சரத் பொன்சேகா இன்று புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகிறார்

dalas_alahapperuma.jpgஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மையாகிவிட்டார். எனவே, எதிர்வரும் 26 ஆம் திகதியை இந்த நாட்டு மக்கள் தீர்க்கமானதும் உணர்வுபூர்வமானதுமான தினமாகக் கருதி செயற்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும், போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பு மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார்.  எதிர்வரும் 27 ஆம் திகதி வரப்போகின்ற தேர்தல் முடிவு குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எமது ஜனாதிபதி பாரிய வெற்றியை ஈட்டுவார். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக சுயாதீன மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களால் செய்யப்பட்டுவரும் கருத்து கணிப்புக்களில் ஜனாதிபதி முன்னிலையில் இருக்கின்றார். இரண்டாவது காரணமாக ஜனாதிபதியின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிக கூடிய மக்கள் வெள்ளத்தை பாருங்கள். நாளுக்குநாள் மணிக்கு மணி மக்கள் திரண்டுவருகின்றனர். மூன்றாவதாக இரண்டு வேட்பாளர்களினதும் கொள்கைப் பிரடகனங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொடர்பில் மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்.

உதாரணமாக எதிரணி வேட்பாளர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்ததும் எமது கொள்கை பிரகடனத்திலும் அதிகரித்த சம்பள உயர்வை அறிவிக்கவேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் 2500 ரூபாவே வழங்க முடியும் என்றும் அதுவே யதார்த்தமானது என்றும் ஜனாதிபதி கூறிவிட்டார். மறுநாள் தபால் மூல வாக்களிப்பை வைத்துக்கொண்டு இவ்வாறு கூறி ஜனாதிபதி தனது சிறந்த தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டினார்.

நான்காவது விடயமாக தொழில்சார் நிபுணர்கள் எமது தூண்டுதல் இல்லாமல் ஜனாதிபதிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஐந்தாவது விடயமாக இரண்டு வேட்பாளர்களினதும் வார்த்தை பிரயோகங்களை பார்க்கவேண்டும்.

எதிரணி வேட்பாளர் தகுதியற்ற வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து வருகின்றார். கடந்த காலங்களில் ஐந்து ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டில் நடைபெற்றன. ஆனால் தற்போது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறவில்லை. அதிகாரத்தை எடுப்பதற்கு முயற்சிக்கும்போதே இவ்வாறு நடந்துகொள்ளும் ஒருவர் அதிகாரத்தை எடுத்தால் என்ன நடக்கும்?

கடந்த மாகாண சபை தேர்தல்களில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட தனது கட்சியை மிகவும் ஒழுக்கமான முறையில் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்.

ஆறாவது விடயமாக அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை அவதானிக்கவேண்டும். எமது ஜனாதிபதியிடம் தெளிவான கொள்கைகள் இருக்கின்றன. ஆனால் எதிரணிடம் எந்த தெளிவான வேலைத்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இன்று எதிரணி வேட்பாளர் ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் பொம்மையாக மாறிவிட்டார்.

ஒருகாலத்தில் ஈழம் குறித்து எண்ணங்களுடன் இருந்தவர்கள் கடந்த மே 19 ஆம் திகதியுடன் அதனை கைவிட்டனர். ஆனால் தற்போது மீண்டும் அந்த எண்ணங்களை மீட்டுகின்றனர்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று தமிழ்த் தலைமைகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளன. இது ஆரோக்கியமான நிலைமையாகும். சேறுபூசும் கலாசாரத்தை இரண்டு தரப்பினரும் கைவிடவேண்டும்.

எந்த அடிப்படையுமின்றி சில இணையதளங்கள் இன்று ஜனாதிபதி மீது சேறுபூசுகின்றன. ஏன் அவர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறையிடவில்லை? பாராளுமன்றத்தில் ஏன் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவில்லை?

கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. ரயிலில் செல்ல முடியாது. அனைவரும் சந்தேகக்கண்டுகொண்டு பார்த்தனர். அரசியல்வாதிளாகிய நாங்களும் ஊடகங்கள் முன் வந்து பொதிகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு கோரினோம். எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார். அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெரியும். தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள்.

எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கனடா பத்திரிகை ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு தெரியும். மேலும் யுத்தம் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு தேவையில்லை என்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தேவையற்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • chandran.raja
    chandran.raja

    சரத்பொன்சேகரா இன்று புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மை ஆகிவிட்டார்.
    இதை இப்படியும் சொல்லலாம். புலி ஆதரவாளர்கள் சரத்பொன் சேகராவின் கைபொம்மைகளாகி விட்டார்கள். வசனங்களை மாற்றி எழுதுவதில் முரண்படுமே ஒழிய அர்த்தங்கள் ஒன்றே. இவர்களை விட்டால் ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்பவர்களை தேடிப்பிடிப்பது அரிது.

