இதுவரை 473 தேர்தல் வன்முறைகள்

sri_election.jpgதேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரை 473 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக மேலும் அந்நிலையும் தெரிவிக்கையில்

தேர்தல் வன்முறை தொடர்பில் 473 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளோம். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் வியாழக்கிழமை மாலை 4 மணிவரை தேர்தல் வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றோம். எமக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பாரிய, சிறிய மற்றும் துப்பாக்கி பிரயோக சம்பவமென மூன்றாக பிரித்துள்ளோம்.

இதன்படி பாரிய சம்பவங்களாக 208, சிறிய சம்பவங்களாக 265 மற்றும் துப்பாக்கியுடன் தொடர்புடைய சம்பவமென 62 என வகைப்படுத்தியுள்ளோம்.பாரிய சம்பவங்களில் ஒரு கொலைச் சம்பவம் உட்பட கொலை முயற்சி சம்பவங்கள் 4 அடங்குகின்றது. அத்துடன் இதில் 60 தாக்குதல் சம்பவங்களும் 59 அச்சுறுத்தல் சம்பவங்களும் அடங்குகின்றன. மாவட்ட ரீதியில் அதிகூடிய சம்பவங்களாக மாத்தறையில் 43 ம் குருநாகலில் 41 ம் அம்பாந்தோட்டையில் 39 ம் அநுராதபுரத்தில் 35 ம் கம்பஹாவில் 32 ம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக நாம் 239 ம் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 5 ம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக 24 ம் ஜே.வி.பி.க்கு எதிராக 10 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

அடையாளம் காணப்படாமல் 181 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள அதேநேரம், இம்முறை பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளோமென தெரிவித்துள்ளது.இதேவேளை, தேர்தலைக் கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தேர்தல் வன்முறை தொடர்பில் 317 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்துத் தெரிவிக்கையில் பொலநறுவை வன்முறைச் சம்பவத்துக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய வற்றின் 6 தேர்தல் காரியாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையும். நாம் நேற்று வியாழன் வரை 317 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

இந்த நிலைமைக்கு அரசாங்கம் 17 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான். இதனால் பொலிஸார் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவையும் பொலிஸார் நடைமுறைப் படுத்தாததற்கு இதுவே காரணமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *