ததேகூ உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் அறிக்கை சமர்ப்பிப்பு

tna-article-5.pngதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் நால்வர் இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை சென்னை திரும்புவர். மறுநாள் கொழும்பு திரும்பிய பின்னர் இந்திய பேச்சுக்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவர் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் மாலையும்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று விடியற்காலையிலும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். நேற்று புதன்கிழமை முன்னிரவு சென்னையிலிருந்து அவர்கள் நால்வரும் புதுடில்லி சென்றனர்.

இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலைமை, தற்போதைய இலங்கையின் அரசியல் போக்கு ஆகியவை குறித்துப் பேசுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதுடில்லி வெளிவிவகார அமைச்சின் ‘சவுத் புளொக்’ கில் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் நாளை காலையில் அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்றும் அதன் பின்னர் அடுத்த நாள் சனிக்கிழமை அவர்கள் கொழும்பு வருவார்கள் என்றும் கூறப்பட்டது.

தாம் கொழும்பு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தி விளக்கும் வகையில் விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

 வீரகேசரி 1/14/2010

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பல்லி
    பல்லி

    இது யாருடைய அறிக்கை;?
    கூட்டமைபினதா?
    அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடையதா?

    Reply
  • rohan
    rohan

    இது யாருடைய அறிக்கை, என்பது கேட்கத்தக்க கேள்விதான். ஆனால், அரசியலில் இதுதான் நிஜம்.

    தேசத் தலைவர்களின் உரைகள் யாரால் எழுதப்படுகின்றன? ஒரு நாட்டின் கொள்கைகள் யாரால் வகுக்கப்படுகின்றன? பொருளாதார வளர்ச்சிப் படிகள் யாரால் கட்டமைக்கப் படுகின்றன?

    கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னர் புலி தீர்மானித்தது. அதற்கான விலையைக் கூட்டமைப்பு கொடுக்கும். ஜே ஆர் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு கட்டத்தில் இந்தியா தீர்மானித்தது. கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு கட்டத்தில் (இன்னமும்?) சோனியா தீர்மானித்தார்.

    கருணாவும் பிள்ளையானும் கேபீயும் என்ன செய்ய வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?

    இந்த அறிக்கையில் கூட்டமைப்பின் சீல் இருக்கப் போகிறது. அவர்கள்தான் உள்ளடக்கத்துக்குப் பொறுப்பு. யார் எழுதினால் என்ன யார் சொல்லித் தந்திருந்தால் என்ன – கூட்டமைப்பு தான் பொறுப்பு.

    Reply
  • பல்லி
    பல்லி

    றோகன் உங்கள் கணிப்பு சரிதான், ஆனால் தவறு, அறிக்கை வேறு கட்டளை வேறு,
    இவர்கள் பெற்று கொண்டது அறிக்கையா? அல்லது கட்டளையா என கேட்டு சொல்லுங்கோ;

    Reply
  • Swamy
    Swamy

    Dr. Swamy slams TNA, wants Tamils to support Mahinda

    President of the Janata Party Dr. Subramanian Swamy has urged Sri Lankan Tamils to vote for President Mahinda Rajapaksa though the LTTE proxy the Tamil National Alliance was campaigning for Opposition presidential candidate Sarath Fonseka.

    The following is the full text of a statement issued by the Janata Party: It is surprising that some representatives of the defunct LTTE terrorist floated Tamil National Alliance (TNA) are in India canvassing support of Tamils of India for Opposition candidate General Fonseka in the Presidential elections in Sri Lanka . Polling date is January 26th.

    No Indian concerned for the welfare of Tamils of Sri Lanka and their future can support any candidate who has on, his side the LTTE stooge outfit the TNA which seeks a separate Eelam.

    Moreover, Gen Fonseka is also at the same time supported by the hardliner anti-Tamil party, the JVP, which wants no concessions given for the Tamils.

    Hence, as President if elected, General Fonseka will be in constant dilemma on what to do. He will also have to legitimize the rump LTTE that is hiding a billion dollars of ill-gotten money for a come back. Tamils of Sri Lanka today need humane stability in governance after years of killing and dictatorship of the LTTE.

    Hence, I urge all Tamils of Sri Lanka that if they want Indian opinion on their side in the future, they must vote for the Tamil speaking Sinhala leader, Mahinda Rajapaksa, for President of Sri Lanka.

    Reply