிதஉரிமை வாதியாக காட்டிக்கொண்ட போதிலும்) தங்கி நிற்கிறது. வரப்போகிற இரு தேர்தல்களும் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல முழுஇலங்கை மக்களுக்குமே முக்கியமானது. இதில் மயக்கத்திற்கோ உறக்கத்திற்கோ எந்த இடமும் இல்லை.
palli
இன்று இரவு 12(இரவு இலங்கைநேரம்) மணிக்கு பின் தேர்தல் பிரசாரம் செய்வது சட்டபடி குற்றம் என தேர்தல் ஆணையாளம் சொல்லியிருக்கிறது; இது புலம்பெயர் தேசத்துக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்; ஆக ஜரோப்பாவில் இரவு 8மணிக்கு பின்பு நாமும் தேர்தல் வஸைபாடல் முடிவு பெற்றுவிடும்; இதை ஒரு தரமான ஊடகம் என்பதால் தேசமும் பின்பற்றும் என நினைக்கிறேன்; ஆக புலி புலி சார்ந்தவர்கள் விட்டு தமிழர் நலன் விரும்பிகளின் கருத்து இங்கு கவனத்தில் எடுக்கபட வேண்டும்; இன்று இரவு சரத்தின் கூடத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என அறியபடுகிறது; அதுக்கு இந்தியாவின் (சிவசங்கரமேனனின்) அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதி காரணமாக இருக்கலாம் என்பது பல்லியின் ஊகம்,
இலங்கயில் 11ஆயிரம் வாக்குசாவடிக்கு: 6000 கண்காணிப்பாளர்கள் +முப்படை பாதுகாப்பு: பலே பலே பாராட்டலாம் ஜனநாயக தேர்தல்தான்; இதுவரை 745 வன்முறைகள்; அதில் 400 மிக மோசமானவை; நாலு கொலை உட்பட; இந்த நேரத்தில்தான் மனித உரிமையும் தனது கடமை தவறா தகவலை சொல்லுகிறது; வடக்கில் மூன்று ராணுவ தளபதிகள் திடீர் இட மாற்றம் ஏனோ மகிந்தாவுக்கே வெளிச்சம்; வடக்கே மிக முக்கியமான இரு தளபதிகள் திடீர் வெளிநாட்டு பயணம்; இதுவும் மகிந்தாவுக்கே?? கருனா கிழக்கின் விடிவெள்ளி என பிள்ளையானால் புகழபட்ட பெண்மணிமீது கடுப்பு, அதனால் அவர் திடீர் இந்திய பயணம், இப்படி பல நகைசுவை நாடகங்கள் கொழும்பில் இறுதி பிரசார கூட்டத்துக்கு முன்பு நடைபெறுவதால் இந்த ஆறாவது ஜனாதிபதி தேடல் மிக அமைதியாக அருமையாக நடக்கும் என்பதில் பலருக்கு சந்தேகமே இல்லை; காரணம் அவர்கள் மனதில் மகிந்தா ஒரு சூப்பர் ஸ்ரார்; என்மனதிலும் தான்; அனால்,,,,,,
பார்த்திபன்
பல்லி,
தாங்கள் சரத்தை ஆதரிப்பது தங்களது தனிப்பட்ட கருத்து, அதனை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் சரத்தால் வைக்கப்படும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நீங்கள் நம்புகின்றீர்களா??
உதாரணம்: அரச ஊழியர்கள் அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு.
அது போல் தமிழ்மக்களிடம் ஒருவிதமாகவும், சிங்கள மக்களிடம் அதையே அப்படியே மாற்றியும் சரத் பிரச்சாரம் செய்து வருவதும், அதனை பத்திரிகை விளம்பரங்களாக சிங்கள மொழியில் வெளியிடுவதும் பல்லிக்குத் தெரியுமா??
உதாரணம்: அனைத்து தமிழ் கைதிகளும் விடுதலையாவார்கள், பாதுகாப்புவலையங்கள் நீங்கப்படுமென்றும் தமிழ் மக்களிடையே பிரச்சாரம் செய்தார் சரத். அதை அப்படியே மாற்றி சிங்கள மக்களிடையே மகிந்த அரசு வடக்கில் பாதுகாப்பு வலையங்களை நீக்கி வருகின்றது. தமிழ்க்கைதிகளை விடுதலை செய்கின்றது. இதனை நாம் அனுமதிக்க முடியுமா?? இதனை நிறுத்த எனக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரங்களைச் செய்வதுடன் இதனையே தேர்தல் விளம்பரங்களாக சிங்களப் பத்திரிகைகளில் வெளியிட்டுமுள்ளார்கள். இதனைப் பல்லி முழுமனதோடு வரவேற்கின்றீர்களா?? இப்படி வெவ்வேறு சமூகங்கிளிடையே வெவ்வேறு முகங்களைக் காட்டிவரும் ஒருவர் அனைத்து சமூகங்களும் இணைந்து வாழ, நல்லாட்சியைத் தருவாரென்று நீங்கள் நம்புகின்றீர்களா??
அடுத்து அனைத்து அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றாலும் தனது அதிகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த, பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்பது பல்லி அறியவில்லையா?? சரத்பொன்சேகாவை பொதுவேட்பாளராக அறிவித்த பின், முதலாவதாக நடந்த பத்திரிகைச் சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க சரத் பதவிக்கு வந்தால் ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல்ச் செய்து பிரதமருக்கே அந்த அதிகாரங்களை அளிப்பாரென்று கூறியபோது, உடனடியாகச் சரத் பொன்சேகா அப்படியாயின் தான் ஏன் போட்டியிட வேண்டும்?? என்ற கேள்வியை வைத்ததும் தங்களுக்குத் தெரியாதா?? மொத்தத்தில் குளப்பங்களையே கொள்கைகளாகக் கொண்டுள்ள ஒரு கூட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதை தாங்கள் எந்த வகையில் ஆதரிக்கின்றீர்கள்??
மாறாக தங்களின் மகிந்த மீது வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களான குடும்ப ஆட்சி ஊழல் என்பவற்றை எடுத்துக் கொள்வோம். இதில் கோத்தபாய பசில் போன்றவர்கள் முக்கிய பொறுப்புகளிலிருந்து மகிந்தவோடு இணைந்து ஒரு குழுவாக இந்த யுத்தத்தைத் தொடர்ந்ததனாலேயே யுத்தம் வெற்றி பெற்றது. கோத்தபாய பசில்போன்றர்களின் இடங்களில் வேறு யாராவது இருந்திருந்தால் பலவேளைகளில் முரண்பாடுகளே தோன்றி யுத்தத்தை தொடர்வதில் சிரமங்களை மகிந்தவும் சந்தித்திருப்பார். தற்போது சரத்தின் திருவிளையாடல் போல் அவர்களும் சந்தர்ப்த்திற்கேற்றவாறு மாறியுமிருப்பார்கள்.
அடுத்து ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுக்கும் சரத்தும் பல ஊழல்களைச் செய்துள்ள குற்றச்சாட்டுகளும் வெளிவந்துள்ளன. இராணுவத் தலைமைப் பொறப்பிலிருந்த போதே இந்தளவு ஊழல்கள் செய்பவர் அரச பொறுப்பிற்கு வருவாரானால் சும்மா இருப்பாரா??
இதுவரை தனக்குச் சவாலாக எவருமில்லையென நினைத்திரந்த மகிந்தவிற்கு சரத்தின் வடிவில் அது வந்தது பல விடயங்களைப் புரிய வைத்திருக்கும். எனி வருங்காலங்களில் அவர் தனது போக்கினை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலையை அது தெளிவு படுத்தியுமிருக்கும். எனவே கடந்த நான்கு வருடங்களை போரிலேயே கடந்து வந்த மகிந்தவிற்கு இன்னொரு சந்தர்ப்பத்தையும் வழங்கி நாட்டில் நிலையான அமைதியையும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் கட்டியெழுப்பதற்கு மக்கள் வழங்க வேண்டியதே காலத்தின் கட்டாயம்.
kaduppu
சரத் சட்டத்தை மதிப்பார் என நினைக்கிறேன்
இரவு 12 மணிக்கு முன் எனது பிரச்சாரத்தை முடிக்க அவசரப்படுகிறேன்.
சரத் சட்டத்தை மதிப்பார் என பல்லி நினைப்பதால் எனது வாக்கும் சரத்துக்கே. எலலாரும் சரத்துக்குப் போடுங்கோ.
மகிந்தாவின் குடும்பம் கூடாது. சரத்தின் குடும்பம் நல்லது. மகிந்தா குடும்பத்தில் அங்கம் வகிக்கிறவர்களைவிட சரத்தின் குடும்பத்தில அங்கம் வகிக்கிறவர்கள் எவ்வளவு மேல். குடும்பம் எண்ட சொல்லை எடுத்துவிட்hல் எல்லாரும் தனிமனிதர்கள்தான்.
பார்த்திபன்
//இன்று இரவு 12(இரவு இலங்கைநேரம்) மணிக்கு பின் தேர்தல் பிரசாரம் செய்வது சட்டபடி குற்றம் என தேர்தல் ஆணையாளம் சொல்லியிருக்கிறது; இது புலம்பெயர் தேசத்துக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்; ஆக ஜரோப்பாவில் இரவு 8மணிக்கு பின்பு நாமும் தேர்தல் வஸைபாடல் முடிவு பெற்றுவிடும்; இதை ஒரு தரமான ஊடகம் என்பதால் தேசமும் பின்பற்றும் என நினைக்கிறேன் – பல்லி //
வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை விட இணைய மற்றும் பத்திரிகை ஊடகங்களுக்குள்ள ஒரு வித்தியாசம். இந்த பத்திரிகை இணையங்களில் தேர்தல் பற்றி ஏற்கனவே வந்த கருத்து்களை திரும்பப் படிப்பதில் எவரும் தடை போட முடியாது….
varathan
சரத்தோ மகிந்தாவோ தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முடிவு காணப் போவதில்லை. எனினும் தமிழ்மக்கள் நேரமெடுத்து தமது தவறுகளை அலசி ஆராயவும் எதிர்காலப் போராட்டத்திற்கான வழிகளை கண்டடையவும் தயாராகவும் தேவையான காலத்தை எடுத்துக் கொள்ள மகிந்தவிற்கு வாக்களிக்கலாம். தமிழ்தேசிய கூட்டமைப்பை போன்ற சக்திகள் ஒரு போதும் தமிழ் மக்களின் நலன்களுடன் நின்றவர்கள் அல்லர். இலங்கை மக்களின் எதிரிகள் உள்நாட்டிலேயே இருக்கின்றனர்.
