பிரிவினைவாதிகளும் அரசியல் சுத்துமாத்தும்: நோர்வே நக்கீரா

flagதமிழர்கள் பிரிவினைவாதிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் நாட்டை நாசம் செய்வோர் என்றும் பலபட்டம் கட்டி ஒரினத்தின் ஐந்தில் ஒருபங்கை பயங்கரவாதச் செயல்களால் கொன்று குவித்துவிட்டு ஒற்றுமையைப் பற்றியும், காருண்யத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு வெள்ளரசங் கிளைகளுடன் பௌத்த மதத்தைக் கொண்டு வடக்குக் கிழக்கு எங்கும் வந்திருக்கிறார்கள் கிட்லரின் வாரிசுகளான பெரும்பான்மையின் இருபெருங்கட்சிகள். இவர்கள் வடக்கில் இருந்துதான் வெள்ளரசு தெற்கே போனது என்பதை அறியாதவர்கள். வரலாற்று ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் மூத்தமுன்னோடிகளாய் மனிதநாகரீகத்தின் நாகர்கள் என்பதை அறியாதவர்கள் இவர்கள். நாகத்தில் சயனம் செய்வது விஸ்ணுபகவான் மட்டுமல்ல தியானம் செய்வது புத்தனும்தான். ஈழத்தமிழர்களின் சரித்திரம் மகாவம்பான மகாவம்சத்தால் மட்டுமல்ல அரசியல் கத்துக்குட்டிகளாலும் தான் திசைமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழுக்கு அணிகலனாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்கள் இரண்டில் ஒன்று மணிமேகலை. இந்த மணிமேகலை எனும் புத்தபிச்சுணி யார்? காவியநாயகி கண்ணகியின் சக்களத்தியான மாதவியின் மகள் தான். இவள்தான் புத்தமதத்தையும் அரசமரத்தையும் நாடெங்கும் கொண்டு திரிந்தவள். இவளுடைய இரத்தம்தான் சங்கமித்திரை எனும் பிச்சுணி. சங்கமித்திரை மாதகலுக்கருகிலுள்ள சம்பில்துறை எனும் துறைமுகத்தில் இறங்கி முதன் முதலில் நட்ட அரசமரந்தான் இன்றும் சுழிபுரத்திலுள்ள பாராளாய் முருகமூர்த்தி கோவிலில் இன்றும் நிற்கிறது. இராஜபக்சவும் மகனும் மனைவியும் பரிவாரங்களும் புதிதாக யாழ்பாணத்திற்கு அரசமரம் கொண்டு வருகிறார்கள். வேரூன்றி விழுதுவிட்ட அரசமரங்கள் எம்தமிழ் தேசத்தில் போதியளவு உண்டு. கண்கெட்டுத் திரிகிறார்களோ கருத்தற்றவர்கள்? எமக்கு அரசமரம் தெற்கில் இருந்து தேவையில்லை. காகம் தின்றுவிட்டுப் போடும் எச்சத்துடன் விழும் அரசமரவிதைகள் பனம்வட்டுக்களில் முளைக்கிறது. இதுதான் எமது மனிதநேய பௌத்த ஒருமைப்பாட்டின் குறியீடாகும். நாம் தமிழர்கள் பௌத்தத்தை எதிர்த்தவர்களல்ல ஏற்றவர்கள். பௌத்தவர்களாக வாழ்ந்தவர்கள். சிங்களப் பௌத்தத்துக்கு முன்னோடிகளான நாங்களா பிரிவினைவாதிகள்?

வெள்ளையர்கள் எமது நாட்டைக் கொள்ளையடிக்க வந்தபோது நாடு துண்டாடப்பட்டு இருந்ததை சரித்திரங்கள் சொல்லும். வெள்ளையன் ஆட்சியை இலகுவாக்க எல்லாச் சிற்றரசுகளையும் பிடித்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தான். இங்கே ஒருவிடயத்தை நாம் மறந்துவிடக்கூடாது இலங்கை நாட்டின் கடைசி மன்னனும் அரசும் தமிழனுக்குரியது என்பதை எந்த மன்னர்களாலும் மறுக்க முடியாது. இன்று சிங்களமாக இருக்கும் கண்டி அரசுதான் இலங்கையின் கடைசி அரசாகவும் அதை ஆண்டவன் தமிழ் மன்னனான சிறீவிக்கிரமராஜசிங்கனாகவும் இருந்தான். கண்டியரசு கைமாறும்போது எழுதப்பட்ட சாசனம் இன்றும் தமிழில்தான் இருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. கண்டியின் கடைசி வாரிசு தமிழன் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் தமிழா?

தமிழர்களின் அரசியல் வாழ்க்கை வட்டுக்கோட்டையில்தான் ஆரம்பித்தது என்று வட்டுக்கோட்டையைக் கொண்டு திரிவது வேதனைக்குரியதே. நாம் பிரிவினைவாதிகள் அல்ல தேசியவாதிகள் ஒற்றுமைவாதிகள். ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் வேளை சரித்திரத்தைத் தொட்டுப்பார்ப்பது அவசியமானது என்பதால்தான் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இலங்கையெனும் தேசத்தை தமிழர்களிடம் கைப்பற்றிய வெள்ளையர் அதைத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியது தமிழரிடம் தானே. வெள்ளையன் வெளியேறும் போது நாட்டை எடுத்தமாதிரியே கொடுக்கவா என்று திண்டாடியபோது நாம் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக ஒருநாடாய் வாழ்வோம் என்று ஒற்றுமையை முன்னிறுத்தி ஐக்கிய இலங்கையை மனமார ஏற்றவர்கள் எமது முதுபெரும் தமிழ் தலைவர்களான சேர்.பொன். இராமநாதன் போன்றோர். நாமா பிரிவினைவாதிகள்? நாமா நாட்டைத் துண்டாட எண்ணினோம். நாம் பிரிந்து வாழத் தூண்டப்பட்டோம், தள்ளப்பட்டோம். ஒதுங்கி, பதுங்கி வாழநினைத்தோமே அன்றி உறுமி உதைத்து வாழவிரும்பவில்லை. எமக்குச் சொந்தமான எடுக்கவேண்டிய உரிமைகளை கேட்டே வாங்க முயன்றோம்.

Sir Pon Ramanathanசுமார் 1915ல் வெள்ளையனின் ஆட்சியின் கீழ் இருந்தபோது முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இனக்கலவரம் ஏற்பட்டபோது அது கட்டுமீறியது. இவர்களின் ஒற்றுமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தைச் சுமந்து சேர்.பொன். இராமநாதன் இலங்கை வந்தபோது குதிரைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு அவரைத் தேசியச்சின்னமாய், ஒற்றுமையின் கொற்றவராய் தம்கையால் வடம்பிடித்து இழுத்தவர்கள் சிங்களவர்களும் முஸ்லீம்களும். இப்போ சொல்லுங்கள் நாமா பயங்கரவாதிகள்? பிரிவினைவாதிகள்? நாம் ஏன் பிரிவினை கோரினோம்? நாம் அழிவது எமக்கு ஆசையல்ல? போரில் பேராசை கொண்ட மனநோயாளிகளும் அல்ல. சேர்ந்து வாழமுடியாத போது ஒதுங்கி வாழ முயற்சித்தோம். ஒதுக்கி வாழவில்லை. இது எப்படித் தப்பாகும்?

வெள்ளையன் ஆட்சியில் இருந்தபோது கிறிஸ்தவத்தால் புத்தமதம் புறக்கணிக்கப்படுகிறது என்று பிக்குகளைத் தூண்டியும், மக்களின் மனங்களில் மதப்பிரிவினையை ஊன்றியும் வெகுண்டு எழச்செய்தவர் அனாகரிக தர்மபாலா எனும் சிங்களவர். இதன் விளைவுதான் பௌத்த ஏகாதிபத்தியப் பேராண்மை இன்றும் தலைவிரித்தாடுகிறது. இதைத் தொடர்ந்து தம்மதங்களும் அழிந்து விடக்கூடாது என்பதால் இந்துக்களும் முஸ்லீம்களும் மதப்பாதுகாப்புக்கான படைக்கலங்களைத் தூக்கினார்கள். அதில் இந்துக்களுக்கு முக்கியமானவர் நல்லூர் ஆறுமுகநாவலர். கிறிஸ்தவ அரசுகளால் இந்துமதம் அழிக்கப்பட்டு வந்தது. கோவில்களை உடைத்தே யாழ்பாணக்கோட்டை கட்டப்பட்டது. மதச்சடங்குள் மறுக்கப்பட்டன. எமது கரையோரமக்கள் பலாற்காரமாக மதம்மாற்றப்பட்டார்கள். கிறீஸ்தவம் சிலைவணக்கத்தையோ பொட்டு, பிறை, தாலி போன்றவற்றையோ ஏற்றதில்லை. அது பைபிளுக்கும் பொருந்துவதில்லை. ஆனால் ஈழத்தில் கத்தோலிக்கர்கள் இவற்றைச் செய்தார்கள். காரணம் இதையும் மறுத்தால் மக்கள் புரட்சி செய்வார்கள் என்பதை போத்துக்கேய ஒல்லாந்தார் உணர்ந்திருந்தார்கள். இவர்கள் நிலைகொண்ட இடங்கள் கரையோரமாக இருந்ததனால் கரையோரமக்களை மதரீதியாக மாற்றுவதனூடு நிலத்தைத் தக்கவைக்க முனைந்தார்கள்.

இப்படியாக கிறிஸ்துவத்துடன் வந்த வெள்ளையரசுகளால் பௌத்த இந்து இஸ்லாம் புறக்கணிக்கப்பட்டு அழிய ஆரம்பித்த போதும் கூட எம்மக்கள்தான் மதத்தால் பிரிந்தார்கள் ஆனால் இனத்தால் ஒற்றையாக இருக்க விவிலியம் எனும் பைபிளை எம்முறவுகளுக்குத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவர் ஆறுமுகநாவலர். இங்கேயும் தமிழர்களாகிய நாம் பிறமதம் புகுந்தாலும் நாம் மதரீதியாக ஒற்றுமையாகத்தான் வாழ விரும்பியிருக்கிறோம் என்பதைக் காட்டவில்லையா? நாங்களா பிரிவினைவாதிகள்? பயங்கரவாதிகள்?

சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்து கண்ணகிக்குக் கோவிலமைத்து விழாவெடுத்தபோது இலங்கை மன்னனான சிங்கள கயபாகுவையும் அழைத்துக் கௌரவித்தான். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் கண்ணகிக்குச் சிலைவடித்து மாளிகைக்கு அருகில் கோவிலமைத்தான். இதுதான் இன்றும் சிங்களத்தில் பத்தினி தெய்யோ என்று அழைக்கப்படும் பத்தினித் தெய்வமான கண்ணகியாகும். இங்கேயும் இந்தியத் தமிழனாக இருந்தாலும் மதரீதியாக நாம் ஒற்றுமையையே விரும்பினோம். இதனால் இந்துக்கள் தான் தமிழர்கள் என்று அல்ல, அன்று தமிழர்கள் பெரும்பான்மையினர் இந்துமதத்தையே தழுவியிருந்தார்கள்.

JRவெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் சுதத்திரத்துக்காகப் போராடியவர்கள் முக்கியமாக சிங்கள இடதுசாரிகள். இவர்களில் முக்கியமானவர்கள் கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.எம். பெரேரா, பிலிப்குணவர்த்தனா போன்றோரைக் கூறலாம். இவர்களுடன் இளைஞனாக தோளோடு தோள் சேர்த்து நின்ற ஒரு தோழன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா என்றால் எல்லோரும் வாயில்தான் கைவைப்பீர்கள். கியூபாவின் இடதுசாரிப் புரட்சிவாதியும் முன்னைய நாட்டுத் தலைவனுமான பெடல் கஸ்ரோவுடன் தொடர்புகளையும் உறவுகளையும் ஜே.ஆர் கொண்டிருந்தார் பேணிவந்தார். இடதுசாரி நூல்மையம் ஒன்றை உருவாக்கி ஜே.ஆர் தான் நடத்தினார் என்றால் நம்புவீர்களா? இதே ஜே.ஆர் தான் இனவெறியனாக, இடதுசாரித்துவம் தொட்டுப்பார்க்காத துவேசத்தை ஈழமண்ணில் ஊற்றி அரசியல் இலாபங்களுக்காக இனவெளியைத் தூண்டி விட்டு தமிழர்களைக் கொன்று குவித்தார். போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று போருக்கு சவால் விட்டவரும் இவரே. இவரது இயற்பெயர் ஜீனியர் ரிச்சட் ஜே.ஆர் ஜெயவர்தனா பெயரில் இருந்து மதத்தை அறிந்து கொள்ளுங்கள். இவர் அரசியல் இலாபத்துக்காக விழுந்து கும்பிட்டது பௌத்தத்திடம். 1944 என்று எண்ணுகிறேன் சிங்கள தமிழ் இடதுசாரி முன்னணி ஒன்றை அமைக்க முயன்றார். இதே ஜேஆர் ஏன் இடதுசாரித்துவம் கொண்டு ஈழஒற்றுமையை நிலைநிறுத்த முயற்சிக்கவில்லை? வலதுசாரித்துவ ஐ.தே.கட்சியில் சேர்ந்து மேலாண்மை ஆதிக்கத்தை பிரதிபலித்தார். எங்கே ஒற்றுமை? தேசியம்? மனிதம்? கொள்கை? இடதுசாரித்துவம்?

இது ஒருபுறமிருக்க எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவிடம் வருவோம். இவர் ஒரு கிறீஸ்தவர், கேம்பிரிச்சில் பட்டப்படிப்பு முடித்தவர், முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவின் தாயான சிறீமாவோவை மணந்தவர். இந்த சிறீமாவோ திராவிட தெலுங்கிய உயர்குல நாயக்கவம்சத்தைச் சேர்ந்தவர். 1935ல் இந்த பண்டாரநாயக்காதான் தமிழர்கள் இலங்கையின் தனித்தேசிய இனம் என்றும், அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சுயநிர்ணய உரிமைப்படி சமஸ்டி முறையிலான ஆட்சியமைப்பு அவர்களுக்குத் தேவை என்றும் எழுதினார். இவர் முதலாளித்துவ, பிரபுத்துவக் கட்சியான ஐ.தே.கட்சியில் இருந்தபோது டி.எஸ் சேனநாயக்காவிடம் இருந்து அவரின் பரம்பரை வாரிசான டட்லி.சேனநாயக்காவுக்கு கட்சி போகப்போகிறது என்பதை அறிந்து காழ்ப்புணர்வில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். நீதி, நேர்மை நிலைபெறாது என்றுணர்ந்தவர் அரசியல் இலாபங்களுக்காக கிறீஸ்தவரான இவர் பௌத்தத்தின் காலடியில் விழுந்து பௌத்த அங்கியணிந்து துவேசச் சேற்றில் புரண்டு சுமார் 1956களில் 24 மணித்தியாலத்துக்குள் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்தார். இப்போ சொல்லுங்கள் பிரிவினைவாதிகள், துவேசிகள் நாங்களா? சிங்கள அரசில்வாதிகளா?

