விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் உடனடியாக விடுவிப்பு

பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் கைதிகளின் கோவைகளைத் துரிதமாக ஆராய்ந்து, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி 83 மலையக இளைஞர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியிடம் இ.தொ.கா. விடுத்த வேண்டுகோளின் பேரில், இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியு ள்ளார்.

கொட்டகலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்க ளின் பெற்றோரும் சமுகந்தந்து, தமது பிள்ளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந் தனர்.

கைதிகளின் விபரங்களை அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதியிடம் கையளித்தார். இந்நிலையில் சிறு சிறு தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பாரிய குற்றச்சாட்டுகளைப் புரிந்தவர்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து அவர்களைப் பிணையில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாத தடைச் சட்டம், அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் அறுநூறு இளைஞர்கள் வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இம்மாத இறுதிக்குள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக் களம் மேலும் தெரிவித்தது. ஏற்கனவே 390 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    உன்மையாய் இருந்தால் தமிழனாய் நன்றி;

    Reply