திருக் கேதீஸ்வரம் தேவஸ் தான வீதி புனரமைப்பு, உட்கட்டமைப்பு வேலைகளின் முதற்கட்ட நடவடிக்கைகளை சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார். கேதீஸ்வரம் ஆலயப்பகுதி புனித பூமி பிரதேசமாக புனரமைப்பு செய்யப்படுவ துடன் இதற்கென 270 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளது. ஆலய புனரமைப்பு, வேலைகள் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின.
மடுக்கோயிலுக்கு அடியார்கள் 24 மணி நேரமும் சென்று வழிபடுவதைப் போன்று பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கேதீஸ்வரத்தானின் ஆலயத்திற்கும் 24 மணி நேரமும் அடி யார்கள் சென்று வருவதற்கான நட வடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டு ள்ளன.
பார்த்திபன்
சந்திரிகா காலத்தில் சிவராத்திரி விடுமுறை இல்லாமல் செய்யப்பட்டது. இப்போதும் அதே நிலை தானா?? அல்லது மீண்டும் விடுமுறையாக்கப்பட்டுள்ளதா??