இந்தக் காலத்தில்தான் தமிழ் சிங்களம் எனும் இருமொழிகளும் அரசகரும மொழிகளாக இருந்தன. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக மாறியபோது சிங்களத்தில் சித்தியடைந்தவர்களுக்குத்தான் பதவி உயர்வு சம்பள உயர்வு என்றாகியது. இதை எதிர்த்து, மறுதலித்து கோட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அதைக் கோடீஸ்வரன் வழக்கு என்பார்கள். என் தந்தையான திருச்செல்வத்தின் பெயரிலேயே வழக்கு நடந்தேறியது. அநியாயத்துக்கு எதிராக எம்தமிழுக்காக பேராடியவர் என்தந்தை என்பது எனக்கு மட்டுமல்ல எம்தமிழுக்கும் பெருமையானது தான். இவ்வழக்கின் பதிவேடுகள் இன்றும் இலங்கையில் உள்ளது. இத்தனைக்கும் உயிருடன் இன்றைய வாழும் சாட்சியாக கனடாவில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல பெருமைக்குரியது கூட. உரத்தை போட்டு விட்டு மரத்தை வளரவேண்டாம் என்றால் எப்படி? நாம் இயக்கம் அமைத்து போராடியபோது அதை எதிர்த்தவரும் அவரே. நாம் பார்த்துத்தான் வளர்கிறோம். நாம் இன்று செய்தவற்றை நாளை எம்மினம் பன்மடங்காகச் செய்யும். ஆகவே எமது செயற்பாடுகள் சரியாக இருந்தல் அவசியம். எமது பரம்பரைகள் அதைச் செய்யும்போது ஏற்கத்தயாராக இருப்பதும் அவசியமே.

புலிகள் பிரிவினை கோரினார்கள். தமிழர் விடுதலை கூட்டணியினர் பிரிவினை பாடினார்கள் என்று எம்தலையில் நாம் மண்ணையள்ளிப் போடுவது தவறானது. மங்கையற்கரசி அவர்கள் சிங்களவன் தோலில் செருப்புத் தைத்துப் போட்டு நடப்பேன் என்று பலாற்காரத்துக்கு வித்திட்டார் என்று பலரும் குறைப்பட்டனர். நானும் சிறுவனாக இருந்தபோது இவற்றைக் கேட்டிருக்கிறேன். இரத்தத்திலகமிட்டு வீரகாவியம் பாடிய காண்டங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் எமக்குத் தெரிந்தது இவ்வளவுதான். சுமார் 1955-58ல் கே.பி. ராஜரட்னா என்பவர் காலிமுகத்திடலில் மேடையில் கர்ச்சித்தார் தமிழர்களின் முதுகுத் தோலை உரிப்போம் என்று. இங்கே துவேசத்தையும் பிரிவினையையும் ஆரம்பித்து வைத்தது யார்? தமிழர்களா? சிங்கள அரசியல்வாதிகளா?

இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. பிரிவினையை விரும்பியது சிங்களவர்களா என்ற அடுத்த கேள்வி எழும்பலாம். ஆம் இல்லை என்று இரண்டு பதில் இருந்தாலும். பிரிவினைக்கும், போருக்கும், துவேசத்துக்கும் காரணகர்த்தாக்கள் சிங்கள அரசியல்வாதிகளே என்பதை யாரும் மறுக்க இயலாது. சுய அரசியல் இலாபங்களுக்காக கொள்கை மாறி, நேர்மை மீறி, மனிதத்தை மறுத்து காலத்துக்குக் காலம் கலவரங்களை உருவாக்கி தம்வாக்கு வங்கிகளை நிரப்பியவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. இதன்வழியில் தமிழர்கட்சிகளும் தொடர்ந்தன என்றாலும் சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவே. அன்று சிங்கள மக்களை ஏவி தமிழர்களைக் கொன்று குவித்து உடமைகளை பெண்மையைச் சூறையாடியவர்கள் இன்று தாமே படைநடத்தி எம்மக்களைக் கொன்று குவித்துவிட்டு நான் தான் கொன்றேன் என்று மார்புதட்டிக் கொண்டு எம்மக்களின் வாசல்களில் ஒற்றுமை கொண்டு வந்திருக்கிறார்களாம். நம்பச் சொல்கிறீர்களா? எப்படி நம்புவது? நம்புவதற்கான ஒருசாட்சி சொல்லுங்கள். நாம்கடந்து வந்த சரித்திரத்தில் எந்த ஒற்றுமைச் சுவடுகளையும் காணவில்லையே. எம்மக்கள் என்ன செய்யப் போகிறார்களோ பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

ஜனாதிபதித் தேர்தல் முறை முழுமையாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. பிரதமர் ஆட்சிமுறையில் தமிழர்களின் வாக்குகளை நம்பி அரசியல் நடத்தவேண்டிய அவசியம் சிங்கள அரசியல்வாதிகளுக்கு இருக்கவில்லை. இதனால் அவர்கள் தமிழர்களைக் கொன்றொழிப்பதையே உள்நோக்காகக் கொண்டிருந்தார்கள். இன்று அப்படி அல்ல சிறுபான்மை இனத்தின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கிறது. ஆனால் ஜனாதிபதியின் அதிகாரவலு குறைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருந்து இருக்க இயலாது. தமிழரை நாசம் செய்ய எண்ணிய ஜே.ஆர். மறைமுகமாக தெரியாமல் செய்த நன்மையே இது. எல்லாம் நம்மைக்கே மக்காள்.

புலிகள் பிரிவினையாளர்கள் பிரபாகரன் தமிழீழம் கோரி ஆயுதம் ஏந்தினான் என்று எம்மை நாமே கடிந்து கொள்வது தவறானது. பிரபாகரன் என்பவன் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு, தயாரிப்பு. அவனுக்கு ஒரு அரசியல் தாக்கம் இருந்தது. பலாற்காரத்தினால் வெற்றிகளையும் அடக்கு முறையில் ஆதிக்கத்தையும் சிங்கள அரசு கொண்டு திரிந்தபோது சிவகுமாரன் போன்றவர்கள் அதே பலாற்காரத்தைதான் அரசின் மேல் திரும்பப் பாவித்தார்கள். பலாற்காரம் பலன் செய்தபோது அதையே தொடர்ந்தது எப்படித்தப்பாகும். நாம் புதிதாக எதையும் தூக்கவில்லை சிங்கள ஏகாதிபத்தியம் எதைச் சொல்லித்தந்ததோ அதையே தான் திருப்பிச் சொன்னோம். இதே பிரபாகரனை தெய்வம் என்றும் தேவன் என்றும் தலையில் தூக்கித் திரிந்தவர்கள் இன்று தூற்றுகிறார்கள். அன்று பிரபாகரனும் புலியும் செய்த பிழைகளை சுட்டிக்காட்ட வக்கில்லாதவர்களும் துதிபாடியவர்களும் பிரகாரன் இறந்ததன் பின் அவர் பிணத்தின் மேல் தப்பிப்பிழைப்பதற்காக ஏறி நின்று கூத்தாடுகிறார்கள். தூக்கித் திரிந்தவர்கள் எல்லாம் பிழைகளைச் சுட்டிக்காட்டியிருந்தால், உண்மை நிலையை உணர்த்தியிருந்தால் முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்திருந்தால் பிரபாகரனுக்கோ புலிகளுக்கோ எம்மக்களுக்கோ இன்நிலை வந்திருக்காது. ஈழத்தமிழர்களின் வரலாற்றுப்பாதையில் சரியோ தவறோ பிரபாகனும் புலிகளும் ஒருசரித்திரமே. சரித்திரங்கள் எமக்கு என்றும் ஒருபாடமே. இன்றும் தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள அரசு சரிவரத்தீர்க்காது போனால் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதை யாரும் தடுக்க இயலாது. பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்படப்போபவர்களும் இருசாராருமே. 1972ல் செகுவேரா போட்ட துப்பாக்கிகளை பிரபாகரன் துரையப்பாவுக்கு எதிராகப் பாவித்தார். சிவகுமாரன் முடிக்காததை தம்பி முடித்தார். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் பிரதிபலிப்புக்களே. நீதி கிடைக்காதவரை துப்பாக்கிகள் கைமாறும், தூங்கும், பின் துடித்தெழும். நிரந்தரமாகத் துப்பாக்கிகள் தூங்கவேண்டுமானால் தமிழர்களுக்கான சரியான தமிழர்கள் ஏற்கக்கூடிய நீதியான ஒரு அரசியல் தீர்வே முடிவாகும்.

இனியாவது சரித்திரத்தை, வரலாறுகளைத் திரும்பிப்பாருங்கள். புலம்பெயர்ந்தவர்களே! புலன் பெயராது நாட்டிலுள்ள எம்மக்களின் விருப்பு வெறுப்புக்கு செவிசாய்த்து, பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடாது நேர்மையுடனும், மனச்சுத்தியுடனும் அங்குள்ள மக்களுடைய விருப்பு வெறுப்புகளை ஏற்று அவர்களின் நிம்மதியான அமைதியான வாழ்வைக் கருத்தில் கொண்டு அதற்கிசைவாக நடப்பதே எமது பணி.

எரிகுண்டு விழுந்து
குடியிருந்த கோவில்குடிசை
எரிந்தபோதும்
எரியாது இருந்தது
தாயின் இதயம்.
கண்ணுருகிக் கரைந்தது தேசம்

விறைப்பூசியின்றி
குண்டடிபட்ட பாலகனின்
கால்களட்ட
வீறிட்டழுதது ஐரோப்பியத் தெருக்கள்.

விறைத்துப் போன கண்கள் முன்
வல்லுறவின் பின்
மார்புதட்டி
தாயின் மார்பு தொட்டு
வோட்டுப்பால் கேட்கின்றன
சிங்கக் குட்டிகள்.
நச்சுப்பாலாய்
நனையாதே
நாக்கு

– நட்புடன் நோர்வே நக்கீரா

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Comments

  • Nackeera
    Nackeera

    நான் தவறவிட்டு ஒருவிடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று இணைவதற்கு முன்பே அதை உணர்த்தியவரும் அதைப்பற்றி எழுதியவரும் பண்டாரநாயக்காவே. ஆனால் அதை தொடர்ந்து செய்யமுடியவில்லை. செய்யவும் முடியாது. இதேபோன்றது தான் ஜேஆர் இன் இடதுசாரித்துவமும். காரணம் என்ன? சமூகம் கட்டமைக்கப்பட்ட முறை. மகாவம்சமூடாக அரசியல் வரை பெளத்தமும் துவேசமும் வேரூன்றி இருப்பதே காரணம். கிறீஸ்தவராக இருந்த பண்டா;ஜேஆர் பெளத்தமெனும் போர்வையைப் போர்க்காது வெற்றி பெறமுடியவில்லை. நீதியான நியாயமான சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்குச் சரியான அரசியல்தீர்வு ஒன்று தேவை என்று உண்மையில் கருதினாலும் அவர்களால் அதை நிறைவேற்ற முடியாது என்பதற்கு மேற்கூறியவர்கள் நல்ல உதாரணங்களே. சரி ஜேவிபி யை எடுத்தாலும் முழு இடதுசாரிகளாக பிரணமித்தாலும் ஈற்றில் விழுந்தது இனவாத பெளத்த அரசியலுக்குள் தானே. ஒற்றுமையை விரும்பும் தெற்கத்தைய அரசியல்கட்சிகள் கூட பிரித்துத்தானே பார்க்கப்படுகின்றன. ஒற்றுமை என்பது இன்றும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தூரத்து விளக்காகத்தான் இருக்கிறது. இனவாதமும் மதவாதமுமே பேரினவாத அரசியலின் கைவிளக்குக்களாக இருக்கும் போது தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் அரசில் தீர்வு என்பது என்றும் கேள்விக்குறியாவே இருக்கும்.

    Reply
  • lio
    lio

    வெள்ளரச மரத்தின் கதையை நன்றாக தெரியப்படுத்தியுள்ளீர்கள் இது எமது தமிழரின் சொத்து என்பதை நாம்புரிந்து கொள்ளவும் தமிழர்களே பெளத்த சமயத்தை தென் ஆசிய நாடுகளுக்கு பரப்பியவர்கள் என்பதையும் நாம் உணர வேண்டும் இன்று பெளத்தத்திற்கும் எமக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆக்கிவிட்டார்கள் இதில் ஜரோப்பியர்களின் பங்கும் உண்டு.

    Reply
  • Nackeera
    Nackeera

    நன்றி லியோ…தெற்காசிய நாடுகளுக்கு மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளுக்கும் கொண்டு சென்றவர்களாவார்கள். இதை சரித்திரங்கள் திராவிடப்பெளத்தம் என்றே அழைக்கிறது.//இன்று பெளத்தத்திற்கும் எமக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆக்கிவிட்டார்கள் இதில் ஜரோப்பியர்களின் பங்கும் உண்டு.//உண்மைதான் இது பிரித்தாளும் தந்திரோபாயமே. சிங்கள பெளத்தத் தேசியத்தினூடான அரசியல் இலாபங்கள். இதற்கான மகாவம்சத்திரிபு என்பவே இலங்கையின் பிரச்சனைக்கும் மனிதமறுப்புக்கும் காரணமாக உள்ளன.

    Reply
  • மூர்த்தி
    மூர்த்தி

    நக்கீரா உங்கள் கட்டுரை கவிதை நன்று. ஆனால் இறுதியில் புலிகளையும் சரித்திரமாக்க முயற்சித்து கட்டுரையை பாழ்படுத்திப் போட்டீங்கள். வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம் என்று தமிழர் போராட்டத்தையே ஒரு சம்பவமாக்கிப் போட்டுப்போன புலிகளை சரித்திரமாக்க நன்றாகப் பாடுபட்டிருக்கிறீங்கள். இப்ப வன்னிச் சனத்திட்டைப் போய்க் கேட்டுப் பாருங்க்ள் போராட்டம் மண்மிட்புபற்றி. தரித்திரம் பிடித்த போராட்டம் என்நுதான் பதில்வரும்.

    இன்றும் தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள அரசு சரிவரத்தீர்க்காது போனால் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதை யாரும் தடுக்க இயலாது//
    இன்னொரு தறுதலைப் போராட்டத்துக்கு வெளிநாட்டல இருந்து நாற்று நடாமல் கொஞ்சம் மீதமாய் இருக்கிறவையையம் 30 வருடமாய் வாழ்க்கையைத் தொலைத்துப் போட்டு நிக்கிற சனத்தையும் இனி எண்டாலும் தங்களுக்காக வாழ விடுங்கோ.

