இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும்

lttelogo1.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

23.01.2010

இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும்.

பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல்.

தேசிய இனங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கி இடுக்கத்தின் உச்சியில் வைத்து நடாத்தப்படுகின்றது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வாழ்வாதாரங்களை அழித்து தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவர்கள் இரத்தத்தில் சிங்கக் கொடி ஏற்றி விட்டு நடாத்தப்படுகிறது.

இதற்குத்தான் ஜனநாயகம் என சிங்கள பேரினவாதம் பெயர் வைத்துள்ளது.

ஒடுக்குமுறைக்கும் இடம் பெயர்தலுக்கும் இரத்தக்களறிக்கும் சிங்கள பேரினவாதம் வைத்தருக்கும் பெயர்தான் ஜனநாயகம். இன உரிமைக்காய் போராடியவர்களை கொடும் சிறைக்குள் அடைத்துவைத்தும் சமாதானம் பேசியவர்களை கொன்று ஒழித்தும் ஈவிரக்கமற்ற அநீதிகள் புரிந்த பதவியின் பெயர்தான் இலங்கையின் ஜனாதிபதி.

இதற்குத்தான் இப்போது தேர்தல்.

தேர்தல் சமயங்களில் தம்மை நல்லவர் போல் காட்டி சமாதானம் பேசி அப்பாவிகளான தமிழ்மக்களை நம்பவைத்து மீண்டும் ஏமாற்றி அவர்களை ஒடுக்குவதுதான் இலங்கை ஜனாதிபதி தேர்தல். சிங்கள பேரினவாதம் தன்னை வளர்த்துக்கொள்ளுவதற்காகாவும் தமிழர் ஒடுக்குமுறைக்காக சில மாற்றங்களைச் செய்துகொள்ளுவதும்தான் இந்த தேர்தல்களின் வெளிப்பாடுகளும் முடிவுகளுமாக இருக்கும்.

ஆனால் இதில் போட்டியிடும் பேரினவாதிகளுக்குள் தமிழ் இன ஒடுக்குமுறைக்கொள்கையில் எந்தக் கருத்துவேறுபாடும் இருக்காது.  இதுவரை காலமும் ஏற்படாத மனித பேரவலத்தை ஏற்படுத்தி தமிழர் இரத்தத்தில் கொடியேற்றிய இந்த ஜனாதிபதி தேர்தல் ஈழத் தமிழர்களின் துக்க தினமாகும்.

தமிழீழத்தில் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்த தேர்தல் நாளை இனப்படுகொலையின் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி வேண்டுகிறோம். புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கு எமது அவலம் தெரியும்படி கறுப்புக்கொடிகள் ஏற்றி துக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.

நன்றி

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • Appu hammy
    Appu hammy

    A group of persons disguised as LTTE members had assaulted UNP activists in Trincomalee Nayanagam and Sachithanandan and attacked their van at around 6 p.m. on the 20th. The group had also threatened to kill their family members if they supported Common Presidential Candidate General Sarath Fonseka.

    An investigation into the incident by us revealed that the group of individuals posing as LTTE members was in fact members of the military intelligence unit. The group that attacked the UNP activists it is learnt was headed by Major T.M.K.P.T. Bandara.

    Major Bandara works under Northern Commander Major General Mahinda Haturusinghe.

    The Defence Secretary has assigned Major General Mahinda Haturusinghe and former IGP Chandra Fernando to create a terror situation in the North to prevent people form casting their votes on election day. A representative from the multinational Nestle Company, Anil Koswatte has been assigned to stuff ballots in the midst of the terror.

    Reply
  • மாயா
    மாயா

    ஒரு பக்கம் சரத்துக்கு ஆதரவளிக்கச் சொல்றியள். கூத்தமைப்பை கொண்டு ரணில் மற்றும் சரத் ஆகியோரோடு களம் இறங்கிறியள். சிவாஜியை நடிக்க வைக்கிறியள். பகிஸ்கரிக்கச் சொல்றியள். இப்ப துக்க தினமாக கறுப்புக் கொடி ஏத்தச் சொல்றியள். எதை மக்கள் செய்வது? எதை மக்கள் நம்புவது? ஒன்று மட்டும் நிதர்சனமாக தெரியுது. அது புலிகள் பல கூறாக உடைந்து போயுள்ளது மட்டும். இதுவும் நல்லாயிருக்கு.