NANTHA
பார்த்திபனின் கருத்துக்களுக்கு பல்லி பதில் தர வேண்டும். பொன்சேகா தனது சவரக் காரனின் காதை ஒரு சிறு தப்பிற்காக வெட்டிய வீரர். இந்த பொன்சேகா எப்படி “சவரப்” பிரச்சனையை விட பெரிய பிரச்சனைகளை பொறுமையுடன் தீர்க்கப் போகிறார்?
palli
//உதாரணம்: அரச ஊழியர்கள் அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு.//
முடியாது ஆனால் சிறிதாவது முடியும் அதை அவர் நிர்வாகம் தான் முடிவு செய்யும் என்பது பலர் போல் பல்லியும் நினைக்கிறேன்;
//அது போல் தமிழ்மக்களிடம் ஒருவிதமாகவும், சிங்கள மக்களிடம் அதையே அப்படியே மாற்றியும் சரத் பிரச்சாரம் செய்து வருவதும், அதனை பத்திரிகை விளம்பரங்களாக சிங்கள மொழியில் வெளியிடுவதும் பல்லிக்குத் தெரியுமா??//
இதைதான் மகிந்தாவும் செய்கிறார் தெரியுமோ என பல்லி பார்த்திபனிடம் கேக்கமாட்டேன், காரனம் பார்த்திபனுக்கு மட்டுமல்ல தேர்தலை எதிர்பார்க்கும் சமூக அக்கறை உள்ள அனைவர்க்கும் தேர்தல் தில்லு முல்லுகள் தெரியும், இந்த வட்டத்துக்குள்தான் பல்லியும் சுத்துவதால் நீங்க கேட்ட விடயம் பல்லிக்கு தெரியும்;
// நல்லாட்சியைத் தருவாரென்று நீங்கள் நம்புகின்றீர்களா??//
யாரும் தரமாட்டார்கள் பேசிதான் பெற வேண்டும், இதில் மகிந்தாவை விட சரத் நிர்வாகத்திடம் பேசலாம் என்பது பல்லியின் கருத்து, இதையே 27ம்தேதிக்கு பின்பும் சொல்லுவேன் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன், பார்த்திபன் நீங்கள் சொல்லிய பல விடயத்தை என்னிடம் தெரியுமா தெரியுமா என கேட்டுஎழுதினீர்கள், பல்லியும் ஓர் அளவு அரசியல் தெரியும்; அத்துடன் நாட்டு நடப்புகளையும் உங்களை போன்றவர்களிடம் இருந்து கற்றும் வருகிறேன்;
//அடுத்து அனைத்து அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றாலும் தனது அதிகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த, பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்பது பல்லி அறியவில்லையா??//
அப்படியா தெரியவில்லை தோழர் ஒருஇடத்தில் சொல்லுவார் தனியாக முடிவெடுக்கும் உரிமை (அதிகாரம்) மகிந்தாவுக்கு (ஜனாதிபத்கிக்கு) இருந்தபடியால்தான் இந்த போர் வெற்றி பெற்றது என, இருப்பினும் நீங்கள் சொன்ன விடயம் எனக்கு புதிதாகவே உள்ளது;
//குளப்பங்களையே கொள்கைகளாகக் கொண்டுள்ள ஒரு கூட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதை தாங்கள் எந்த வகையில் ஆதரிக்கின்றீர்கள்??//
அந்த குழப்பமே தமிழருக்கு பலமாக அமையும் என்னும் நப்பாசையில் என வைத்து கொள்ளுங்கள்;
//. இதில் கோத்தபாய பசில் போன்றவர்கள் முக்கிய பொறுப்புகளிலிருந்து மகிந்தவோடு இணைந்து ஒரு குழுவாக இந்த யுத்தத்தைத் தொடர்ந்ததனாலேயே யுத்தம் வெற்றி பெற்றது.//
இப்படி ஒரு பத்திரிகைகாரருக்கு கதை சொல்லலாம்; ஆனால் அதே கோணத்தில் பல்லியையும் பரபரப்பாக்கி விடக்கூடாது பார்த்திபன்;
//இதுவரை தனக்குச் சவாலாக எவருமில்லையென நினைத்திரந்த மகிந்தவிற்கு சரத்தின் வடிவில் அது வந்தது பல விடயங்களைப் புரிய வைத்திருக்கும். எனி வருங்காலங்களில் அவர் தனது போக்கினை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலையை அது தெளிவு படுத்தியுமிருக்கும். எனவே கடந்த நான்கு வருடங்களை போரிலேயே கடந்து வந்த மகிந்தவிற்கு இன்னொரு சந்தர்ப்பத்தையும் வழங்கி நாட்டில் நிலையான அமைதியையும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் கட்டியெழுப்பதற்கு மக்கள் வழங்க வேண்டியதே காலத்தின் கட்டாயம்.//
பார்த்திபன் இந்த கருத்தே என்னை சரத்துக்கு வோட்டென தெரிவுசெய்ய உதவியது, நானே ராஜா என்ற போக்கு மகிந்தாவுக்கு எப்படி மாறியது, அது தேவை அதை இந்த சரத்தால் மட்டுமே கொடுக்க முடியும்; சரத் ஜனாதியாக வரவேண்டும் எனவோ அல்லது அவருக்கு எல்லோரும் வோட்டு போடுங்கள் எனவோ பல்லி எங்கும் சொன்னதில்லை, ஆனால் மகிந்தாவுக்கு ஒரு சரியான எதிரி இவர்தான் என்பதை மகிந்தா சரத் ஊடலின் போதே பல்லி எழுதினேன், எனது பார்வையில் மகிந்தா கருனாபோல் எனில் சரத் பிள்ளையான் போல் எனலாம், இதில் யார் சிறந்தவர் வல்லவர் என்பதை கடந்தகாலம் எமக்கு கற்று தந்திருக்கு;
NANTHA
பல்லி:
இலங்கையில் “நிதியாண்டு” அதாவது “FINANCIAL YEAR” என்பது ஏப்ரல் தொடக்கம் மார்ச் வரை என்பது அரச சேவையில் இருந்தவர்களுக்குத் தெரியும். இந்த ஏப்ரல் தொடக்கம் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்கான சுற்று நிருபமும் சகல அரச திணைக்களங்களுக்கும் அனுப்பியாகிவிட்டது.
பொன்சேகாவின் 10000 ரூபா சம்பள உயர்வு என்பது ஒரு மாய மானே தவிர வேறொன்றுமில்லை. சம்பள உயர்வாக பத்தாயிரம் அதாவது 90 டாலர்கள் மேற்கு நாடுகளில் கூட நடக்க முடியாத ஒன்று. இலங்கையில் அப்படி நடந்தால் அந்த செலவை ஈடுகட்ட கண்டிப்பாக பொருட்களின் விலைகள் குறைந்த பட்சம் இருபது சதவீதம் உயர்த்த வேண்டும். ராஜபக்சவின் 2500 உயர்வே விலைவாசிகளை அதிகரிக்கச் செய்யும்.
எனவே “பொருளாதாரம்” “பணவீக்கம்” போன்ற சில உண்மைகளை படித்தால் நல்லது.
மஹிந்த சிங்களத்தில் ஒன்று, தமிழில் இன்னொன்று சொல்வதாக ஒரு உதாரணத்தை காட்ட முடியுமா?
ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக பொன்சேகா விடும் சரடு எப்படி சாத்தியமானதாகும்? பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு கட்சி இல்லாத பொன்சேகா எங்கு போய் அதனைப் பெறப் போகிறார்? சரி. பணம் கொடுத்து எம்பி மாரை விலைக்கு வாங்குவதனாலும் எத்தனை கோடி தேவை?
பதவிக்கு வர இவ்வளவு கூத்தும் ஆடும் பொன்சேகா அந்த பதவியை துறந்து விட்டு வனவாசம் அல்லது சன்யாசம் கொள்ளப் போகிறாரா?
BC
//அது போல் தமிழ்மக்களிடம் ஒருவிதமாகவும் சிங்கள மக்களிடம் அதையே அப்படியே மாற்றியும் சரத் பிரச்சாரம் செய்து வருவதும் அதனை பத்திரிகை விளம்பரங்களாக சிங்கள மொழியில் வெளியிடுவதும் பல்லிக்குத் தெரியுமா??
பல்லி- இதைதான் மகிந்தாவும் செய்கிறார் தெரியுமோ என பல்லி பார்த்திபனிடம் கேக்கமாட்டேன்//
சரத் தமிழ்மக்களிடம் ஒருவிதமாகவும் சிங்கள மக்களிடம் அதையே அப்படியே மாற்றியும் பிரச்சாரம் செய்வது போல் மகிந்தாவும் செய்தாரரா?அது என்ன என்பதை பல்லி தெரிவிக்கலாமே.
palli
நந்தா உங்கள் பண வீக்கம் பற்றி (கத்தரிக்காய் இருந்து கற்பூரம் வரை) கடல் தொழில் இருந்து கமதொழில் வரை தேர்தல் முடிந்த பின் விவாதிக்கிறேன், PC மகிந்தா என்ன சொன்னார் என்பதை அதே தேர்தல் முடிந்த பின் யார் ஆட்ச்சிக்கு வந்தாலும் ஆடம்பரம் இல்லாமல் எழுதுகிறேன்; தொடரும் பல்லி;;
ஜெயராஜா
/எனது பார்வையில் மகிந்தா கருனாபோல் எனில் சரத் பிள்ளையான் போல்// பல்லி
பல்லி தப்பே இங்குதான் இருக்கிறது. சரத்துக்குப் பின்னால் ஏகாதிபத்தியம் தனது சரிந்துவரும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பி பழைய ஆயுத வியாபாரத்தையும் மேலாதிக்கத்தையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான நாடுகளை தேடுகிறார்கள். ஏனெனில் இலங்கை இன்று நட்பு நாடாக இந்தியா சீனா ரஷ்யா இந்த நாடுகளுடனேயே கூடியளவு உறவுகளைக் கொண்டுள்ளது. இதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனை சரத்மூலம் உருவாக்கி ஈராக் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் போல் தினமும் குண்டுவெடிப்பை உருவாக்கி அமைதிப் படையையும் உருவாக்குவார்கள். இதை எமது மக்கள் இனியும் தாங்க மாட்டார்கள்.