    Reply
  • BC
    BC

    //புலிகளை சரித்திரமாக்க நன்றாகப் பாடுபட்டிருக்கிறீங்கள்.//

    மூர்த்தி, நீங்கள் சொன்னது சரி.
    புலியை சேர்ந்த சிலரே இப்போ புலியையும் பிரபாகரனையும் தூற்ற ஆரம்பித்த நிலையில் புலியையும் பிரபாகரனையும் புனிதமாக்கி அடிமைப் பட்டிருக்கும் தமிழினத்திற்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக போராடி தமிழர்களை உலகத்தில் தலைநிமிர வைத்தவர்களே புலியும் பிரபாகரனும் தான் என்று சரித்திரத்தில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற முயற்ச்சி தான் இது என்பதில் சந்தேகமேயில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // கண்டியின் கடைசி வாரிசு தமிழன் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் தமிழா? //

    நல்லது இவர் யாழ்ப்பாணத் தமிழனா?? அல்லது மட்டக்களப்புத் தமிழனா?? அல்லது திருகோணமலைத் தமிழனா?? அல்லது வன்னித் தமிழனா??

    இவர் இந்தியாவிலிருந்து வந்து ஆட்சியைக் கைப்பற்றியவர். இவருக்கு முன்னரே இந்தியாவிலிருந்து படையெடுத்து ராஜராஜசோழன், இலங்கையின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளான். அதன் பின் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், முழு இலங்கையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்துள்ளான். ஆட்சி செய்தவர்கள் தமிழர்களாக இருந்த போதும், அந்த ஆட்சியில் வாழ்ந்த மக்கள் யார் என்பதை கட்டுரையாளர் மறந்தது ஏனோ??

    கட்டுரையாளர் கடைசியாக ஆட்சி புரிந்த அரசு தான் அந்த இடத்திற்கு உருத்துடையவர்கள் என்று கருத வெளிக்கிட்டால், கடைசியில் ஆங்கிலேயனுக்கு மட்டுமே முழு இலங்கையும் சொந்தமானதாகவல்லவா போக வேண்டும்.

    எனவே கட்டுரையாளர் சரித்திரத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு எழுத முனைவதே சாலச் சிறந்தது.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளை சரித்திரம் ஆக்க முற்பட்டதால் , நக்கீராவின் அருமையான கட்டுரை தரித்திரமாகிவிட்டது. மனச் சாட்சியோடு எழுதுங்கள். நக்கீரனாக இருங்கள். நெற்றிக் கண்….? ஏதோ சொன்னார்களே அது உங்களுக்கு பொருந்தாது இனி. மன்னிக்கவும்.

    புலத்து தேர்தலில் வாக்களிப்போரது பெயர்கள் மற்றும் விபரங்களை சிறீலங்கா அரசுக்கு புலிகள் வழங்கி வருகிறார்கள் என ஒரு நம்பகமான தகவல். சிறீலங்கா போக விரும்பாதோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளலாம். இது ஒரு தற்காப்பு அறிவிப்பு மட்டுமே.

    Reply
  • Nackeera
    Nackeera

    மூர்த்தி; பிசி; மாயா:- மனிதவாழ்க்கையிலும் சரி ஒரினத்தின் வரலாற்றிலும் சரி நாம் கடந்து வந்த பாதைகள் நடந்த சம்பவங்களின் கோர்வையே சரித்திரம். வெற்றிகள் தான் சரித்திரம் என்று எண்ணுவது தவறானது. ஒரு சரித்திரத்தை இந்தத் தரித்திரப்போரை சம்பவமாக எண்ணிய பிரபாவின் எண்ணம்தான் பிழையானது. நீங்கள் உங்கள் மனைவியையோ பிள்ளைகளையோ கடிந்த கொண்ட விடயம் கூடச் சரித்திரம் தான். சரித்திரம் என்பது எமது; மனிதஇனத்தினது ஏன் சதாம் குசேய்; கிட்லர்; பொல்பொத் போன்றோரின் வாழ்க்கையும் சரித்திரம் தான். இவர்களும் பிரபாரன்; புலிகளைப்போல் பேரழிவை ஏற்படுத்தியவர்கள் தான். பிரபாகரன் தவறாக எண்ணினார் என்பதற்காக நாம் தவறாக எண்ணிவிட முடியாதல்லவா?
    பிரபாகரனை தலையில் கொண்டு திரிந்தவர்கள் இன்று தூற்றுகிறார்கள் ஏன்? அன்று பிரபாகரன் பிழைவிட்ட போது தட்டிக் கேட்க வக்கில்லாதவர்கள் தான் இன்று தூற்றுகிறர்கள். நான் புலிபலமாக இருக்கும் போது கூட அவர்களை எதிர்த்தி நின்றும் எழுதியும் எதிர்புகளைச் சம்பாதித்தவன். அரசியல் போராட்டப்பாதைகளில் நடந்த அனைத்தும் எல்லாச் சம்பவங்களும் சரித்திரமே. நானோ நீங்களோ மறுத்தாலும் மனிதப்பேரழிவை ஏற்படுத்திய கிட்லரை சரித்திரத்தில் இருந்து தூக்க முடியுமா?

    Reply
  • thurai
    thurai

    இனப் புகழும், குடும்பப் புகழும் பேசியே தம்மைதானே அழிப்பவர்கள் தமிழர்கள் என்பதை இக்கட்டுரை நன்றாக காட்டுகின்றது. காலத்திற்கேற்ப, சூள்நிலைக்கேற்ப தமிழரிடையே சமூக மாற்றங்கள் கொண்டுவரவும் தமிழரை சரியான வழிநடத்தவும் ஓர் தலைவர் இன்னமும் இலங்கையில் தோன்றவில்லை.

    ஈழத்தமிழரின் இன்றைய இக்கட்டான நிலைமைக்கு காரணம் யாரென்பதையும் அதனைக் சுட்டிகாட்ட துணிவில்லாதவர்கழும் தமிழர் புகழ் பாடி மிச்சம் மிகுதியாக இலங்கையில் வாழ்வோரையும் அழிப்பார்கள்.

    துரை

    Reply
  • Nackeera
    Nackeera

    /நல்லது இவர் யாழ்ப்பாணத் தமிழனா?? அல்லது மட்டக்களப்புத் தமிழனா?? அல்லது திருகோணமலைத் தமிழனா?? அல்லது வன்னித் தமிழனா??/பார்த்தீபன்
    நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் இருப்பவர்கள் எல்லோரும் இலங்கையின் ஆதிகுடிகளா? இலங்கை இந்தியாவுடன் நிலப்பரப்பில் இணைந்திருந்தது என்பதை மறந்து விடவேண்டாம். மேலும் யாழ்பாணத்தில் இன்று அதிகமாக வசிப்பவர்கள் 13ம் நூற்றாண்டில் அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் என்பது அறியவில்லையோ? கண்டியரசன் நாயகன் எனும் பொழுது அவன் இந்தயன் என்பதை உணரவில்லையா? பார்த்தீபன்” இலங்கையில் இன்றுவாழும் அனைத்து மக்களும் இலங்கையின் ஆதிகுடி இல்லை என்பதை அறிவீர்களா? எல்லோரும் முன்பின் வந்தவர்கள்தான். உண்மையில் தனித்தமிழ் ஈழம் என்றும் ஆதிதேசம் என்றும் கேட்டால் நாம் போகவேண்டியது சிந்துவெளிப் பள்ளத்தாக்குகளுக்குத்தான். நான் சரித்திரப் பேராசிரியர் அல்ல அறிந்தவரை சரியாக அறிந்து வைத்திருக்கிறேன். இனப்பரம்பல்கள் என்றும் வாழ்வாதாரங்கள் வசதிகளை நோக்கி உலகில் ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ இயலாது.

    புலிகளையோ பிரபாகரனையோ நான் நியாயப்படுத்தவில்லை அப்படி நியாயப்படுத்தினால் மற்ற இயக்கங்களையும் நியாயப்படுத்த வேண்டும். கட்டுரையில் நான் சொல்லவந்த விடயம் என்ன வெனில் எமது புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் நழுவல் நம்பகரமற்ற விசுவாசமற்ற போக்கையே. புலிகள் வென்றிருந்தார்கள் என்றால் இன்று அவர்களைப் பிடிக்க இயலுமா? ஆரம்பகாலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற முறையிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவர்களின் தொடர்பு இருந்தது. தனியப்பிரபாரனைப் பிழைசொல்வதை விட சமூகத்தின் மேலும் போதியளவு குற்றம் உண்டு. சமூகம் வளர்க்கப்பட்ட முறை சமூகஅமைப்பு என்பன பெரும்பங்கை வகிக்கிறது.

    //கட்டுரையாளர் கடைசியாக ஆட்சி புரிந்த அரசு தான் அந்த இடத்திற்கு உருத்துடையவர்கள் என்று கருத வெளிக்கிட்டால், கடைசியில் ஆங்கிலேயனுக்கு மட்டுமே முழு இலங்கையும் சொந்தமானதாகவல்லவா போக வேண்டும்.// தவறாகப் புரிந்துள்ளீர்ள் பார்த்தீபன். ஒரபொருளை நான் எடுக்கும் போது எப்படி வாங்கினேனோ அதே மாதிரித்தானே திருப்பிக் கொடுக்கவேண்டும். துண்டாடி இருந்த இராசதானிகளை ஒன்றாக்கிய வெள்ளையர் திரும்பிக் கொடுத்தபோது பெரும்பான்மையின் கையில் கொடுத்து விட்டுப்போனதை நியாயம் என்கிறீர்களா? சிறுபான்மை இனக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமின்றி எப்படி பெரும்பான்மையின் கையில் கொடுத்தார்கள். எப்படி எம்மவர் இதை ஏற்றார்கள். இங்குதான் தமிழர்களின் பெரும்தன்மையும் ஒற்றுமை ஒர்நாடு என்ற ஒருமைப்பாட்டையும் காணலாம். சிறுபான்மையாக இருந்தாலும் சேர்ந்து வாழ்வோம் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது அல்லவா? இதுதான் ஒற்றைமையின் மூலதனம்.

    Reply
  • Nackeera
    Nackeera

    //இனப் புகழும், குடும்பப் புகழும் பேசியே தம்மைதானே அழிப்பவர்கள் தமிழர்கள் என்பதை இக்கட்டுரை நன்றாக காட்டுகின்றது. காலத்திற்கேற்ப, சூள்நிலைக்கேற்ப தமிழரிடையே சமூக மாற்றங்கள் கொண்டுவரவும் தமிழரை சரியான வழிநடத்தவும் ஓர் தலைவர் இன்னமும் இலங்கையில் தோன்றவில்லை// துரை. குடும்பப்புகழ் பாடவில்லை நம்நாட்டில் என்று குடும்ப அரசியலில் இருந்து விலகியிருந்தது? நீங்கள் சொல்வது போல் /தமிழரிடையே சமூக மாற்றங்கள் கொண்டுவரவும் தமிழரை சரியான வழிநடத்தவும் ஓர் தலைவர் இன்னமும் இலங்கையில் தோன்றவில்லை// இது முற்றிலும் உண்மையானதே. தொழிலுக்கு மதிப்பளிக்கா சமூகத்தை உருவாக்கி பொறுப்பு எம்அரசியலுக்கு உண்டு.

    Reply
  • Nackeera
    Nackeera

    கட்டுரையின் உள்நோக்கையும் கருத்தையும் திசைதிருப்பாது இருப்பது முக்கியம். ஒற்றுமை பற்றி இன்று கூறிக்கொண்டு வந்து தமிழ்மக்களின் வாசலில் நிற்போரால் ஒற்றுமைக்காக எதையும் செய்ய இயலாது என்பதையே இக்கட்டுரை மூலம் முன்றிறுத்த முயல்கிறேன். சிங்கள தமிழ் சமூகங்களில் அடிப்படையில் ஆணிவேரில் ஊற்றப்பட்ட துவேசம் மதம் எனும் நச்சுத் திராவகங்கள் அகற்றப்படாதவரை முழுமையான ஒற்றுமை அமைதி என்பது சாத்தியமற்றது. சரி புலிகள் அழிந்துவிட்டார்கள் இலங்கை ஒற்றை நாடு என்று இன்றாகி இருக்கிறது. பிரச்சனை முடிந்து விட்டதா? ஊர்வாதம்;சாதி; மதம்; கறுப்பு: சிவப்பு என்று எத்தனை வரப்போகிறது. பிரிவினைகளுடு தம்மைப்பலப்படுத்த விரும்பும் மனநிலையுள்ள ஒரு சமூகத்தில் பிரச்சனை அடங்காது. இது இருசார் மக்களுக்கும் பொருந்தும். இக்கட்டுரையின் முதற்பின்னோட்டத்தில் கட்டுரையின் கருத்தை எழுதியுள்ளேன். தமிழ் அரசியல் என்பது இன்று கையறுந்த நிலையில் இருக்கிறது. உண்மையில் தமிழ்ர்களுக்கு ஒரு சுமூகமான அரசியல்தீர்வு தேவை என்று உணர்ந்த எந்தச் சிங்கள அரசில்வாதியாலும் அதைச் நிறைவேற்ற இயலாது. காரணம் மத இன பேதங்கள் முன்நிறுத்தப்பட்ட அரசியல் வளப்பு முறையே. இதில் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல. இனிவளர்ந்து வரும் புதிய சமூகத்துக்காவது யாவரும் இலங்கையர் என்றும் பேதமற்றவர்கள் என்ற மனநிலை உருவாகும் வரை பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    இக்கட்டுரை மூலம் சமூகத்தில் பேசப்படாதிருந்த சிலவிடயங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதே என்நோக்கமாக இருந்தது. உ.ம்: பண்டா: ஜேஆர். இவர்கள் எப்படி மாற்றப்பட்டார்கள் என்று பார்த்தீர்களா? இங்கே மாற்றப்படவேண்டியது அரசியல் சமூக அமைப்பே தவிர தனிமனிதர்கள் அல்ல.

    Reply
  • மூர்த்தி
    மூர்த்தி

    பதிலுக்கு நன்றி நக்கீரா.

    தமிழர்களை பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என கூறிய அரசியல்வாதிகள் தமிழர்கள் தேசத்துரோகிகள் என்று குறிப்பிட்டது எங்கே, யார்? என்பது எனக்குத் தெரியவில்லை. அச்சம்பவத்தை, நபரை தெளிவுபடுத்துங்கள்.

    இனத்துவேசத்தை வளர்த்தது சிங்கள அரசியல்வாதிகள் என்றால் அதற்குத் தூபம் போட்டு வளர்த்தது தமிழ் அரசியல்வாதிகள். தமிழன் தோலில் செருப்புத் தைப்பேன் என்றார் கே.பி. ராஜரட்னா. அதற்காக சிங்களவன் தோலில் செருப்புத் தைப்பேன் என்று மங்கயற்கரசி சொன்னது சரியாகுமா?? சிங்கள அரசியல்வாதி தப்பை சுட்டிக் காட்டியது போல நீங்கள் தமிழ் தலைமைகள் தப்புகளை சுட்டிக் காட்டவில்லை. அதனால் கட்டுரை பக்கம் சாய்கிறது.