    Reply
  • soosai
    soosai

    You should understand that this is a poor country, you will not be able to give everything at one go,” said Maj. Gen. Kamal Gunaratne, the military official in charge of the hundreds of thousands of Tamil civilians displaced by the fighting

    Reply
  • palli
    palli

    இது என்ன வாதம் சரத்தை ஆதரிப்பதால் புலியாகிவிடுமா?? அப்படியாயின் பல்லியும் சரத்துக்கு வோட்டு என சொன்னேன் அதனால் பல்லியும் புலியா?? புலியால் புழியை கூட பல்லி விரும்புவதில்லை; அப்படியிருக்க சரத்துக்கு வோட்டு போடுவதால் புலியென சொல்வதும் ஒரு வன்முறைதான்; சரத்தை ஆதரிப்பவர்கள் எல்லாம் புலியுமல்ல; மகிந்தாவை நேசிப்பவர்கள் எல்லாம் புலி எதிர்பாளர்களும் அல்ல, வோட்டு என்பது தனி உரிமை இதில் புலி புழி என பயம் காட்டபடாது சொல்லிப்புட்டன்;

    Reply
  • murali
    murali

    நோர்வே புலிகள் மகிந்தாவை ஆதரிக்க சொல்லி மக்களவை ஊடாக பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர் இதற்கு கயேந்திரன் பின்னிற்கிறார் என்று அவர்களிற்கு ஊடாக கசிந்துள்ளது இது எப்படி பல்லி

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சரத்பொன்சேகர அரசியலில் ஒரு கற்றுக்குட்டி. அல்லது அறவே தெரியாது. பிரபாகரனுக்கு இருந்த அரசியல் இருப்பு மாதிரி இருந்தது வெறியுணர்வு மட்டுமே. ஒருநாட்டுத் தலைவன் ஒரு தடைகளையெல்லாம் வென்று நாட்டை அமைதிப் பாதைக்கு இட்டுச் செல்வான். சரத்தின் அம்சத்திட்டத்தில் ஒருவர் உருப்படியான அம்சம் இருக்கிறது என்பதை இதை வாசித்தவர்கள் கண்டுகொள்வார்கள். புலிகளை அழித்தொழிப்பதற்கு இலங்கையில் மட்டும் போராடவில்லை. மேற்குலத்திடனும் ஒரு போராட்டத்தையும் நடத்தினார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வன்னியில் சிறுஇடத்தைக்கூட மேற்குலகத்திற்கு விட்டுவைக்க வில்லை.

    இதுவே யுத்தத்தை வெற்றிக்கு இட்டுசென்றதுமல்லாமல் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியது. இந்த உயர்ந்த ஆலோசனைகள் இந்திய ராயதந்திரிகளின் ஆலோசனைகளாக இருக்கலாம். இல்லையேல் புலிகளும் பிரபாகரனும் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். எங்கோ ஒரு நாட்டில். சரத்பொன்சேகர தான் அரசியலில் தலையிடுவது பற்றி எங்கும் சொன்னது கிடையாது. புலிகளின் அழிவுக்கு பிறகு மேற்குலகத்தால் கண்டுபிடித்த ஒருவரே சரத்என்ற இராணுவத்தளபதி. இதை ஐக்கிய தேசியகட்சிக்கு அன்பளிப்பு செய்தார்கள் இதுவே இன்றையநிலை. சரத்தின் தேர்தல் பிரசுரம் ஒன்று மொழிபெயர்கப்பட்டு தேனீ”யில் பிரசுரம்மாகியிருக்கிறது சென்று பார்வையிடலாம்.

    புலிகளின் ஆரம்பகால வளர்சியும் போக்குகளும் பெரும் அழிவையே ஏற்படுத்தும் என்று கூறியும் புலம்பெயர்மக்கள் அதில் அக்கறை காட்டவில்லை அல்லது அவர்களுக்கு அவசியம் இல்லாது இருந்தது. பழி தீர்க்கிற அரசியலை சிந்தையில் வைத்து செயல்பட்டால் சரத்தின் அரசியல் இல்லாத இராணுவ அதிகாரத்தையும் அசட்டை செய்யமாட்டார்கள் தான். வாக்குத்தானே! யாருக்கு போட்டால் என்ன?.

    Reply