எமது நாட்டில் யுத்தம் நடந்தது உண்மை சிங்கள அரசு தமிழ் சிங்கள மக்களை கொலை செய்தது உண்மை. புலி தொடங்கி சகல இயக்கங்களும் கொலை செய்தது உண்மை. ஆனால் ஒரு இராணுவ ஆட்சிக்குரிய பரிணாமம் இலங்கையில் இதுவரை இல்லை. டக்ளஸ் பிள்ளையானோ புலியைப் போலவோ சரத்தைப் போலவோ ஏகாதிபத்திய நாடுகளிடம் விழுங்கிப்போய் நிற்கவில்லை. யாரும் தப்பே செய்யவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. இன்று எமக்கு எது தேவை என்றதுதான் முக்கியம்.
Rohan
பல்லி //உதாரணம்: அரச ஊழியர்கள் அனைவருக்கும் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு.//
/முடியாது ஆனால் சிறிதாவது முடியும் அதை அவர் நிர்வாகம் தான் முடிவு செய்யும் என்பது பலர் போல் பல்லியும் நினைக்கிறேன்; /
மகிந்த குடும்பம் அடித்த கொள்ளை இருக்கிறதே, அதை எடுத்துப் பிரித்துக் கொடுத்தாலே ஒவ்வொரு அரச ஊழியனுக்கும் ஒரு பெரிய தொகை தேறும்.
பார்த்திபன்
//மகிந்த குடும்பம் அடித்த கொள்ளை இருக்கிறதே, அதை எடுத்துப் பிரித்துக் கொடுத்தாலே ஒவ்வொரு அரச ஊழியனுக்கும் ஒரு பெரிய தொகை தேறும்.- Rohan //
உங்களுக்குத் தெரிந்த அந்த விபரங்களை இங்கு வெளியிடுங்களேன், நாமும் பார்த்து பரவசமடைய.
Rohan
நந்தா
//அதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் “மிளகாய்”, “வெங்காயம்” இறக்குமதியை நிறுத்தி யாழ் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான வருமானத்தை பெற்றுக் கொடுத்ததும் ராஜபக்சவின் கட்சியான சுதந்திரக் கட்சி என்பது வரலாறு அறிந்தவர்களுக்குப் புரியும்.?
யாழ்ப்பாண பலகலைக் கழகத்தை வழங்கியவர்களும் அதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர்தான். யாழ் பல்கலைக் கழக திறப்பு விழாவிற்கு வந்த அன்றைய பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரனாயக்காவிட்கு “தமிழ்” கட்சிகள் கறுப்புக் கொடிதான் காட்டினார்கள்.
வெறும் “புலி” பிரச்சாரங்களை படித்து மூளை சலவை செய்து கொண்டவர்களுக்கு வரலாறு எங்கே புரியப் போகிறது?//
இந்த ‘சுதந்திரக் கட்சி லேபல்’ வெறும் வெத்து வேட்டு என்பது எனது பணிவான அவதானம்.
‘இதே’ சுதந்திரக் கட்சி தான் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தது. அவர்களால் தான் சிங்களம் வற்புறுத்தி திணிக்கப்பட்டது.
தேர்தலின் பின் தமிழருக்கு எதிரான கலவரம் வந்தது. ‘சுதந்திரத்தின்’ பின் முதன் முதலாக இனக் கலவரம் என்று சொல்லிக் கொண்டு தமிழனுக்கு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிங்கள மக்களுக்குக் காட்டியவர்களே ‘இதே’ சுதந்திரக் கட்சியினர் தான்.
தமிழரசுக் கட்சி (அவர்கள் சரியானவர்களா என்று வாதத்தைத் திசை திருப்ப வேண்டாம்) சத்தியாக்கிரகம் செய்தபோது அடித்து நொருக்க வழி செய்தவரும், இரத்தம் வழிய வந்தவர்களை நையாண்டி செய்தவரும் ‘இதே’ சுதந்திரக் கட்சியின் மாண்புமிகு தாபகர் தான்.
தரப்படுத்தல் என்ற பெயரில் கல்வியில் சிறந்த மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை முடக்கியவர்களும் ‘இதே’ சுதந்திரக் கட்சியினர் தான். இதில் யாழ்ப்பாணத்தான் வன்னியான் என்ற வாதம் எல்லாம் கிடையாது. பணக்கார வெள்ளாள வர்க்கம் பல்கலைக்கழக வாய்ய்ப்புகளை அள்ளிப் போகவில்லை. ஏழை வெள்ளாளனும் ஏழை நளவனும் தம் பிள்ளைகள் பல்கலைக்கழகம் போய் தமது வாழ்வு பள்ளத்திலிருந்து வெளிப்பட உதவுவர் என்று நம்பியிருக்க, எதிர்பாராத விதமாக வந்தது தரப்படுத்தல். இரண்டு ஆண்டுகள் முன்னறிவித்தல் தரப்பட்டிருந்தால் கூட ஏழைப் பெற்றோர் தயாராக இருந்திருப்பர்.
குடாநாட்டில் பாடசாலைகள் அதிகம் இருந்தன. பொறுப்பாக கற்பிக்கத் தக்க ஆசிரியர்களும் இருந்தனர். மாணவர்களுக்குக் கல்வியின் மூலம் கிடைக்கத்தக்க விடிவு பற்றித் தெரிந்திருந்தது. அதனால் குடாநாட்டு மாணவர்கள் தொகையாகப் பல்கலைக்கழகம் போனார்கள். கல்வி வளர்ச்சி குறைந்த மாகாணங்கள் ஆதரிக்கப் படவேண்டும் என்பது முறைதான். ஆனால், அது கல்வி வளர்ச்சி கூடிய மாகாணத்து மாணவர்களின் வயிற்றில் அடிப்பது மூலம் தான் பெறப்பட்டது. அந்த மாகாணத்து மாணவர்கள் எல்லோரும் அங்கே படித்தார்களா என்றால், அதுவும் இல்லை. குடாநாட்டில் தான் அவர்களும் படித்து தம் ஊரில் பரீட்சை எழுதினர். அங்கிருந்து பல்கலைக்கழகம் போனோர் தாங்கள் மேட்டுக் குடி ஆகி தம் ஊரையே மறந்தனர். சரி – அந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய ஏதும் நடந்ததா என்றால் அதுவும் இல்லை
“வன்னியின் மூலை முடுக்கெல்லாம் பாடசாலைகளை கட்டி கிராமப்புற பிள்ளைகளுக்கு “அறிவு” வழங்கியவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பதை யாரவது மறுக்க முடியுமா?” என்பது உண்மை அல்ல! தனக்கென ஒரு சொந்த ஆதரவுத் தளம் இல்லாத செல்லையா குமாரசூரியர் கிளிநொச்சியில் ஒரு கண் வைத்து இரண்டொரு ‘சேவைகள்’ செய்தது உண்மையே. ஆனால், “மூலை முடுக்கெல்லம் பாட்சாலைகள் கட்டி” என்பதெல்லாம் கொஞ்சம் அல்ல -நிறையவே ஓவர்! பாடசாலகளை அவர்கள் திருத்தியதே குறைவு!
கிராம (கல்வி வளர்ச்சி குறைந்த) பிரதேசங்களை வளர்ப்பதென்றால், ஒரு ‘டெட் லைன்’ போட்டு இந்தத் தரப்படுத்தலை ஒரு முடிவுக்குக் கோண்டு வந்திருக்க வேண்டும். நடந்ததா அது?
ஐந்து வருடங்களில் முடிந்திருக்க வேண்டிய ஆட்சியை, ஒரு குடியரசுப் பிரகடனத்தைச் செய்து விட்டுநீட்டியதும் ‘இதே’ சுதந்திரக் கட்சி தான்.
‘இரு மொழி ஒருநாடு – ஒரு மொழி இருநாடு’ என்று ‘இதே’ சுதந்திரக் கட்சிக்குச் சொன்ன கொல்வின் ஆர் டி சில்வாவை வைத்து அதை வெல்லும் ஒரு அரசியல் யாப்பை எழுதியதும் ‘இதே’ சுதந்திரக் கட்சி தான்.
சுதந்திரக் கட்சி கிராம மட்டத்துச் செல்வாக்குக்காக செய்த பல நல்ல விடயங்கள் பலருக்குத் தெரியும். ஆனாலும், இரண்டு கட்சிகளுமே கோவிகம குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இது தெரிவதற்குப் பொது அறிவும் திறந்த மனதுடன் விடயங்களை விளங்கும் பக்குவமும் போதும்.
இதற்குள், “வெறும் புலி பிரச்சாரங்களை படித்து மூளை சலவை செய்து கொண்டவர்களுக்கு வரலாறு எங்கே புரியப் போகிறது” என்று ஒரு நக்கல் வேறா?
