யாருக்குப் போடலாம் வாக்கு : ஈழமாறன்

Sarath_Fonseka_Posterதமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் நாசமாய்ப் போன காலகட்டமாக கடந்த 35 ஆண்டுகள் கடந்தோடியது நாங்கள் அறிந்தது. தமிழரசுக் கட்சியும் தலைவர் செல்வநாயகமும் பொறுப்பில்லாமல் தமிழீழம் என்று சொல்லி விட்டு மேலுலகம் சென்றதும், அதைத் தூக்கி வைச்சு குறுக்கால போன கூட்டணி புலுடா விட்டதும் தம்பிமாரை உசுப்பி விட்டதும் கடந்தகால கசப்பான  விடயங்கள்.

ஒரு தலைமை என்பது தனது கட்சிக்கும், இருப்புக்கும் எது சாதகமாய் இருக்கும் என்று முடிவெடுப்பதல்ல. தான் எடுக்கப் போகும் முடிவால் உடனடியாகவும் எதிர்காலத்திலும் எப்படிப்பட்ட விளைவுகளை அது உண்டு பண்ணும், இது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை என்ன பாடுபடுத்தும் என்று சிந்தித்து, ஆய்வு செய்து முடிவெடுப்பதே ஒரு நல்ல தலைமைக்கு உரிய பண்பியில் இயல்பு. இதன் அடிப்படையில் பார்த்தால் “இனி கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாத்த வேணும்” என்று சொல்வதற்கு எதுக்கு ஒரு தலைவர். அட இழவு விழுவாரே கடவுள்தான் காப்பாத்த வேணுமெண்டால் அது எந்தக் கடவுள் எண்டு சொல்லி விட்டு செத்திருந்தால் தமிழ் மக்கள் தேசியத் தலைவருக்கு அபிசேகம் செய்தது போலவோ அல்லது பிறந்த நாள் பூசை புனர்த்தானங்கள் செய்தது போலவோ அந்தக் கோயிலுக்குச் சென்று ஆண்டவா எங்களைக் காப்பாத்து. எங்களுக்கு உரிமை பெற்றுக் கொடு என்று ஒரு அபிசேகம் செய்திருப்பார்கள். வேணுமென்றால் சில நூறு பலிகளும் கொடுதத்திருக்கலாம். இத்தனை ஆயிரம் அப்பாவி மக்களைப் பலிகொடுத்திருக்கத் தேவையில்லை.

இனவாத அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவதற்காக அதுகாறும் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் எதுவும் பலனளிக்காது போனதால் மாற்றுத்திட்டங்களை தீட்டி போராட்டத்தை வேறுவழியில் பொறுப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என மாற்று வழியை அல்லவா சொல்லியிருக்க வேண்டும். கடவுள்தான் காப்பாத்த வேண்டும் என்று சொல்ல என்னத்துக்கு தலைவர். ஒரு கட்சி. அதுக்கு வக்காலத்து வாங்க அடங்காமண் புடுங்கா மண் என்று சாதிவெறி பிடித்த ஒத்தூதிகள்.
 
அதை விடுத்து தமிழீழம், பெடரல், கிடறல் என்று சா வாக்கு மூலம் கொடுப்பது எதிர்காலத்தில் தமிழ் மக்களை எங்கே கொண்டுபோய் விடும் என்று கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? சரி வயது போன நேரத்திலை மனுசன் அறளை பேந்து போய் கதைச்சிட்டாக்கும் என்று விட்டு விட்டு சற்று பிரக்ஞை பூர்வமாக இந்தக் கூட்டணி சிந்தித்திருந்தால் நாம் பாரிய அழிவை நிறுத்தியிருக்கலாம். இந்த கூட்டணி நாடகக் குழு போட்டு முடித்த நாடகங்களின் விளைவாக நாம் புது மாத்தளன் வரை கொடுத்த விலை மானிடமே மௌனித்துபோன வரலாறு. ஆனால் என்ன நடந்தது.

ஒரு தொழிற் சங்கம் வேலை பகிஸ்கரிப்பு பற்றி முடிவெடுக்க நினைக்கிறபோது அந்த முடிவு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப் போகும் சாதக பாதகங்களை ஆய்வு செய்து விவாதங்கள் நடாத்தி பெரும்பாலானவர்களின் ஒப்புதலை ஏற்ற பின்னரே முடிவெடுப்பார்கள். இங்கு தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு பாரிய முடிவைப் பற்றி கிஞ்சிற்றேனும் சிந்திக்காமல் தமிழீழம் என்று முழங்கிய துலைவார் கூட்டணியின் முடிவைக் கேட்டு கோதாரி விழுவாருக்கு கீறி வைச்ச பொட்டு இண்டைக்கு யாருக்கு வோட்டுப் போடுறது என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்தை அறிவிக்கும் போது இது சாத்தியமா? அவ்வாறு சாத்தியம் எனின் மாங்காய் புடுங்குவது போல் சுலபமாக புடுங்கி எடுக்கலாமா இல்லை பனங்கிழங்கு கிண்டுவது போல கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டி எடுக்கலாமா, இல்லையா என்று சுடலையிலை போவார் குறைஞ்சது ஒரு பத்து நிமிசமாவது யோசித்திருக்க வேணும். அப்படி சிந்தித்திருந்தால் இப்பிடி நாம் ஆகியிருக்கத் தேவையில்லை என்பதை நடிகர் விவேக் பாணியிலை நான் எழுத வேண்டி வந்திருக்காது. வெளவால் வரும். துவக்கோடை வரும். தமிழனுக்கு எருமை மாட்டுத் தோல். சுட்டமண்ணும் பச்சமண்ணும் இனி ஒட்டாது என்று விட்டதெல்லாத்தையும் நம்பி அப்பாவி இளைஞர்கள் கொதிச்சு எழ குளிர்காய்ந்த இந்தக் கூட்டணி தமிழ் மக்கள் யாருக்கு வாக்குப் போட வேணும் என்று முடிவெடுத்திருக்கிறர்களாம்.

இவர்கள் கடந்த காலங்களில் எடுத்த எந்த முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன? தமிழீழம் முடிந்த முடிவு என்ற இந்த நரிக் கூட்டம் முடிவெடுக்கும் போது இவர்களுக்கே இதன் பொருள் விளங்கியிருக்கவில்லை. அதற்கான திட்டமோ அன்றி அந்த இலக்கை அடைவதற்கான குறைந்தபட்ச வரைபடம் கூட இல்லாத இந்தக் காவாலிக் கூட்டணி பின்னர், வட்டமேசை மாநாடு போட்டபோது கூட கிட்டத் தட்ட என்ன வேணும் என்றதில் ஒரு வீதமேனும் தெளிவிருக்கவில்லை. அதன்பின் புலிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இவர்கள் எடுத்த முடிவென்று அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு தலைமையின் முடிவு என்ன என்று எதிர்பாப்பதும் அந்தத் தலைமை என்ன சொல்கிறது என்பதை கேட்டு மக்கள் முடிவெடுப்பதும் சாதாரணமாக நடக்கிற ஒரு விசயம் தான். அதற்கான காரணங்களும் இருக்கின்றன. ரோனிபிளயர் என்கிற முன்னாள் பிரித்தானியப் பிரதம மந்திரி மக்களுக்கு ஈராக் தொடர்பாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டி இருந்தது. அது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருந்த முடிவாக இருந்தபோதிலும் ரோனிபிளயருக்கு இதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே அவர் யாரோ எழுதிய கட்டுரையை எடுத்து ஒரு சொல்லைக் கூட மாத்தாமல் பிரித்தானிய மக்களுக்கு பெருப்பிச்சுக் காட்டினார். நாட்டின் தலைமை மக்களின் நலன் கருதி முடிவெடுக்கும் என்று நம்பிய பிரித்தானிய மக்களும் சடாம் குசையின் மீது படையெடுப்பதை ஒப்புக் கொண்டார்கள். அதற்காக பிரித்தானிய மக்கள் கொடுத்திருக்கும் விலையும் அளப்பரியது.
 
நாமும் துப்பாக்கி தூக்கி போரடுவதற்கு தயாராகினோம். இதே கூட்டணிதான் துரையப்பாவை சுட்டிக் காட்டி சுட்டுக்காட்டுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டதும் அன்றைய அப்பாவிப் பிரபாகரங்கள் சுட்டுத் தள்ளியதும் நடந்தேறின. இதன் பின் போராளிக் குழுக்கள். எந்தத் தலைமையும் தகுதி மட்டும் இல்லாத தலைமையாகவே உருவெடுத்தன. புரட்சி வெடிக்கிறபோது நாம் மக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பொருளாதாரத் திட்டம் வைத்திருக்க வேண்டும் என்று தோழர்கள் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது கீரை தின்னலாம் என்ற அளவுக்கு அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருந்திருக்கிறது.

கிளின்ற் ஈஸ்ற்வூட்டின் படத்தைப் பார்த்துதான் திட்டங்கள் தீட்டுவேன் என்று சொன்ன மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையும் என்று ஒவ்வொரு இயக்கமும் தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையினால் எத்தினை ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் பாதிப்படையப் போகிறார்கள். வளங்கள் சொத்துக்கள் உயிர்கள் என்று எவ்வளவு நாசகாரம் நடக்கப் போகிறது என்று சிந்திக்காத, சிந்திக்க முடியாத, திராணியற்ற 50க்கு மேற்பட்ட இயக்கங்களும் இதனின்றும் முளையெடுத்த பாராளுமன்றக் கட்சிகளும் எங்கே, எப்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்கள்? அப்படியாயின் தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கு நிஜத்தைச் சொல்லி அதனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சாதக பாதகங்களை புரிய வைப்பதற்காக அரசியல் வேலையை செய்து விட்டு மக்களை முடிவெடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கேல்லை. ரோட்டுப் போடுவதும் இடிந்த கட்டடங்களைக் கட்டுவதும் அபிவிருத்தி கிடையாது. அவை மீள் கட்டுமானப் பணிகளே. மகிந்தவுடனேயே நின்று ஒன்றும் செய்ய முடியாத பிள்ளையான் தலைமை எடுத்திருக்கும் முடிவுக்கும் கிழக்கு மாகாண மக்களின் எதிர் காலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது. அம்மானின் கூத்து அதைவிடக் கேலியானது.
 
மகிந்தவுக்குப் போடுங்கோ என்று பிள்ளையான் கட்சி எடுத்திருக்கும் முடிவுக்கான அடித்தளம் எதுவுமே கிடையாது. 13ம் திருத்தமோ மேலையோ கீழையோ மகிந்த எடுக்கும் முடிவுக்கே கட்டுப்படுகிறேன் என்று சொல்ல  ஒரு தலைமை. அந்தத் தலைமையின் முடிவைக் கேட்டு மக்கள் வாக்குப் போட வேணுமெண்டால் “கடவுள் தான் காப்பாத்தவேணும்” (நானும் ஒரு அரசியல் கட்சி தொடங்கலாம் போல இருக்கு. எனது அரசியல் ஞானத்தைப் பார்க்க தந்தை செல்வாவே பிச்சை வாங்க வேணும் போல இருக்கு.)

புளட் தலைவர் என்ன சொல்கிறார். அவரும் மகிந்த மாத்தையாதான் நல்லவராம். தமிழர்கள் என்ன மாப்பிளையா பாக்கிறார்கள்? அவர் குடும்பம் எப்பிடி? மாப்பிழை சிகரட் குடிப்பாரா? தண்ணி அடிப்பாரா என்று சான்றிதழ் முத்திரை குத்துவதற்கு. சித்தாத்தன் ஜயா சின்னத்திலை இருக்கிற உமாமகேஸ்வரன் அந்த இயக்கப் போராளிகளைத் தூக்கி போரணையில் போட்டு கொலை புரிவதற்க்கு காரணமாக இருந்தவர். பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய்மாரிடம் ஒரு மன்னிப்புக் கேட்கக் கூட திராணியில்லாத சித்தன் மகிந்தவுக்குச் சேட்டிபிக்கேற் குடுக்கிறார். ஆடு நனையிதெண்டு…. ஏதொ ஒரு மிருகம் அழுதமாதிரி இல்லையா இந்தக் கதை.

மகிந்த ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமராக இருந்த அமைச்சராக இருந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார். இனி என்ன செய்வதாக உறுதி கொடுத்துள்ளார்? அதை நிறைவேற்றுவார் என்பதற்கான அத்தாட்சி என்ன எந்த இழவும் சொல்லாமல் முறுகண்டி பிள்ளையார் கோயிலுக்கு கும்பாவிசேகம் செய்யப் போயிருக்கும் சித்தனின் முடிவை தமிழ் மக்கள் ஏற்று வாக்குப் போடலாமா?

டக்கிளசை விட்டிடுங்கோ. கோடி எந்தப் பக்கம் அவர் பாட்டும் அந்தப்பக்கம் என்பது மகிந்த சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். ஆதலால் அவரால் பெரிய ஆபத்தும் இல்லை. அவர் சொல்லை யாரும் கேட்கப் போவதுமில்லை. என்ன மீறினால் குடும்பத்தோடை சுட்டுப் பொசுக்கிப் போட்டு உத்தரத்திலை தொங்க விடும் உத்தரவாதத்தை மட்டும் அவரால் உறுதியாகக் கொடுக்க முடியும்.

மே 17ம் திகதி 2009ல் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி என்று புகழ்ந்து தள்ளிய சம்பந்தர் ஜயா 19ம் திகதி உந்தக் குறுக்கால போனவன்தான் எல்லா அழிவுக்கும் காரணம் என்று சொல்லும் இந்த ஜயா, பொன்சேகாவுக்குப் போடுங்கோ என்று சொல்லுறார். இதற்கான காரணங்களில் முக்கியமானது என்ன தெரியுமோ? நாலு வருசமா மகிந்த ஒண்டும் செய்யேல்லையாம். உங்கட தேசியத் தலைவரை மண்டியிட வைச்சது. பொன்சேகா தலைமையிலை போட்டுத் தள்ளியது. குறைஞ்சது வன்னிக்குப் போய் கதிர்காமக் கோயில் பூசாரி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு சொல்லிற எல்லாத்தையும் செக்கு மாடுகள் மாதிரி கேட்டுக் கொண்டு வந்து வெளிநாடுகளிலை விளையாட்டுக் காட்டின உங்களை அக்கம் பக்கம் பாத்து பாராமல் அறிக்கை விடுற அளவுக்குச் செய்தது மகிந்த எண்டு அவிட்டு விட ஆயிரம் இருக்கய்யா. உங்களை இன்றைக்கு அரசியல்வாதி என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதே மகிந்த மாத்தையா தானே. இல்லாட்டி உங்களுக்குப் பெயர் பினாமிகள் எல்லோ? அது மட்டுமே வெளிநாடுகளில உள்ள கனபேர் இப்ப ஊருக்குப் போய் பொம்பிளை தேடுகினம். ஏதோ மகிந்தவின்ர புண்ணியத்தில அவர்களுக்கு கலியாணம் காட்சி என்று நடக்குது.

திருமலை தந்த புலிச் சிங்கமே சம்பந்தர் ஜயா! நாலு வருசமா மகிந்த ஒண்டும் புடுங்கேல்லை எண்டு மட்டுமில்லை இப்ப நீங்கள் வாக்குப் போடச் சொல்லியிருக்கும் பொன்சேகாவை ஆதரிக்கும் ஜக்கிய தேசியக் கட்சியும் ஆதரிக்க வேண்டாம் என்ற சுதந்திரக் கட்சியும் 62 வருசமா எதையும் உமக்கு நட்டு வைக்கேல்லை என்பது தெரியாமல் போச்சுதோ? 62 வருடங்களாக ஒப்பந்தம் இடுவதும், பின்னதைக் கிழிப்பதும் பிறகு வாக்குறுதி அளிப்பதும், நீங்கள் மறப்பதும் என்று நடந்த நாடகத்தில் மகிந்தவின் நாலு வருட ஆட்சியிலை ஒன்றும் நடக்காமல் போனது உங்களுக்கு கோவம் பொத்திக்கொண்டு வரக் காரணம் என்கிறீர்களே இதென்ன விளையாட்டு?

பொன்சேகா யார்? மே 18 வரை விடுதலைப் புலிகளுடன் சேர்த்து நாற்பதாயிரத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொன்று குவிப்பபதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு பெருந்துணையாக இருந்தவர். புலிகளுடனான யுத்த வெற்றிக்கு பின் தமிழர்கள் தொடர்பாகவும் தழிழ்நாடு தொடர்பாகவும் மிக மோசமான துவேச அறிக்ககைளை விட்டவர். அமெரிக்கா சென்று தமிழர்கள் ஒரு மூலையில் இருக்க வேணும் என்றால் இருக்கட்டும். உரிமைக் கதை கதைக்கக் கூடாது என்று கூறியவர்.

எப்படி தேர்தல் களம் வரை வந்தார்? மகிந்த அரசில் ஏற்பட்ட சிறிய முறுகல் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் இறுக்கம், யுஎன்பி கட்சிக்குள் முத்தியிருக்கும் தலைமைப் போட்டி, அமெரிக்காவுக்கு தலையாட்டுவதற்கு ஆள் பிடிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் ஒன்று சேர்ந்து பொன்சேகாவுக்கு முடி சூட்டியதே, தவிர பொன்சேகா நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் எடுத்த நல்லெண்ணம் கிடையாது. பிரபாகரனை முடித்த கையோடு சீனாவின் பக்கம் கூடுதலாக சாய்ந்து கொண்ட மகிந்தவைக் கொண்டுவருவதில் இந்தியாவுக்கு விருப்பம் குறைந்து விட்டாலும் மேற்குலகுடன் எப்பவும் சாயும் யுஎன்பியை ஆதரிக்கவும் இந்தியா தயங்கியது.

சீனாவுடனான வர்த்தக இராணுவ அரசியல் முறுகல் மோசமடைந்து வருகிற இந்த நேரத்தில் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் ஏற்பட்டு வரும் உறவைப் பயன்படுத்தி சீனாவை ஓரம் தள்ளி இந்தியா தன்னை இலங்கையில் முன்னிறுத்தலாம் என்று எடுத்துக் கொண்ட முடிவே பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவு. சம்பந்தனுக்கு உருத்திரகுமார் வியன்னாவிலை வைச்சு சொன்னதும் இதைத்தான். இந்தியா தொலைபேசியில் சம்பந்தனுக்கு சொன்னதும் இதுதான்.

