2010 ஜனவரி 27ல் இலங்கையின் 6வது ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவா? : த ஜெயபாலன்

MR_Postersஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது பல லட்ச ரூபாய்களுக்கான கேள்வியாக உள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது தற்போது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.  2005 நவம்பர் தேர்தலுக்குப் பின்னான சில மாதங்களுக்கு உள்ளாகவே மாவிலாறு அணையைத் தடுத்து வலிந்த யுத்தத்திற்கு அழைப்பு விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 நடுப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 2010 தேர்தல் இடம்பெறுகின்றது. 1982 முதல் 2005 வரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைப் பார்க்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

1982_P_Election_SL , 1988_P_Election_SL , 1994_P_Election_SL , 1999_P_Election_SL , 2005_P_Election_SL

1. யாழ்ப்பாண மக்கள் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக்குறைந்த வீதமாகவே வாக்களித்து உள்ளனர். 1982 தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 50 வீதத்திற்கும் சற்றுக் குறைவாக வாக்களித்து உள்ளனர். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் 1988, 1999 தேர்தல்களில் 20 வீதமானவர்களே வாக்களித்து உள்ளனர். 1994ல் இடம்பெற்ற தேர்தலில் 3 வீதமும் 2005 தேர்தலில் ஒரு வீதமானவர்களுமே வாக்களித்துள்ளனர்.

1982  தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிர்ணயித்த மிக முக்கியமான காலத்தில் நடந்த மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல். மிக மோசமான இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதத்தை தக்க வைத்துக் கொண்டது. 35 வீதமான வாக்குகள் சிறிலங்கா சுதத்திரக் கட்சிக்கும் 40 வீதமான வாக்குகள் தமிழ் கொங்கிரஸிற்கும் கிடைத்தது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இலங்கையில் திட்டமிட்ட முறையில் இன ஒடுக்குமுறையை ஸ்தாபனமயப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் போன்ற வீர வசனங்களைக் கக்கிக் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாகத் தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்துவிட்டு தேர்தலுக்கு அண்மையாக விடுமுறையில் வெளிநாடு சென்றனர். தேர்தலுக்கு முதல் நாள் வெளியான பத்திரிகைச் செய்தி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின் நாடு திரும்பியவர்கள் அத்தவறான செய்திக்கு எதிராக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அதுவொரு திட்டமிட்ட தவறு.

2. தமிழ் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையைப் பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறை வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையுடன் ஒத்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் அடுத்த வேட்பாளருக்கே வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்டு உள்ளது.

1991 வரை யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் தொகுதிகள் சிறுதொகையான முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒற்றையினச் சமூகமாகவே பார்க்க முடியும். மட்டக்களப்பு தமிழ் – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக உள்ளது. திருகோணமலை பெரும்பாலும் தமிழ் – முஸ்லீம் – சிங்கள இனங்கள் வாழுகின்ற மூவினங்களின் தேர்தல் தொகுதியாக உள்ளது. திகாமடுல்ல சிங்கள – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக உள்ளது. இவ்வகையான இனப்பரம்பலின் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளில் மக்கள் வேறுபட்ட முறையில் வாக்களித்து இருப்பது ஓரளவு அப்பகுதிகளின் இனப்பரம்பலுடன் தொடர்புபட்டு இருந்தாலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தைப் போன்ற தமிழ் மக்கள் செல்வாக்குள்ள தேர்தல் தொகுதிகள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறையில் இருந்து வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறை வேறுபட்டு இருப்பது மாறுபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்தி உள்ளது.

1982, 1988, 1999 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் 20 வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 1999ல் 19.18 வீதமான மக்களே வாக்களித்து இருந்தனர். 1994, 2005 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் முறையே 2.97 வீதமும் 1.21 வீதமும் ஆனவர்களே வாக்களித்து இருந்ததால் அத்தரவுகளை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளேன்.

1982, 1988 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.

1982ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட யாழ்ப்பாணத்தில் 15 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 15 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

1988ல் இந்த முரண்பாடு இன்னும் அதிகமானதாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியைவிட 8 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக் கொள்ள வன்னி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 30 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக்கொண்டது.

