3 நாடுகள் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. “லீக்” ஆட்டத்தின் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி இன்று 13ம் திகதி நடக்கிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாட்டி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
தற்போது நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும் இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியில் இந்திய அணி இலங்கை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம்பெற்றது.
தற்போதைய இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்து இருப்பதால் கோப்பையை கைப்பற்றும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோலி, காம்பிர், கப்டன் தோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் இன்று இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்கு திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும்.
கடந்த 2 ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெஹ்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி “லீக்” ஆட்டத்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுப்பட்டது.
அவருக்குப் பதிலாக இடம்பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவா லாகத் திகழும் அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் அந்த அணியின் துருப்பு சீட் டாக உளளார். அவர் களத்தில் இருக்கும் வரை இலங்கையின் ஸ்கோரை கட்டுப்படுத்த முடியாது. கப்டன் சங்கக்கார தொடக்க வீரர் தரங்க ஆகியோரும் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் சமரவீர, முன்னாள் கப்டன் ஜயவர்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலகெதர ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் இன்று இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Naren
இலங்கை நான்கு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சம்பியனானது.
ஆட்நாயகனாக குலசேகராவும் தொடர்நாயகனாக சங்ககராவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
itam
சுலப இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி, நெஹ்ரா வீசிய முதல் ஓவரில் தரங்கா(0) விக்கெட்டை இழந்தது. பின் தில்ஷன், சங்ககரா இணைந்து விவேகமாக ஆடினர். தில்ஷன் 49 ரன்கள் எடுத்தார். தனது 55வது அரைசதம் கடந்த சங்ககரா 55 ரன்களுக்கு ஹர்பஜன் சுழலில் சிக்கினார். சமரவீரா(27), கண்டம்பி(18), ரந்திவ்(17) விரைவில் வெளியேறினர். ஆனா
itam
அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயவர்தனா, ஸ்ரீசாந்த் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் முத்தரப்பு கோப்பையை சூப்பராக கைப்பற்றியது. ஜெயவர்தனா 71, பெரேரா 6 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை குலசேகரா வென்றார். தொடர் நாயகன் விருதை இலங்கை கேப்டன் சங்ககரா வென்றார்