பார்த்திபன்
//அப்படியா தெரியவில்லை தோழர் ஒருஇடத்தில் சொல்லுவார் தனியாக முடிவெடுக்கும் உரிமை (அதிகாரம்) மகிந்தாவுக்கு (ஜனாதிபத்கிக்கு) இருந்தபடியால்தான் இந்த போர் வெற்றி பெற்றது என, இருப்பினும் நீங்கள் சொன்ன விடயம் எனக்கு புதிதாகவே உள்ளது.- பல்லி //
ஜனாதிபதிக்கு சில தனிப்பட்ட அதிகாரங்கள் உண்டு தான். ஆனால் அவை ஆட்சியில் சில செயற்பாடுகளை செய்வதற்கு மட்டுமே. ஆனால் ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள் பற்றிய யாப்பை மாற்றியமைப்பதற்கு பாராளுமன்றப் பெரும்பான்மை வேண்டுமென்பது தங்களுக்குத் தெரியாமல்ப் போனது எனக்கு வியப்பாகவே உள்ளது.
//BC மகிந்தா என்ன சொன்னார் என்பதை அதே தேர்தல் முடிந்த பின் யார் ஆட்ச்சிக்கு வந்தாலும் ஆடம்பரம் இல்லாமல் எழுதுகிறேன்.- பல்லி //
மகிந்த சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் சரத் செய்தது போல் பிரசாரம் செய்ததாக எந்த ஊடகத்திலும் நான் பார்க்கவில்லை. பல்லி பார்த்திருந்தால் அதனை உடன் தெளிவுபடுத்தத் தயங்குவதேன்??
பார்த்திபன்
சரத்தின் 10000 ரூபா சம்பள உயர்வு சாத்தியமற்றது மட்டுமல்ல. இலங்கைக்கு கடன் கொடுக்கும் உலக வங்கி கூட, இதனை அனுமதிக்காது என்பது கூடவா இங்கு கருத்தெழுதும் கருத்தாளர்களுக்குத் தெரியவில்லை. சந்திரிகா காலத்தில் உலக வங்கி இலங்கையில் மிக அதிகமாக லீவு நாட்கள் இருப்பதை கண்டித்த போதே, சந்திரிகா இந்துக்களின் திருநாளான சிவராத்திரியை உடன் நீக்கினார். லீவு நாட்களையே விட்டு வைக்காத உலகவங்கி, இப்படி அதிகமான சம்பள உயர்வை விட்டு வைக்குமா??
மாயா
//எனது பார்வையில் மகிந்தா கருனாபோல் எனில் சரத் பிள்ளையான் போல் எனலாம், இதில் யார் சிறந்தவர் வல்லவர் என்பதை கடந்தகாலம் எமக்கு கற்று தந்திருக்கு;- பல்லி//
அப்ப, பிரபாகரன் யார் போல. டட்லி போலவா?
palli
//:இன்று நட்பு நாடாக இந்தியா சீனா ரஷ்யா இந்தநாடுகளுடனேயே கூடியளவு உறவுகளைக் கொண்டுள்ளது.//
புலி என்னும் போர்வையில் வன்னிமக்களையே அரசு கொன்று குவித்தபோது அரசுக்கு எது தேவையோ அதை சலிக்காமல் கொடுத்து உதவியதால் அதுகள் நேச நாடு; ஆனால் சரியோ தவறோ போரில் மக்கள் அழிவதை கவனத்தில் எடுக்கும்படி கேட்ட நாடு ஏகாதிபத்தியம்; பல்லியை பொறுத்த மட்டில் ஏகாதிபத்தியம் என்பது புத்தகத்தில் படிப்பதல்ல, நடைமுறையில் கவனிக்கபட வேண்டும்; ஜெயராஜ் இலங்கை ஒரு சின்ன நாடு ஆனால் உலக போருக்கு தேவையான ஆயுதங்கள் கொள்வனவு செய்தாச்சு; சிலவேளை அரை விலைக்கு ஏதாவது கஸ்ற்றபட்ட நாடுகளுக்கு விற்க்கலாம்;
பார்த்திபன் தயக்கமோ தடுமாற்றமோ என்னிடம் இல்லை, காரனம் நான் சொல்வது சரியோ தவறோ எனது கருத்துதான்; அதனால் அது தவறாயின் வருத்தத்தை தெரிவிக்கவும் தயங்கமாட்டேன், உலகவங்கி, பணவீக்கம்; மற்றும் மகிந்தா எங்கே என்ன சொன்னார் என்பது ஒரே பின்னோட்டத்தில் முடிய போவதில்லை; பல பின்னோட்டங்கள் பல்லி தொடர்வேன்; அதனால்தான் தேர்தல் முடியட்டும் என சொன்னேன், ஓட மாட்டேன் தொடர்வேன், காரனம் நான் யாருடைய வெற்றியையும் எதிர்பார்க்கவில்லை, எதுக்கும் நோர்வே நக்கீராவின் கட்டுரையை கவனியுங்கள் பல தெரியாத விடயங்களை கொண்டுவந்துள்ளார்;
//அப்ப, பிரபாகரன் யார் போல. டட்லி போலவா?//மாயா;
மாயா பல்லிக்கு டல்லி என்றால் என்ன என தெரியவில்லை (அர்த்தம்) அதனால் ஜேஆர் போல் என எடுத்து கொள்ளுங்கள்;
palli
//ஜனாதிபதிக்கு சில தனிப்பட்ட அதிகாரங்கள் உண்டு தான். ஆனால் அவை ஆட்சியில் சில செயற்பாடுகளை செய்வதற்கு மட்டுமே//
அதுகள் என்ன என்பதை பல்லி தெரியலாமா??
//ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள் பற்றிய யாப்பை மாற்றியமைப்பதற்கு பாராளுமன்றப் பெரும்பான்மை வேண்டுமென்பது தங்களுக்குத் தெரியாமல்ப் போனது எனக்கு வியப்பாகவே உள்ளது.//
இது இங்கு பிரச்சனையுமல்ல; பேசவும் இல்லை; ஜனாதிபதியின் அதிகார துர்பிரயோகம் பற்றிய பிரச்சனைதான் பேசபட்டது, ஆகவே அனைத்து அதிகாரம் தேவையில்லை என்பதுதான் என்வாதம்; யாப்புகள் மாற்றபட வேண்டும் அதுக்கு சரத் ஜனாதிபதியானால் மட்டும் போதாது; பாராளமன்ற தேர்தலில் அதிக பெருண்பாண்மை வெற்றியை எந்த கட்ச்சியும் பெற்றுவிட கூடாது, ஆனால் அதை கூட ஜனாதிபதி அனுமதிக்க வேண்டும் என விபரம் தெரிந்த நண்பர்கள் சொல்லுகிறார்கள்,
//இலங்கைக்கு கடன் கொடுக்கும் உலக வங்கி கூட, இதனை அனுமதிக்காது//
ஏற்றுகொள்ளலாம்; ஆனால் அதே தாங்கள் சொல்லும் உலகவங்கிகள் புலியை அழிக்க எப்படி கடன் கொடுத்தார்கள்; சீனா எப்படி இன்று பல கோடிகளை இலங்கயில் முதலீடு செய்கிறது, மகிந்தா குடும்பத்தை நம்பியா?? இந்தியாவில் பல பசியாற முடியாத கிராமங்கள் இருக்கும் போது இலங்கைக்கு கோடிகளை தாரவார்க்க முன்வருவது எதை நம்பி? பணவீக்கம் தொழிலாளர்க்கு மட்டுமேதான்; அரசுக்கல்ல என்பதுக்கு பல விடயத்தை சொல்லலாம், சரத் 10000;கொடுக்க முடியாது என்பது உன்மைதான் ஆனால் மகிந்தா கொடுக்கும் 2800 யாருக்கென முதலில் தேடுங்கள்;
எமக்கு தேவை எம்மின முன்னேற்றம், அதுக்காக யார் முன்வந்தாலும் அதை ஏற்க்க கூடிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்; சுனாமியில் இருந்து இடைதங்கல் முகாம்வரை உதவிக்காய் உலகம் கொடுத்த உதவியில் 10 வீதம் கூட சேரவேண்டியவர்க்கு சேரவில்லை என்பதை பல்லிதான் சொல்லவேண்டியதில்லை; நல்லது செய்தால் பாராட்டுவதும் தவறை செய்யும் போது சுட்டிகாட்டவே இப்போதைக்கு எம்மால் முடியும்; அதையே நான் செய்கிறேன்; பொருளாதாரம் பற்றியும் பேசுவோம் பொறுப்பான அரசாய் எம்நாட்டில் யாரேனும் வரட்டும் யாராக இருந்தாலும் எமக்கு ஒன்றுதான்; அதுவரை தவறுகளைதானே பேசவோ எழுதவோ முடியும்!!!
varathan
சரியோ தவறோ போரில் மக்கள் அழிவதை கவனத்தில் எடுக்கும்படி கேட்ட நாடு ஏகாதிபத்தியம்”
மக்கள் மீதான அபரிதமான அன்பின் காரணமாகவா ஏகாதிபத்தியம் அவ்வாறு நடந்து கொண்டது. தங்கள் கையாளான புலியை காப்பாற்றவல்லவா தனி விமானமேறி இலங்கைக்கு சென்றது. பல்லிக்கு ஏன் இந்த தடுமாற்றமோ?
palli
வரதன் நேச நாடுகள் ரஸ்யா சீனா இந்தியா பாகிஸ்தான் இப்படி பல; ஆனால் எந்த நாட்டிலும் தமிழர் பற்றி பேசமுடியாது; ஆனால் அமெரிக்காவில் தமிழனே தமிழரை பற்றி பேசமுடியும், (பல்லி இங்கே தறுதலை கூட்டத்தை சொல்லவில்லை) கறுப்பு எல்லாம் கறுப்புமல்ல சிவப்பு எல்லாம் சிவப்புமல்ல என்பதை புரிய வரதனுக்கு இன்னுமா காலம் வேண்டும்; இனிமேலாவது உங்களுக்கு பிடிக்காததெல்லாம் புழிக்கும்(புலி) என்னும் மாயையில் இருந்து விலகுங்கள்; செத்த பாம்பு அடிக்க ஊர்கூடி ஊர்வலம் என்பது போல் இடுக்கு உங்கள் குறள்;
NANTHA
ரோகன் //‘இதே’ சுதந்திரக் கட்சி தான் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தது. அவர்களால் தான் சிங்களம் வற்புறுத்தி திணிக்கப்பட்டது.//
எந்த ஒரு நாடும் அலுவலக மொழி என்று ஒரு மொழியய்தான் வைத்திருப்பார்கள். இந்தியாவில் ஹிந்தி, சீனாவில், ஜப்பானில் எல்லாம் அதே கதைதான். அரச சேவையிலுள்ளவர்கள் மாத்திரம் மூன்று வருடங்களில் சிங்கள மொழியில் “எட்டாம்” வகுப்பு தேர்ச்சி பெறல் வேண்டும் என்பது அரச கரும மொழிச் சட்டத்தின் சாரம்.
