படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வவுனியா காமினி மகா வித்தியாலயம், பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும், வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும், புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.
சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
மாயா
புலிகள் வெளியே வருகிறார்கள். புலத்தில் புண்ணாக்குகள் தமது வயித்துப் பிழைப்புக்காக வட்டுக்கோட்டை வியாபாரத்தில் இறங்கியுள்ளனர். வெளிநாடுகள், தமிழரை துரத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.