1999ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட 3 வீதம் அதிக வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொண்டது. ஆனால் வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட முறையே 45 வீதமும் 25 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுதந்திரமாக இடம்பெற்ற இத்தேர்தல்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தெரிவில் இருந்த வேற்றுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. யாழ்ப்பாண வாக்காளர்களுக்கும் தென்னிலங்கை வாக்காளர்களுக்கும் இடையேயும் ஒரு முரண்நகையான உறவுள்ளது. யாழ்பாண வாக்காளர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் அரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். 1982, 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் 1994இல் யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு வீதத்தினரே வாக்களித்திருந்த போதும் சமாதானத்தின் பெயரில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க யாழ் வாக்காளர்களாலும் தென்னிலங்கை வாக்காளர்களாலும் சமாதானப் புறாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1999ல் யாழ் வாக்காளர்கள் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு தெளிவான சமிஞ்சையை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 43 வீதமான வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 வீத வாக்குகளையும் பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

2005 தேர்தலில் யாழ்ப்பாண வாக்காளர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். இத்தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாகத் தடுத்தமையினால் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்று மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் யாழ்  – சிங்கள வாக்காளர்களுக்கு பொதுவாக இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நடத்தப்பட்ட முதல் இரு ஜனாதிபதித் தேர்தல்களும் யாழ்  – சிங்கள வாக்காளர்களின் தெரிவில் பாரிய வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. யாழ் வாக்காளர்களுடைய தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதியை இலங்கையர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை 2010 தேர்தலுடன் ஓரளவு ஒப்பிடக் கூடிய தேர்தலாக 1982 ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள முடியும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயம் செய்வது, தமிழ் மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் பலவீனப்பட்டு உள்ள நிலைமை, தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது என்பன இத்தேர்தலை 1982 தேர்தலுடன் ஒப்பிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 1982ல் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜிஜி பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் கெ சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை. 1982 ஜனாதிபதித் தேர்தல் போன்று மும்முனைகளில் தமிழ் பகுதிகளின் வாக்கு பதியப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டு, தமிழ் வேட்பாளர் என வாக்குகள் செலுத்தப்படும்.

இந்தப் பின்னணியிலும் கடந்த கால தேர்தல் முடிவுகளில் இருந்தும் பின்வரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இது முடிந்த முடிவாக அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. 1982 தேர்தலைப் போன்று 2010 தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் மும்முனைகளில் செலுத்தப்படும்.
2. தமிழ் வேட்பாளரான எம் கெ சிவாஜிலிங்கம் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவார். ஆனால் அவரது வாக்குகள் ஜனாதிபதித் தெரிவுக்காக மற்றுமொரு வாக்குக் கணக்கெடுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
3. இரு பிரதான வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் பொன்சேகா விருப்பத்திற்கு உரியவராக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றது.
4. யாழ்ப்பாணத்தவர்களின் அரசியல் தெரிவில் இருந்து மாறுபட்ட தெரிவையே வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் மேற்கொள்வதால் வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலை இருக்கும்.
5. யாழ்ப்பாணத்தவர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பதால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டால் அவர் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கடந்தகால தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:

1982_P_Election_SL

1988_P_Election_SL

1994_P_Election_SL

1999_P_Election_SL

2005_P_Election_SL

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • Ajith
    Ajith

    What a tactical analysis to cheat tamil voters to block the votes that will go to Sarath Fonseka. He is trying to establish the following relationship. If Jaffna tamils vote for Fonseka, Rajapakse will win and if If Jaffna tamils vote for Rajapakse, then Fonseka will win. TNF is supporting to Fonseka, so tamils votes go to Fonseka, So Rajapakse will win.
    The conclusion from the analysis if tamils want Fonseka to win, you should vote for Rajapakse.
    We should look at the population distribution between provinces. according tp 1981 cinsus, Sri Lankan tamils in Trinco 34%, Ampara has 20%, Vavuniya 57%, Mannar 51% Mullaitivu 75%, Batticaloa 71% and Jaffna 95%. So, you would expect other provinces behaviour should be different to Jaffna.
    If you look at the statistics you see that in North-East around 8% votes go to SLFP except 2004. UNP gets 9-10% except 1994 irrespective of Jaffan tamils vote for SLFP or UNP. Out of the first 4 presidential elections,More votes polled for SLFP than UNP. First Two won by UNP and Second two won by SLFP.
    Tamils are not fools to be cheated by Rajapakse lovers. It is no matter who wins the election, tamils should reject Rajapakse company who were responsible for the destruction of the whole country.