சிங்கள பகுதிகளில் வேலைக்கு போகும் தமிழர்கள் என்ன மொழியில் அந்த சிங்கள மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இந்த ரோகன் எதிர்பார்க்கிறார்? தமிழரசுக் கட்சி சிங்களம் வந்தமைக்குக் கவலைப்படுவதிலும் பார்க்க ஆங்கிலம் போய் விட்டது என்பதற்குத்தான் அதிகம் கவலைப்பட்டனர். 99 .9 சதவீதம் மக்களுக்கு புரியாத ஆங்கிலம் இருக்க வேண்டுமென்று எந்த “அறிவுள்ள” மனிதனும் நினைக்க மாட்டான். தவிர இந்த சட்டம் பெரும்பான்மை தமிழர்களுக்கு எந்த தாக்கத்தை விளைவித்தது? தமிழர்களில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான அரச ஊழியத்துக்கு போனவர்கள்தான் சிங்களம் படிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டார்கள். இது எப்படி மிகுதி 95 % தமிழர்களை பாதிக்கும்.? கள்ளிறக்கும் கந்தனுக்கும், கமம் செய்யும் செல்லையாவுக்கும், மீன் பிடிக்கும் தங்கவேலுவுக்கும் சிங்களம் தேவையா? தமிழே தேவையில்லை.
“சிங்களம் மட்டும்” என்று எந்த சட்ட புத்தகத்திலும் இல்லாத ஒன்றை ஊதி பெருப்பித்து தமிழர்களை விழுங்க வந்த பூதம் என்று செல்வநாயகம் கும்பல் கூச்சலிட்டது. இவர்களின் முட்டாள் தனத்தை நம்பி தங்கள் வேலைகளை இராஜினாமா செய்த தமிழர்களை தமிழரசுக் கட்சி “மாவீரர்”களாக்கவில்லை. “உங்கள் பேச்சை நம்பி” தொழிலை இராஜினாமா செய்து விட்டோம் எங்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட அந்த முன்னாள் அரச ஊழியர்களிடம் ” உங்களை நாங்கள் இராஜினாமா செய்யக் கேட்கவில்லை, நீங்கள் அப்படி எடுத்த முடிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றுதான் செல்வநாயகம் கும்பல் கூறி அவர்களை துரத்தியது. “சிங்களம் மட்டும்” என்ற வகுப்பு வாதத்தை “தமிழ் கட்சி கிளப்பினால் அது “இன வாதம்” இல்லையோ? இதே செல்வநாயகம் கும்பல் 1971 இல் வடக்கு கிழக்கில் “தமிழில்” நீதிமன்றங்களில் வழக்காடலாம் என்று சொன்ன போது “தமிழில்” வழக்காட முடியாது என்று அமிர்தலிங்கம் பகிரங்க அறிக்கை விட்டார். இது என்ன தமிழ் போராட்டமோ நானறியேன்.
சிங்கள மொழியை அரச கரும மொழியாக்காதே என்று தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகம் இருந்தார்கள். இது எந்த நாகரீகப்படி நியாயம்? “அரச கரும மொழிச் சட்டத்தின்” உப சரத்துக்களை படிக்காமல் அல்லது அதனை நடை முறைப்படுத்த என்ன செய்யலாம் என்ற யோசனைகளை விட்டு விட்டு “சிங்களம்” அரச கட்டில் ஏற விடமாட்டோம் என்று புலம்பினால் 75 சதவீத சிங்களவர்கள் ” ஆகா செல்வநாயகம் மாத்தையா காந்தியாக வந்திருக்கிறார். எங்கள் சிங்களத்தை விட்டுவிடுடோம்” என்று சிங்களவர்கள் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தார்களா? இல்லை. சிங்களவர் எதிர்ப்பார்கள், அதுவே தங்களுக்கு ஒரு “பெரிய” அரசியல் முதலீடு என்றுதான் செல்வநாயகம் கும்பல் எதிர்பார்த்தது. அரச கரும மொழிச் சட்டத்தின்படி சகல அலுவலக தொடர்புகளும் “தமிழிலும் சிங்களத்திலும்” இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிவிக்காத தமிழ் சூரர்கள் செய்த அரசியல் மகா கேவலமும், தமிழர்களை ஏமாற்றிய துரோகமும் ஆகும்.
இந்த “தாங்களே கிளப்பி” தமிழர்களின் மரணங்களை வலிந்து உண்டாக்கி அதில் குளிர் காய விட்டதன் அறுவடை முள்ளி வாய்க்காலில் கோவணத்துடன் முடிவுற்றது.
//“வன்னியின் மூலை முடுக்கெல்லாம் பாடசாலைகளை கட்டி கிராமப்புற பிள்ளைகளுக்கு “அறிவு” வழங்கியவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பதை யாரவது மறுக்க முடியுமா?” என்பது உண்மை அல்ல! தனக்கென ஒரு சொந்த ஆதரவுத் தளம் இல்லாத செல்லையா குமாரசூரியர் கிளிநொச்சியில் ஒரு கண் வைத்து இரண்டொரு ‘சேவைகள்’ செய்தது உண்மையே. ஆனால், “மூலை முடுக்கெல்லம் பாட்சாலைகள் கட்டி” என்பதெல்லாம் கொஞ்சம் அல்ல -நிறையவே ஓவர்! பாடசாலகளை அவர்கள் திருத்தியதே குறைவு!//
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி “குமாரசூரியருக்கு” முந்தியது. 1956 இல் இருந்து 1965 வரை ஆட்சியிலிருந்த சுதந்திரக் கட்சி வன்னிப் பகுதியில் கட்டிய பாடசாலைகளின் எண்ணிக்கை 1200 க்கும் அதிகம் என்பது இந்த ரோஹானுக்கு தெரியாது. ஏனென்றால் இவருக்கு குமாரசூரியரை மட்டும்தான் தெரிகிறது.
வன்னி மாவட்டத்தில் “அ.த.க.பா.” என்ற பெயருடன் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலத்தில் நிர்மாணிக்கபட்டவையே. அன்று வன்னி என்பது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம். இந்த நான்கு மாவட்டங்களிலும் 200 க்கும் குறைவான பாடசாலைகளே 1960 ஆம் ஆண்டு இருந்தன. 1965 இல் இந்த எண்ணிக்கை 1500 ஐ எட்டியது. இது தெரியாமல் குமாரசூரியரின் காலத்தை கனவு காண்பது வெறும் “எதிர்ப்பு” கோஷமும்” உண்மையை மறைக்கும் கபட நோக்கமுமே ஆகும்.
//குடாநாட்டில் பாடசாலைகள் அதிகம் இருந்தன. பொறுப்பாக கற்பிக்கத் தக்க ஆசிரியர்களும் இருந்தனர். மாணவர்களுக்குக் கல்வியின் மூலம் கிடைக்கத்தக்க விடிவு பற்றித் தெரிந்திருந்தது. அதனால் குடாநாட்டு மாணவர்கள் தொகையாகப் பல்கலைக்கழகம் போனார்கள். கல்வி வளர்ச்சி குறைந்த மாகாணங்கள் ஆதரிக்கப் படவேண்டும் என்பது முறைதான். ஆனால், அது கல்வி வளர்ச்சி கூடிய மாகாணத்து மாணவர்களின் வயிற்றில் அடிப்பது மூலம் தான் பெறப்பட்டது. அந்த மாகாணத்து மாணவர்கள் எல்லோரும் அங்கே படித்தார்களா என்றால், அதுவும் இல்லை. குடாநாட்டில் தான் அவர்களும் படித்து தம் ஊரில் பரீட்சை எழுதினர். அங்கிருந்து பல்கலைக்கழகம் போனோர் தாங்கள் மேட்டுக் குடி ஆகி தம் ஊரையே மறந்தனர். சரி – அந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய ஏதும் நடந்ததா என்றால் அதுவும் இல்லை //
“கற்பிக்க தக்க ஆசிரியர்கள்” இருந்தால் புற்றீசல் போல டியூட்டரிகள் கிளம்பிய மர்மம் என்ன? சக்கட்டைகளையும் “டாக்டர்” ஆக்கும் பக்டரிகளோ?
எத்தனை மாணவர்கள், அதுவும் வறிய மாணவர்கள் யாழ்ப்பணத்தில் வந்து படித்தார்கள்? உங்களின் கதையின்படி யாழ்ப்பாணத்துக்கு வந்து படித்த “வேறு’ மாவட்ட தமிழ் மாணவர்கள் “மேட்டுக்” குடிகள். யாழ்பாணத்து மாணவர்கள் பல்கலைக் கழகம் போய் சமூக சேவையா செய்கிறார்கள்? யாழ்ப்பாணத்து “சீதனம்” வாங்கி அவர்களும் யாரோ வியாபாரிக்கு அல்லது கள்ளக்கடத்தல்காரனுக்கு மாப்பிள்ளையாகிய கதைதான்.