    ஜேஆர் செய்த கொலைகள் சுட்டிக் காட்டியதுபோல; டட்லியின் துவேசச்சேறு சுட்டிக் காட்டப் பட்டதுபோல; ராஜரட்னவின் இனத்துவேசம் சுட்டிக் காட்டப் பட்டதுபோல; இக்கட்டுரையில் தமிழத் தலைமைகள் செய்த தவறுகளும், இனத்துவேசங்களும், தொடர்ந்துவந்த துப்பாக்கத் தமிழ் அமைப்புகள் செய்த தவறுகளோ, வளர்த்த இனத்துவேசங்களோ சுட்டிக் காட்டப் படாததால் கட்டுரை பக்கம் சாய்கிறது. கேள்விக்குள்ளாகிநது.

    சிங்கள அரசியல்வாதிகளிடம் உங்கள் மனிதம் ஒற்றுமை கொள்கை எங்கே போனது என்று கேட்கும் அதேநேரம் தமிழத் தலைமைகள் பக்கமும் இதே கேள்விகள் பொருந்தும் நீங்கள் கேட்கவில்லையே? சண்டித்தனம் காட்ட இயக்கஙகளை வளர்த்து அதில் குளிர்காய்ந்து தத்தம் நலனுக்காக அரசியலில் இருந்து வளர்த்த கடா மார்பில் பாய்ந்த ச(த)ரித்திரங்கள் எங்கே போனது.

    தமிழரை நசுக்கிப்போட்டு ஒற்றுமைபற்றிக் கதைக்க சிங்கள அரசியல்வாதிகளுக்கு அருகதை இல்லை என்பதை உணரும் உங்களால் தனது சகோதரங்களையே துவம்சம் பண்ணியதில் முண்ணணி வகித்த, இன்றுவரை அது சரி என வாதிடும் புலிகளுக்கும் அது பொருந்தும் என்பதை ஏன் உணரமுடியவில்லை.

    பழைய நினைவுகளை சரித்திரங்களை ஆய்வு செய்யும் நீங்கள் வன்னிமக்கள் புலிகளின் ஆயுதங்களாககப் பாவிக்கப்பட்டு எட்டே மாதங்களில் அதை மறந்ததேனோ??

    சிங்களஅரசியல்வாதிகள் எமக்கு தமிழர்க்கு செய்தவைகள் துவேசங்கள் துரோகங்கள்தான். மறுக்க முடியாது. இதேபோலத்தான் பிரபாகரன் தமிழர்க்குச் செய்ததும் துரோகங்களே. ஸ்தாபன மயப்படுத்திய சகோதரப் படுகொலைகள்; போட்டுத் தள்ளு பொட்டுவை என்று கொல்லப்பட்ட அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், தன்னை விடச்சிறந்த போராளிகள்,; காட்டிக் கொடுத்தான் களவெடுத்தான் என்று இன்னோரன்ன காரணங்களுக்காகப் பலியான பொதுமக்கள்; தன் உயிருக்குப் பாதுகாப்பாக 3 லட்சம் அப்பாவிகளைப் பாவித்த கொடுமை; 30 000 உயிர்களைக் குடித்தமை;; இவையெல்லாம் தமிழனுக்கு தமிழனே செய்த பச்சைத் துரோகம். உங்கள் கட்டுரையில் இலகுவாக மறைக்கப் பட்டதேன். தமிழரின் போராட்டம் உங்கள் கட்டுரையில் புலிகளின் போராட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது தவறு. தற்போதைய உங்கள் பின்னூட்டமும் பிரபாகரனை சரித்திரத்தில் போட நியாயப்படுத்துகிறதே ஒழிய அது தமிழினத்துக்கு பிரபாகரன் செய்த துரோகத்தனங்கள் பற்றிக் கதைக்கவில்லை.

    Reply
  • palli
    palli

    நாம் இருக்கும் சூழல் அல்லது காலம் எம்மை எடுத்துக்கெல்லாம் தமிழர் செய்த தவறுகளையே சுட்டி காட்டுகிறது அது நியாயமும் கூட; ஏன் கட்டுரையாளர் கூட பல இடத்தில் தமிழ் தலமைகள் விட்ட தவறுகளை சுட்டி காட்டுகிறார், அத்துடன் நக்கீரன் ஒரு புலி சார்ந்த நபரும் அல்ல; புலிகளின் வீர விளையாட்டுக்களை பல தடவை இதே தேசத்தில் விமர்சித்துள்ளார், அத்துடன் தான் வாழும் நோர்வே நாட்டின் செய்திகளை கூட (உதாரனத்துக்கு நோர்வே தேர்தல்) தகவல்களை சேகரித்து தருகிறவர், அதேபோல் நாம் பிறந்த மண்பற்றி அவர் சேகரித்த தகவலை இங்கு தந்துள்ளார்; இது எதற்க்கு எமக்கு என நாம் ஒதுக்கிவிட முடியாது;

    தமிழருக்கு இன பிரச்சனை இருக்கு என்பது யாராலும் மறுக்க முடியாது, ஆனால் அன்று ராமனாதன் தொடக்கம் இன்று பிரபாகரன் வரை தமிழரென சொல்லி தாமே தமிழருக்கு கேடுவிளைவிப்பதும், அதேபோல் சிங்கள அரசுகளும் தமக்காக சில தமிழரை வளர்ப்பதும் காலம் காலமாய் தொடர்கிறது, ஆனாலும் இறுதி 30 வருடங்களும் தமிழரே தமிழருக்கு எதிரியாய் உயிர் இழந்து நாடு இழந்து தேசத்திலும் புலத்திலும் அகதியாய் வாழ்கிறோம்; மிக பெரிய விலை கொடுத்து(பல உயிர்) இன்று ஏதோ ஒரு அமைதி நிலவுகிறது; இதையும் அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ சேதப்படுத்தாமல் சமாதான தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாயின் இரு தரப்புக்கும் புரிந்துணர்வு மிக முக்கியம்; அதையும் விட நாடு கடந்த ஈழக்காரரை மக்கள் நம்பு முன் மக்களுக்கு வாழ கூடிய ஒரு தீர்வு வேண்டும்; அது கிடைக்க ஒற்றுமை முக்கியம்; இதில் அரசு சொல்லுவதுதான் சரி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, எமது தரப்பு நியாயங்களை பேசவோ புரிய வைக்கவோ இந்த கட்டுரை சிறிதாவது உதவும் என்பதே என் கருத்து;

    Reply
  • Vimal
    Vimal

    “வரலாறு”
    “வரலாற்றுத் துரோகம்”
    இரண்டும் ஒன்றா நக்கீரா?
    மேலும்
    தங்களது கட்டுரை குறித்த மூர்த்தியின் அத்தனை கேள்விகளும் நியாயமானதே.

    விமல்

    Reply
  • Nackeera
    Nackeera

    பல்லி மிக்க நன்றி. . நீங்கள் கட்டுரையைச் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள் பல்லி.

    விமல்: வரலாறு என்பதற்குத்தான் விளக்கம் சொன்னேன் யாராவது வரலாற்றுத் துரோகம் பற்றிக் கதைத்திருந்தால் அதை அவர்களிடம் கேளுங்கள்

    மூர்த்தி!
    நித்திரையாய் இருப்பவனை எழுப்புவதற்குத் தான் நான் கட்டுரை எழுதினேன். நித்திரைபோல் இருப்பவனுக்கல்ல. //தமிழர்கள் தேசத்துரோகிகள் என்று குறிப்பிட்டது எங்கேயார்? என்பது எனக்குத் தெரியவில்லை. அச்சம்பவத்தைஇ நபரை தெளிவுபடுத்துங்கள்.// ஜேவிபி யின் பிரசாரப் பரப்புரை மேடைகளில் த.தே.மு யையும் புலிகளையும் நாட்டைத் துண்டாடும் துரோகிகள் என்று வர்ணித்ததை தொ.கா ஊடாகக் கேட்டேன். தமிழர்களை சிங்கள அரசியல்வாதிகள் கள்ளத்தோணிகள் என்று குறிப்பிட்டதையும் தெரிந்து கொள்ளுங்கள்.//தமிழன் தோலில் செருப்புத் தைப்பேன் என்றார் கே.பி. ராஜரட்னா.// இப்படி அவர் சொல்லவில்லை சரியாக வாசியுங்கள்.

    //செருப்புத் தைப்பேன் என்று மங்கயற்கரசி சொன்னது சரியாகுமா?? சிங்கள அரசியல்வாதி தப்பை சுட்டிக் காட்டியது போல நீங்கள் தமிழ் தலைமைகள் தப்புகளை சுட்டிக் காட்டவில்லை. அதனால் கட்டுரை பக்கம் சாய்கிறது// மங்கையயற்கரசி சொன்னதை எங்காவது சரி என்று சொன்னேனா?

    கட்டுரை ஒரு குறிப்பிட்ட காலவிடைவெளிக்குள் சில செய்திகளைமட்டும் குறித்து எழுதப்பட்டது. நான் ஏதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டது என்பற்கான காரணத்தை மேலே எழுதியுள்ளேன். நாம் என்றும் எம்முள் குத்துப்படுகிறோமே தவிர புறக்காரணிகளின் பாதிப்புகளைப் பற்றி அக்கறைப்படுவதில்லை.
    //ஜேஆர் செய்த கொலைகள் சுட்டிக் காட்டியதுபோல் டட்லியின் துவேசச்சேறு சுட்டிக் காட்டப் பட்டதுபோல் ராஜரட்னவின் இனத்துவேசம் சுட்டிக் காட்டப் பட்டதுபோல் இக்கட்டுரையில் தமிழத் தலைமைகள் செய்த தவறுகளும் இனத்துவேசங்களும் தொடர்ந்துவந்த துப்பாக்கத் தமிழ் அமைப்புகள் செய்த தவறுகளோ, வளர்த்த இனத்துவேசங்களோ சுட்டிக் காட்டப் படாததால் கட்டுரை பக்கம் சாய்கிறது. கேள்விக்குள்ளாகிநது// இக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல

    உங்களுடைய முழுக்கேள்விகளும் தமிழர் பக்கம் இருக்கும் பிழைகள் புலிகள் பக்கம் இருக்கும் துரோகத்தனங்கள் பற்றியது. அதற்கான பதிலை எத்தனை தரம்தான் கூறுவது. எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைகளைத்தான் நாம் என்றும் கதைக்கிறோம். வெள்ளைன் நாட்டை விட்டுப்போனதின் பின் துவேசத்தை வளர்த்தே பேரினவாத அரசியல் இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. அதைத்தொடக்கி வைத்தவர்கள் யார்? காலம்காலமாக கலவரங்களைத் தூண்டி விட்டது யார்? சிவகுமாரன் வன்முறையைத் தேர்தெடுத்தற்கான காரணம் என்ன? நான் ஆரம்பகாலத்தில் புலி புளொட் இரண்டும் ஒன்றாக இருந்த போது இருந்தவன். புலிகளின் அடாவடித்தனங்களைக் கண்டித்து வெளியே வந்தும் தொடர்ந்து போட்டு துப்பாக்கியை பேனாவாக மாற்றியவன். புலிகளின் செயற்பாடுகளை எதிர்த்து புலிபலமாக இருந்தபோதும் கவிதைப்புத்தம் வெளியிட்டு முன்னுரையாளரான இன்குல்லாப்புடன் சர்ச்சைப்பட்டவன். இக்கட்டுரையின் நோக்கம் தமிழர்சார் கண்டனமல்ல. ஒரு முதுபெரும் சரித்திரத்தை ஒரிரு பக்கத்தில் எழுதமுடியாது.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    விடுதலை வேன்டிநிற்கும் ஒரு இனத்தின் அறிவிஜீவிகள் எவ்வளவு தூரம் வெறும் மேலோட்டமான சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இக்கட்டுரை நல்ல உதாரணம். அதற்குமேல் சாணக்கியர் கலாநிதி, என்று பட்டங்கள் வேறு… 1970 களில் சுதந்திரன் பத்திரிகையில் வந்திருக்கக் கூடிய கட்டுரையையே இன்றும் தமிழீழத்தின் அரசியல் இலக்கியமாகவும், தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாட்டின் வடிவங்களே ஈழ விடுதலையின் அரசியல் செயற்பாடுகளாகவும், திரு & திருமதி அமிர்தலிங்கத்தினதும் அவர்களது சகபாடிகளினதும் மேடைப்பேச்சுக்களே அன்ரன் பாலசிங்கத்தினதும் அவரது வழித்தோன்றல்களினதும் மாபெரும் பிரசங்கங்களின் வடிவங்களாகாக வலிந்த்து பரப்பப்படுவதும் ஒரு இனத்திற்கு விடுதலை பெற்றுத்தரப் புறப்பட்டவர்களின் தயவில் வாழ்க்கையை ஓட்டப் பழகிக் கொண்ட அறிவு ஜீவிகளின் மிகச் சிறந்த சிந்தனை வெளிப்பாடாக அமைவதும் எமது இனத்தின் சாபக்கேடே. சிங்கள அரசு ஒடுக்குகிறது என்பதைத் தவிர தமிழருக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்பதற்கு வேறு காரணங்களை இந்த அறிவுஜீவிகளால் முன்வைக்க முடியாதா?

    Reply
  • மூர்த்தி
    மூர்த்தி

    நக்கீரா
    தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் தமதுநலன்களுக்காக ஆளுக்காள் எறிவதை எல்லாம் தமிழர் மீதும் சிங்களவர் மீதும் எறிந்ததாக அர்த்தப்படுத்தாதீர்கள்
    மேலும்;
    /சிங்கள அரசியல்வாதி தப்பை சுட்டிக் காட்டியது போல நீங்கள் தமிழ் தலைமைகள் தப்புகளை சுட்டிக் காட்டவில்லை./நான் கேட்டது;

    /உங்களுடைய முழுக்கேள்விகளும் தமிழர் பக்கம் இருக்கும் பிழைகள் புலிகள் பக்கம் இருக்கும் துரோகத்தனங்கள் பற்றியது. அதற்கான பதிலை எத்தனை தரம்தான் கூறுவது./ பொறுப்பான பதில் நக்கீரா

    சுய அரசியல் இலாபங்களுக்காக கொள்கை மாறி நேர்மை மீறி மனிதத்தை மறுத்து காலத்துக்குக் காலம் கலவரங்களை உருவாக்கி தம்வாக்கு வங்கிகளை நிரப்பியவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. இதன்வழியில் தமிழர்கட்சிகளும் தொடர்ந்தன என்றாலும் சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவே.//ஒப்பீட்டு ரீதியில் குறைவு என்பதோடு தமிழ் தலைமைகள் தவறை மூடிவிட்டுப் போகிறீர்கள்.

    மங்கையயற்கரசி சொன்னதை எங்காவது சரி என்று சொன்னேனா? / /
    அதையேதான் நான் தமிழ் தலைமைகள் பிழைகளை கண்டுக்காமல் போகிறீர்கள் என்றேன். அதில் பிரபாகரன் செய்த தன்இனத்தின் மீதான அழிப்பையும் மூடிவிட்டுப் போய்விட்டீர்கள் என்றேன்.