    Reply
  • sumi
    sumi

    இலங்கையின் 6வது ஜனாதிபதியும் மகிந்த ராஜபக்செ தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    Reply
  • ANWAR
    ANWAR

    வட-கிழக்கில் இருந்து இருபது சீன டாங்கிகள் , கொழும்பு சென்றதாக ஜெனரல். சரத் பொன்சேகா கூறியுள்ளார். இது பல சந்தேகங்களை சொல்கிறது. சரத் வென்றால், கோட்டபயாவின் கஜபா அணியினர் ,அவரை கைது செய்யும் நிலை உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. இருபது டாங்கிகள் போதும் விமானநிலையம், தொலைகாட்சி நிலையம், அதிபர் மாளிகை, போன்றவற்றை பிடிக்க. இதுபோல் பல நாடுகளில் இத்தகைய இராணுவ சதிபுரட்சிகள் நடந்துள்ளன.

    Reply
  • thurai
    thurai

    இலங்கையின் அடிப்படையான பிரச்சினைகளை அணுகாமல், தமிழ்,சிங்கள அரசியல்வாதிகள் சுயநல அரசியலே நடத்தி வருகின்றனர். இதனால்
    நாடு இழந்த உயிர்கழும், உடைமைகழும் இதுவரை சொல்ல முடியாது.

    தமிழர் தரப்பில் உண்மைகள் உணரப்படுகின்றன. இனிமேல் தமிழ்,தமிழுருமை, விடுதலை ஏதும் தமிழ் மக்களிடம் செல்லாது. இதே போல் பேரளிவொன்று சிங்களவரிடையே தோன்றி, சிங்கள மக்கழும் இனவாதம் பேசிய தலைவர்கள், சுயலாபமே அடைந்தவர்களென்பதை உணரவைக்குமா?

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வட-கிழக்கில் இருந்து இருபது சீன டாங்கிகள் , கொழும்பு சென்றதாக ஜெனரல். சரத் பொன்சேகா கூறியுள்ளார்.- ANWAR //

    உண்மையில் யுத்தம் முடிவுற்றதால், வடபகுதியிலிருந்து கனரக டாங்கிகள் இராணுவத் தலைமையகத்திற்கு கொண்டு வரப்படுகினன்றன. இதை சரத்போன்சேகா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அனுதாபம் தேடப் பார்க்கின்றார் என்பதே உண்மை. உண்மையில் மகிந்தவின் வெற்றி உறுதியானதென கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. அப்படியிருக்க இப்படியாவது அனுதாப வாக்குகளை பெற முடியாதா என சரத் முயல்வது ஆச்சரியமான ஒன்றல்ல.

    Reply
  • NANTHA
    NANTHA

    இலங்கை ஜனாதிபதி முறைமை 1977 க்கு முன்னர் நடந்த தேர்தல்களில் தமிழ் கட்சிகளும், யு என் பி யும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. ஏனென்றால் அந்த “வாக்குகள்” எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்ற வாக்குகளை விடஅதிகமாகவே இருந்து. இந்த அரசியல் மாற்றமும் புதிய அரசியலமைப்பும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினாலும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மருமகன் எ.ஜே.வில்சனாலும் தயாரிக்கப்பட்டவை. பாராளுமன்றம் இந்த மாற்றத்தினால் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக மாற்றப்பட்டது. அமரிக்கர்களுக்கு மற்று நாடுகளில் ஜனநாயகம் பூத்து குலுங்க வேண்டும் என்று எந்த பேரவாவும் கிடையாது. தாங்கள் “டீல்” பண்ண ஒரு அதிகாரமுள்ள “தங்களுடைய” ஒரு ஆள் என்பதே அமெரிக்காவின் வெளிவிவகாரம். அந்த கொள்கை ஆரம்பத்தில் வெற்றி அளித்து ஜெயவர்த்தனாவை அரசு கட்டில் ஏற்றியது. தனது வெற்றியை தங்க வைத்துக் கொள்ள ஜெயவர்த்தனா பல வழிமுறைகளைக் கண்டு பிடித்தார். சிங்கள மக்கள் மாறக் கூடாது என்ற எண்ணத்தினை “தமிழ்” வீரர்கள் கனகச்சிதமாக தமிழ் ஈழத்திநூடாக நிறைவேற்றிக் கொடுத்தனர்.