இன்று மக்கள் முன் உள்ள கடமை இதுதான். காலத்துக்காலம் சோரம்போன இந்த அரசியல் கட்சிகள் மக்கள் நன்மை தொடர்பாக என்றுமே சிந்தித்து முடி எடுத்ததில்லை. உண்மையில் சாதாரண மக்களுக்கு இருக்கிற அறிவு கூட இந்த தலைமைகளுக்கு இருந்தது கிடையாது. ஆகவே இந்தக் கட்சிகளின் காசுழைக்கும் விஞ்ஞாபனங்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு இன்றைய அரசியல் பொருளாதார சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

மே 18 2009 வரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் உறை குளிரில் உலகமெங்கும் கூக்குரல் இட்டதமிழ் மக்களின் கோரிக்கைகளில் முதன்மையாக ஒலித்தது போர்க் குற்றம் என்பது. இதனை நிரூபிப்பதற்க்கு சனல்4 போன்ற ஊடகங்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். மே 18 வரை போர்க் குற்றம் புரியும்படி கட்டளையிட்டவர் மகிந்த. அதை நிறைவேற்றியவர் பொன்சேகா. இன்று யாரை முதல் எதிரி என்று வாய் கிழியக் கத்தினோமோ அவரை ஆதரியுங்கள் என்று வந்து நிக்கிறது தங்களைத் தமிழ் மக்களின் தலைமை என்று கூறிக்கொள்ளும் இந்தக் கூட்டம். காலா காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டே நசுக்கிவந்த சிங்களத் தலைமையும் பௌத்த பீடமும் புதுமாத்தளனுக்குப் பின் ஞானம் பிறந்து தமிழ் பேசும் மக்களை காப்பாத்த அவதாரம் எடுத்திருக்கறார்கள் என்று விசுக்கோத்துத் தனமாக சொல்லும் இந்த தமிழ் அரசில் கட்சிகளின் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவை எண்ணிச் சிரிக்கக் கூட முடியவில்லை.

யுத்தம் நடந்து பேரவலம் கட்டவிழ்த்து விடப்பட்ட அப்பாவி மக்கள் இன்றும் தங்கள் இழப்புக்களில் இருந்து விடுப.டாத நிலையில் ஒரு தேர்தல். அதில் கொன்றவனுக்கும் கொல்லச் சொன்னவனுக்கும் வாக்குப் போடுங்கள் என்று கூட்டம்  போடும் இந்தக் கூட்டமைப்புக்கும் இதர கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டவேண்டிய தருணம் இது.

விக்கிரமபாகு என்று ஒரு வேட்பாளர். தமிழர்கள் அழிக்கப் பட்டபோது ஓங்கி குரல் கொடுத்த ஒரு இடதுசாரி அரசியல்வாதி. தமிழர்களின் பிரச்சனை நியாயமானது என்று குரல் கொடுப்பவர். புலி கெலி கொண்டு ஓடும்வரை சம்பந்தர் கூட்டமும் விக்கிரபாகு பற்றி பெரிதாகவே பேசினார். இப்போது என்ன நடக்கிறது. பொன்சேகாவுக்கு மாலை சூட்டுகிறார்.

தமிழர்கள் இந்த இருவரில் யாருக்குப் போடாவிட்டாலும் ஒருவர் வெல்வது உறுதி. ஆனால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருங்கிணைந்து வெளிக்காட்ட எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதோடு மாத்திரமல்லாமல் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதன் மூலம் சர்வதேசத்தின் முன்னால் இவர்கள் போர்க் குற்றவாளிகள் அல்ல, மே 18 முன் நடந்ததெல்லாம் வெறும் வாண வேடிக்கை களியாட்டம் என்று நாமே அவர்களுக்காக நிரூபணம் கொடுத்துவிடுவோம். 

இதுவரை காலமும் இந்தத் தமிழ்கட்சிகள் ஒரு முடிவை ஆராய்ந்து சாதக பாதகங்களை கணக்கெடுத்து எமது எதிர்காலம் பற்றிச் சிந்தித்து செயலாற்றியது கிடையாது. இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தலையாட்டிப் பிழைத்த கூட்டம் தான் இந்தக் கூட்டமைப்பும் கட்சிகளும். இந்தத் தேர்தலில் இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவை இம்முறை நீங்களே சிந்தித்து எடுங்கள். விக்கிரமபாகுவுக்கு வாக்களித்தால் குறைந்தபட்சம் இவர்களது போர்க்குற்றத்தையாவது நாம் அறைந்து சொல்ல முடியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 Comments

  • Ramesh
    Ramesh

    சரத் பொன்சேகா – இலங்கை தமிழர், கைதான புலிகள் பற்றிய நிலைப்பாடு மற்றும் விளக்கம்
    http://www.thinakaran.lk/2010/01/20/_art.asp?fn=f1001203

    Reply
  • thurai
    thurai

    இருவருமே தமிழர்களிற்கு உருமைகளை வழங்கமாட்டார்கள். தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகழும் தமிழரை சரியாக வழிநடத்த தவறுகிறார்கள்.

    இலங்கையின் சிறுபான்மையினரான, சகல இனங்களையும் ஒன்று படுத்தி வழிந்டத்தக் கூடிய தலவர்கள் தோன்றும்வரை சிங்கள பேரின வாதமே என்றும் வெற்ரி கொள்ழும்.

    தமிழர்களைப் பொறுத்த வரையில் அரசியலில் நடுகடலில் துடுப்பின்றி தடுமாறும் தோணிகளே.

    துரை

    Reply
  • Sivam
    Sivam

    http://www.socialequality.com/srilanka/susp-j19-ta.shtml

    இலங்கை தேர்தல்: ஐக்கிய சோசலிச கட்சியின் இரண்டு முகங்கள் –விஜே டயஸ் 14 ஜனவரி 2010

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    தமிழர்கள் இந்த இருவரில் யாருக்குப் போடாவிட்டாலும் ஒருவர் வெல்வது உறுதி. ஆனால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருங்கிணைந்து வெளிக்காட்ட எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதோடு மாத்திரமல்லாமல் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதன் மூலம் சர்வதேசத்தின் முன்னால் இவர்கள் போர்க் குற்றவாளிகள் அல்ல, மே 18 முன் நடந்ததெல்லாம் வெறும் வாண வேடிக்கை களியாட்டம் என்று நாமே அவர்களுக்காக நிரூபணம் கொடுத்துவிடுவோம்.//ஈழமாறன்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஈழமாறன்
    வந்தியத்தேவன் குறிப்பிட்ட தங்கள் வாதம் எந்தளவிற்குச் சரி என்பது உங்களுக்கே வெளிச்சம்?? கூத்தமைப்பினர் முதல் புலிப்பினாமிகள் வரை இன்று சரத்திற்கே கரம் கொடுத்து முள்ளிவாய்க்காலை என்றோ மறந்து விட, நீங்கள் மட்டும் ஞாபகம் வைத்து என்ன பயன்?? அத்தோடு இத்தேர்தலில் தமிழர் வாக்குகள் யாருக்கு விழுந்தன என்று எந்த நாடுங்க கணக்கெடுக்கப் போகுது?? வெளிநாடுகள் எம்மையெல்லாம் கைவிட்டு பல காலமாச்சுங்க…….

    Reply
  • Nagulan
    Nagulan

    ஈழமாறனுக்கு உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லைப் போலும்.கவுண்டமணி மாதிரி உள்ளை ஏதும் இருந்து வந்திருக்கிறாரோ?

    Reply
  • Kumaran
    Kumaran

    இன்று யாரை ஆதரிப்பது என்பது தொடர்பக பல கட்டுரைகள் விவாதம்கள்! அது எப்படி புலிகளை கண்முடித்தனமாக முப்பது வருடமாக ஆதரித்தோம்? புலிகள்தான் ஆமியை கொல்லுறாங்கள் அதனால் தமிழர்களையும் கொலை செய்ய உருமை உண்டு என்றா அல்லது தமிழர்களை தமிழர்கள் அடக்கலாம் என்றா?

    ரண்டு போரையும் சர்வதேசத்துக்கு முன்னால் நிறுத்தும் பொழுது சர்வதேசம் தமிழர் பக்கம் தான் நிற்கும் என்பதற்க்கு என்ன நிட்சயம்!! அல்லது சர்வதேசம் ஒரு தீர்வை தமிழர்களுக்கு கொடுக்குமா??

    Reply
  • vithusha
    vithusha

    விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்தவுக்கு வாக்குப் போடாமல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பது என்று உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து எடுத்திருக்கும் முடிவைக் குழப்புவதில் ஈழமாறன் போன்றவர்கள் முன்நிற்பது ஒன்றும் வியப்பில்லை. அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் குளிர்காயும் இவர்களுக்கு தலைவர் மிக விரைவில் பதில் கொடுப்பார்.

    Reply
  • sekaran
    sekaran

    ஒரு குலுக்கல் போட்டி:
    1) ஈழமாறன் என்பது சிவாஜிலிங்கத்தின் புனைபெயர்.
    2) சிவாஜிலிங்கம் / விக்ரமபாகு கோஷ்டிக்கு தமுக்கடிக்கிறவர் ஈழமாறன்.
    எது சரி?
    உங்கள் பதிலை ஜன.26 க்கு முன் அனுப்புங்கள். அதிர்ஷ்டசாலிக்கு பெரும் பரிசு காத்திருக்கிறது.

    Reply
  • BC
    BC

    //Vithusha – விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்தவுக்கு வாக்குப் போடாமல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பது என்று உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து எடுத்திருக்கும் முடிவைக் குழப்புவதில் ஈழமாறன் போன்றவர்கள்….//

    சரத்பொன்சேகாவுக்கு இலங்கையில் வாக்களிப்பது என்று உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து முடிவே எடுத்து விட்டார்களா!! எப்போது?

    Reply
  • AVATHANI
    AVATHANI

    அன்று “தமிழீழமே முடிந்த முடிவு” என்று எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்து விட்டு இன்று அதன் முடிவையும் மக்கள் கண்கூடாக காணவைத்த கூட்டமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியுள்ள இனவாதிகளுள் ஒருவருக்கு ஆளவட்டம் பிடிக்கிறது.

    இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் கவனத்திலெடுக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நிச்சயமாக இந்தத் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கப் போவது சிறுபான்மையினத்தவரின் வாக்குகள் அல்ல. மாறாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்களக் கிராமவாழ் மக்களின் வாக்குகளே.

    கூட்டமைப்பு வாக்குப் போடச் சொல்லுகின்ற இராணுவத் தளபதிக்கு நகர்ப் புறங்களில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு “கொட்டியா” வை விரட்டியடித்த ஹீரோ சால்வைக்காரர்தான். ஆக தற்போதுள்ள கள நிலவரங்களின்படி சாதகநிலைமை மஹிந்த பக்கம்தான்.