    ஒற்றுமைக்குப் பேர் போன தமிழன் விட்டுக் கொடுப்புக்குப் பேர் போன தமிழன் பேரினவாத அரசால் நசுக்கப்பட்டபோது தோன்றிய போராட்டம், தப்பான போராட்டம் என்று நான் சொல்லவில்லை. அந்தப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து; தமிழர்க்கு ஒன்றுமில்லாமல் முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தவன்தான் பிரபாகரன்.

    //புலிகள் பிரிவினையாளர்கள் பிரபாகரன் தமிழீழம் கோரி ஆயுதம் ஏந்தினான் என்று எம்மை நாமே கடிந்து கொள்வது தவறானது. பிரபாகரன் என்பவன் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு தயாரிப்பு. அவனுக்கு ஒரு அரசியல் தாக்கம் இருந்தது. //என்று தமிழர் போராட்டத்தை புலிகள் போராட்டமாக்கியதையும்; பிரபாகரன் என்பவன் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு தயாரிப்பு ஈழப்போருக்காக களமிறங்கிய இதர போராளிகளும் அதேதான் என்பதை சொல்லாது, நானும் புலிதான் என்று சொன்னதன் மூலம் நான் கேட்டதற்கப் பதில் தந்தமைக்கு நன்றி நக்கீரா.

    Reply
  • NANTHA
    NANTHA

    கண்டி அரசன் தமிழன் என்பது வேடிக்கையான விஷயம். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்டி அரசனின் இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். அவன் “தெலுங்கு” நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவன். தமிழரின் சேர, சோழ, பாண்டியர்களுக்கும் எந்தவித சம்பதமும் இல்லாதவன். கண்டி அரசனாக இருந்த காலத்தில் அவன் பவுத்த மதத்தையும் இந்து மதத்தையும் சமமாக மதித்தவன். “கண்டி எசல பெரஹர” அவனால் தொடங்கி வைக்கப்பட்டதாகும்.

    அது சரி. கண்டி அரசனின் “வாரிசுகளாக” இந்த ஈழம் கேட்டவர்கள் எப்போது மாறினார்கள்? ஏதாவது “கள்ள உறுதி” விளையாட்டோ?

    கோடீஸ்வரன் வழக்கு “தமிழர்” உரிமை பற்றி நடந்து அல்ல. அது ஒரு அரச ஊழியருக்கும், அரசுக்கும் இடையில் நடந்த வழக்கு. அரசகரும மொழிச்சட்டம் வருவதற்கு முன்னர் ஆங்கில மொழி தகைமைகள் மூலம் தொழில் பெற்ற ஒருவரை புதிய சட்டம் கட்டுப்படுத்தாது என்பது கோடீஸ்வரனின் வாதம். இந்த வாதம் இலங்கை உயர் நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அரச கரும மொழி பற்றி அரசுக்குத் தீர்மானம் செய்ய உரிமை உண்டு என்ற வகையிலும், அரசிடம் வேலை செய்பவர்கள் அரச ஆணைகளை பின்பற்ற வேண்டும் என்பதே இலங்கை உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு காரணம். பின்னர் கோடீஸ்வரன் பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்த பொது லண்டனிலுள்ள நீதி மன்றம் ” சம்பந்தப்பட்ட அரச ஊழியர் மகாராணிக்கு சத்ய பிரமாணம் செய்தவர் என்பதாலும் அவர்” ஆங்கில’ மொழி தகைமை மூலம் தொழில் பெற்றவர் என்ற காரணத்தாலும் ” கோடீஸ்வரனுக்கு சார்பாக தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கோடீஸ்வரன் “தமிழ்” பற்றியோ, தனக்கு தமிழில் வேலை செய்ய முடியும் என்பது பற்றியோ எங்கும் வாதிடவில்லை. அந்த கால கட்டத்தில் இலங்கையின் தலைவர் பிரிட்டிஷ் மகா ராணியாகவே இருந்தார்.

    இதன் விளைவு. 1971 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டதுடன் பிரிட்டனுடனான “சகல” தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அரச ஊழியர்கள் மீண்டும் இலங்கை அரசுக்கும், இலங்கை அரசியலமைப்புக்கும் விசுவாசம் என்று சத்ய பிரமாணம் செய்தனர்.

    இதனை தமிழ் போராட்டம் என்று உரிமை கோர வேண்டியதில்லை. ஆங்கில மொழி மூலம் தொழில் பெற்ற சிங்கள அரச ஊழியர் வழக்கு தொடர்ந்திருந்தாலும் இதுதான் முடிவாக இருந்திருக்கும். ஆனால் சிங்களவர் அப்படி செய்யவில்லை.

    சங்கமித்த மௌரிய பேரரசன் அசோகனின் மகள். இந்த மகளின் காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டு. மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. மணிமேகலைக்கும் சங்கமித்தவுகும் குறைந்தது நான்கு நூற்றாண்டு இடைவெளி உள்ளது. எப்படி பின் வந்த மணிமேகலையின் “ரத்தமாக” முன்வந்த சங்கமித்த இருக்க முடியும்? கொஞ்சம் உதைக்குதே!

    மகாவம்சத்தை சாடியிருக்கும் நக்கீராவுக்கு ஒரு தகவல். மகாவம்சத்தில் காணப்படும் இலங்கை மன்னன் ‘கஜபாஹு” வின் ஆண்டைக் கணக்கிலேடுத்துதான் “சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று முடிவாகியது. தமிழர்களின் “பழைய” காவியங்களில் “காலத்தைக்” கண்டு பிடிக்க எந்த தகவல்களும் கிடையாது.

    எல்லாவற்றையும் தூக்கியடிக்கும் தகவல் என்னவென்றால் மகா வம்சத்தை எழுதிய பிக்கு “மகானாமா” ஒரு பல்லவ அரச குலத்தை சேர்ந்தவர் என்பதே ஆகும். சிகிரி காசியப்பவின் தாய் மாமன் இவர் என்பதும், இவர் காஞ்சிபுரத்திலிருந்து தனது சகோதரி இலங்கை மன்னன் தாதுசேனாவை திருமணம் செய்த பின்னர் வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    யாழ்ப்பாணத்திலிருந்த விகாரையின் மண்ணைக் கூட எடுத்துச் சென்ற தமிழ் வீரர்களையும், பார்த்திருக்கிறோம். அனுராதபுரத்திலுள்ள “மகா போதி”க்கு குண்டு வைத்து புத்த பிக்குகளை கொலை செய்த புலிகள் கண்டி தலதா மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. சிங்கள பவுத்தம் என்று சன்னதம் கொண்ட புலிகள் “இந்து” ஐயர்களை விட்டு வைத்தார்களா? ஒன்றல்ல எட்டு ஐயர்களை கொன்றார்கள்.

    ராஜபக்ஷவுக்கு பொட்டு வைத்த ஐயருக்கு புலிகள் “பொட்டு” வைத்தார்கள். ஆனால் ராஜபக்ஷவுடன் கோழி பிரியாணி அடித்த கத்தோலிக்க பாதிரிகளை புலிகள் கட்டி தழுவினார்கள். ஒரு பாதிரிக்கும் “மரண” தண்டனை” கிடையாது. இந்த ” மனிதாபிமானம்” இந்துக்களையும் பவுத்தர்களையும் இந்த நூற்றாண்டு முடிவதற்குள் முற்றாக மத மாற்றம் செய்துவிடுவதாக சூளுரைத்துள்ள வத்திக்கானின் போப்பின் எஜண்டுகளோடு எப்படி வந்தது? கத்தோலிக்க பாதிரிகள் ஆரம்ப காலம் தொடக்கம் புலிகளோடு வங்கிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண வரலாற்றில் தமிழ், இந்து கலாச்சாரங்களை அழித்த கத்தோலிக்கர்களுக்கு “திடீரென்று ” தமிழ்” மீது “காதல்’ வந்தது எப்படி?

    பிரபாகரனின் “தமிழ்” போராட்டத்தில் இந்துக்கள் உயிர்களையும் , கோடிக்கணக்கில் பொருள் நஷ்டத்தையும் அடைந்திருக்கிறார்கள். கத்தோலிக்க கோஸ்டிகள் சில “பரிஷ்”களை வன்னிப் பகுதிகளில் உண்டாக்கி உள்ளனர். இதுதான் தமிழர்களின் இறுதி அரசியல். முள்ளி வாய்க்காலில் எத்தனை தரம் முடிக்க இருக்கிறீர்களோ தெரியவில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    நந்தா கேட்டுள்ள கேள்விகளில் பந்தா இல்லை. ஆனால் நாக்கை புடுங்கிற மாதிரி இருக்கு. சபாஸ்.

    Reply
  • Nethaji
    Nethaji

    நன்றி நந்தா உங்கள் கருத்துக்கு பிரபாகரன் இறக்கும்போது ஒரு கிறீஸத்துவாக அல்லது ஒரு கத்தோலிக்கனாக இறந்தானே என்று சந்தேகப்படுகிறேன் காரணம் இந்தப்போரின் இறுதிக்காலத்தில் கண்டியில் ஒரு இராணுவ அதிகாரி சொல்லியதாக பிக்கு ஒருவர் சொல்லியிருந்தார் (தவறு என்றால் திருத்தவும்) இலங்கையின் வடக்கே இந்தியாவுக்கும் இடையில் ஒரு கிறீஸ்தவ அரசு உருவாக்குவது என்றும் இதற்கு புலிகள் துணைபோக இருந்தனர் என்றும் இது இந்த அரசினால் தகர்ந்து போனது என்றும்.

    அதைவிட வீரமரணம் அடைந்த போராளிகளை அடக்கம் செய்தின் நோக்கம் என்ன? ஒருகாலத்தில் இவர்களும் கிறீஸ்தவர்கள் அல்லது பைபிளை நேசித்தவர்கள் என்றும் இவர்களாலே இந்த பூமி புநித பூமியாக்கப்பட்டது என்றெல்லாம் அகழ்வாராட்சி செய்யலாம் என்றே சந்தேகிக்கிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டது போல் புலிகளின் இறுதிக்காலத்தில் வன்னியில் பாரிய கத்தோலிக்க விரிவாக்கம் இடம் பெற்றிருந்தத அதைவிட மாதர் சங்கங்கள் பல அங்கு பணி என்ற போர்வையில் மக்களை கூட்டி வந்து மதப்பிராத்தனை நடந்தியது ஞாபகம் இருக்கலாம்.

    இந்தக்காலத்தில் இந்தியாவிலிருந்து இந்து சுவாமிகள் வந்து போனதும் பின்னர் இந்த இந்து சாமியார் பெளத்த துறவிகளை கண்டியில் சந்தித்ததும் ஞாபகம் இருக்கலாம்.

    இதே காலத்தில் ஜரோப்பாவில் சரஸ்வதி பூஜை சிவபுராணம் பைபிளில் இருந்து தான் உருவாக்கப்பட்டது என்பது போன்ற பிரச்சாரங்கள் நடைபெற்றதம் ஞபகம் இருக்கலாம்.

    இவை ஒன்றும் பைபிளை படிப்பவர்களை புண்படுத்த எழுதவில்லை ஆனால் இந்த சமயத்தின் மூலமே உலகத்தில் பல நாடுகள் சீரழிக்கப்பட்டது.

    இன்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் பைபிளை திணிப்பதை அவதானிக்க முடியும். ஈராக்கில் மதமாற்றம் தீவிரமாக நடைபெறுவதை காணலாம்.
    ஜரோப்பாவில் தமிழ் அகதிகள் பிராத்தனைக்கு அழைக்கப்படுவததையும் அதில் விசாகிடைக்க பிராத்திப்பதையும் அறிவீர்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    ஆரியச் சக்கரவர்த்திகள் என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தை 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன.

    எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், குஜராத், கிழக்கிந்தியாவிலிருந்த கலிங்க தேசம், தமிழ் நாட்டிலுள்ள ராமேஸ்வரம், சோழநாடு போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள்.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியை கூழங்கைச் சக்கரவர்த்தி, விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி, கோளறு கரத்துக் குரிசில் எனப் பலவாறாக குறிப்பிடுகின்றன. அவ்வரசனின் கையிலிருந்த ஊனம் (கூழங்கை) காரணமாகவே இப்பெயர்கள் வழங்கியதாகக், காரணமும் கூறப்படுகிறது.

    இது தவிர, 13ஆம் நூற்றாண்டில், தமிழ்ப் படைகளின் உதவியோடு வட பகுதி உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய கலிங்க தேசத்தவனான, கலிங்க மாகன் என்பவனே முதல் ஆரியச்சக்கரவர்த்தி எனவும் சிலர் நிறுவ முயன்றுள்ளார்கள். காலிங்கச் சக்கரவர்த்தி என்பதே கூழங்கைச் சக்கரவர்த்தியெனத் திரிபடைந்திருக்கக் கூடும் என்பது அவர்களது கருத்து.

    இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், கருத்து-எதிர்க்கருத்துகள் (வாதப் பிரதிவாதங்கள்) உண்டு. யாழ்ப்பாண வைபவமாலை, வையாபாடல் போன்றவை முதலரசன் காலத்தை முறையே –க்கும், –க்கும் முன்தள்ளியுள்ளன. எனினும் தற்கால ஆய்வாளர்கள்[யார்?] முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், போர்த்துக்கீசர் காலத்தில் 6 பெயர்களுமாக மொத்தம் 19 அரசர்கள் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    நற்காட்சி – Right View
    நல்லெண்ணம் – Right Thought
    நன்மொழி – Right Speech
    நற்செய்கை – Right Conduct
    நல்வாழ்க்கை – Right Livelihood
    நன்முயற்சி – Right Effort
    நற்கடைப்பிடி – Right Mindfulness
    நற்தியானம் –
    புத்தர் கண்ட நான்கு உண்மைகள்
    துன்பம் (“துக்கம்”): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
    ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
    துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
    எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்

    கௌதம புத்தர் ஒரு மனிதரே. அவர் தன்னைக் கடவுளாக கருதவுமில்லை அப்படிப் போதிக்கவுமில்லை. இருப்பினும் பல பெளத்தர்கள் அவரை ஒரு கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். இது பெளத்த சமயத்தின் நடைமுறைக்கும் அதன் அடிப்படைக் கொள்கைக்கும் இருக்கும் ஒரு முக்கிய முரண்பாடு.
    பெளத்த சமயம் அகிம்சையைப் போதிக்கின்றது. ஆனால் இலங்கையில் பல பிக்குகள் போரை ஆதரித்துள்ளார்கள். இந்த முரண்பாட்டைப் பெளத்த சமயம் எதிர்கொள்ளாதது அதன் ஒரு குறைபாடாகும்

    Reply
  • santhanam
    santhanam

    இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் பற்றித் தெளிவான சான்றுகள் இல்லை. இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூலான மகாவம்சம் இலங்கை வம்சாவழித் தமிழருடைய தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் எதையும் தரவில்லை. அடிப்படையில் மகாவம்சம் பௌத்த மதத்தையும், சிங்களவர் பற்றியுமே கவனம் செலுத்தியுள்ளது. அதன் மேற்படி குறிக்கோளுடன் சம்பந்தப்பட்ட அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மட்டுமே தமிழர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சிங்கள இனத்தின் ஆதிபிதாவாக மகாவம்சம் குறிப்பிடும் விசயன் காலத்திற்கூட திருமணத் தொடர்புகள் காரணமாகப் பாண்டிநாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் இவர்கள் சிங்கள இனத் தோற்றத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருப்பார்கள் என்று கருதுவதே பொருத்தம். எனினும் இத்தகைய குறிப்புக்களிருந்து, இலங்கை பற்றித் தமிழ்நாட்டினருக்கு நல்ல பரிச்சயம் இருந்ததென்பதுவும், இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகள் மக்கள் இலகுவாகப் போக்குவரத்துச் செய்யக் கூடிய அளவில் இருந்தது என்பதையும் தெளிவாக்குகின்றது.