தரப்படுத்தல் மாவட்டங்களின் “பொருளாதார அடிப்படையில் செய்யப்பட்டது. ஆனால் யுஎன்பி கொண்டுவந்த “மாவட்ட கோட்டா” அடிப்படை அனுமதி அதைவிட கேவலம். அதனைப் பற்றி தமிழ் சூரர்கள் வாயே திறக்கவில்லை. ஏனென்றால் யு என் பி கொண்டுவந்து விட்ட திட்டமல்லவா!
அது சரி! யாழ் பல்கலைக் கழகம் தந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிட்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாம். நன்றி செலுத்தும் பண்பாடு யாழ்ப்பாணத்தானுக்கு கிடையாது. அந்த பல்கலைக் கழகத்தை என்ன செய்தார்கள்? ரஜனி திரணகம என்ற பெண் பேராசிரியரைக் கொலை செய்தார்கள். பின்னர் கஜேந்திரன் கும்பலை “அங்கு காட்டாட்சி செய்ய” அனுமதித்தனர். இதுவும் தரப்படுத்தலின் “பகுதியோ?”
தரப்படுத்தலை “வீராவேசமாக” எதிர்த்த அமிர்தலிங்கம் 1977 இல் எதிர்கட்சி தலைவராகியதுடன் 1958 இல் “சிங்களம்” சட்டத்தை எதிர்த்து இராஜினாமா செய்த தமிழ் அரச ஊழியர்களை துரத்தியது போலவே “அந்த” மாணவர் பேரவைக் கூட்டத்தையும் ” நீங்கள் மாணவர்கள். போய் படியுங்கள்’ என்று துரத்தியது சம்பந்தப்படவர்களுக்கு தெரியும்.
ஆனால் அமிர்தலிங்கம் “காலியான” வட்டுக்கோட்டை தொகுதிக்கு கள்ளகடத்தல்காரன் குட்டிமணியை பா.உ. ஆக்கிய வழிகாட்டல் அபாரம். குட்டி மணிக்கும் தரப்படுத்தல் பிரச்சனயா? 1970 க்குப் பின்னர் கள்ளக் கடத்தல்காரர்களின் கப்பல்கள் நூற்றுக் கணக்கில் இலங்கை கடற்படையின் “வீரயாவினாலும் சூராயாவினாலும்” ஜலசமாதியாகின. இதுதான் குட்டிமணியின் தமிழ் பிரச்சனை. அன்று அமிர்தலிங்கம் “தரப்படுத்தலால்” பாதிக்கப்பட்ட மாணவனை வட்டுக்கோட்டை தொகுதிக்கு நியமனம் செய்யாத மர்மம் என்னவோ? அமிர்தலிங்கத்தின் “தமிழ்”, “தரப்படுத்தல்” என்பன எல்லாம் “தனது” அரசியல் முதலீடுகள் என்பதுதான் கணிப்பு. குட்டிமணி போன்ற தேச விரோத கள்ளகடத்தல் கொலைகாரனை எதுவித நாணமுமின்றி நியமித்த “அரசியல்”, தமிழ் போராட்ட போக்கிரித்தனத்தின் ஒரு அடையாளம். அமிர்தலிங்கம் “கிரிமினல்களை” தனது அரசியல் படை என்று ஊட்டி வளர்த்து “பல” அரசியல் எதிரிகளை கொலை செய்த “காந்திய அஹிம்சாவாதி”. கடைசியில் அதே கிரிமினல்களையும் “களட்டி” விட அமிர்தலிங்கம் கோஷ்டி தொடங்கிய வேளை அதே கிரிமினல்கள் அமிர்தலிங்கத்தையே “போட்டுத்” தள்ளினர்.
// இரு மொழி ஒருநாடு – ஒரு மொழி இருநாடு’ என்று ‘இதே’ சுதந்திரக் கட்சிக்குச் சொன்ன கொல்வின் ஆர் டி சில்வாவை வைத்து அதை வெல்லும் ஒரு அரசியல் யாப்பை எழுதியதும் ‘இதே’ சுதந்திரக் கட்சி தான்//
லங்கா சமசமாஜ கட்சி அப்படி சொன்ன காலத்திலும், அதற்குப் பின்னரும் தமிழர்கள் சமசமாஜக் கட்சியின் எத்தனை பா.உ க்களை தெரிவு செய்தனர்? தமிழரசுக் கட்சிக்கு வாக்கு போட்டவர்களுக்கு கொல்வின் ஆர் டி சில்வாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்ட என்ன யோக்யதை உள்ளது?
//இரண்டு கட்சிகளுமே கோவிகம குட்டையில் ஊறிய மட்டைகள் தான்//
அதில் ஒரு கொவிகம அதாவது டட்லி தலைமையிலான யு.என்.பி மாத்திரம் நம்ம தமிழ் சூரர்களில் கூட்டாளிகள் ஆகியது எப்படி? இன்றும் சம்பந்தன் கும்பல் தொடரும் கதையும் அதுதான். “நாம” இரண்டு பேரும் வெள்ளையர்களின் “அடிமைகள்” என்ற ஒற்றுமைதான் காரணமோ? 1965 இல் யு.என்.பி யுடன் “தேசிய அரசு” அமைத்து கூத்தடித்த செல்வநாயகம் கோஷ்டிக்கு “அப்போது” தமிழ் பிரச்சனையே இருக்கவில்லை. 1970 இல் தேர்தல் என்றவுடன் “திருகோணமலையை புனித நகரமாக்க மறுக்கிறார்கள்” என்று கூவிக் கொண்டு எங்களுக்கு வாக்கு போடுங்கள் என்று தமிழர்கள் முன்னால் செல்வநாயகம் கோஷ்டி வந்து நின்றது. இந்த செல்வநாயகம் கும்பல் யுஎன்பி யுடன் கூட்டுச் சேர முன்னர் திருகோணமலை பற்றி மூச்சு விட்டதில்லை. இன்று சம்பந்த பெருமானும் அதே கயிறைத்தான் திரிக்கிறார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொவிகம அல்ல. போர்த்துகீசர் காலத்தில் வந்த ஒரு மலையாள கூலிப் பட்டாளக்காரனின் பரம்பரை. மலையாளக் கள்ளத்தோணி வேலுப்பிள்ளையின் மகனுக்கும் இந்த “மலையாள” கனெக்சன் தெரிந்துதானோ பிரபாகரனும் யு.என்.பி யுடன் “தேன்நிலவு” கொண்டாடினவரோ தெரியவில்லை.
//சுதந்திரக் கட்சி கிராம மட்டத்துச் செல்வாக்குக்காக செய்த பல நல்ல விடயங்கள் பலருக்குத் தெரியும்//
செல்வாக்குக்காக… அது என்ன? கிராமப்புறங்கள் முன்னேற வேண்டும் என்று சொல்ல “தமிழ் விடுதலை” தடுக்கிறதோ?
//இதற்குள், “வெறும் புலி பிரச்சாரங்களை படித்து மூளை சலவை செய்து கொண்டவர்களுக்கு வரலாறு எங்கே புரியப் போகிறது” என்று ஒரு நக்கல் வேறா?//
நக்கல்தான். அத்துடன் புலிப் பிரச்சாரங்கள் என்பதுடன் அமிர்தலிங்கம், செல்வநாயகம் ஆகியோரின் இனவாதப் பிரச்சாரங்கள் .. என்றும் சேர்த்து வாசிப்பதும் நல்லது.
varathan
சரியோ தவறோ போரில் மக்கள் அழிவதை கவனத்தில் எடுக்கும்படி கேட்ட ஏகாதிபத்தியம் புலிகளை காசு சேர்க்கவும் ஆயுதம் வாங்கவும் பிரச்சாரம் செய்யவும் ஏன் அனுமதித்தன. புலிகளின் மனிதப்படுகொலைகள் குண்டு வெடிப்புக்களை கண்ட பின்னாலும் (தடை என்ற போர்வையைப் போட்டாலும்) கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்ததுண்டா? ஏகாதிபத்தியங்களின் செல்லப் பிள்ளை புலிகளே!(எம்ஜிஆர் இலிருந்து மிலிபான்ட் வரை)நீங்கள் என்னவென்றால் மக்கள் அழிவதை அவர்கள் கவனத்தில் எடுத்தார்கள் என்கிறீர்கள்.
BC
மிலிபேண்ட் ஆசை நிறைவேறியிருந்தால் இலங்கையில் படுகொலைகள் குண்டு வெடிப்புகளும் புலம்பெயர்ந்த நாடுகளில் பணவசூலும் தொடர்கதை தான்.
palli
நந்தா சமைத்த கறிக்கு தேசிக்காய் புழிவது சுலபம்; ஆனால் சமையல் மிக கடினம் என்பார்கள், அதே போல் தாங்கள் 1982ல் சொல்ல வேண்டியதை 2010ல் சொல்லுவதால் என்ன பலன், புலி மட்டும் உங்களுக்கு பிரச்சனை; ஆனால் அதுவும் தாண்டி மக்கள் பற்றியும் பல்லி சிந்திப்பதால் பல்லி உங்களுக்கு வில்லன் ஆகி விடுகிறேன், இருப்பினும் உங்கள் கருத்தயையும் ஏற்று முடிந்த மட்டும் அதுக்கான விளக்கமும் தருகிறேன்; அதுக்கு முன் தாங்கள் நக்கீராவின் கட்டுரையை கவனிப்பது எமது எதிர்கால வாதத்துக்கு உதவும்;
NANTHA
பல்லி:
1982 இலும் சரி அதற்குப் பின்னரும் சரி, ஏன் 2082 இலும் நிலைமை மாறுமா என்பது கேள்விக்குறியே. தமிழ் என்பது ஒரு வியாபாரப் பொருள் என்ற கருத்தை விட்டு தமிழர்கள் நீங்காத வரையில் “புளி”, “பலி” “பழி” எல்லாம் ஒன்றுதான்.
தமிழர்களுக்கு “பொருளாதார” அறிவை விட “உணர்ச்சியூட்டும் வீர வசனங்கள் முக்கியமானவை. அவை சிலருக்கு “பொருளாதார” மலர்ச்சியை கொடுக்கும். அதாவது பலரின் வாழ்வில் “மண்” அள்ளிப் போட்டு!