    ஆமிக்காரர் வந்தாலும் சால்வைக்காரர் வந்தாலும் எதுவும் கிடைத்து விடப்போவதில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை சால்வைக்காரர் வந்தால் நடந்து முடிந்த துயரங்களை விடவும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. ஆமிக்காரர் வந்தால் தமிழ் மக்களை வாட்டி வதைத்த (புலத்து கனவான்களை வாழ வைத்த) அந்த இருண்ட யுகம் மீண்டும் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கான அறிகுறிகள்தான் புலத்துப் பினாமிகளின் வால்பிடிப் பிரசாரமும் தேர்தலில் தாராளமான டொலர் புலக்கமும்.

    மேலும் தமிழ் மக்கள் இந்த இருவரில் ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் எந்த ஒரு பெறுமானத்தையும் தமிழ் மக்கள் தொடர்பாக சிங்கள இனவாத தலைமைகளிடம் இல்லாமல் செய்து விடுவதோடு மாத்திரமல்லாது; நாளை தமிழர்களுக்கு எந்தவொரு அநீதியைச் செய்தாலும் அது தமது அரசியலைப் பாதிக்காது என்ற தைரியத்தையும் அவர்களிடம் ஊக்குவிக்கும்.

    நிச்சயமாக சனாதிபதியாக வருபவர் “கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலையில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் தமிழ் மக்களது முடிவு தேர்தலில் இவ்விரு இனவாதிகளையும் நிராகரிப்பதாக இருக்குமாயின் சனாதிபதியாக வருபவர் தனது எதிர்கால அரசியல் நலன் கருதி தமிழ் மக்கள் தொடர்பாக தீர்க்கமானவொரு முடிவை எடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளும். இல்லையேல் அவரின் எதிர்கால அரசியல் தொடர்பாக நிச்சயமற்ற தன்மையைத் தோற்றுவிக்கும்.

    இந்தப் புள்ளியில் இருந்துதான் தமிழ் மக்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கையை நகர்த்த வேண்டும். அதுவரை மெளனம் காத்தல் நல்லது.

    இல்லாவிட்டால் எமது அரசியல் பலம் “பத்தோடு பதினொன்று” அல்லது “கடலில் விட்டெறிந்த உப்பு” அவ்வளவுதான்.

    நன்றி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விதூசா,
    நன்றி உங்கள் நாடு கடந்த நகைச்சுவைக்கு. சிரிச்சுச் சிரிச்சு வயிறு நோகுது……

    Reply
  • tharmu
    tharmu

    என்ன சொன்னாலும் புலிகளை அழித்தில் இரண்டு வேட்பாளர்களுமே சரி என்பது தான் ரிஎன்ஏயின் வாதமும் இவர்களை எப்பவோ அழித்திருக்க வேண்டும் இப்போதும் புலிகளை மிகவும் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள் புலிகளின் அடிச்சுவடு கூட இல்லாமல் செய்யும் வேலையையே இந்த ரிஎன்ஏ செய்கிறது புலி ஆதரவாளர்கள் மீண்டும் ஏமாற்றப்படுகிறார்கள் இதற்கிடையில் புலிகளின் பணங்களின் உடைமையாளர்களும் இந்த ரிஎன்ஏயின் தந்திரத்தை தமக்கு சாதமாக பாவித்து புலிகளின் அடியை அழிப்பதே எல்லோருடையதும் நோக்கம்.

    Reply
  • மாயா
    மாயா

    தென் இலங்கை மக்களிடையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்ட கை ஏட்டின் தமிழாக்கம்

    இரண்டாம் போர்….

    என் அன்பார்ந்த இலங்கை மக்களே, முப்பது வருட காலமாக இலங்கையில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து மக்களுக்கு சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருக்கும் அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை.

    அதற்கு காரணம் எமது நாட்டில் சர்வாதிகாரம் பெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையில்லாத அதிகாரத்தை அவர் தவறான செயலில் ஈடுபடுவதனாலேயாகும்.

    நான் இத் தேர்தலுக்கு போட்டியிட காரணம், நாட்டை ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து பாதுகாத்து ஜனநாயகத்தை மீண்டும் அமுல்படுத்தி ஊழல் அற்ற அரசினை உருவாக்கி அபிவிருத்தியை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்வது எனது இரண்டாம் போர்.

    தற்சமயத்தில் கடமை புரியும் ஜனாதிபதியவர்களுக்கு சவால் விடுவதற்கு இயலுமான அரசியல் தலைமைத்துவம் இன்று எமது நாட்டில் இல்லை. அதற்கு காரணம் போர் வெற்றியின் உரிமை, அவர் தானே செய்தாரென கூறிக்கொண்டு பிரபல்யம் பெற்றுள்ளார்.

    போர் வெற்றியின் சொந்த உரிமையாளர் நானே ஆவேன். அவருக்கு சவால்விட இருக்கும் ஒரே நபர் நானே ஆவேன். நான் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். அதேபோலவே கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நம்பிக்கை வைக்கக்கூடிய பயமில்லாத தலைவனை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

    வரலாற்றில் எமது நாடு பல்வேறு எச்சரிக்கைகளுக்கும், யுத்தங்களுக்கும் முகம் கொடுத்துள்ளது. சிங்கள மக்கள் வாழ்ந்த இலங்கையில் இலங்கையில் பல்வேறு ஆக்கிரமிப்புக்களின் பின் தென் இந்தியாவிலிருந்து வந்த தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் குடியேறி இருப்பது பல காலத்துக்கு முன்பேயாகும்.

    அதன்பின் ஆங்கிலேயரால் மலைநாட்டில் தேயிலைத் தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட தென் இந்திய தொழிலாளர்களுக்குப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

    பல்வேறு சந்தர்ப்பங்களில் வியாபார ரீதியாக இங்க வந்த இஸ்லாமிய மக்களும் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இலங்கை சமூகத்தில் ஒரு பங்காளிகள் ஆவார்கள்.

    சிங்களவர்கள் இலங்கையில் மாத்திரமே வாழ்கின்றனர். இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் 75%ம் ஆவார்கள். ஆகையால் இந்நாடு சிங்கள பெளத்த நாடு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்களாகிய சிங்களவர்களுக்கு நிபந்தனை போட உரிமை இல்லை. இந்நாடு ஒன்றிணைந்த நாடாக பெரும்பான்மை சிங்களவர்கள் ஆட்சி புரிய வேண்டும். நான் இதை பயமின்றி உலகத்துக்கு கூறியுள்ளேன்.

    யுத்தம் ஆரம்பத்திலிருந்து பயங்கரவாதத்தை தோல்வியாக்கலாம் என கூறியவர்களில் நானும் ஒருவன். பல இராணுவ தலைவர்கள் இந்த யுத்தத்தை காட்டிக்கொடுத்தார்கள்.

    அரசியல் தலைவர்கள் அடிக்கடி சமாதான ஒப்பந்தங்கள் மூலமாக புலி பயங்கரவாதிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்தது, தைரியமுள்ள இராணுவ தலைமை இல்லாததனாலேயே ஆகும்.

    இந்நாட்டில் யுத்தம் செய்யாத ஒரு ஜனாதிபதி இல்லாமல் இல்லை. எல்லோரும் யுத்தம் செய்தார்கள். ஆனால் வெற்றியடையவில்லை ஏன்? இராணுவ தலைமைத்துவம் பலவீனமானவர்களாகவும், அவர்கள் அரசியல் தலைவர்கள் முன்னில் அணிபணிந்துள்ளதனாலேயாகும்.

    2002 ஆண்டு சமாதான ஒப்பந்தம் ஆரம்பத்திலிருந்து அது முடியும் வரை அதை எதிர்த்த சிரேஷ்ட இராணுவ அதிகாரி நான் ஆவேன்.

    யாழ்ப்பாண பிரதேசம் பாதுகாப்பு வலயமாக பிரித்துக்கொள்வதற்கும், தீவுகள் எல்லாவற்றையும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எனக்கு இயலுமாக இருந்தது. இல்லாவிடில் பலாலி விமான நிலையமும் அதன் இராணுவ முகாமும் காங்கேசன்துறையும் எமக்கு இல்லாமல் போவதற்கு இடம் இருந்தது.

    மஹிந்த சிந்தனை நூலில் 28ம் பக்கத்தில் நான்கு பக்கங்கள் முழுவதும் சமாதான பேச்சு வார்த்தைதான். புலிப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வதென கூறப்பட்டுள்ளது. நிகழ்கால ஜனாதிபதியவர்களுக்கு யுத்தத்தால் இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தேவை இருக்கவில்லை.

    அவர் வேறு பயணத்தை எடுத்தார். யுத்தத்தை ஆரம்பிக்க கட்டாயப்படுத்தி அதற்கான சக்தியும் திட்டங்களையும் நானே பெற்றுக்கொடுத்தேன். எனக்குப் பின்னால் இருந்த பெளத்த துறவியர்களுடைய சக்தியும் மக்கள் முன்னணி (JVP) யினரும் செய்த கட்டாயத்தால் ஜனாதிபதிக்கு தனது விருப்பத்திற்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை.

    வெளிநாடுகள் போலவே தென் இந்திய வற்புறுத்தலுக்கு இணங்க யுத்தத்தை நிறுத்த முயன்றாலும் அச்சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இராணுவ தலைமைத்துவமாகும்.