    இது மட்டுமன்றிக் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே அனுராதபுரத்தைக் கைப்பற்றிப் பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சம் தரும் குறிப்புக்களிருந்து அறியவருகின்றது. பண்டைக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய மாதோட்டத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும் என்பதும் பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டுவரை இலங்கயின் தலைநகரமாயிருந்த அநுரதபுரத்தில் மிக முற்பட்டகாலங்களிலேயே தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு.

    கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடுமென்பது யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ.இராசநாயக முதலியார் அவர்களுடைய கருத்து. எனினும், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தமிழர் பரவலாக வாழ்ந்து வந்தபோதிலும், அனுராதபுர, பொலநறுவை ஆட்சிகளின் வீழ்ச்சியுடன் சிங்களவர் அதிகாரம் தெற்குநோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல் ரீதியான தமிழ் சிங்கள முனைவாக்கம் தீவிரப்பட்டிருக்கக் கூடும். இதுவே 12ஆம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாண அரசின் தோற்றத்துக்கும் வித்திட்டது எனலாம்.

    இதன் பின்னரும் பெருமளவில் தமிழர் குடியேற்றம் இடம் பெற்றது பற்றிய செய்திகளைப் பிற்காலத்தில் யாழ்ப்பாண வரலாறு கூற எழுதப்பட்ட வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிற் காணலாம். ஆரம்பத்தில் வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர் குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இந்நூல்கள் மூலம் தெரிய வருகின்றது. இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர் குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

    Reply
  • Nackeera
    Nackeera

    //அதற்குமேல் சாணக்கியர் கலாநிதி, என்று பட்டங்கள் வேறு// தாமிரா- என்ன புதியபட்டங்கள் யாருக்குக் கொடுக்கிறீர்கள். நான் என்றும் கத்துக்குட்டிதான்.
    மூர்த்தி: //ஒப்பீட்டு ரீதியில் குறைவு என்பதோடு தமிழ் தலைமைகள் தவறை மூடிவிட்டுப் போகிறீர்கள்.// தமிழ்தலைவர்கள் பற்றி போதியளவு குற்றச்சாட்டுகள் பின்னோட்டங்கள் தொடர்ந்த வந்தது. ஆனால் மற்றயபக்கங்களை காட்ட வேண்டும் என்பதே என்நோக்கமாக இருந்தது. நான் மூடவில்லை அதுபற்று பலதடவை எழுதியுள்ளேன். ஆரம்பித்து வைத்தவனையும் எய்தவனைப் பற்றியும் பேசவேண்டியிருக்கிறது. அதனால் தான் எழுதினேன்
    //அதில் பிரபாகரன் செய்த தன்இனத்தின் மீதான அழிப்பையும் மூடிவிட்டுப் போய்விட்டீர்கள் என்றேன்// மூடவில்லை தொடவில்லை என்பதுதான் சரியானது. கட்டுரை பேரினவாதத்தின் ஒருபக்கமே கவனக்குவிப்பு இருந்தது என்பதே உண்மை. அப்பக்கத்தை மட்டுமே வெளிக்கொணர விரும்பினேன். அதற்கான காரணம் மேலும் சொல்லிருந்தேன். மீண்டும் சொல்கிறேன் பேரினவாதத்தின் கட்டமைப்பும் பெளத்த ஆதிக்கமும் எமது பிரச்சனைக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தது. இனியும் இருக்கும். மங்கையகரசி சொன்னால் சரி என்று நான் சொல்லவில்லை அதைத் தொடக்கி வைத்தவர்கள் சிங்களவர்கள் என்பதை மறுக்க முடியுமா?

    //தமிழர்க்கு ஒன்றுமில்லாமல் முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தவன்தான் பிரபாகரன்// நிச்சமாக இதில் எந்தவித தவறும் கிடையாது. எனது வாதம் என்னவென்றால் கடசிவரையும் புலிகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய புலத்துப் புலிகள் இறந்து போன பிரபாகரனின் பிணத்தின் மேல் சேறடித்து முறுக்குற்றத்தையும் பிரபாரனின் தலையில் போடுவதை முற்றாக ஏற்க இயலாது. என் தனிப்பட்ட கருத்துப்படி வன்னி அழிவுக்கான பொறுப்பை புலத்துப்புலிகளும் ஏற்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பிரபாகரனிலும் புலிகளிலும் குற்றங்களைப் போட்டுவிட்டு தப்பிக் கொள்ள இயலாது. ஏன் இன்றும் கூட செஞ்சோலைப் பிள்ளைகள் நிலை என்ன? தேசம்நெற் ஜெயபாலன் எதற்காக இன்று இலங்கைக்குப் போனார் அகிலன் பவுண்டேசன் மூலம் அப்பிள்ளைகளை எடுப்பதற்கு. புலத்தில் சேர்த்துவைத்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தேர்தல் வைத்துக் கொண்டு திரிகிறார்கள் புலத்துப்புலிகள்.

    /இதர போராளிகளும் அதேதான் என்பதை சொல்லாது/ என் எண்ணப்படி ஆரம்பத்தில் போராட வெளிக்கிட்டவர்களிடம் இனவிடுதலை மேலோக்கியிருந்தது. அதானல் போராட்டம் பற்றிய போராடும் வழிபற்றிய விவாதங்கள் அடிக்கடி நடந்தன. துப்பாக்கிகள் உயரும்போது வாய்கள் மூடிக்கொண்டன. முக்கியமாக முள்ளிவாய்கால் வரை. நான் புலியல்ல மூர்த்தி. புலிகளையோ பிரபாகரனையோ முறுமையாக ஆதரித்தவனும் அல்ல. நன்றி மூர்த்தி

    Reply
  • santhanam
    santhanam

    யாழ்ப்பாணத் தமிழர் நோக்கி அவர்களின் சமூக கட்டமைப்புகள் அரசியல் பொருளதார போக்குகள் நோக்கி பலதரப்பட்ட விமர்சங்கள் உண்டு.

    “ வெள்ளையர்கள் வந்த போது இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் மதம்மாறிக் கும்பினியாரிடம் பணிக்கமர்ந்தனர். பின்னர் ஆங்கிலங்கற்று இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியா முழுவதும் பெரும் பதவிகளைக் கைப்பற்றினர். தங்களுக்கென்று தனியாக வெள்ளையரையொத்த சில பண்பாட்டுக் கூறுகளை வகுத்து கொண்டனர். இவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் பிற தமிழர்களைத் தங்களுக்கு ஈடாக மதிப்பதில்லை. தமிழர்களிலேயே தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஆணவம் அவர்களுக்கு உண்டு.

    Reply
  • Nackeera
    Nackeera

    நந்தா//கண்டி அரசன் தமிழன் என்பது வேடிக்கையான விஷயம். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கண்டி அரசனின் இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். அவன் “தெலுங்கு” நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவன்// இதுபற்றி எனது முதற்கட்டுரையில் எழுதியிருந்தேன். நாயக்கன் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். கண்ணுச்சாமி என்ற பெயரை தேசத்தில் என் முதற்கட்டுரையிலும் உள்ளது.
    /சேர சோழ பாண்டியர்களுக்கும் எந்தவித சம்பதமும் இல்லாதவன்/ எந்த இடத்திலும் இப்படி நான் குறிப்பிடவில்லை
    //அது சரி. கண்டி அரசனின் “வாரிசுகளாக” இந்த ஈழம் கேட்டவர்கள் எப்போது மாறினார்கள்?// இவனது காலத்தில் ஆட்சி மொழி தமிழாக இருந்ததற்கு ஆதராரம் கண்டியின் அரச கைமாற்றுச்சாசதம் என்பதே குறிப்பிடப்பட்டது.
    எனக்கும் ஒரு சந்தேகம் கப்பம் கட்டாது சிங்களச்சிற்றரசர்கள் தலையை உரலினுள் போட்டு இடிப்பித்தவன் எந்த நாயக்கன்?கோடீஸ்வரன் வழக்கு “தமிழர்” உரிமை பற்றி நடந்து அல்ல. தேசமூடாக என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் நான் பல உண்மைகளை நிரூபிக்க முடியும். மேலும் அது ஒரு அரச ஊழியருக்கும் அரசுக்கும் இடையில் நடந்த வழக்கு. அரசகரும மொழிச்சட்டம் வருவதற்கு முன்னர் ஆங்கில மொழி தகைமை….// கோடீஸ்வரன் வழக்குப்பற்றி தாங்கள் எழுதியது தவறானது.
    அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களம் படிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது அதை எதிர்த்து சரியா நினைவில்லை 57ல் தொடரப்பட்ட வழக்குத்தான் கோடீஸ்வரன் வழக்கு சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டது 1956. இவ்வளக்கு பல தமிழ் சிங்கள சட்டவல்லுணர்கள் பங்கு பற்றினார்கள். வழக்கு இலங்கையில் வென்றது. அரசு வளக்கை மகாராணியாரிடம் கொண்டு சென்றபோது அவ்வளக்கை இலங்கையின் உச்சநீதிமன்றத்தில் விசாரித்தபின் பார்க்கலாம் என்று மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பீல் பண்ணியது சிங்கள அரசே அன்றி கோடீஸ்வரனல்ல. இதற்கிடையில் இலங்கை குடியரசாக்கப்பட்டது. இத்துடன் மகாராணிக்கு அதிகாரம் அற்று விட்டது. பின் என் எம் பெரோ காலம் அப்படியே கடசியாகக் கொடுத்த தீர்ப்பை அப்படி விடப்பட்டது. இது கசட்சில் உள்ளது. கசட்டின் சரியான தமிழாக்கம் தெரியவில்லை. வர்த்தகமானியாக இருக்கலாம். மேலும் சத்தியப்பிரமாணம் பற்றி எழுதியிருந்தீர்கள் அதுவே அவ்வளக்கில் ஒருமுக்கிய இடத்தைப்பிடித்தது. சத்தியப்பிரமாணமானது எந்த மொழில் வேலை செய்ய வேண்டும் என்ற உறுதியோ அறுதியோ இல்லாது இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் சிங்கள எதிர்ப்புப்போராட்டமே. சிங்களச்சட்டம் கொண்டுவந்ததை எதிர்த்த போராட்டமே.

    // எப்படி பின் வந்த மணிமேகலையின் “ரத்தமாக” முன்வந்த சங்கமித்த // சங்கமித்திரை மெளரி வம்சத்தவள் என்பது உண்மையே. மணிமேகலை புத்தமத்தைத் தழுவியள். நந்தாவின் தகவல் சரியானது. இரத்த உறவு கிடையாது இருவரும் பிச்சுணிகளே.

    //மகா வம்சத்தை எழுதிய பிக்கு “மகானாமா” ஒரு பல்லவ அரச குலத்தை சேர்ந்தவர் என்பதே ஆகும். சிகிரி காசியப்பவின் தாய் மாமன் இவர் என்பதும் இவர் காஞ்சிபுரத்திலிருந்து தனது சகோதரி இலங்கை மன்னன் தாதுசேனாவை திருமணம் செய்த பின்னர் வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது// மகாவம்சம் காலத்துக்குக் காலம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மகானாமா எனும் பல்லவன் மகேந்திர பல்லவனுக்கு முந்தியவனா பிந்தியவனா? பலகாலம் தென்னிந்தியாவை பல்லவர்கள் ஆண்டார்கள். சிரிய காசியப்பனின் கதை நான் மறந்துவிட்டேன். சொல்ல முடியுமா? சிறுவயதில் கேட்டது. அரசபோட்டிக்காக தந்தையைக் கொன்ற அல்லது சிறைவைத்த வரலாறு என்ற நினைவு.

    நான் பிரபாகரன் செய்ததை என்றும் சரிஎன்று கூறவில்லை. அதேபோன்று பெரிது சிறிதாக ஆயுதம் தூக்கிய அனைவரும் சேய்திருக்கிறார்கள். இலங்கையில் அதிகமான இந்துப்பிராணர் மதத்தை அரசியலுக்குள் நுளைக்கவில்லை. அதனால்தான் சுடப்பட்டார்களா? ஆனால் வருமானம் தரும் கோவில்களை புலிகளால் கைப்பற்றப்பட்டன. இது இலண்டனில் நடந்த பரபரப்பான விடயமும் கூட.

    நேதாஜின் தகவல்களை நானும் கேள்விப்பட்டுள்ளேன். //இதே காலத்தில் ஜரோப்பாவில் சரஸ்வதி பூஜை சிவபுராணம் பைபிளில் இருந்து தான் உருவாக்கப்பட்டது என்பது போன்ற பிரச்சாரங்கள் நடைபெற்றதம் ஞபகம் இருக்கலாம்//இப்படிக் கதைப்பார்களானால் இது வேடிக்கைகுரியதே. பைபிள் கூட கிறீஸ்துவின் காலத்தில் எழுதப்படாத ஒன்று அவருடன் இருந்தவர்கள் எவரும் அதை எழுதவில்லை என்றே நான் அறிந்தேன்.

    Reply
  • Nackeera
    Nackeera

    சந்தனம்! புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுடன் இணைந்திருந்தது என்றும் லெமூறியா கட்டத்தின் ஒரு பகுதி என்றும் பலஆய்வுகள் கூறுகின்றன. யாழ்பாண வைபவமாலை பிந்திய காலங்களிலேயே எழுதப்பட்டது. சரியான ஆண்டு வேண்டுமானால் புத்தகங்களைத் தேடிச் செல்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை காலங்காலமாக இந்தியக் குடியேற்றங்களும் வியாபாரங்களும் படையெடுப்புக்களும் தொடர்ந்து இருந்திருக்கின்றன. ஏன் இன்றும் இருக்கின்றன. மேலே தாங்கள் குறிப்பிட்ட விடயங்களை நானும் வாசித்திருக்கிறேன். ஆனால் 13ம் நூற்றாண்டில் ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டார்களா என்பது எனக்குச் சந்தேகமே. 13ம் நூற்றாண்டில் பெரும் குடியேற்றம் யாழ்பாணப்பகுதியில் இடப்பெற்றது காரணம் பலவாக அறியப்படுகிறது. முக்கிய காரணமாகக் கருதப்படுவது நோய் பரம்பலால் பெரும் மனிதஅழிவு ஏற்பட்டது.

