இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு : தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில் இருத்தல் வேண்டும் – தமிழரசுக் கட்சி

யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழ் மக்கள் தொடர்பாகவும் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இந்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினை தொடர்பாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்தீர்மானங்கள் வருமாறு;

1. பொருளாதார தீர்மானம்

கடந்த முப்பது ஆண்டு காலமாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக சிதைந்து, சின்னாபின்னப்பட்டு, சீரழிந்து நிற்கும் வடக்குகிழக்கு பிரதேச உட்கட்டுமானங்களை மீள்வித்து; வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும், வன்னி மக்கள் உள்ளிட்ட சகல மக்களது வாழ்வாதாரங்களை மீள்வித்து; எமது பிரதேசத்து உற்பத்தி வளங்களை இனங்கண்டு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு; எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குதலுக்கும் உழைத்தலுக்கும் இந்த செயற்பாடுகளைத் திட்டமிடவும் அமுலாக்கவும் கண்காணிக்கவும் கூடிய நிபுணத்துவ தகமை பெற்றவர்களின் சேவைகளை அணிதிரட்டி நடவடிக்கை எடுக்கவும்; உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டார்களை ஊக்குவித்து தொழில்துறை மேம்பாட்டிற்காக உழைக்கவும், இழந்தவற்றை மீள்வித்து அபிவிருத்திப் பாதையில் முன் செல்லவும் அவற்றிக்காக அரசசார்பற்ற நிறுவனங்களதும் சர்வதேச சமூகத்தினதும் ஒத்துழைப்பைப் பெறவும் காத்திரமான நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொள்ள வேண்டும் என இச்சபை தீர்மானிக்கிறது.

2. அரசியல் பிரேரணை

தமிழ்த் தேசிய இனத்தின் நியாயபூர்வமான அபிலாசைகளை உள்வாங்கிக் கொள்ளும் அரசியல் யாப்பு இந்நாடு சுதந்திரமடைந்த காலத்திலோ அன்றிப் பின்னரோ நடைமுறையில் இருக்கவில்லை. இதனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே இற்றை வரை நிலவுகிறது. மாறிமாறி வந்த அரசுகள் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் பற்றிப் பிரஸ்தாபித்தது மட்டுமன்றித் தமிழ்த் தரப்புடன் ஒப்பந்தங்களையும் செய்து கொண்டாலும்கூட இவை யாவும் செயல் வடிவம் பெறவில்லை.

இதனால் தமிழர் தரப்பின் அரசியல் போராட்டம் சாத்வீக ரீதியிலும் ஆயுதப்போராட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்த இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகிறது. இத்தகைய தீர்வும் தமிழ் மக்கள் காலாகாலமாக முன்வைத்த தமது அபிலாசைகளான தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையில், எம் மக்களிடமுள்ள இறைமை அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி வற்புறுத்துகிறது.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

இரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் தேசிய இன மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாமையால் ஏற்பட்டிருந்த போராட்டங்களினாலும் ஆயுதப் போரினாலும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்டு இடம்பெயர்ந்து, அகதிகளாய் அலைகின்றனர். தமிழர் தாயகப் பிரதேசங்கள், கடல் பிரதேசங்கள் அரச இராணுவப் படைகளினால் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எனவே உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக நீக்கப்பட்டு மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கி வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். ஐ.நா. அகதிகள் புனரமைப்பு, மீள் குடியேற்றங்களுக்கான பிரகடனங்களும் தரமும் மீள்குடியேற்ற நடைமுறைகளில் பின்பற்றப்பட வேண்டும்.

மீள் குடியேற்றப்படும் போது உடன் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா குடும்பமொன்றிற்கு வழங்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும், உயிர் இழந்தோர், அங்கவீனமானோர், விதவைகளானோர், நோய்வாய்ப்பட்டுள்ளோர்களுக்கும் நட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தகுந்த நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு அரசை வற்புறுத்துகிறது. சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது.

4.
தமிழர் தாயகப் பிரதேசத்திலிருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய ஆயுதப் படைமுகாம்களும் ஆயுதப்படையினரும் விலக்கப்பட்டு தமிழர் தாயக மக்கள் சுதந்திரமான நடமாட்டம் அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

5.
இலங்கையில் குறிப்பாக ஜனநாயக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், மக்கள் உயிர் வாழும் உரிமை பாதுகாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

6.
அரசியல் காரணங்களுக்காவும் காட்டிகொடுப்புகளினாலும் வெறும் சந்தேகத்தினாலும் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவும கூட விசாரணையின்றி தடுப்புக் காவலிலுள்ள சிறைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்கிறது இம்மாநாடு.