    தென் இந்திய அரசியல் தலைவர்களை ஒரு சதத்திற்கு கணக்கெடுக்காமல் அவர்கள் நகைச்சுவையாளர்கள் என கூறுவதற்கு முன்வந்தது ஜனாதிபதி ராஜபக்ஷ அல்ல நானேதான். ஆனால் ஜனாதிபதி கருணாநிதியின் மகளாகிய கனிமொழியை இங்கு வரவழைத்து தனது கோழைத்தனத்தை காட்டினார்.

    மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் மக்களை கொல்லாமல் யுத்தம் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவைப்பட்டது. அது சுருட்டையும் தாடியையும் பாதுகாத்துக் கொள்வதாகும்.

    அவர்கள் திட்டமிட்ட “மானுட போர்” ஒரு பதராகி விடுமென நான் அறிந்தேன். ஆகையால் யுத்தம் நடக்கும் போது வெற்றி பெறவேண்டுமாயின் இருபக்கத்திலும் மரணமடைவோரை கவனம் செலுத்த முடியாது. எனவே இராணுவத்தை இரு மடங்காக பலப்படுத்தியதே நான்தான்.

    யுத்தத்தில் பாவிக்கும் ஆயுதங்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு கட்டளையிட்டாலும் தேவைப்படுகின்ற ஆயுதங்கள், குண்டுகள் இறக்குமதி செய்வதற்கும், அவை வரையறையற்று சுடுவதற்கும் கட்டளையிட்டது நானே ஆவேன். மல்டி பெரல், ரொக்கட் லோன்சர்களை அறிமுகமாக்கிக் கொடுத்து விமான குண்டுத் தாக்குதல்களின் பெறுமதியை விளக்கி விமான குண்டுத் தாக்குதல்களை அதிகரிக்க வைத்தது நான்.

    இறுதி நாட்களில் ஜனாதிபதி சர்வதேசத்திற்கு பயந்து புலித் தலைவர்களை உயிருடன் பிடிக்க ஆலோசனை வழங்கினார். பிரபாகரனை பிடித்து அவருடன் பேசவும் அவருக்குத் தேவைப்பட்டது. அப்படியாகிவிட்டால் பிள்ளையான், கருணா அம்மான் போல் பிரபாகரனுக்கும் முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

    சரணடைந்த பிரபாகரனையும் ஏனைய தலைவர்களையும் கொல்ல கட்டளையிட்டது நான் என மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள். இந்த கொடூரமான கொலையாளியுடைய சாவின் உரிமையை ஜனாதிபதிக்கு அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு என்னிடமிருந்து பறிக்க ஷிநிகி!ஜி.

    வெளி நாடுகளின் தாளத்திற்கு ஜனாதிபதி ஆனால் ஆயிரக் கணக்கான பயங்கரவாதிகளை இன்னும் முகாம்களில் பாதுகாக்க அரசுக்கு வேண்டியதாக இருக்கும்.

    இப்பிரச்சினை அப்போது நான் எடுத்த தீர்மானத்தால் முடிவடைந்து விட்டது. யுத்தத்தின் பின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் என்னுடன் கோபமுற்றனர். ஏன்? நீண்டகாலமாக எமது நாட்டில் பாதுகாப்புக்கு தடை ஏற்பட்ட காரணங்களுக்கு நான் சம்மதிக்கவில்லை அவைகள் வருமாறு :-

    * அகதி, முகாம்களிலுள்ள புலிகளை இனங்கண்டு அவர்களை சிறையில் அடைக்க அல்லது கொலை செய்ய வேண்டும் என்ற எனது ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

    * வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முன் மீளக் குடியேற்றம் செய்ய வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுத்தாலும், அரசியல் செல்வாக்குக்காக அவர்களை மீள்குடியேற்றம் செய்தார்கள்.

    * ஒளித்து நின்று உதவி வழங்கிய பயங்கரவாதிகளின் பற்றுள்ளவர்கள் இன்னும் வடக்கில் மறைந்து இருப்பதனால் எனது ஆலோசனைகளை முறியடித்து வடபகுதிக்கு ஏ9 பாதை திறந்தார்கள். அதை இதுவரை தாமதப்படுத்தியதே நான் ஆவேன்.

    * வட பகுதிக்கு அனுப்பும் பொருட்கள், பசளை, பெட்டரி போன்றவற்றால் குண்டு தயாரிக்க முடியுமென அறிந்த போதிலும் அதற்குள்ள தடைகளை நீக்கி அவை வடபகுதிக்கு அனுப்ப அனுமதி வழங்கியது எனது விதந்துரைத்தலை கவனம் கொள்ளாமையினாலாகும்.

    * நான் எவ்வளவு எதிர்த்தாலும் மீன் பிடிப்பதற்கு சட்டங்களை நீக்கி பாதுகாப்புக்கு ஏற்படும் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

    * தமிழ் முஸ்லிம் மக்கள் மீன்பிடிப்பதற்குச் செல்லும் கடலில் இராணுவ முகாம்களை அமைக்குமாறு விதந்துரைத்தாலும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    * எதிர்வரும் காலத்தில் இவ்வாறாக நாடு பிரிக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கு பாதுகாத்துக்கொள்ளவும், தென் இந்திய இடையூறுகளுக்கு முகம் கொடுக்கவும் இலங்கை இராணுவத்தை 4 இலட்சம் வரை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்தாலும் அற்கு இவர்கள் உடன்படவில்லை.

    * இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பல்வேறு பிரதேசங்களிலும் நகரங்களிலும் இராணுவ கிராமங்கள் உருவாக்க விதந்துரைத்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    * வடக்கிலும் கிழக்கிலும் சகல பொலிஸ் நிலையங்கள் அருகில் இராணுவ முகாம்கள் உருவாக்குவதற்கு அவர்கள் உடன்படவில்லை.

    இன பிரிவினைவாதம் இன்னும் முடியவில்லை.

    ஆகையால் எமது நாட்டில் இராணுவத்தை தயார் செய்திருக்க வேண்டும். சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகளின் இராணுவங்கள் பலமாக இருக்கின்றன.

    நான் ஜனாதிபதியாகிய உடனே நாட்டு இராணுவத்தை அதிகரித்து எல்லா இளைஞர்களையும் இரு (2) ஆண்டுகள் இராணுவத்தில் சேரவேண்டுமென கட்டாயப்படுத்துவேன்.

    நான் அதில் அடக்கமுள்ள சமூகத்தினரை உருவாக்கவும் அவசர காலத்திற்கு இராணுவத்தை பலப்படுத்தவும் எதிர்பார்க்கிறேன்.

    நாடு முன்னேற வேண்டுமாயின் கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும்.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்று முன்னேற்றம் அடைந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு காரணம் இராணுவ அதிகாரிகள் ஒரு தடவை அங்கு ஆட்சி புரிந்ததனாலேயாகும். சமுதாயத்தைத் திருத்துவதற்கு நல்ல வழி, நாட்டின் சட்டங்களை இராணுவ சட்டமாக உருவாக்கி அவை நன்றாக செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்க் கூட்டமைப்பு என்னுடன் இணைவதையிட்டு பிழையான கருத்துக்கள் கொடுத்து நாட்டை காட்டிக்கொடுக்க முயல்கின்ற பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தன் அவர்கள் முன்வைத்த காரணங்களுக்கு நான் உடன்படவில்லை. அவர் என்னுடன் எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.

    வடக்கு, கிழக்கை ஒன்றிணைக்கவோ தமிழ் மக்களுக்கு இந்நாட்டுக்குள் பிரிக்கப்பட்ட சுய நிர்வாகம் பெற்றுக் கொடுத்து நாடு பிரிப்பதற்கு நான் எப்போதும் உடன்படவில்லை. அதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

    யுத்தம் வெற்றியடைவதற்கு 27,000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுடைய உயிரைப் பறிகொடுத்து 50,000 இற்கும் அதிகமானோரை அங்கவீனர்களாக்கி ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்று பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை எப்போதும் திருப்பிவிடுவதற்கு இடமளித்து விடக்கூடாது.

    நாம் கொண்டுசென்ற போரை நிறுத்தாமல் எதிர்காலத்தில் அதை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதை முகாமைத்துவம் செய்ய வேண்டும். அது எனது இரண்டாவது போராகும். சுதந்திர, அடிமையற்ற, சுபீட்சமான, பிரியாத இலங்கையை உருவாக்குவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களிப்பீர்களென எதிர்பார்க்கிறேன்.

    இப்படிக்கு நம்பிக்கையுள்ள
    சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளர்

    Thinakaran – (நன்றி: தேனீ)
    ________________________________

    தமிழர்கள் சரத் பொண்சேகாவுக்குத்தான் வாக்கு போட வேண்டும். புலிகளின் தாகம் தமிழரில்லாத தாயகம். அதை நிறைவேற்ற அனைத்து தமிழரும் ஒன்றாய் செத்து மடிய வேண்டும். புலத்து புலிகளும், மொக்கு தமிழ் அரசியல் சாக்கடைகளும் , வெளிநாடுகளில் அசைலம் அடித்து வாழ வேண்டும். இதுவே எனது வாழ்த்தாகும். அரசியல் மாற்றம் அல்ல, அழிவுக்கு அத்திவாரம்.