    Reply
  • மூர்த்தி
    மூர்த்தி

    நக்கீரா தொடர்ச்சியாக தமிழர் போராட்டத்தை புலிகள் போராட்டமாக காட்டத்தான் பார்க்கிறீர்கள். மேலும்; பிழைகளை பிழை என ஆணித்தரமாக நேரிடையாக எழுத்தில் வைக்கத் தயங்குகிறீர்கள்.

    பார்க்க உங்கள் எழுத்துக்களை.;;
    /மங்கையயற்கரசி சொன்னதை எங்காவது சரி என்று சொன்னேனா?

    /மங்கையகரசி சொன்னால் சரி என்று நான் சொல்லவில்லை அதைத் தொடக்கி வைத்தவர்கள் சிங்களவர்கள் என்பதை மறுக்க முடியுமா? …../

    /நான் பிரபாகரன் செய்ததை என்றும் சரிஎன்று கூறவில்லை. அதேபோன்று பெரிது சிறிதாக ஆயுதம் தூக்கிய அனைவரும் சேய்திருக்கிறார்கள்./

    ஏன் உங்களைப்பற்றிச் சொல்லும்போது;
    /நான் ஆரம்பகாலத்தில் புலி புளொட் இரண்டும் ஒன்றாக இருந்த போது இருந்தவன். புலிகளின் அடாவடித்தனங்களைக் கண்டித்து வெளியே வந்தும் தொடர்ந்து போட்டு துப்பாக்கியை பேனாவாக மாற்றியவன்/

    /நான் புலியல்ல மூர்த்தி. புலிகளையோ பிரபாகரனையோ முறுமையாக ஆதரித்தவனும் அல்ல/
    நான் உங்களைப்பற்றய ஆய்வுக்கு வரவில்லை. ஆனால் திடமாக சொல்லாது காட்டும் நழுவல் போக்கான எழுத்துக்கு இது உதாரணம்.

    ஒரு கட்டுரையாளனாக பதில் சொல்லாது தேசத்தில் வந்த பின்னூட்டங்கனை துணைக்கழைக்கிறீர்கள். நடுநிலையாக நிற்காது கூட்டணி புலிகள் பக்கம் சாய்கிறீர்கள். ஒருவருக்கு ஆதரவாக இருப்பது தப்பில்லை. உங்கள் அரசியலை முன்வைத்து (அது யார் சார்ந்ததாக இருப்பினும்)திடமாக நிலையாக நின்று கட்டுரை ஒன்றை எழுதவோ பதில் சொல்லவோ உங்களால் முடியாது. நழுவல் போக்கான எழுத்து சமூகத்தை தப்பான வழிக்குப் போகவே வழிகாட்டும்.

    இன்னொரு முக்கிய விடயம். நான் எழுதியதில் ஒரு துண்டை எடுத்த பதில் எழுதும்போது நான் சொன்ன கருத்து தவிர்க்கப்படுகிறது.

    /ஒற்றுமைக்குப் பேர் போன தமிழன் விட்டுக் கொடுப்புக்குப் பேர் போன தமிழன் பேரினவாத அரசால் நசுக்கப்பட்டபோது தோன்றிய போராட்டம் தப்பான போராட்டம் என்று நான் சொல்லவில்லை. அந்தப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து; தமிழர்க்கு ஒன்றுமில்லாமல் முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தவன்தான் பிரபாகரன். / இதில் கடைசித் துண்டு மட்டும் பாவித்திருப்பது ஒரு உதாரணம்.

    கட்டுரையின் உள்நோக்கம் ஒற்றுமை என்று சொல்லிக் கொள்ளுங்கோ ஆனால் எழுத்தில் பிரிவினைவாதமே மேலோங்கி நிக்கிறது.

    Reply
  • palli
    palli

    போற போக்கை பார்த்தால் சிங்கள மன்னனின் சின்னவீட்டின் வாரிசுகள்தான் தமிழர்களென சொல்லுவார்கள் போல் இருக்கு;

    Reply
  • மாயா
    மாயா

    //palli on January 29, 2010 1:37 pm போற போக்கை பார்த்தால் சிங்கள மன்னனின் சின்னவீட்டின் வாரிசுகள்தான் தமிழர்களென சொல்லுவார்கள் போல் இருக்கு;
    //
    அது அன்றைக்கு நடந்துதான் உள்ளது. பெளத்த விகாரைக்குள் , இந்துக் கோயில்கள் சின்னதாக அமைக்கப்பட்டது தனது தேவிக்கு வழிபடத்தான். இந்து சமயத்திலிருந்து பெளத்தம் தோன்றினாலும் , பெளத்த ஆலயத்துக்குள் காளியும், விஸ்னுவும் வந்தது தேவிகள் தரிசனத்துக்காகத்தான். இது நாளைக்கும் பொருந்தும் என்பது வேதனையான உண்மை. இலங்கை தமிழரில் ஆண் வர்க்கம் போரால் அழிந்து விட்டது. நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களில் எவருமே, விதைவைகளுக்கு மறு வாழ்வு கொடுக்கும் மன நிலை கொண்டவர்கள் அல்ல. எல்லோருமே கன்னி கழியாதவர்களை தேடுவோர். அல்லது தான் வலசாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி சினிமா தாரகை போன்ற படித்த மனைவிகளாக இருக்க வேண்டுமென தேடுவோர். இனி வரும் காலங்களில் பல்லியின் வாக்கு பலிக்காது என சொல்ல முடியாது.

    Reply
  • palli
    palli

    //. இலங்கை தமிழரில் ஆண் வர்க்கம் போரால் அழிந்து விட்டது. நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களில் எவருமே, விதைவைகளுக்கு மறு வாழ்வு கொடுக்கும் மன நிலை கொண்டவர்கள் அல்ல. எல்லோருமே கன்னி கழியாதவர்களை தேடுவோர். அல்லது தான் வலசாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி சினிமா தாரகை போன்ற படித்த மனைவிகளாக இருக்க வேண்டுமென தேடுவோர்.//

    இதுவே யதார்த்தம்; பொருளாதார பிரச்சனை மட்டுமல்ல வேறு பல பிரச்சனைகளும் எமக்கு காத்திருக்கு;

    Reply
  • BC
    BC

    மாயா கூறிய பிரச்சனைகள் பொருளாதார பிரச்சனைகள் அவர்களுடைய ஆர்வத்தை பெறவில்லை.அவர்களுடைய பிரச்சனை ஆண்ட இனம் மீண்டும் ஆளவில்லையே என்ற பிரச்சனை.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    மாயா பல்லி பேசும் விடயங்கள் போரைவிடக் கொடுமையானது. போரால் புலிகளால் அதாவது புலிப்போரால் வாழ்விழந்த பெண்களுக்கு வாழ்வு கொடுப்பதைப் பற்றியோ போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகாலிழந்துவர்களுக்கு உதவும் நோக்கம் புலத்துப் புலிகளுக்கு இன்னும் இல்லை. வட்டுக்கோட்டையைக் கொண்டு திரிகிறார்கள் ஏதாவது செய்கிறோம் என்று காட்டுவதற்கு. அங்குள்ள போரினால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு முன்னின்று உதவவேண்டியவர்கள் புலத்துப் புலிகள் என்பதை அடித்தோ இல்லை உதைத்தோ சொல்லவேண்டும் அல்லது சொல்ல வேண்டி வரும். சேர்த்த காசுகளைப் பதுக்காது செய்த பாவங்களுக்குப் புண்ணியமாகவாவது அங்குள்ள மக்களுக்கு உதவுங்கள் புலிகளே. அல்லது அடித்த காசை கொடுங்கள் மற்றவர்களாவது செய்யட்டும்.

    Reply
  • மாயா
    மாயா

    //சேர்த்த காசுகளைப் பதுக்காது செய்த பாவங்களுக்குப் புண்ணியமாகவாவது அங்குள்ள மக்களுக்கு உதவுங்கள் புலிகளே. அல்லது அடித்த காசை கொடுங்கள் மற்றவர்களாவது செய்யட்டும்.- Kusumpu //

    நடக்கிற காரியமா குசும்பு? பிணத்தின் மேல் அரசியல் நடத்துபவர்கள் இவர்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    நக்கீரா:
    Kodeeswaran, a government servant, challenged the stoppage of his salary increment because he failed to sit for a qualifying examination in Sinhala. The litigant also questioned the legality of the Sinhala Only Act under which it was done. O.L. de Kretzer, District Judge, Colombo held that Sinhala Only Act was incompatible with Article 29 and declared that the Sinhala Only Act, bad in law. The Attorney General appealed against that judgment to the Supreme Court. The case was argued before a Bench comprising Chief Justice H.N.G. Fernando and Justice G.P.A. Silva. The Attorney General raised a preliminary objection saying that a public servant was not entitled to sue the state for arrears of salary. The Supreme Court upheld that objection without calling upon the Attorney General to submit his arguments on the Sinhala Only Act. Kodeeswaran appealed to the Privy Council, which held that Kodeeswaran had the right to sue the state, but did not comment on the Sinhala Only Act, since neither they nor the Supreme Court had heard any arguments on that matter.

    In a conversation the veteran journalist had with S.J.V. Chelvanayakam around that time, the latter had told that his Federal party did not challenge the legality of the Sinhala Only Act before the Supreme Court because it was useless. “It’s a Sinhala Supreme Court. The judges will find some technical reason to dismiss the case.” SJV had also pointed out how a former chief justice Hema Basnayake led the opposition to the District Council Bill after his retirement. It is recalled S. J. V. Chelvanayakam, C. Vanniasingham , Dr. E. M.V Naganathan and others inaugurated the Federal Party in December 1949 after the disenfranchisement of Tamils of Indian origin contrary to the assurance given by the national leader D. S. Senanayake before independence that the minorities need not have any apprehension as nothing will be done against their interests.

    federalidea.com/fi/2009/01/post_86.hTML

    மேற்படி தகவல்களின்படி கொழும்பு கீழ் கோர்ட் கோடீஸ்வரனுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கிய போதிலும் உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. பிரிவி கவுன்சிலுக்கு போன கோடீஸ்வரனுக்கு அரசின் மீது வழக்கு தொடரலாம் என்று மாத்திரம் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. “சிங்களம்” மட்டும் அல்லது “அரச கரும மொழிச் சட்டம்” பற்றி இலங்கை உயர் நீதி மன்றமும், பிரிவி கவுன்சிலும் எந்த கருத்தையும் கோடீஸ்வரனுக்கு ஆதரவாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    செல்வநாயகம் கோஷ்டி மெதுவாக “நீதிமன்றங்களைத்” தவிர்த்து அதாவது “சட்டங்களை” தவிர்த்து “அரசியல்” பண்ணதொடங்கினார்கள். “கால்சட்டை காந்தி” செல்வநாயகம் “சிங்கள” சுப்ரீம் கோர்ட் என்று விஷத்தை அவிழ்த்து விடத் தொடங்கினார். இதே செல்வநாயகம் கும்பல் ஜி.ஜி. பொன்னம்பலத்தை “துரோகி” என்று வர்ணித்தது. யு.என்.பி. கொண்டு வந்த இந்திய தமிழர்களுக்கு எதிரான “பிரஜா உரிமைச்” சட்டத்தை எதிர்த்து வெளியேறியதாக இன்றும் குறிப்பிடப்படும் செல்வநாயகம், அந்த சட்டத்தை ஆதரித்த பொன்னம்பலத்தை துரோகி என்று கூறினார். ஆனால் மலை நாட்டு தமிழர்களுக்கு ‘ஆதரவாக” செல்வநாயகம் எந்த சத்யாகிரகத்தையும் செய்யவில்லை. பாராளுமன்றத்துள்ளும், வெளியேயும் பேசியது கிடையாது.

    ஆனால் இந்த செல்வநாயகம் அந்த சட்டத்தை கொண்டு வந்த யு.என்.பி. சிங்களவர்களுடனும், அவரின் “துரோகி” என்ற வசவுகளுக்கு ஆளான தமிழ் காங்கிரசுடனும் எப்படி 1965 இல் கூட்டுச் சேர்ந்தார்? யு.என்.பி.யுடன் “தேசிய அரசு” அமைத்து இவர்கள் சாதித்தது என்ன?

    இவர்களுக்கு நாலரை வருடத்தின் பின்னர்தான் ” ஞானம்” கிடைத்து யு.என்.பி.யை விட்டு வெளியேறி “திருகோணமலை, புனித நகரம்,” என்ற கதைகளை அவிழ்த்து விட்டனர்.

    அரச கரும மொழி என்பதை எந்த நாடும் நாகரிக சட்டங்களும் “பெரும்பான்மை” பேசும் மொழி என்ற அடிப்படையிலேயே நோக்கும். இந்த உண்மை செல்வநாயகம் கோஷ்டிக்கு தெரியாமல் இல்லை. ஆனால் “தங்களின்” அரசியல் வியாபாரத்துக்கும் கொழும்பு வாழ்வுக்கும் தமிழரின் வாக்குகள் அவசியம் என்பதுவே செல்வநாயகம் கோஷ்டியின் பிரதான நோக்கம். எனவே “பெரும்பான்மைத் தமிழர்கள்” தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்க சகல வித்தைகளையும் கையாண்டனர். அதே நேரத்தில் “தமிழர்களின் வாக்குகள்” இல்லாமல் சிங்களவர் யாரும் “அரசு” அமைக்க முடியாது என்று “ஒரு திமிர்” கதையை தமிழர்களிடையே பரவ விட்டனர். இந்த கதை சிங்களவர்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கிஞ்சித்தும் கவலைப்படாத இந்த செல்வநாயகம் கும்பல் “எந்த சிங்களவன்” வந்தாலும் தமிழர்களின் வாக்குகள் தங்களுக்கே என்பதை உறுதிப்படுத்தினர். தாங்கள் எந்த “தட்டுவாணித்தனம் ” செய்தாலும் தமிழர்கள் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்று நம்பினார்கள்.

    “தமிழர்களின் வாக்குகள்” இல்லாமல் சிங்களவர் யாரும் “அரசு” அமைக்க முடியாது என்று “ஒரு திமிர்” கதையை தமிழர்களிடையே பரவ விட்டனர். அந்த நம்பிக்கையில் முதலில் “மண்” விழுந்தது 1970 ஆம் ஆண்டிலாகும். அந்த தேர்தலில் “தளபதி” அமிர்தலிங்கம் தமிழர்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதே முடிவு 2010 இலும் நிகழ்ந்துள்ளது.