    இந்த விளையாட்டு சந்திரிகாவின் வரவோடு மறைந்து விட்டது. அதன் பின்னர்தான் ரணிலும் “ஜனாதிபதி முறையை” ஒழிப்பதாக குரல் கொடுக்க ஆரம்பித்தார். இப்போது சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி முறையை ஒழிக்கப் போகிறாராம். எப்படி? ஜனாதிபதி பதவியை பிடிக்க இவ்வளவு”கூத்தும்” ஆடும் அவர் பதவி துறந்து சந்நியாசியாகப் போகிறாரா? பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது இந்த அரசியல் யாப்புத் திருத்தம் செய்ய முடியாது. கட்சியே இல்லாத பொன்சேகா அதனைச் சாதிக்க முடியுமா? காசு கொடுத்து சம்பந்தனை விலைக்கு வாங்கலாம். ஹகீமை வாங்கலாம். மற்றவர்கள்?

    இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு இராணுவ முக்கியம் வாய்ந்த கேந்திரமாக உள்ளது என்ற ஒரு காரணமே அமெரிக்க இலங்கை அரசியலில் காட்டும் அக்கறைக்கு முக்கிய காரணமாகும். இலங்கை மக்களின் நலன்களோ இலங்கை பொருளாதாரமோ காரணமல்ல.

    புலிகளுக்கு யுஎன்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிகள் வழங்கியதன் நோக்கம் என்ன? சிங்கள தமிழ் பிரிவினயூடாக அமெரிக்க சார்பு அரசை இலங்கையில் வைத்திருக்க “புலி” அவசியமாக இருந்தது. அதனால்த்தான் அமெரிக்க உட்பட பல நாடுகளும் “யுத்த நிறுத்தம்” என்று குரல் எழுப்பினார்கள். அமெரிக்கவின் ஏவல்களான புலிகள் எப்போதும் இருக்க வேண்டும் என்ற நோக்கில்த்தான் “நோர்வே” மூலம் வன்னியை ரணில் விக்ரமசிங்க புலிகளுக்கு தாரை வார்த்தார். புலிகளின் “பங்கர்கள்”, விமான ஓடு பாதைகள் என்பன நிர்மாணிக்க கோடிக்கணக்கில் கம்பியும் சீமேண்டும் ரணில் காலத்தில் புலிகளுக்கு அனுமதிக்கப்பட்டன. புலிகள் தமிழ் பகுதிகளில் “கொலைகள்” செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். புலிகளுக்கு எதிரான குழுக்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. புலிகளை வடக்கு கிழக்கில் “முடி சூடா மன்னர்கள்” ஆக்கி அவர்கள் மூலம் அரசியல் கொலைகள் உட்பட பல கொடூரங்கள் செய்வதின் மூலம் தென் இலங்கையில் அமரிக்க சார்பான கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தவுடன் சரத் பொன்சேகா இப்போது கதா நாயகனாகியுள்ளார்.

    ஜே.ஆர். காலத்தில் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் இஸ்ரேலில் பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குண்டான செலவுகளை ஜே.ஆரின் அரசு வழங்கியுள்ளது. மொசாத் ஏஜண்டான விக்டர் ஓச்ட்றோவ்ச்கி, கிளையர் ஹாய் எழுதிய “BY WAY OF DECEPTION” என்ற நூலில் இந்த தகவல்களைப் பார்க்கலாம்.

    ரணிலுக்கு புலிகள் குண்டு வைக்காத மர்மம் இப்போது தெளிவாகியுள்ளது. தமிழும், தமிழர்களும் அமெரிக்க நலன்களுக்காகப் பலியிடப்பட்டனர். அமரிக்காவின் எடுபிடிகளால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி முறை இப்போது அவர்களுக்கே கொள்ளி வைத்துவிட்டது.