    Reply
  • GUNARAJAH
    GUNARAJAH

    yes mr eelamaran you are too much now we want the peace then any argiments
    every tamils peples in there they are voting our self , not outhers call thems
    i am very sory

    Reply
  • soosai
    soosai

    The Democratic People’s Forum (DPF) yesterday announced its support to Presidential candidate Gen. Sarath Fonseka.
    “The ruling UPFA does not seem to believe that others should have freedom of expression or party affiliations like they do,” former JVP Secretary, Lionel Bopage said “What right have they to talk about democracy?
    Unlike the President, the General has up to now kept his word about what he promised, whether right or wrong and thus would make a trustworthy leader for the country, Bopage added.
    “More than 90% of what the President promised the nation through the Mahinda Chinthanaya in 2005 hasn’t been fulfilled though the President claims he has,” Mr. Bopage said,
    He claimed that more than 200,000 people currently were unemployed and that had led to many leaving for the Middle East and Europe as domestic labourers.
    “The DPF has never heard of General Fonseka earning through foul means while in the Army which is another reason why we decided to support him,” the Convenor of the DPF said.
    He said that if the DPF members were still in the JVP, they would still have taken the decision to support General Sarath Fonseka.
    “We respect the JVP for supporting the General,” Mr. Bopage added.
    The Convener of the DPF said the ruling party could resort to more violence and pleaded the public to be cautious. “We also ask the JVP to react moderately should violence on part of the Government increase,” Mr. Senanayake added

    Reply
  • Ajith
    Ajith

    Eelmaran, I am happy to vote for you but not for Sivagi or Wickremabahu. Both a Rajapkse’s agents.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தென்னிலங்கையில் வினிநோகிக்கப் பட்டதாக சொல்லப் படும் இந்த தேர்தல்பிரசுரம் சரத்பொன்சேகரா வின் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து இன்னொரு பிரசுரம் வெளிவரும். அல்லது வந்திருக்கும். இவைபோலியானவை. இது எதிராளிகளின் விசமத்தனம் என்று. இன்றைய நிலையில் சரத்பொன்சேகராவுக்கு ஜனாதிபதியாவதற்கு எந்த வித வாய்ப்போ சந்தர்பமோ இல்லை. சிலநேரங்களில் சிலசம்பவங்கள் நினைப்பையும்
    கணிப்பையும் தலைகீழ் ஆக்குவதுண்டு. சரத்பொன்சேகராவுக்கு ஆதரவளித்தவர்களும் அவருக்கு வாக்கு போட்டவர்களும். இதன் ஒரு பிரதியை கொப்பி எடுத்து வைத்திருக்கவும். இந்த உபதேசம் உங்கள் வேலைப்பளுவை குறைப்பதற்காகவே!.
    சரத்பொன்சேகரா ஜனாதிபதியாக வந்தால்….? நடந்தேறப்போவது இவையே. கொப்பியை வைத்து அப்பப்ப சரிபார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
    தேசம்நெற் வாசகர் எத்தனைபேருக்கு இதில் உடன்பாடு?.

    Reply
  • soosai
    soosai

    It’s an open secret that Former UNP national list MP Sarath Kongahage was put up to contest presidential elections by the Rajapakse regime. Both candidates are SARATH. Their symbols Swan for SF & Duck for SK look alike. The idea is to confuse voters & cut into potential Fonseka votes.

    Kongahage is also used by Mahinda to raise objections against Fonseka that the general is ineligible to contest as he has US green card. Kongahage has filed action saying Sarath is US citizen by having US green card & cannot hold high office on grounds of divided loyalties.

    Hilarious to see Kongahage saying US residency is equal to citizenship. Does the poor blighter really not know the difference between both?

    Kongahage, If dual citizenship is divided loyalty then how can US citizen Gotabhaya Rajapakse hold sensitive Defence secretary post then?

    Reply
  • vithusha
    vithusha

    சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை அழித்த மகிந்தவுக்கு பாடம் புகட்டுவோம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழரின் எதிர்காலத்திற்கு வழிதெரியாமல் தடுமாறுவது புலிஆதரவாளர்கள் மட்டுமல்ல ஈழமாறனும் தான். விக்கிரபாகு கருணரட்னாவுக்கு வாக்கு போடுவதன் அர்த்தம் ஏதோ பொதுவுடமையிலும் சமத்துவத்திலும் அக்கறை கொண்டல்ல. கடந்தகாலத்தில் புலிகளுக்கா(தமிழருக்காஅல்ல)அவர் கண்ணீர்விட்ட நன்றிக்காக…
    ஈழமாறனுக்கு சமத்துவத்தில் நம்பிக்கை விருப்பு பற்று அக்கறையிருந்தால் அதை தேடி எங்கோவோ போய்யிருப்பார். இதெல்லாம் சோழப் பொரியோடு திருவார் ஊருக்கு என்பது போல விக்கிரமபாகுவிலை ஏறியாகுதல் தமிழீழத்தை பார்த்திடலாம் என்ற நப்பாசை தான். இல்லையேல் இனவாதத்தை தூண்டிவிடுவது அரசியல்வாதிகளின் பிழைப்பு. ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாம் வாழ்வது மூலமே நிரந்தர சமாதானத்தை கண்டடைய முடியும் ( இந்தநேரமும் அப்படித்தானே வாழ்கிறோம்) என்று கூறியிருப்பாரே!. இனிமேல்லாவது இந்த புரிந்துணர்வோடு கட்டுரை எழுதுவாரா?.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    விதுஷா! கண்ணுக்கு கண்னென்று நாம் பழிவாங்கப் புறப்பட்டால் இந்த உலகமே குருடாகிவிடும் என்ற பொன்மொழியை உணர்ந்து பாருங்கள். அதை உணரமுடியாவிட்டாலும் கடந்த காலத்தில் எம்மினம் பட்ட துன்பத்தை ஆகுதல் எண்ணிப் பாருங்கள். எங்கு தான் பாதுகாப்பாக வாழ முற்பட்டாலும் ஏதோ ஒருநிலையில் அந்தவாழ்வு எமக்கும் வந்துவிடாது என்பதற்கு என்ன உத்தரவாம்?. கண்ணை மூடிக்கொண்டு கதைக்காதீர்கள்.

    Reply
  • Raj
    Raj

    விதுசா நீங்கள் இன்னும் தமிழ்மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லைப் போலும். ஓ நீங்கள் புலிப்பாணிதானே? முள்ளிவாய்க்கால் மாதிரி நல்ல தீர்ப்பு காத்திருக்கிறது அப்போ வச்சுக்குவோம் சண்டையை.

    Reply
  • Poorni
    Poorni

    சரத்தோ or மகிந்தவோ புலிகளை அளித்தது தமிழர்களுக்கு செய்த நன்மையே. புலிகள் என்றல் தமிழர் என்ற ஒரு பொய்யான பிரச்சாரத்தை புலிகள் முன் வைத்தது மட்டும் அல்லாமல் அதனுடாக தமிழர் எல்லார்க்கும் சர்வதேசம் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதுடன் கடைசியில் அப்பாவி மக்களையும் பலி கொடுத்தார்கள்.

    சர்வதேசம் முன் போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு சரத், மகிந்த உட்பட புலிகள் சார்பாக யாரை அனுப்பி வைக்கப் போறோம், BTF or GTV or புலிகள் தப்பி ஓடும் மக்களை பின்னால் நின்று சுட்டது எல்லாவற்றையும் மறைத்து BTF, GTV உடன் நின்று ஆர்ப்பாட்டம் செய்த ஒரு லட்சம்
    மக்களையுமா??

    Reply
  • vithusha
    vithusha

    போராட்டத்தில் இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை. முள்ளிவாய்டயக்கால் இழப்புகளை நானும் கவலையுடனேயே எதிர் கொள்கிறேன். இருப்பினும் தலைவர் இவ்வளவும் செய்தது தன் நலத்திற்காக அல்ல. அது அடிமைப் பட்டிருக்கும் தமிழினத்திற்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகவே. அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?

    Reply
  • Anonymous
    Anonymous

    ஈழமாறன் விக்கிரமபாகுவை அடையாளம் காட்டியது ஏதொ இலங்கையில் இடதுசாரிப் புரட்சி வரும் என்றல்ல. முதன்மை வேட்பாளர்கள் இருவருமே தமிழின விரோதிகள் மட்டுமல்ல தீர்வுக்கும் எதிரானவர்கள். அதையே ஈழமாறன் சுட்டிக் காட்டியிருக்கிறார். புகுந்துதோ என்று கேட்க வால் மட்டும் வெளியிலை என்றமாதிரி கட்டுரைகளை வாசிக்கக் கூடாது.

    Reply
  • NANTHA
    NANTHA

    “தமிழ்” என்று கூறு கட்டி வாக்கு வேட்டை நடத்திய செல்வநாயகம், பொன்னம்பலம் காலத்திலிருந்து “தமிழ் பிரச்சனை” என்று சகல “தமிழ் கட்சிகளும்” கூறுகிறார்கள். எனக்கு இன்னமும் இந்த “தமிழ்” பிரச்சனை” என்ன என்றே புரியவில்லை.

    நான் இந்த “இயக்கங்கள்” வந்தவுடன் நாட்டை விட்டு ஓடியவன். இந்த இயக்கங்கள் தமிழருடன்தான் முதலில் “போராட்டம்” ஆரம்பித்தனர். தமிழர்களைக் கொலை செய்வதிலிருந்து தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பது வரை இந்த “தமிழ் இயக்கங்கள் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டனர். “தமிழ்” என்று கும்பலாக சேர்ந்த பல பிரிவுகள் தமிழர்கள் தங்கள் “அடிமைகள்” என்று திமிருடன் திரிந்தனர். தமிழர்களுக்கும், சிங்களத்தை எதிர்க்கிறோம் என்ற “இயக்கங்களுக்கும்” அதே சிங்கள அரசுதான் அரிசி அனுப்பியது. சிங்கள அரசின் அரிசி, பருப்பு, சீனியை பகிஷ்கரிக்கிறோம் என்று இந்த இயக்கத்தினர் ஓர் நாளும் சொன்னது கிடையாது. பின்னர் அதே உணவுப் பொருட்களை புலிக்கும்பல் “கொள்ளை” விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாத்தியம் செய்தனர். தமிழ் மக்களுக்கு சிங்களத்தால் வந்த உபத்திரவத்தை விட கோடி மடங்கு உபத்திரவத்தையும் உயிர் இழப்புக்களையும் இந்த “தமிழ் வீரர்கள்” செய்தார்கள். இதில் எவர் திறமானவர் என்ற ஆராச்சி செய்வதை விட இந்த வேலையும் கூலியும் இல்லாத கூட்டங்கள் என்ன “அரசியல்” தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்று யாரவது கூற முடியுமா?