7.
போர் முடிவுற்ற நிலையில் அரசிடம் சரணடைந்த 12,000 க்கும் அதிகமான இளைஞர்களின் பெயர் விபரங்களை உடன் பகிரங்கப்படுத்தபட வேண்டுமென்றும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்பதுடன் அவர்கள் புனர்வாழ்வுக்காகவும் புதிய வாழ்க்கையின் பொருட்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.

8.
போரில் கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென்பதுடன், அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நட்டஈடு வழங்கப்படுதலும் வேண்டும் எனவும் அழிக்கப்பட்ட மக்களின் உடைமைகள் மதிப்பிடப்பட்டு அவற்றிற்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் இம் மாநாடு வற்புறுத்துகிறது.

9.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்துக் கோவில்கள் சூறையாடப்பட்டு பௌத்த சின்னங்கள் நிலைநாட்டப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாலும் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, கலாசாரங்கள் சீர்குலைக்கப்பட்டுத் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாலும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் நிலப்பரப்புகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஆயுதப் படைகளின் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாலும் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மைத்துவம் வீழ்த்தப்பட்டும், பலவீனப்படுத்தப்படும் வகையில் பிரதேச மற்றும் இனக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் அரசின் நேரடியான மறைமுகமான இத்தகைய நிகழ்ச்சித் திட்டத்தை உடன் தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

10.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் தேவைப்பட்டால் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானங்களின் அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் அணிதிரளக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டுமென்றும் புலம்பெயர்ந்த தமிழர் தாயக மக்களின் அமைப்புகளையும் கூட்டிணைக்க வேண்டுவதுடன், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் நாடுகளிடமும் ஐ.நா. அமைப்புகளிலும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினைத் திரட்டுவதற்குப் பொருத்தமான தக்க நிபுணத்துவம்,ஆற்றல், அனுபவம் மிக்கவர்களையும் ஈர்த்துத் தமிழ் பேசும் மக்களின் விடிவையும் விடுதலையையும் ஈட்டுவதற்கு உறுதிபூண வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

11.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த ஆறுமாத காலத்துள் மேற்குறித்த தீர்மானங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுடன், தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்குமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் எதிர்கால அரசை வற்புறுத்துகின்றது இம்மாநாடு.

அவ்வாறு குறித்த காலத்துள் தீர்வுகள் எட்டப்படாதுவிட்டால் சிறப்புத் தேசிய மாநாட்டைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென்பதுடன், அவ் இலக்குகளை அடைவதற்கு மக்களை அணிதிரட்டும் பொருட்டு ஜனநாயக மற்றும் சாத்வீக வழி முறைகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

12.
போரினால் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கின்ற தமிழ் பேசும் மக்களினதும் தாயகப் பிரதேசங்களிலும் பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்கவும் விருத்தி செய்யவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டவேண்டுமென்றும் சம கல்வி,சம வேலைவாய்ப்பு எனும் திட்டங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் பொருத்தமான நிபுணத்துவத்தை ஈர்க்க வேண்டுமென்பதுடன், மனிதவளம்,ஆற்றல்,கடின உழைப்பு மிகுந்துள்ள எம் மக்களிடம் வேலைவாய்ப்பினை உருவாக்கவும் தொழில்நுட்பத்தைப் பெருக்கவும் பொருத்தமான சிறு மற்றும் பெருந்தொழில்களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தில் உருவாக்குவதற்கும் தேசிய மட்டத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • senthil
    senthil

    இளங்கலைஞர் மண்டப தீர்மான மீள் வாக்கெடுப்பு எப்போது புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும்?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறுகிறது. இலங்கை வாழ் தமிழ்மக்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகிறது. முப்பது வருட தொடர்ச்சியான இழப்புக்களுக்கும் துன்பத்திற்கும் நடைபெற்ற நீண்ட போருக்கும் மூன்றில் ஒரு பகுதிமக்கள் தாயகத்தை விட்டு வெளியேறுவதற்கும் இவர்களும் இவர்களுக்கு பின்வந்த கூட்டணியினர் அவர்கள் பெற்றெடுத்த வாரிசுகளான மிலேச்சபுலிகளுமே காரண கர்த்தாக்கள்யாவர்.

    பனைமுனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை தமிழன் பரந்து வாழ்கிறான். தமிழனின் தாயகம் வடக்கு கிழக்கல்ல. இலங்கையே எமது தாயகம். அதில் சிங்களமக்கள் பெரும்பான்மையினர் தமிழ்(முஸ்லீம்) சிறு பான்மையினர். இதில் வேறு எந்த சூத்திரமும் இல்லை. இலங்கைபிரஜை இலங்கையில் எந்த மூலையிலும் வாழ்வதற்கு உரிமையுண்டு. மிகுதியாக இருக்கிற பிரச்சனைகள் அரசியல் ரீதியாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலமாக பேசித்தீர்க்க வேண்டியவையே!. தாயகத்தில் வாழும் சாதாரணமக்களுக்காக அன்றாடம் காச்சிதிண்டு உயிர்வாழும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் அல்ல.
    மாறாக தமிழ்சமூகத்தின் மத்தியில் இருக்கும் கசடுநிறைந்த மட்டத்தில்லிருந்து வந்தவர்கள். எதிர்பார்பது எவரைப் பலிகொடுத்தாவது தமது சொந்த வாழ்வை மேம்படுத்துவதே நோக்கமாகக் கொண்டவர்கள்.தமிழ்மக்கள் மிகவும் அவதானமாக அணுகுவது அவசியமாக இருக்கிறது.

    Reply
  • jalpani
    jalpani

    மிகுதியாக இருக்கிற பிரச்சனைகள் அரசியல் ரீதியாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலமாக பேசித்தீர்க்க வேண்டியவையே!.”

    அதுதான் என்னவென்று ஒருதடவை சொல்லிவிடுங்கள் சந்திரன்ராஜா. அவற்றை தீர்த்து விடுவதற்கு இந்த இனவாத அரசுகள் மனமுடன் இருக்கினறனவா என்பதையும் சொல்லி விடுங்கள்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சரித்திரரீதியாய எமது தாயகத்தைத் தேடுவோமானால் மொகரஞ்சதாரோ: கரப்பாருக்குத்தான் போகவேண்டும். அது சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கிடக்கிறது. தமிழரசுக் கட்சியையும் மீதமாக இருக்கும் புலிகளையும் சிவாஜியையும் கூட்டிக்கொண்டு போவோமா?

    Reply
  • madaiyan
    madaiyan

    //”கடந்த முப்பது ஆண்டு காலமாக இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக சிதைந்து, சின்னாபின்னப்பட்டு, சீரழிந்து நிற்கும் வடக்குகிழக்கு பிரதேச உட்கட்டுமானங்களை மீள்வித்து; வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும், வன்னி மக்கள் உள்ளிட்ட சகல மக்களது வாழ்வாதாரங்களை மீள்வித்து; எமது பிரதேசத்து உற்பத்தி வளங்களை இனங்கண்டு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு; எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குதலுக்கும் உழைத்தலுக்கும் இந்த செயற்பாடுகளைத் திட்டமிடவும் அமுலாக்கவும் கண்காணிக்கவும் கூடிய நிபுணத்துவ தகமை பெற்றவர்களின் சேவைகளை அணிதிரட்டி நடவடிக்கை எடுக்கவும்; உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டார்களை ஊக்குவித்து தொழில்துறை மேம்பாட்டிற்காக உழைக்கவும், இழந்தவற்றை மீள்வித்து அபிவிருத்திப் பாதையில் முன் செல்லவும் அவற்றிக்காக அரசசார்பற்ற நிறுவனங்களதும் சர்வதேச சமூகத்தினதும் ஒத்துழைப்பைப் பெறவும் காத்திரமான நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொள்ள வேண்டும் என இச்சபை தீர்மானிக்கிறது.”//

    தீர்மானம் ஷொக்காக இருக்கு, இப்பிடித்தான் 1976 இல் வட்டுக்கோட்டை எனத் தீர்மானித்துப் போட்டு கிடந்த உங்களுக்கு பிரபா தலைவராய் வாறது பிடிக்காமல் அழிச்சுப் போட்டு, இப்ப வசதி தானே மீன்டும் வழக்கறிஞர் கூட்டம் மேடைப் பேச்சுநடத்தி சீவிக்க வசதி தானே.

    சாவு கொடுதவர்கள் கனபேர் இருக்கினம் பழயசேட்டை சரிவராது கவனம்.

    Reply
  • anwar
    anwar

    செந்தில், நாடுகடந்த அரசின் தேர்தல் ஏப்ரலில் நடாத்தப்படும்போது அதுவும் நடக்கும். நா.கா.அரசின் ஈழப்பிரதிநிதியாக, சம்பந்தரை தெரிவு செய்யலாம்.

    Reply
  • thurai
    thurai

    அகிம்சையிலும் தோல்வி, ஆயுதப்போராட்டத்திலும் தோல்வி. தமிழ்மக்கள் உயிர்கள் அழிந்து, உடைமைகள் அழிந்து, வாழ்விழந்து தவிக்கின்றார்கள். ஆனால் தமிழரசுக்கட்சியும் அதன் தலைவர்கழும் இன்றும் தங்களின் பேச்ச்சுக்களை விடவில்லை.

    இனியாவது விட்ட தவறுகளை உணர்ந்து அதனை இளம் தலைமுறையினர் தொடராமல் வழிகாட்டுவீர்களா? இதுவே உங்களால் செய்யக்கூடியது.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    முற்பகுதி புரிந்ததையிட்டு மகிழ்ச்சி யாழ்ப்பாணி. படிப்படியாக முன்னேற முயற்சிப்போம். அதுதான் பூரண வளர்ச்சியாக இருக்கும். இப்படி சந்தேகங்களை தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டேயிருங்கள்.
    இனவெறியை சிங்களை அரசியல் தலைமைகளும் வளர்க்கவில்லை. மே பத்தொன்பதாம் திகதிவரை தமிழ்தலைமைகளும் வளர்த்தன. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினர் அதற்கு ஆதரவு வழங்கி ஈழத்தழிழரை தமது சுயநல எண்ணங்களுக்கு பலியாக்கினார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    செந்தில்,
    வாக்கெடுப்பு நடத்தவேண்டி வந்தால் நடத்தப்படும். வாக்களிக்க விரும்பினால் வாக்களிக்கலாம். ஜனநாயகம் பற்றிப் பேசுவோர் கவனத்தில் கொள்ளல் நல்லது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..மிகுதியாக இருக்கிற பிரச்சனைகள் அரசியல் ரீதியாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலமாக பேசித்தீர்க்க வேண்டியவையே!.”
    அதுதான் என்னவென்று ஒருதடவை சொல்லிவிடுங்கள் சந்திரன்ராஜா. அவற்றை தீர்த்து விடுவதற்கு இந்த இனவாத அரசுகள் மனமுடன் இருக்கினறனவா என்பதையும் சொல்லி விடுங்கள்…..///