    இந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதை தமிழர்கள் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஏனென்றால் சிங்கள பகுதிகளில் ராஜபக்ஷவின் செல்வாக்கு கொடி கட்டிப் பறக்கிறது. தமிழர்கள் நூறு வீதமும் பகிஷ்கரித்தாலோ அல்லது பொன்செகாவுக்கு வாகளித்தாலோ ராஜபக்ஷவின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது என்பது மாத்திரம் நிச்சயம்.

    Reply
  • Ajith
    Ajith

    Nantha
    காசு கொடுத்து சம்பந்தனை விலைக்கு வாங்கலாம். ஹகீமை வாங்கலாம். மற்றவர்கள்?
    Why not?
    Don’t think that all our brains are dead? It is the Rajapakse who bought a sunk of MPs including UNP, JVP, CWC, Muslim Congress, Douglas and so on at the expense of Sri Lanka taxpayers money. Every one was given ministerial posts?
    Do you think you cannot by all these MPs for money? Don’t think it is only Rajapakse should spend our money to buy MPs and bulid palaces for Rajapakse family? At least Sarath Fonseka is better, he is spending his own money. If Rajapakse wins the election, the whole country become part of India, and every citizen should be in the streets begging for their food.

    Reply
  • NANTHA
    NANTHA

    Ajith:
    Can you prove your points?

    Reply
  • Ajith
    Ajith

    Did you prove that Sampathan and Hakeem were paid money by Fonseka? It is the fact that ministerial posts were given to those who crossed over to Government. What else you need to prove. There are 132 ministers in the parliament in Sri Lanka. Even after presidential election was announced two UNP members crossed over to Government and got ministerial posts. It is sad to see that former President Chandrika finally gave her support to Sarath Fonseka. Even she realised that Rajapakse was a threat to nation.

    Reply
  • soosai
    soosai

    கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகிறார் இந்நிலையில் நேற்று அதிகாலை 3.00மணியளவில் பிள்ளையானின் வாசஸ்தலத்துக்கு பல சட்டவிரோத வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாக்குப்பெட்டிகளைக் கொண்டு வந்த 42-3944 இலக்கமுடைய வாகனத்தை தொடர்ந்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தமது ஜீப்பில் பாதுகாப்பு கொடுத்து வந்ததாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. இதுதவிர சட்டவிரோத வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்களிக்கும் விண்ணப்பங்களைக் கொண்டு சென்ற இலங்கை கடற்படைக்குரிய வாகனத்தை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குருநாகலில் டயஸ் சந்திக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆனால் இந்த வாகனத்தை விடுவிக்குமாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.

    Reply
  • soosai
    soosai

    Eelam Peoples Democratic Party General Secretary and Minister Douglas Devananda has denied the news published that an agreement is made with the government.

    Much news items were published that to support President Mahinda Rajapakse at the forthcoming presidential election, an agreement was made with the government. But such allegations are baseless was stated by Minister Doughlas Devananda, which was quoted in the Government Information Department’s website.

    He said even during the past or in the future such agreements were not made with the government. He said he has the confidence that the Government would understand the Tamil people’s aspiration and the necessities and more than documents trust is important was mentioned by him

    Reply
  • NANTHA
    NANTHA

    AJITH:
    I ASKED THE QUESTION. FIRST YOU PROVE YOUR POINTS. A QUESTION IS NOT AN ANSWER TO A QUESTION.

    Further “cross” overs are part of the democratic process but sambanthan’s suport to Fonseka? On what principles of Thamil Arasu Kadchi if not for money?

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Dear Readers,
    We all very enthusiastic readers and opinion makers. I came across many thoughtful analysis by many. I would like to forecast the election result.

    Who will win; President MR
    Majority- Not thin, more than 10 lakhs
    What is the base for this forecast;
    Political reasons; The unofficial alliance of UNP, JVP, SLMC, Section of TNA, and Mano Ganeshan-very weak alliance.

