ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டோ ஒருபோதும் நான் விலகிச் செல்லப் போவதில்லை என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று முன்தினம் குளியாப்பிட் டியவில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஜனநாயகத் தலைவர் ஒருவரை விட்டு ஏகாதிபத்திய தலைவரின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் நீரோட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களுள் ஒருவராக கட்சிக்குள்ளும், கட்சியின் தலைவரிடம் வரவேற்கும் நன்மதிப்பும், இருக்கிறது என சுட்டிக்காட்டிய அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தான் வேறு அரசியல் நீரோட்டத்தில் கலக்கப் போவ தாக பரவியுள்ள வதந்திகளில் உண்மை யில்லை என்றும் அவற்றை தான் வன்மை யாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.