    எனக்கு இதில் 1995 இல் இருந்து அனுபவம் உண்டு. சந்திரிகா ஜனாதிபதி ஆகிய கையுடன் ஒரு தமிழ் அமைச்சர் (முன்னாள் புரட்சிப்போராளி ) ஒரு திட்டத்துடன் வந்தார். அதில் ஏறக்குறைய 25 தலைப்புகளில் தமிழர் பிரச்சினைக்கு ”தீர்வு” இருந்தது. அதில் அதிகமான தலைப்புக்கு முன்னால் சரி அடையாளம் இடப்பட்டு 70% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதென்றும் மிகுதி 30% பேசித்தீர்க்கலாம் என்றும் இருந்தது. ஆனால் அந்த 30% தான் தமிழரின் 100% பிரச்சினையே எனக்கேட்டபோது அமைச்சரின் பிரதிநிதி அமைச்சரிடம் கேட்டுத்தான் பதில் சொல்ல வேண்டும் எனக்கூறினார். ஆனால் இன்றுவரை பதில் இல்லை மட்டுமல்ல ‘வடக்கு கிழக்கு என்றும் பிரிக்க முடியாத அலகு’ அவர் அமைச்சராக இருக்கும் போதே கிழிந்து விட்டது தனிக்கதை! அந்த 70% என்ன எனக்கேட்கிறீர்களா? தொலைபேசி, ரேடியோ,டெலிவிசன்….தியேட்டர் போன்ற அத்தியாவசிய பிரச்சினைகள்!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எழுபதுவீதம் தமிழ்பிரதேசம் மீட்டுவிட்டோம். இன்னும் முப்பது வீதம் தான் மிகுதி இருக்கிறது என்று சொன்ன ஒரு பயங்கரவாதம் புலம்பெயர் பணப்பலத்துடன் தமிழ் மக்கள் மத்தியிலிருந்தது என்பதை 2009வரை நீங்கள் கணக்கெடுத்தால் மிகுதியை அறிவது சுலபமாகயிருக்கும் என நினைக்கிறேன் சாந்தன்.
    போதுமானவரை இந்த பயங்கரவாத இயக்கத்தை பற்றி விமர்சித்து விட்டோம். இவர்கள் அரசின் இராணுவத்துடன் மட்டும் தமது கொலை வெறியை நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழ் ஜனநாயகவாதிகள் அரசியல்வாதிகளையும் தமது வெறியுணர்வு மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இனி எமது இனம் ஜனநாயகத்தை மனிதநேயத்தை விரும்பவும் கூடிவாழ விரும்பும் இனமாகவும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவோம். இதற்கு பலமாதங்கள் ஆண்டுகள் ஆகும். முப்பது ஆண்டுகளும் தமிழ் இனத்தில் கறைபடிந்த காலங்களாகவே போய்விட்டது. நீங்கள் தொடர்ந்தும் பழைய மனநிலையிலே இருந்துகொண்டு பிரச்சனைக்கு வழிதேடுகிறீர்கள். தவறுகளை முதலில் எம்மிடையிடையே உள்ளத்தை களைந்தெறிய முயற்படுவோம். பிறகு மற்றவர்களில் தொடங்குவோம் சாந்தன். அப்படியானால்தான் அடுத்த தலைமுறையில் ஆவது எமது இனம் தமது இலக்கையடைய முடியும். இல்லையேல் முப்பது வருடங்கள் தைப்பொங்கல் தீபாவளி புதுவருடம் தைப்பூசம் நாள்களில் தமிழீழம் பிறக்கிறது என்ற கனவில் மிதப்பதற்கு வழிதேடியது மாதிரி இறுதியில் ஈழத்தில்லிருந்து எமது இனம் அழிந்து போவதும் தவிர்கமுடியாதது போய்விடும்

    செயலில் ஈடுபடுபவனைவிட அவனக்கு புத்தி புகட்டுகிறவனே மிகவும் மோசமானவனும் மன்னிக்க முடியாத குற்றறத்தையும் செய்கிறான் என்பதை கவனத்தில் எடுத்துக் கதையுங்கள் சாந்தன். ஏனென்றால் இது தனியொரு மனிதப் பற்றியதோ ஒரு இயக்கத்தை கட்சியைப் பற்றிய கதையோ அல்ல. நொந்து நொடிந்து போன ஒரு இனத்தைப் பற்றிய கதை.

    Reply
  • aat
    aat

    குடும்ப ஆட்சி ,ஊழல் ,ஆட்சி மாற்றம் இவைதான் நீங்கள் சரத்துக்கு வோட்டு போடுவதன் காரணம் என்றால் உங்களின் தலைகளில் நீங்களே மண்ணை அள்ளி கொட்டுவதற்கு சமன்…..
    சரத் வருவதை வெளி நாட்டு புலி பினாமி கலக்சன் ஆசாமிகள் விரும்புவதற்கு காரணம் சரத் போன்ற உறுதியற்ற பேச்சும் தமிழர் மீது குழந்தை பிள்ளை இல் இருந்தே சரத்துக்கு வெறுப்பு.. அமெரிக்காவின் கைக்கூலி ஆன ஒருவர் ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பு உடையும் ….பண வீக்கம் கூடும் …..தமிழர் மீது மீண்டும் இன துவேஷம் எழும். (UNP ஆட்சி காலத்திலேயே யாழ்ப்பான நூலகம் எரிக்கபட்டது, 83 இன கலவரம் , முழு வீமானகுண்டுதாகுதலில் அப்பாவி முதியோர் ,குழந்தைகள் ,பெண்கள் கொல்லப்பட்டனர்).. இதனால் நாட்டில் பட்டினி, பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும்……
    இவை மூலம் மீண்டும் TNA ,புலி கலக்சன் ஆசாமிகள் ,அமெரிக்கா போன்ற மேலாதிக்க நாடுகள் நன்மை அடைவர். சுதந்திரத்துக்கு முன்பு எப்படி வெள்ளைகாரருடன் சேர்ந்து நமது பெரும் தமிழர்கள் அப்பாவி தமிழரை அடக்கினரோ அது போல மீண்டும் கடையை ஆரம்பிக்கலாம்.