    அரச வேலைகளுக்கு போகின்றவர்களுக்குத்தான் “சிங்களம்” பிரச்சனை. மீன் பிடிப்பவனுக்கும், விவசாயம் செய்பவனுக்கும் இந்த “சிங்களம்” ஏன்? தமிழ் கூட தேவையில்லை.

    இந்த அரச “கூலிகள்”தான் தமிழர்களுக்கு ஊணும், உறைவிடமும் கொடுப்பவர்களா? சிங்கள பிரதேசங்களுக்கு வேலைக்கு போகும் “தமிழ்” வீரர்கள் எந்த மொழியில் அந்த மக்களுக்கு “சேவை” செய்ய இருந்தார்கள்/ இருக்கிறார்கள்? பத்தாம் கிளாஸ் பாஸ் பண்ணிய தமிழன் அனைவருக்கும் தமிழ் பிரதேசங்களில் கிளாக் வேலையோ, வாத்தி வேலையோ கொடுக்க முடியாது என்பது “விவரம்” உள்ள மக்களுக்கு புரியும்.

    அல்லது அட்வான்ஸ்ட் லெவல் படித்த தமிழன் எல்லோருக்கும் டாக்குத்தர்/ எஞ்சினியர் வேலை கொடுக்க முடியுமா?

    தமிழ் பிரச்சனை என்பது தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய தயாரிக்கப்பட்ட குதிரை என்பது ஏன் கருத்து. அதனால்த்தான் இந்த “தமிழ்” கோஷ்டிகள் ஆளுக்கு ஆள் ஒவ்வொரு பிரச்சனை என்று கத்துகிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இருப்பினும் தலைவர் இவ்வளவும் செய்தது தன் நலத்திற்காக அல்ல. அது அடிமைப் பட்டிருக்கும் தமிழினத்திற்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகவே.-விதுசா //

    அடடா அதற்காகவா அந்த மக்களைக் கேடயமாக்கி, முள்ளிவாய்க்கால் வரை தங்களைக் காப்பாற்றினார்?? சொல்லவேயில்லை…..

    Reply
  • sumi
    sumi

    யாருக்கு வாக்கு போடவேண்டும் என்பது இலங்கையிலுள்ள மக்களின் விருப்பமும் உரிமையும் கூட. அதற்கும் ஈழமாறனுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லையே.

    Reply
  • BC
    BC

    விதுசாவுக்கு எப்படியெல்லாம் கதை சொல்லியிருக்கிறார்கள்!//தலைவர் இவ்வளவும் செய்தது தன் நலத்திற்காக அல்ல. அது அடிமைப் பட்டிருக்கும் தமிழினத்திற்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகவே. //
    இந்தப்பக்கம் வந்து உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது.

    Reply
  • palli
    palli

    சிவாஜிக்கே நடிப்பு சொல்லி கொடுக்கும் ஆற்றல் விதுஜாவுக்கு உண்டு போல் உள்ளது, இருந்தாலும் தேசத்தில் உங்கள் முன்னோட்டம் தந்தை பெரியாருக்கே பகுத்தறிவு சொல்லி கொடுப்பது போல் உள்ளது; தலமைக்கும் தறுதலைக்கும் உள்ள வேறுபாடு இத்தனைக்கும் பின் விதுஜாவுக்கு தெரியவில்லை என்றால் இது குணபடுத்தும் நோயல்ல; விதுஜா உங்கள் தலையிடம் உள்ள ஒரு திறமை (கொலை தவிர்ந்த) அல்லது மனிதநேயம் (சைனற் கொடுப்பதை தவிர்த்து) சமூக சிந்தனை (தன் பாதுகாப்பு தவிர்ந்த) இப்படி ஏதாவது ஒரு விடயம் சொல்லுங்கள் பார்க்கலாம்; தலை தலை என சொல்லி சொல்லியே உங்க தலையும் நடிகர் அஜித் அளவுக்கு கூட தகுதி இல்லாத தலையாகிவிட்டார்; உங்க தலைபற்றி மூவர் கூட்டாக KP; இளம் வளுதி; பாப்பா; அரசுமத்தியில் ஒரு மர்ம்ம படத்தையே ஓட்டும் போது: சேவல் கூவிச்சா? பொழுது மலர்ந்திச்சா? என்பது போல் தலை வரும் தவிக்க விடும் என என;;;;;::

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /எனக்கு இன்னமும் இந்த “தமிழ்” பிரச்சனை” என்ன என்றே புரியவில்லை./- திரு.நந்தா!, நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்!. இந்த “விடுதலை சிறுத்தைகள்”, தொல்.திருமாவளவனும், “கனடா தமிழ் காங்கிரஸ்?” நேரு? குணரட்ணமும்”, 1983 முதல் 1986 வரை அரசியலுக்காக ஒரு நாள் சிறை சென்றது கிடையாது!, போலீஸாரிடம் அடி வாங்கியது கிடையாது!. “இந்திய தமிழர் பிரச்சனையையும்”, “இலங்கைத் தமிழர் பிரச்சனையையும்” போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம்!. களளத் தோணி, இலங்கை சிங்கப்பூருக்கு சமமானது, அதை பிச்சைக்கார இந்தியர்கள் குழப்பி விட்டார்கள் என்பதெல்லாம் ஒரு “இண்டிவியூஜுவல் பிரஸ்பெக்டிவ் புலம்பல்”, சமூக தாக்கங்களை ஏற்ப்படுத்துமா என்பதை நீங்கள்தான் கூறவேண்டும். நீங்கள், “இலங்கைத் தமிழர்கள்” புலி என்றீர்கள், “தமிழ்” என்றீர்கள், ஆனால், “இலங்கைப் பிரச்சனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”. இவைகளை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருந்த பு(லி)ளி வியாபாரிகள், ஒரு பூனை அளவுக்கு அணுசரணையுடன் கவனித்து (அரசியலை), தீர்க்க வேண்டியதற்கு, “புலி வேஷம் போட்டுவிட்டு (பூனைக்கு) கிலி ஏற்ப்படுத்தி” அடித்து நொறுக்கிவிட்டார்கள். இந்த புலிப் பூச்சாண்டியை சோனியா காந்தி, சிங்கள அரசாங்கங்கள் போன்றவற்றிர்க்கு “பூ” காட்டி தங்கள் வியாபாரத்தை நடத்திவிட்டார்கள் நடத்துவார்கள். பின் ஏன் இவர்கள் அரிசியையும், சீனியையும் (புளியையும்) வேண்டாம் என்று கூறப்போகிறார்கள்!. இவர்களை நம்பி குண்டு வைத்தவர்களும், ஊர்வலம் நடத்தி போலீஸிடம் மண்டை உடைந்தவர்களும், சிறை சென்றவர்களும், சயனைட் அடித்தவர்களும்தான் முழு மூடர்கள்!. தமிழ் என்பது இவர்கள் ஒளிந்துக் கொள்ளும் “பங்கர்”.

    Reply
  • thurai
    thurai

    தமிழினம் யாருக்கு வாக்கு எனத் தீர்மானிப்பதே கஸ்டம். அதிலும் அந்த முடிவினை பகிரங்கப்படுத்துவது தமிழர்களிற்கு தேர்தலின் பின் அவலத்தை ஏற்படுத்தும்.

    தமிழர் கூட்டணியும், வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழரின் அரசியலில் ஓர் உச்சநிலை. அதனையே புலிகள் புலத்தில் பூச்சாண்டி காட்டி வாழ்கிறார்கள். முதலில் தமிழர் மத்தியில் முழுமையான மனமாற்ரம் தேவை. தமிழ் மொழியை வைத்து பிழைப்பவர்களையும் அரசியல் நடத்துபவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

    தமிழருக்குள் ஒற்றுமை, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே நல்லுறவு இவைகளை முன்னெடுக்காதவர்கள் தமிழரின் உருமை, பிரச்சினை பற்ரிப் பேசுவது மீண்டும் தமிழர்களைப் பலிகொடுப்பதற்கேயாகும்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    Democracy:
    நான் உணர்ச்சி வசப்படவில்லை. கடந்த பல தசாப்தங்களாக இந்த “தமிழ்” பிரச்சனை பற்றி கண்டுபிடிக்க அலைந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண ஆத்மா. கட்சிகளோடு அல்லது இயக்கங்களோடு கை கோர்த்து “கட்டையில” போகாமல் உயிர் தப்பி வாழும் ஒரு சாமான்யன்.

    செல்வநாயகம் காலத்தில் “அரச கரும மொழி” பிரச்சனை. அது இப்போது மறக்கப்பட்ட விஷயம். அதைப்பற்றி யாரும் அலட்டி கொள்வதில்லை.

    அமிர்தலிங்கம்-செல்வநாயகம் கோஷ்டியின் “ஸ்ரீ” ஒழிப்பு அடுத்த பிரச்சனை. அதுவும் இன்று காணாமல் போன பிரச்சனை.

    மீண்டும் அதே கும்பலின் “தரப்படுத்தல்” பிரச்சனை. அதனை இன்று சீண்டுவாரும் இல்லை. ஆனால் அதன் மூலம் கிளப்பிவிட்ட வகுப்பு வாதம் முள்ளி வாய்க்காலில் முழங்காலில் நிற்பதில் முடிந்தது. இந்த காலகட்டத்தில் புறப்பட்ட கோஷ்டிகள் ஒன்றுமே “தரப்படுத்தலால்” பாதிக்கப்படாத கோஷ்டிகள். தரப்படுத்தல் பற்றி பேசி அதற்கும் எதுவித தீர்வும் காணாதவர்கள்.

