அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்: சரத் பொன்சேகாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு

sa.jpgஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நேற்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி சரத் கோங்ஹாகே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்க பிரஜையாக இருக்கும் சரத் பொன்சேகா, ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது அடிப்படை உரிமை மீறல் என அறிவிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தகுதியற்றவரென தெரிவிக்குமாறு கோரி வேட்புமனு தாக்கல் செய்யும் போது தாம் எதிர்ப்பு தெரிவித்தவேளை, அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

இவ் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவிக்குமாறும் சரத் பொன்சேக்கா இதற்கு தகுதியற்றவரென தெரியப்படுத்துமாறும் சரத் கோங்ஹாகே இந்த மனுவில் கேட்டுள்ளார்.

தமது மனு மிகவும் முக்கியமானது என்பதால் கூடிய விரைவில் இதுபற்றி விசாரணை செய்து முடிக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார்.

சரத் பொன்சேக்காவின் வேட்புமனு வழங்கப்பட்டது மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பில் பொன்சேக்கா மற்றும் தேர்தல் ஆணையாளர் அரசியல் அமைப்பில் 12 (4) சரத்தின்படி தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கும்படியும் சரத் கோங்ஹாகே தனது மனுவில் கோரியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    இது நியாமான கேள்வியாகவே எனக்கு இருக்கிறது. இலங்கையில் உள்ளவன் இலங்கை மக்களுக்காகவே பாடுபடவேண்டும். அமெரிக்காவில் உள்ளவன் அமெரிக்க குடியுரிமைக்காக முயற்சி செய்பவன் அதற்காகவே பாடுபடுபவன் அமெரிக்க நலிந்தமக்களுக்காகவே பாடுபடவேண்டும்.
    இது வழமையானது. சரத்பொன் சேகரா அரசியல் என்பது சுத்தசூனியம். இவர்களின் அரசியல் என்பது எவ்வளவை சுருட்ட முடியுமோ அவ்வளவை சுறுட்டுவது என்பதே அரசியல் வாழ்வு. நாளை இலங்கை தீபற்றி எரிந்தால் அதில் சுருட்டு பற்ற வைத்து அடுத்த காரியங்களை நடத்தக் கூடியவரே. பார்த்திபனின் கருத்துப்படி தேர்தல் முடிந்து அடுத்த நாளையே அமெரிக்காவுக்கு பயணமாகி விடுவார்.இதில் கடந்தகால தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடக்கம். அவர்களுக்கும் வசதி எப்படியோ?.

    Reply