    அதனால்தான் சரத்துக்கு ஆதரவு தருகிறார்கள் இந்த புலி இன் பிச்சையில் பாராளுமன்ற கதிரையில் அமர்ந்த TNA ..முன்பு மேலாதிக்கத்தின் கைக்கூலியாக செயல்பட்டவர் இந்த புலி அமைப்பினர்.. இப்போது சரத் செயற்படுகிறார்…சம்மந்தன் கோஷ்டி இன் ஆதரவு இதனால்தான் …….
    இது அறிவுள்ள மக்களுக்கு விளங்கும்…. கேவலமான மக்கள் எந்த பக்கத்தில் சேர்ந்தால் தங்கள் உண்டியல் நிரம்புமோ அந்த பக்கத்தில் சேர்வார்கள்.

    இந்த தமிழர் விடுதலை ,சுய நிர்ணய உரிமை என்று பேசும் தமிழர்கள் அந்த காலத்தில் வெள்ளைக்காரருக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தினார்களா???. இந்தியாவில் காந்தி ,ராஜாஜி, பெரியார் ,காமராஜர் ,பாரதியார் போன்ற ஒரு சிறந்த மனிதர்கள் சுகந்திர போராட்டம் நடத்தும் பொது நமது இலங்கையில் என்ன நடந்தது ???இலங்கையில் வெள்ளைகாரருக்கு கூஜா தூக்கி கொண்டு திரிந்த நமது தமிழரின் எச்சங்களே இந்த கேவல TNA ஆசாமிகள்…இந்தியா பெரிய நாடு, இலங்கை சிறிய நாடு என்று விளக்கம் சொல்லி வரும் புத்தி ஜீவிகளுக்கு ஓன்று சொல்ல்கிறேன். CRICKET இல் உலகமே வியக்கும் TEAM ஐ ஒரு சிறிய நாட்டில் இருந்து தர முடியுமானால் ஏன் காந்தியை போன்ற நல்ல போராட்ட வீரர்களை தர முடியவில்லை…இதற்கு காரணம் சுய நல அரசியலும் எகாபதியத்தின் முன் 32 பற்களை காட்டும் பண்பே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உலகம் பூராவும் சோசலிசமாகிவிட்டது. இலங்கை மட்டும் தான் சமதர்மக் கொள்கையில் விலத்தி நின்று அதுவும் மகிந்தா அரசுதான் ஊழல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது என்ற கருத்துக்களை என்ன? என்று சொல்வது. இது அறியாமையா? இல்லை அறிந்துசெய்கிற குற்றமா? அல்லது ஊழலா??
    யுத்தத்தை தொடர்ந்து நடத்துபவர் தானே ஊழல் பேர்வழிகள். இது பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் பழையதை மறந்து போனாலும் இராக்யுத்தம் ஒன்று போதுமே இதை விளங்கிக் கொள்வதற்கு. தனது ஊழல் வெளிப்பட்டு விட்டது என்பதற்காக ஒரு முக்கியபுள்ளி பரிசூட்டில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரே ஜேர்மனியில். இந்த ஊழல் குற்றச்சாட்டு காரர்கள் இதை அறிந்திருக்க வேண்டுமே? வெகுதூரம் போகவேண்டாம் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் போதுமானதே!

    கருனாநிதி குடும்பம் இந்தியாவில்லுள்ள முதல்இருபது கோடீஸ்வரர் வரிசையில் இடம் பிடிக்கிறார்ரே இது எப்படி? அவர்தான் அப்படியென்றால் சினிமா நடிகையும் காமராஜர் ஜீவானந்தம் போலவா வாழ்க்கை நடத்துகிறார்கள்?அவரின் சொத்துமதிப்பும் ஐய்யாயிரம் கோடியைத் தாண்டும் என்று சொல்லுகிறார்களே? அதுவெல்லாம் கட்டுக்கதையா? இதையெல்லாம் நான் சொல்வதால் ஊழலுக்கு அங்கீகாரம் வழங்குவதாக நினைக்க
    வேண்டாம். அப்படியான சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவு படுத்துவதற்காகவே. தேர்தல் காலங்கயில் வழமையாக வரும் குற்றச்சாட்டுகளே இவைகள். எமது விதியோ உள்ளதில் நல்லதை தெரிவுசெய்வதே. இதை கண்டுகொள்வதற்கு கடந்தகாலத்தை விட வேறு கண்ணாடி தேவைப்பட மாட்டாது.

    Reply