    தமிழ் தலைமைகள் என்று வந்தவர்கள் காலத்துக்கு காலம் புதுப்புதுப் பிரச்சனைகளை உருவாக்கி அதன்மூலம் குளிர் காய்ந்துவிட்டு அடுத்த தேர்தலில் அதை அடியோடு மறந்து போனவர்கள்.

    தமிழர்களிடையே “கோள்” மூட்டி அடி வாங்கி கொடுப்பது ஒரு கலாச்சார விழுமியம். அதே போல “வெள்ளை” இனத்தவர்களிடம் சோரம் போவது இன்னொரு வரலாற்று காவியம். “பெட்டிசம்” போட்டு ஒருவனுக்கு துன்பம் கொடுப்பது “யாழ்ப்பாண” வைபவ மாலை.

    மேல் சொன்ன சகலதும் எங்கள் “தமிழ்” வியாபாரம் அல்லது போராட்டத்தின் ஆணிவேர்கள். இதனால்த்தான் “தமிழ் பிரச்சனை” என்ன என்றே எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன். தமிழர்கள் செத்தால்த்தான் “போராட்டம்” வீறு கொள்ளும் என்ற பிரச்சாரம் வெளிநாடுகளுக்கு ஓடி வந்தவர்களின் இன்னொரு “கண்டு பிடிப்பு”. இது தங்களின் “பைகளை” வாழும் நாடுகளின் வரி முறைகளை ஏமாற்றி “தமிழர்களின்” உழைப்பைச் சுரண்டி “வாயில்” போட கண்டுபிடித்த மகா கேவலமான மிருக சுபாவம்.

    இந்த லட்சணத்தில் “இரண்டாயிரம்” ஆண்டு கல்லாச்சாரம் பற்றியும் ஒரு முனகல சப்தம்.

    தற்போது சம்பந்தன் கும்பல் நடந்து கொள்ளும் முறைகளுக்கும் 1957 (?) இல் தமிழரசுக் கட்சி திருமலையில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கும் என்ன சம்பந்தம்? (சம்பந்தனின் தந்தை அப்போது திருமலை பா.உ.)

    தாங்களே கிளப்பி விட்டு அதனை நம்பிய தமிழர்கள் பாதிக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டு வரும் நிகழ்வுகள்தான் இந்த “தமிழ்” வீரர்களுக்கு அரசியல் முதலீடுகள். இவர்கள் பிறக்காத பிள்ளைக்கு “ஜாதகம்” எழுதும் சுயநலம் பிடித்த கயவர்கள்.

    தமிழர்கள் தமிழில்தான் படிக்க வேண்டும் என்று இந்த தமிழ் சூரர்கள் இதுவரை கேட்டதும் கிடையாது. பேசியதும் கிடையாது. தமிழர்கள் தமிழில் படிக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கியதே எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரனாயக்காதான் என்பதை நினைவு கூர்ந்தால் நல்லது. செல்வநாயகமோ, பொன்னம்பலமோ தமிழர்கள் தமிழில் கல்வி பெற வேண்டும், தமிழர்கள் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று கோரியதும் கிடையாது. போராட்டம் நடத்தியதும் கிடையாது.

    “சிங்களம் மட்டும்” என்று ஒரு சட்டம் இலங்கையில் கிடையாது. “அரச கரும மொழிச் சட்டம் ” என்று ஒன்றுள்ளது. அதன்படி சிங்களம் இலங்கையின் அலுவலக மொழி. அதன் ஷரத்துக்களின்படி ஒவ்வொரு அலுவலக கடித போக்குவரத்துக்களும் சிங்களத்திலும் தமிழிலும் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். இந்த உண்மைகளை மறைத்து “சிங்களத்தில்தான்” கடிதம் எழுத வேண்டும் தமிழன் எல்லாம் என்று செல்வநாயகம் தலைமையிலான கோஷ்டி சொல்லி தங்கள் கொழும்பு வாழ்க்கையை நிரந்தரமாக்கினார்கள். சகல அரசு அலுவலகங்களிலும் இன்றும் துரு(கறள்) பிடித்து கொண்டிருக்கும் தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் இன்றும் சாட்சியாக உள்ளன. சந்தேகம் இருந்தால் தட்டச்சு இயந்திரங்களைச் செய்யும் ரெமிங்க்டன் அட்லர் கம்பனிகளிடம் விசாரிக்கலாம். அப்போது அவர்கள் “இலங்கை அரசுதான் தமிழ் தட்டச்சு இயந்திரங்களின் மிகப் பெரிய கஸ்டமர்கள்” என்ற உண்மைகள் கிடைக்கும்.

    இல்லாத தலையிடிக்கு வாள் கொண்டு தலையை தமிழர்கள் வெட்டியிருக்கிறார்கள் இதனால் “வாள்” விற்ற வியாபாரிக்கு ஆதாயமே ஒழிய தலை கொடுத்த தமிழர்களுக்கல்ல.

    Reply
  • hari
    hari

    இலங்கை சிங்கப்பூருக்கு சமமானது, அதை பிச்சைக்கார இந்தியர்கள் குழப்பி விட்டார்கள் என்பது ஏதோ ஒரு வகையில் உண்மைதான்.முன்னொரு காலத்தில் இலங்கையல்ல யாழ்ப்பாணம் ஒரு குட்டி சிங்கப்பூராக வர வாய்ப்புகள் இருந்தது உண்மை. விகிதாசார அடிப்படையில் படிப்பறிவில் உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் யாழ்ப்பாணம் இருந்தது என எங்கோ படித்த நினைவு. (யாராவது இதனை விளக்கவும்.)
    பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி நரி வேலை தான் இந்தியா செய்தது.இயக்கஙகளுக்குப் பயிற்சி அளித்து ஆயுதங்கள் வழங்கி ஆரம்பித்ததுதான் இக்குழப்பங்களுக்கு முக்கிய காரணம்.பாண்டி பஜார் சம்பவத்திற்க்குப் பின்னர் ஜெயவர்த்தனா கேட்டுகொண்டபடி உமா,பிரபாவை இலங்கையிடம் கையளித்திருந்தால் நமக்கேன் இன்னிலமை.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /யாழ்ப்பாணம் ஒரு குட்டி சிங்கப்பூராக வர வாய்ப்புகள் இருந்தது உண்மை. விகிதாசார அடிப்படையில் படிப்பறிவில் உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் யாழ்ப்பாணம் இருந்தது என எங்கோ படித்த நினைவு. (யாராவது இதனை விளக்கவும்.)/–இதை யாராவது சரியாக ஆதாரத்துடன் ஆராய்ந்து “எழுதினால்” நானும் “நிம்மதியடைவேன்” ஆண்டவனே! (இசைப் புயல் ஏ.ஆர்.ரஃக்மன் ஆஸ்கார் அவார்ட்டின் போது சொன்னது மாதிரி). “நன்றி ஆண்டவனே!”.

    Reply
  • BC
    BC

    Hari சொன்ன மாதிரி பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி நரி வேலையை தான் இந்தியா செய்தது.
    //நந்தா- தாங்களே கிளப்பி விட்டு அதனை நம்பிய தமிழர்கள் பாதிக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டு வரும் நிகழ்வுகள்தான் இந்த “தமிழ்” வீரர்களுக்கு அரசியல் முதலீடுகள். //
    உண்மை.

    Reply
  • Thevan
    Thevan

    தமிழர்களுக்கு ஏதாவது உரிமை கிடைக்கவேண்டுமானால் பெரும்பான்மை தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கூட்டமைப்பினரின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு சரத்துக்கு வாக்களிப்பதே இன்றைய முக்கிய பணியாகும்.

    Reply
  • BC
    BC

    // கூட்டமைப்பினரின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு சரத்துக்கு வாக்களிப்பதே இன்றைய முக்கிய பணியாகும். //
    அதன் மூலம் பிரபாகரனுக்கு பதிலாக சரத்தை தலைவராக ஏற்றுக்கொள்ளலாம்.

    Reply
  • padamman
    padamman

    புலிகளின் அடுத்த தேசியதலைவர் சரத்? தமிழ்கூட்டமைப்பு ஏற்கனவே ஏறுக்கொண்டுவிட்டது இனி வடகிழக்கு மக்கள் தான் அதை முடிவு பண்ன வேண்டும்

    Reply
  • NANTHA
    NANTHA

    //தமிழர்களுக்கு ஏதாவது உரிமை கிடைக்கவேண்டுமானால் பெரும்பான்மை தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கூட்டமைப்பினரின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு சரத்துக்கு வாக்களிப்பதே இன்றைய முக்கிய பணியாகும்//

    ஆகா! என்னே அரசியல் ஞானம்! மேதகு சரத் பொன்சேகாவுக்கு வாழ்த்துக்கள்! அடுத்த மாவீரர் உரையை மேதகு சரத் பொன்சேகா ஒக்லஹோமாவிளிருந்து நிகழ்த்துவார்!

    Reply
  • AVATHANI
    AVATHANI

    “//இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் கவனத்திலெடுக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நிச்சயமாக இந்தத் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கப் போவது சிறுபான்மையினத்தவரின் வாக்குகள் அல்ல. மாறாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்களக் கிராமவாழ் மக்களின் வாக்குகளே”.// அவதானி.

    நடந்து விட்டதய்யா நடந்து விட்டதய்யா. இனிமேல் தமிழ் முஸ்லிம் மக்கள் தம் சமூகம் சார்ந்த கட்சிகளுக்கு அளிக்கும் வாக்கு கட்சி நபர்களின் அரசியல் வியாபாரத்துக்கு உதவுமேயன்றி மக்களுக்கு எவ்வித பயனையுமளிக்கப் போவதில்லை.

    Reply