    இலவச தொலை பேசி, இலவச விமான பயணம், கொழும்பு வாழ்வு போன்ற வசதிகளை ஒரு இரவில் இழந்த அமிர்தலிங்கம் சும்மா இருப்பாரா? தரப்படுத்தலில் தொடங்கி “தமிழ் துரோகிகளைக் கொல்வது” வரை கால்சட்டைக் காந்தி செல்வநாயகத்தின் ” அஹிம்சை” போர் தொடர்ந்தது. அதன் விளைச்சல் அமிர்தலிங்கத்தையே “பலி” கொண்டு முள்ளி வாய்க்காலில் முடிந்தது.

    விக்கிரமராஜசிங்கன் பற்றிய தரவில் எஹெலபொல திசாவையின்(சிற்றரசர்கள் அல்ல) மனைவி பிள்ளைகள் பற்றிய விபரங்கள் அவர்களை கொன்று ” தலைகளை” உரலில் இடிப்பித்த கதைகள் பிரிட்டிஷ் தரப்பினால் மாத்திரம் சொல்லப்பட்டவை. அவற்றை நம்ப முடியுமா? கண்ணுச்சாமியின் பரம்பரைகள் வேலூர் சிறையில் இருந்த போதும் அவர்கள் சொல்லாத கதைகளே இவை. எஹெலபொல கொழும்பு சென்று “வெள்ளையர்களோடு” அரசனைக் கவிழ்க்க முயற்சித்த குற்றத்துக்காவே தண்டிக்கப்பட்டான். பின்னர் அதே எஹெலபொல பிரிட்டிஷாரால் மோரிஷியசுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு மாண்டதும் சரித்திரம்.

    கட்டபொம்மன் வரி கொடுக்கவில்லை என்பதற்காக புளிய மரத்தில் தூக்கிய வெள்ளையர்கள் அவன் மீது சுமத்திய குற்றம் “தேசத்துரோகம்”. கட்டபொம்மன் எந்த தேசத்துக்கு துரோகம் செய்தவன் என்று யாருக்காவது தெரியுமா?

    புலிகள் “துரோகிகள்” என்று பொலிசாரின் தலைகளை வெட்டி சங்கத்தானை புகையிரத நிலையத்தில் காட்சிக்கு வைத்து தமிழர்களின் வாய்களை “மூடிய” தும் எங்கள் கண்முன் நடந்த வரலாறு. ஆனால் “புலிகளுக்கு” அந்த போலீசார் பற்றிய தகவல்கள் எப்படி கிடைத்தன? பின்னர் நடந்தேறிய “புலி-யு என் பி ” தேன்நிலவு அந்த கேள்விகளுக்கு விடை பகர்கின்றது.

    மொத்தத்தில் இந்த”தமிழ்” விடுதலை, உரிமை என்பன “அந்நியர்களின்” நலன்களுக்காகவே உபயோகப்படுத்தப்பட்டன. அது இன்னமும் தொடர் கதையாகவே இருக்கும்.

    Reply
  • Nackeera
    Nackeera

    பதிலுக்கு நன்றி நந்தா.
    தாங்கள் இணைத்தளத்தில் இருந்த ஒரு பதிவென்றைப் தந்திருந்தீர்கள். நான் இங்கு எழுதியது கோடீஸ்வரன் வழக்குடன் நேரடியாச் சம்பந்தப்பட்டவர்களின் வாக்கு மூலத்தையே. நீங்கள் தந்த இணையத்தளச் செய்தியின்படியும் வளக்கு அரசாங்கத்தால் இயலாது அடித்து மூடப்பட்டது என்பதைக் காட்டுகிறது. உயர்நீதிமன்ற அரச வழக்கறிஞ்ஞரின் வாதமும் அரச ஊழியர்கள் அரசினது முடிவை எதிர்த்து வழக்குத் தொடர ஏலாது அதன் காரணமாக அரசு அமுல்படுத்திய சிங்களமே அரசகருமமொழி என்றும் அம்மொழியில் சித்தியடையாதோர் பதவிஉயர்வுகளைப் பெற இயலாது என்று தீர்பழிக்கப்பட்டது. இந்தத்தீர்ப்பை எதிர்த்து சிறப்பு நீதிமன்றில் கொடுத்த தீர்ப்பு அரசுக்கெதிராக அரச ஊழியர்கள் வழக்குத்தொடரலாம் என்பதாகும் இதன்காரணமாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லுபடியாகாது போனது. இது நீங்கள் தந்த இணையத்தளத்திலேயே உள்ளது.Kodeeswaran appealed to the Privy Council, which held that Kodeeswaran had the right to sue the state, but did not comment on the Sinhala Only Act, since neither they nor the Supreme Court had heard any arguments on that matter பின் இதைத் தொட்டால் பிரச்சனையே என்று அரசு அடித்து மூடியது என்பதே உண்மை. பின் ஒரு முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதாவது 1956க்கு முன்பு அரசாங்கத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு சிங்களம் பாஸ்பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்பது.

    //அரச கரும மொழி என்பதை எந்த நாடும் நாகரிக சட்டங்களும் “பெரும்பான்மை” பேசும் மொழி என்ற அடிப்படையிலேயே நோக்கும்// இது தவறானது. பல ஆபிரிக்க நாடுகளில் சுகயிலி பெரும்பான்மை மொழியாக இருந்த போதிலும் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளே அரசகருமமொழியாக உள்ளது. அரசகருமமொழி என்றும் பெரும்பான்மையினரது மொழியாகத்தான் இருக்கவேணும் என்பதில்லை. அப்படி ஒரு எழுகோளை எடுப்பதே தவறாகும் என்பது என் கருத்து.

    காசியப்பனின் மாமனாக வர்ணிக்கப்படும் மாகானான எங்கும் பல்லவானாக எழுதப்படவில்லை நந்தா! முடிந்தால் அதை அறியத்தரவும்

    Reply
  • NANTHA
    NANTHA

    நக்கீரா:
    கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்துள்ளது. பின்னர் லண்டன் பிரிவி கவுன்சில் “அரச ஊழியர்கள்” அரசுக்கெதிராக வழக்கு தொடரலாம் என்றுமே தீர்ர்ப்பு கூறியுள்ளது.

    “சிங்களம் மட்டும்” என்ற சட்டம் பற்றி இலங்கை உயர் நீதிமன்றமும், பிரிவிகவுன்சிலும் எந்த வித அபிப்பிராயங்களையும் வெளியிடவில்லை.

    இந்த வழக்கில் கோடீஸ்வரனின் “அரசுக்கெதிராக” வழக்கு தொடரும் உரிமை பற்றியே பேசப்பட்டுள்ளது. அரச கரும மொழி பற்றி கோடீஸ்வரனோ பிரிவி கவுன்ஸிலோ இலங்கை உயர் நீதிமன்றமோ வழக்காடவில்லை. அந்த சட்டம் செல்லுபடியாகுமா என்பது பிரிவி கவுன்சிலில் கோடீஸ்வரனால் கேட்கப்படவில்லை.

    பின்னர் 1972 அல்லது அதற்கு முன்னர் என்று நினைக்கிறேன். இலங்கை திறைசேரி/பொது நிர்வாக அமைச்சு 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரச சேவையில் சேர்ந்தவர்களுக்கு அரச கரும மொழியில் பாண்டித்தியம் தேவையில்லை என்று அறிவித்தன. கோடீஸ்வரனும் அந்த வேளையில் அரச சேவையை விட்டு சட்டத்தரணி ஆகியிருந்தார்.

    பின்னர் 1974 இல் வட கிழக்கில் உள்ள அரச சிற்றூழியர்கள், தமிழ் மொழி மூலமான பாடசாலை எழுதுவினைஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், சிற்றூழியர்கள் என்பவர்களுக்கு “சிங்கள” தகைமை தேவையில்லை என்று அறிவித்தது.

    ஆபிரிக்காவில் இன்றும் “வெளிநாட்டவர்களின்” தலையீடு அதிகம். அவர்கள் இன்றும் “தங்கள்” மொழியில் வேலை செய்ய முடியாதுள்ளனர். அமெரிக்க அரசியல் சாசனப்படி “ஆங்கிலம்” மட்டுமே அரசகரும மொழி. கனடாவிலும் அப்படியான நிலை இருந்தது. பிரஞ்சு கனடியரான பியரே எல்லியட் ட்ரூடோ பிரதமராகி 1967 இல் பிரிட்டனுடனான தொடர்புகளை துண்டித்த பின்னர் “பிரஞ்சும்” அரச கரும மொழி அந்தஸ்த்தைப் பெற்றது. இலங்கையிலும் இன்று “தமிழும்” அரசகரும மொழி அந்தஸ்த்தை “ராஜீவ்” காந்தியின் தலையீட்டால் பெற்றுள்ளது.

    சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் பற்றி படித்த/தேடிய போது ஒரு இலங்கை இணையத்தளத்தில் மகாவம்சம் எழுதிய மகானாமா பிக்கு சீகிரி காசியப்பாவின் தாய்மாமன் என்றும் பல்லவ வம்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு வேறு வழிகளில் தகவல்கள் இல்லை.

    பல்லவர்கள் தமிழ் “மூவேந்தர்” பட்டியலில் சேர்க்கப்படாதவர்கள். ஆனால் பல்லவர்களே அதிக காலம் தமிழ் நாட்டை ஆண்டவர்களாக வரலாறு கூறுகிறது.

    Reply
  • Nackeera
    Nackeera

    நீங்கள் எழுதியது மிகச்சரியானதே பல்லவர்கள் மூவேந்தர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. முக்கியமாக மூவேந்தர்கள் முருகனையும் சிவனையுமே முக்கிய தெய்வங்களாக நிலை நிறுத்தினர். பல்லவர்களின் தெய்வமாக தொடர்ந்து விளங்கியவர் விஸ்ணுவே ஆவார். முக்கியமாக பல்லவர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் முதன் முதலில் ஏற்பட்ட திருமணத் தொடர்வு மகேந்திர பல்லவச் சக்கரவர்த்தியன் மகன் மாமல்லன்தான் சோழப்பேரசுடன் திருமணம் செய்து பல்லவ சோழ உறவு வளர்ந்தது. மேலும் நீங்கள் வாசித்ததன் படியும் நான் அறிந்ததன் படியும் காசியப்பனின் தாய்மாமன்தான் மகாவம்சத்தின் மகானாமா என்பது. ஆனால் காசியப்பன் முடிக்குரியவனல்ல என்பதையும் நிச்சயம் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதிலும் அரச இரத்த உறவே இல்லை என்று வாசித்த ஞாபகம் இருக்கிறது. இங்கேயும் காசியப்பனின் சகோதரன் திராவிட அசரர்களின் துணையுடன்தான் காசியப்பனை வெல்கிறான். மேலும் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் விஜயன் கி.மு 4ம் நூற்றாண்டுகளில் வந்தவன் தாதுசேனன்;காசியப்பன் மகாவம்சம் மகானாமா எல்லாம் சுமார் கிபி 4ம் நூற்றாண்டுகளில் நடந்தவை. இதனால் விஜயனுக்கும் வேடுவக்குவேனிக்கும் பிறந்து வளர்ந்து வந்த பரம்பரைதான் சிங்களவர் என்பது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்றாகவே உள்ளது. வெள்ளையரைத்தவிர இலங்கை முமுவதும் என்று ஒரு இராசதானியின் கீழ் இருந்தது இல்லை. பல வேறுபட்ட இனத்தவர்களால் வெளிநாட்டவர்களால் யாகவரால் மெளரியர்களால் மூவேந்தர்களால் வன்னியர்களால்…. இன்னும் இன்னும் பல இனங்களால் ஆழப்பட்ட ஒருநாடுதான் இலங்கை. சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும் ஒரு தனிப்பட்ட சாதியாகவோ வம்சமாகவோ அடைக்க முடியாது. மொழியை வைத்தே இனம் அளக்கப்படுவாதால் மொழியை அவமதிக்கும் போது அது ஒரு இனத்தையும் சேர்த்தே அவமதிப்பதாகிறது. இன்றும் சிங்களத்தின் வேராக இருக்கும் குறைந்தத 5000 சொற்களை புறம் தள்ளுவோமானால் சிங்களம் எனும் மொழி இருக்காது என்பது ஆய்வு. நாமும் எமது சந்ததியும் சரித்திங்களையும் வரலாறுகளையும் அறிவது முக்கியம் ஆனால் ஏற்றத்தாழ்வுகளை மனதில் கொள்வதே அபத்தமானது.

    இன்றைய அரசியல் நிலைமைகளை மக்களின் மனங்களையும் எதிர்காலங்களையும் வைத்தே அரசியல் நிர்ணயிக்கப்பட வேண்டுமே அன்றி பண்டைய புராணத்தை வைத்தல்ல என்பதை அறிந்திருந்தும் தெரிந்தவற்றை எழுவது கடமை. இது யாருக்காவது உதவும் என்ற வகையில்தான் இதை எழுதுகிறேன். அன்று பண்டா; ஜேஆர் போன்றோர் தமிழர்பக்க நியாயங்களைப் பார்த்தது போல் எம்தமிழ் தலைவர்கள் சிங்களப்பக்க நியாயங்களைப் பார்க்க வில்லை என்பது வேதனைக்குரிதே. பின் பண்டா; ஜேஆர் இன் சந்தர்ப்பவர அரசியல் அவர்களை துவேசிகளாக மாற்றியது என்பது வேறு கதை. நாம் சிங்களமக்களின் பக்கமுள்ள நியாயங்களைப் பார்ப்போமானால் தமிழிழம் என்ற ஒன்றை முன்மொழிந்திருக்க முடியாது. அதாவது 25சதவீதமான தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் 65சதவீதத்துக்கு மேல் என்பதை எவர் அல்லது எந்த நாடு ஏற்கும்? அதிலும் 80சதவீதமான கடற்பரப்பு தமிழர்களுக்கு என்றால் சிங்களவர்கள் கடற்தொழிலுக்கு எங்கு போவது? இப்படி தொடர்ந்து இருபக்கங்களிலும் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்.

    இன்று இலங்கையில் வாழும் மக்களின் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு; உடை ; உறையுள் எனும் 3ம் கிடைக்கக் கூடிய தமது மொழியிலே தமது பகுதிகளில் அளவளாவி பயமின்றி கருமம் நடத்தக் கூடிய நிலை இருந்தால் இதைவிட வேறு எது அங்குவாழும் அப்பாவி மக்களுக்கு வேண்டும். நம்புவோம் இந்தக் குறைந்த பட்ச தேவைகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் கிடைக்குமாறு நாடமைந்தால் இலங்கையை விட வாழ்வதற்கு இலகுவான நாடு உலகில் எதுவும் இருக்கேலாது. இங்கே குளிருக்குப் பயந்து உடுப்புப் போட்டு களட்டுவதிலேயே எமது வாழ்நாளின் அரைப்பங்கு போய்விடுகிறது.

    Reply