    Traditional supporters of the UNP are not in favour of UNP becoming friendly to JVP.They believe UNP is singularly strong party in our country.They hate JVP. Likewise JVPers have been brainwashed by the slogans of imperialism, capitalism and so on. As far as JVP ers are concerned there prime political enemy in this country is UNP. They hate UNP.
    Then TNA. People are aware till the last episode of Mullivaikal on 19th May TNA was shouting that the SL security forces were killing Tamil people in thousands.They were telling these lies to invite the interference of the western powers to protect LTTE leadership and LTTE. (The writer belives innocent people were killed during the last days of the military operation, but not to the extent of the TNA’s estimates.

    The question is whether the Sinhalsese people would welcome the TNA which supports SF-The answer is -No.
    Same approach is applicable to Mano Ganesh who was very active in Pongu Tamil comics. He could muster support from upper class Tamil society in the western province.Upper class Tamils never thought about ordinary Tamil people, they were always supporting UNP-Tamils votes in western province would not make any difference in the over all result.

    SLMC was enjoying considerable support in the east. Now it is not very strong. Muslim people in the east were subject to many many injustice under the LTTE.The same support SLMC enjoyed earlier cant be expected this time.
    Other reasons
    Some sections of the UNP is also not happy about this alliance.At the ame time they are aware of SF’s personal qualities.UNP ers may not have the repect they would otherwise enjoy under a UNP president.
    What about North and east Tamil peole-Karuna, Sivanesathurai back MR. Both candidates may get equal votes. SLMC and TNA factors could help SF to get little more than MR
    North-Particularly jaffna people have started to think differently-That means they are no more following the TNA’s guidance.They understood they were fooled by the Ealam promise and so on.The North-south link after more than 2 decades made many openings to them. However overall northern province-SF could get little more than MR.

    What is MR strength-In six provinces MR will get sweeping result-MR may get nearly 1.5 million more than SF
    Reasons- People believe MR is responsible as the leader of the country for wiping out terror and reestablished peace and linked north and south.People are enjoying the benefits.People belive president as Commander in Chief is solely responsible for the peace not the Commander of the army.They respecxt SF.That does not mean they respect him more than MR.
    Peopel are very sick of high cost of living,corruption and waste and particularly the jumbo cabinet.They know the history of both major parties when they ruled the country.They are not bothered about the cross overs even.But these issues are not going to reduce MR support base..They understand SL is the only country in the world which completely destroyed a powerful terror group and terrorism.If Sri Lankans failed to honour the leader responsible for it,they understand the whole world would laugh at them.
    Plantation sector-Arumugam Thondamam is still a force, but not like the Senior Thondaman.

    This analysis is made under following presumtion;
    The Sinhalese people are politically matured than other ethnic groups.If we follow from 1970 May election,madam sirimao promised rice from moon, 1977 election JR promised 8 Kg grains.Both parties mainly promised economic benefits.
    Sinhalese are not communal.
    Northern Tamils-They can be easily fooled by emotional speeches.Tamil ealam,vaddukoddai resolution, and so on.GG made 50/50 slogan.Further Tamil leaders used to tell the jaffna Tamils that the Sinhalese leaders of the UNP and SLFP always speaking in their meetings how to destroy Tamil people.It is very unfortunate jaffna Tamil people belived all these.That is why the so called freedom fighters were able to purchase their support in the beginning.
    East-Generally the tamils in east followed what the northerners did.But now they seemed to understand the foolishness of following the north blindly.
    East Muslims. As the popular writer MrBashher wrote in his articles,SLMC made a little bit of Islam to their political campaign.Muslim people are not ready to support traditional Tamil parties and their views.But they want to live with their Tamil brothers in unity,as they have done before the birth of the so called freedom fighters.
    I welcome views on my forecast.

    Reply
  • accu
    accu

    தேசம்நெற் நண்பர்கள், வாசகர்கள், பின்னூட்டக்காரர், மற்றும் நிர்வாகத்தினர் உங்களின் ஊகப்படி யார் ஜனாதிபதியாவர் மற்றும் எத்தனை வீத வாக்குப் பெறுவார்கள் என்பதை பதிவிடுங்கள். எந்த நோக்கமும் இல்லை உங்களின் கணிப்பை அறியும் ஆவல் மட்டுமே! மிக்க நன்றி. அன்புடன் அக்கு.

    என் கணிப்பு மகிந்த 52வீதம்.

    அக்கு.