சமுதாய நன்மை பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால் “சரத் பொன்சேகா” பிரச்சனைகளை தீர்ப்பார் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?
இந்த “தமிழ்” என்று தொடங்கும் எந்த மாய வலையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
“மொழிப் பிரச்சனை” என்று தொடக்கி கொழும்பு போனவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு “பாதுகாப்பான” சுபிட்சத்தையே தேடினார்கள்.
நீங்கள் “தவணை” கேட்டு நேரத்தை வீணடிக்காமல் விஷயத்துக்கு வருவது ஆரோக்கியமாக இருக்கும்!
chandran.raja
தமிழினம் தான் ஒரு தனியினம் தனக்கொரு தனிக்குணம் என பிரிவினைகாட்டி அரசியல் நடத்தாமல்… பிழைப்புத் தேடாமல் கடந்தகால தமிழ் தலைவர்களின் அரசியலை தூக்கி எறிந்து நாம் இலங்கையர் இலங்கையுள்ள மற்றவர்களுக்கு உள்ள உரிமையே எமக்கும் உண்டு என உணர்வது மூலமே அதாவது “ஐக்கிய இலங்கை” என்ற அரசியலை கையாளுவதன் மூலமே நாம் எம்மினத்தைப் பாதுகாக்க முடியும். அல்லது இந்த தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போவது தவிர்க்க முடியாத நிகழ்வாகவே இருக்கும்.
கடந்த இருபது முப்பதுவருட எமதுமக்களின் சனத்தொகை புள்ளிவிபரம் இதற்கு நல்ல சான்று. நாடுகடந்து வேறு நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் அந்ததந்த நாட்டுடனேயே தமது அரசியலை வைத்துகொள்ள வேண்டும். ஈழஅரசியலை முடிவெடிப்பவர்கள் ஈழவாழ்மக்களே நிர்ணயிக்க வேண்டியவர். நாடு கடந்து வாழ்பவர்கள் அல்ல.
palli
// சமுதாய நன்மை பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால் “சரத் பொன்சேகா” பிரச்சனைகளை தீர்ப்பார் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?
நீங்கள் மகிந்தா மீது காட்டும் அன்பை வைத்துதான், கருணா பிரியாவிட்டால் புலியை அரசு அடக்க முடியாது; இது நான் சொல்லவில்லை, அனைத்து அதிகாரம் அடங்கிய மகிந்தாவின் தம்பி கருனாவை பாராட்டி சொன்னது; அதேபோல் மகிந்தாவையோ அல்லது அவரது அத்துமீறிய தமிழருக்கு(உங்களுக்கல்ல)ஒரு வேகதடைதான் சரத், சரத் ஆட்ச்சிக்கு வந்தாலும் சரி வாராவிட்டாலும் சரி மகிந்தாவுக்கு சனிபகவான் ஆரம்பம்; இதுகூட தெரியாமல் 82லிருந்து ஒரு 100 வருடத்தை தம்கட்டி பாயுறியள்; உங்களால் முடியாது என்பது உங்கள் கருத்து, யாராலும் முடியாது என்பது???
//தமிழ் என்பது ஒரு வியாபாரப் பொருள் //
மே 18க்கு முன் புலிக்கு; இன்று யாருக்கு என்பது உங்கள் பின்னோட்டமே சொல்லுகிறது;
//இந்த “தமிழ்” என்று தொடங்கும் எந்த மாய வலையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. //
ஆனால் சோறும் கட்டிக்கிற பெண்ணும் மட்டும் தமிழில் வேண்டும்; ஆனாலும் தமிழ் வேண்டாம் அதுதான் புலிகள்
ரமிலாக்கிவிட்டார்களோ??
//நீங்கள் “தவணை” கேட்டு நேரத்தை வீணடிக்காமல் விஷயத்துக்கு வருவது ஆரோக்கியமாக இருக்கும்!//
என்ன அவசரம் அதுதான் 2082க்கு பின்னும் பேசலாமே!!!
//மொழிப் பிரச்சனை” என்று தொடக்கி கொழும்பு போனவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு “பாதுகாப்பான” சுபிட்சத்தையே தேடினார்கள்//இப்போது புலி பிரச்சனை என போவோர் என்னவாம்;
//தமிழர்களுக்கு “பொருளாதார” அறிவை விட “உணர்ச்சியூட்டும் வீர வசனங்கள் முக்கியமானவை.//
அப்படியென காசியானந்தனிடம் படித்தீங்களா?? இப்படி சொல்ல உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாய் இருக்கலாம் பல்லிக்கு அப்படி இல்லை, அப்படி இருந்தால் புலிக்கு ஓஓ போட்டிருப்போம்;?
NANTHA
பல்லி:
சரத் பொன்சேகாவின் மீது பல்லி கொண்டிருக்கும் “அபார” நம்பிக்கைகள் இன்னும் சில மணி நேரத்தில் காலியாகிவிடும். பல்லியின் “பின்னர் பார்க்கலாம்” என்ற இழுத்தடிப்பு “சரத் வென்று வெற்றி வாகை சூடுவார், அதன் பின்னர் ஒரு “வாங்கு” வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் என்று நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் எந்த சராசரி மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய சாதாரண உண்மையும் அதுவே.
கருணா புலியை விட்டு பிரிந்து போனதற்கும் “பொன்சேகா பிரச்சனை தீர்ப்பார் என்பதற்கும் என்ன சம்பந்தம்? தவிர மகிந்தவுக்கு “பொங்கு சனி”. “தமிழ்” வியாபாரிகளுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் “மரணச் ” சனி. இந்த “சனி” பற்றி படித்துக் கொள்வது நல்லது.
“தமிழ்” மொழியை விற்று சீவனம் செய்பவர்கள்தான் இன்று “சரத்” என்று கூவுகிறார்கள். எந்த “தமிழ்” அடிப்படையில் என்பதுதான் சொல்லப்படாத பரம ரகசியம்.
வன்னியில் பிறந்து வளர்ந்த “நந்தாவுக்கு” சோறு யாழ்ப்பாணத்தில் இருந்து வரவில்லை. யாழ்ப்பாணத்துக்கு அரிசி கொடுத்திருக்கிறோம்.
கலப்பை பிடித்து கமம் செய்த தமிழனை துப்பாக்கியுடன் வந்த தமிழ் சூரர்கள் முன்னால் “நின்று” போராடவில்லை என்கிறீர்களோ?
காசி ஆனந்தன் என்ற காத்தமுத்து சிவானந்தன் என்ற கள்ள தோணி வாரிசின் “அலம்பல்கள்” கேட்டு சந்தியில் இருந்து சிரித்த நந்தாவுக்கு, உங்கள் மேற்கோள் மகா தமாஷ்.
இன்னும் சில மணி நேரத்தில் நீங்கள் “கட்சி” மாறினால், அறிவாளி அல்லது …..?
palli
யார் கோமாளீ யார் ஏமாளி என்பதை தேர்தல் அல்ல முடிவு செய்வது, அவரவர் கருத்து, அந்த வகையில் பல்லி கோமாளிதான்; காரனம் கோமாளிகள் எப்போதும் மக்களின் மகிழ்ச்சியில்தான் இருப்பார்கள், அதுசரி வடக்கு கிழக்கு போய் இப்போ வன்னி என ஒரு திட்டமும் நந்தாவின் கைபையில் உண்டோ; கள்ளதோணி கருவாட்டு கடைகாரன் மாறவே மாட்டீர்களா?? சரத் வந்தாலும் மகிந்தா வந்தாலும் என்வேலை விமர்சனமே, கொழும்பில் போய் குப்பற படுப்பதில்லை, கருனாவின் பிரிவுக்கும் சரத் மகிந்தா ஊடலுக்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாத ஒரு அரசியல் ஆய்வாளர் தமிழை கொச்சை படுத்துவது ஒன்றும் பெரிய விடயமல்ல,
இன்று தமிழை வியாபாரம் செய்பவர்கள் மகிந்தாவிடம் பணம் வாங்குபவர்கள், அது யாரென பல்லி சொல்லிதான் தேச நண்பர்கள் தெரிய வேண்டியதில்லை, இதுவரை நான் சரத்தை புகழ்ந்ததில்லை, ஆனால் மகிந்தாவுக்கு சரியான எதிரி அவர்தான் எந்தான் சொல்லியுள்ளேன்; அதே போல் மகிந்தா செய்த நல்ல காரியங்களை பாராட்டி பல பின்னோட்டம் எழுதியுள்ளேன், ஆனால் சரத் தோற்றுவிட்டார் மகிந்தாவிடம் ஓடி வாருங்கோ என நீங்கள் அழைப்பது உங்கள் அனுபவத்தை காட்டுகிறது,யார் எம்மக்கள் மீது கல் எறிகிறார்களோ அவர்கள் மீது என் விமர்சனம் உண்டு; ஆனால் ஆழும் வர்க்கத்துடன் கூடி கும்மாழம் அடிக்கும் நிலை பல்லிக்கு இல்லை, காரனம் பல்லி தமிழனாகவே இருக்க ஆசைபடுகிறேன்; அது கள்ள தோணியாக இருந்தாலும் கவலையில்லை, மகிந்தாவின் பெருமைகளை தேசம் ஜெயபாலன் நேரடியாக பார்த்து எழுதியுள்ளார் கவனிக்கவில்லையா??
கண்டிப்பாக பல்லி தொடர்வேன்,
ramana
//சரத் சட்டத்தை மதிப்பார் என நினைக்கிறேன்// பல்லி
//இதுவரை நான் சரத்தை புகழ்ந்ததில்லை// பல்லி
NANTHA
தமிழ் என்று தொடங்கும் ஆசாமிகள் எல்லோருக்கும் “கூலி”புத்திதான் உள்ளது. மகிந்தவை புகழ்பவர்கள் எல்லோரும் “காசு” வாங்கிக் கொண்டுதான் கத்துகிறார்கள் என்ற பல்லியின் கூற்று சகிக்கவில்லை. அதாவது தமிழன் என்றால் ” தமிழ்” என்று கூறி தமிழர்களைக் கொலை செய்பவர்களையும், தமிழர்களிடம் கொள்ளயடிப்பவர்களையும் புகழ வேண்டும் என்பதுதான் பல்லியின் ஞானம். அப்போ பல்லிக்கு சரத் கும்பல் எவ்வளவு அள்ளி வீசியுள்ளது? சரத் பொன்சேகாவை “நல்லவர்” “அவர் ஒரு வல்லவர்” என்று புகழ்ந்து துதி பாட பல்லிக்கு எவ்வளவு கிடைத்தது? பல்லி கோமாளி என்பதைப்பற்றி தெரியாது. ஆனால் மற்றவர்கள் “ஏமாளிகள்” என்ற எண்ணத்தில் “அள்ளி” வீசினால் கண்டிப்பாக பதில் கிடைக்கும்.
//சோறும் கட்டிக்கிற பெண்ணும் மட்டும் தமிழில் வேண்டும்; // பல்லி
சோற்றில் “தமிழ்” “சிங்களம் என்று வேறுபாடு இருப்பதாக பல்லி கூறியுள்ளதை கவனிக்கவும். இவர்கள்தான்” தமிழ் பற்றி “கவலை கொள்ளுகிறார்கள். எந்த பெண்ணைக் கட்டினாலும் அவள் மனைவிதானே ஒழிய. “தமிழ் பெண்ணைத்தான்” கட்ட வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?
//ஆனால் ஆழும் வர்க்கத்துடன் கூடி கும்மாழம் அடிக்கும் நிலை பல்லிக்கு இல்லை, காரனம் பல்லி தமிழனாகவே இருக்க ஆசைபடுகிறேன்; அது கள்ள தோணியாக இருந்தாலும் கவலையில்லை//
அரசு பற்றி நல்லது சொல்பவர்கள் எல்லோரும் பல்லியின் கணக்குப்படி “அரசுடன் சேந்து கும்மாளம் அடிப்பவர்கள்” அல்லது “தமிழர்கள் அல்ல” என்பது பல்லியின் ஞானம்.
கள்ளத்தோணி காத்தமுத்துவின் மகன் காசி அனந்தன் “தமிழ்” என்று கூறிவிட்டு தனது பைகளை நிரப்பினால் அவன் ஒரு “பெரிய” தமிழ் தியாகி! இலங்கையில் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்த பரம்பரைகள் பல்லியின் கணக்குப்படி “தமிழர்களல்ல”. இது எப்படி இருக்கு?
இனி கோபாலசாமியும், நெடுமாறனும்தான் பல்லியின் அகராதியில் தமிழர்கள். இலங்கையில் வசிக்கும் தமிழர்கள், தமிளர்களேயல்ல!
Rohan
/வன்னி மாவட்டத்தில் “அ.த.க.பா.” என்ற பெயருடன் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலத்தில் நிர்மாணிக்கபட்டவையே. அன்று வன்னி என்பது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம். இந்த நான்கு மாவட்டங்களிலும் 200 க்கும் குறைவான பாடசாலைகளே 1960 ஆம் ஆண்டு இருந்தன. 1965 இல் இந்த எண்ணிக்கை 1500 ஐ எட்டியது. இது தெரியாமல் குமாரசூரியரின் காலத்தை கனவு காண்பது வெறும் “எதிர்ப்பு” கோஷமும்” உண்மையை மறைக்கும் கபட நோக்கமுமே ஆகும்./ நந்தா.
நான் படித்த ஒரு புள்ளிவிபரப்படி(2002) கொழும்பில் உள்ள மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கை 487 மட்டுமே. யாழ் மாவட்டம் கொண்டிருந்த பாடசாலைகள் 412. கிளிநொச்சி மன்னார் வவுனியா முல்லைதீவு மாவட்டங்கள் முறையே 93, 90, 178, 100 பாடசாலைகளைக் கொண்டிருந்தனவாம்! 2002இல் இலங்கையின் மொத்தப் பாடசாலைகளே 10,500 என்று தான் இத் தகவல் சொல்கிறது. முழு வட மாகாணமே 1000 பாடசாலைகளைக் கூடக் கொண்டிருக்கவில்லை என்று நினைவு.
எனது தகவலுக்கு ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. நந்தாவின் 200க்கும் 1500க்கும் ஆதாரத்துக்காகக் காத்திருக்கிறேன். 1960இலிருந்து 1965 வரை ஐந்து வருடங்களில் 1300 பாடசாலைகளை வன்னியில் கட்டினார்களா? மிஞ்சிப் போனால், அதுவரை பதிவில் இல்லாத பல பாடசாலைகளை அவர்கள் பதிவுக்குக் கொண்டுவந்திருக்கக் கூடும்!
http://www.statistics.gov.lk/education/Table%201.pdf
http://www.statistics.gov.lk/education/SUMMARY%20TABLES%202006.pdf
palli
//இனி கோபாலசாமியும், நெடுமாறனும்தான் பல்லியின் அகராதியில் தமிழர்கள். இலங்கையில் வசிக்கும் தமிழர்கள், தமிளர்களேயல்ல//
தமிழை காறி துப்பிய நந்தா அதே கட்டுரையில் தமிழை காமாந்து செய்கிறார், இதுதான் தமிழின் பெருமை; பல்லி தமிழை என்றுமே ஏழனம் செய்ய இல்லை நந்தா,
//கள்ளத்தோணி காத்தமுத்துவின் மகன் காசி அனந்தன் “தமிழ்” என்று கூறிவிட்டு தனது பைகளை நிரப்பினால் அவன் ஒரு “பெரிய” தமிழ் தியாகி! //
தியாகி இல்லைதான் ஆனால் கள்ள தோணி என்னும்போது நீங்கள் அதைவிட கேவலமாகி விடுவது தெரியாது, அதே தோணியில் போய் இன்று தமிழகத்தில் லச்சம்பேர் (எமது உறவுகள்) வாழ்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும்;
// இலங்கையில் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்த பரம்பரைகள் பல்லியின் கணக்குப்படி “தமிழர்களல்ல”. //
யார் அவர்கள்??? நந்தா குடும்பம் அல்லது பரம்பரை மட்டுமா?? மகிந்தாவின் காலை நக்குவதால் நீங்கள் பரம்பரை தமிழர், மகிந்தாவின் அராசகத்தை சொல்லுவதால் பரம்பரையற்ற தமிழர், அதுதான் ஒரு சிலர் மகிந்தா குடும்பத்தின் சகோதரங்கள் என குமுறுகிறார்கள் போலும்;
//பல்லியின் கணக்குப்படி “அரசுடன் சேந்து கும்மாளம் அடிப்பவர்கள்” அல்லது “தமிழர்கள் அல்ல” என்பது பல்லியின் ஞானம். //
உன்மைதான் அரசுடன் சேர்ந்து செயல்படுபவர்கள் வேறு கும்மாளம் அடிப்பவர்கள் வேறு; ஆகவே எனது கருத்து சரியானதுதான்;
//சோற்றில் “தமிழ்” “சிங்களம் என்று வேறுபாடு இருப்பதாக பல்லி கூறியுள்ளதை கவனிக்கவும். //
கவனிக்கட்டும். எதுக்காக என்ன சொல்லாடலுக்காக எழுதினேன் என்பதையும் கவனிப்பார்கள், அது போதும்;
//சரத் பொன்சேகாவை “நல்லவர்” “அவர் ஒரு வல்லவர்” என்று புகழ்ந்து துதி பாட பல்லிக்கு எவ்வளவு கிடைத்தது? //
கண்டிப்பாக உங்கள் போல் பாடியிருந்தால் கிடைக்கலாம் ஆனால் பல்லி துதிபாடி நந்தா பார்த்தீர்களா?? பல்லி தவறுகளை சுட்டி காட்டுவேன்; நல்லது செய்தால் பாராட்டுவேன், யாரையும் துதிபாட மாட்டேன், அதுக்கென சிலர் இருக்கிறார்கள்;
//தமிழ் என்று தொடங்கும் ஆசாமிகள் எல்லோருக்கும் “கூலி”புத்திதான் உள்ளது//
நன்றி ஏதோ ஒரு புத்தி இருக்கே;ஆனால்!!!! இதை சொல்லும் நபர்களுக்கு அடேங்கப்பா!!!
//ஆனால் மற்றவர்கள் “ஏமாளிகள்” என்ற எண்ணத்தில் “அள்ளி” வீசினால் கண்டிப்பாக பதில் கிடைக்கும்.//
தொடருங்கள் கண்டிப்பாக பலனோ அல்லது பதிலோ கிடைக்கும்; சலிக்காமல் பல்லியும் தொடர்வேன்,
//சரத் சட்டத்தை மதிப்பார் என நினைக்கிறேன்// பல்லி
//இதுவரை நான் சரத்தை புகழ்ந்ததில்லை// பல்லி
ரமனன் இரண்டுக்கும் அர்த்தம் புரியவில்லையா?? (என நினைக்கிறேன்) ;
palli
///வன்னி மாவட்டத்தில் “அ.த.க.பா.” என்ற பெயருடன் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலத்தில் நிர்மாணிக்கபட்டவையே. //
இது உன்மையாக இருந்தாலும் அதே சுகந்திர கட்ச்சியின் தலமையையே நம்பிக்கை துரோகம் செய்து குப்பை தொட்டியில் தூக்கி போட்ட பெருமையும் நமது மான்புமிகு மகிந்தாவுக்கு சேரும்; இதையும் பல்லி சொல்லவில்லை சந்திரிகா சொல்லுகிறார், தெரியாதவர்கள் மகிந்தா வீட்டுக்கு தேனீர் விருந்துக்கு போகும்போது சந்திரிகா வீட்டுக்கும் ஒருநடை போட்டு வாங்கோ;