    Reply
  • soosai
    soosai

    Mahina gave Rs. 180 million to the LTTE through Basil, charges Tiran Alles
    National organizer of the SLFP Mahajana Wing Tiran Alles says Basil Rajapaksa personally handed over, at his office, Rs. 180 million to the then LTTE financial controller Emil Kanthan to ensure that the people of the north refrained from voting at the 2005 presidential election.

    Mr. Alles added that the deal took place at the request of the then presidential candidate Mahinda Rajapaksa.

    Speaking to the media at his Koswatte home yesterday (24th) that was attacked by UPFA goons two days ago, Mr. Alles said he first came to know Emil Kanthan, then an employee of the Ministry of Rehabilitation, in 2002 when Parliamentarian Dr. Jayalath Jayawardena introduced him.

    Following a request by the then Prime Minister Mahinda Rajapaksa to introduce him to a person capable of doing a deal with the LTTE, Mr. Allas said he had introduced Emil Kanthan to Basil Rajapaksa.

    After Emil Kanthan was told that Basil Rajapaksa wanted to meet him on behalf of Mahinda Rajapaksa, a meeting was held at Mr. Alles’ office. After several such discussions between the two, one day Basil Rajapaksa wanted to know from Emil Kanthan what sort of support the LTTE wanted from the premier to strengthen their link.

    After consulting the LTTE leadership, Emil Kanthan had come back and said the outfit wanted Rs. 180 million to buy boats. Mr. Basil Rajapaksa said they only wanted the LTTE to get the people of the north to boycott the presidential polls.

    The money sought by Emil Kanthan was handed over a few days later in dollars, given by a neighbouring country for the presidential campaign, and rupee notes said Mr. Alles.

    He said he had revealed all these in his statement to the TID in 2007 subsequent to his arrest by them, and as a result the attorney general had withdrawn all charges against him. Speaking further, Mr. Alles said he had informed president Rajapaksa on February 14, 2007 about all these through a sworn affidavit signed by Ven. Uduwe Dhammaloka Thera who supports the president.

    Mr. Alles said he was now compelled to expose Mr. Mahinda Rajapaksa’s deal with the LTTE as the president and Mr. Basil Rajapaksa were attempting to kill him, the first such attempt being the grenade attack on his home.

    Reply
  • raalahaami
    raalahaami

    ஜனவரி 27லிருந்து சரத் பொன்செகா ஜனாதிபதியுமல்ல ஜெனரலுமல்ல என்பது 26 நடுநிசியிலேயே தெரிந்து விடும். மகிந்தாவுக்கு ஜயவேவா.

    Reply
  • Nathan
    Nathan

    Mahinda 53%

    Reply
  • lio
    lio

    56 வீதமான வாக்குகளை மகிந்தா பெறக்கூடும் என்பது எனது எதிர்பார்ப்பு.

    Reply
  • Ajith
    Ajith

    I ASKED THE QUESTION. FIRST YOU PROVE YOUR POINTS. A QUESTION IS NOT AN ANSWER TO A QUESTION.
    Further “cross” overs are part of the democratic process but sambanthan’s suport to Fonseka? On what principles of Thamil Arasu Kadchi if not for money?// Natha

    Mr, Nantha
    I commented on your statements. Are you withdrawung your statements?
    Where did you study that cross overs are of the democratic processs. You didn;t expalin why you need 132 ministers. don’t you understand the democratic principles, once again you are contradicting and not coming to the point. The first sentence you say cross overs are democratic process and then you ask on what principle Sampathan support Fonseka?

    Reply
  • NANTHA
    NANTHA

    I DONT WITHDRAW BUT YOU FAILED TO ANSWER MY QUESTION.

    SAMPANTHAN DID NOT CROSS OVER ANY WHERE. HE IS STILL WITH THE SAME TAMIL-KILLER PARTY UNP.

    Reply
  • Arasaratnam
    Arasaratnam

    இந்த 180 million பணத்தையும் வாங்கி புலி என்ன செய்தது??
    போன லெக்சனுக்கு கொடுத்ததை இந்த லெக்சகனுக்கு சொல்லுறீங்கள் லெக்சன் வந்திராட்டி சொல்லியிருக்கவும் மாட்டியளோ?

    Reply