    இன்றைய இலங்கை அரசியலில, மகிந்த பேச்சுகள் தாய் மாதிரி. அதாவது நடக்கக் கூடியதை சொல்றார்.

    சரத்தின் பேச்சு , காதலன் , காதலிக்கு கொடுக்கும் பொய் வாக்குறுதிகள் போன்றது. இவை நடக்க சாத்தியமே இல்லாதது.

    தமிழ் கட்சிகளின் பேச்சு, சந்தைக் கடை மீன் வியாபாரிகள் போன்றது. நாறுவதற்கு முன் விற்றால் போதும் என்ற நிலை.

    ஏனைய கட்சிகள், வீடு – காணி விற்கும் தரகர்கள் போன்றது. வந்தாலும் , வராவிட்டாலும் கிடைக்கும் கைச் செலவுக்காக எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.

    இதில் புலிகள் நிலை பரிதாபம். எதை வைத்து சுருட்டுவது என கலக்கம். அதனால் , நாளுக்கொரு வேசம். அவை முற்றும் கலைய வெகு தூரமில்லை. மக்கள் பெரும்பாலும் விழித்துக் கொண்டு விட்டனர்.

    புலிகளது அரசியல் கோவணத்துக்குள் சிக்கிவிட்டது பரிதாபம். அதற்கு இது சாட்சி. காதலித்ததுக்காக பொட்டு வைத்த (மரண தண்டனை விதித்த) புலிகள் இன்று , இப்படி விபசார விளம்பரங்களில் இறங்கியுள்ளது. transcurrents.com/tc/2010/01/sex_unsells_no_blood_for_panti.html

    Reply
  • urai
    urai

    தமிழர்களைக்கொன்று குவிப்பதற்கு காரணம்,முதலில் புலிகள்,அத்ன் பின்பே சரத்தும், பொன்சேகாவும்.

    புலிகளாலும்,மற்றும் அமைப்புகளினாலும் சிங்களவர்களாலும் கொல்லப்பட்ட தமிழர்களின் உறாவினர்களிற்கு தினமும் துக்கதினமே.

    துரை

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    தேர்தல் முடிந்தவுடன் மழைப் பேய்ந்து ஓய்ந்தமாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். பிறகு கணக்கு வழக்குகள் பார்த்து,தேவையான இடங்களுக்கு தாவி, மீண்டும் வியாபாரத்தை துவங்கிவிடுவார்கள்!. ஆனானப்பட்டவர்களே, கோடம்பாக்கத்தில் சினிமா எடுத்து கோவணத்தை இழந்துள்ளார்கள்!. “ஐங்கரன் இண்டர்நேஷனலை” யார் படமெடுக்க சொன்னது, தற்போது கோவணத்தை இழந்து, அனைத்து “இலங்கையர் போல்” இந்தியர்களை நிந்திப்பது அரசியல் கருத்தாகுமா?. இராணுவ மயப்படும் அரசியலைப் போல், அரசியலில் “வியாபார கருத்துக்களை” இனம்காண வேண்டும்!. என்னுடைய 19 வது வயதில் பி.ஜே.பி.யின் ஆர்.எஸ்.எஸ். ஸில் இணைந்தேன், 19 வது வயதில், ஒரு திராவிட கட்சியின் தமிழக “மாநில நிர்வாகியாக” “தொண்டர் அணியின்(இராணுவ பிரிவு)” இருந்துள்ளேன்(முரண்பாடு அல்ல). ஆகவே என் வாழ்நாள் முழுவதும் “அரசியல் இராணுவம்” என்பதில் பழகியுள்ளது. சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், இந்திய தமிழர்கள் ஆகியோர்,பெரும்பாலும் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள்!. இவர்களின் இளைஞர்களின் வருங்கால வேலை வாய்ப்புகளை, “புத்தமத அணுசரணையுடன்” இதற்கு, சிங்களவர்கள், “இராணுவ வேலை வாய்ப்புகளில்” கவனம் செலுத்தியுள்ளனர். ஆனால் இந்திய தமிழர்களும்(தமிழகம்), இலங்கைத் தமிழர்களும் இந்த பிரத்தியேக “வருங்கால ஆபத்தில்” கவனம் செலுத்தாது, “புலன் பெயர்ந்தவர்கள் தப்பித்து விட்டவர்கள்” என்ற ரீதியில், “இன்டிவியூஜுவல் பிரஸ்பெக்டிவ் (சமுக சிந்தனை ஓட்டமற்ற)” அடிப்படையில் “வியாபார அரசியல் சிந்தனைகளை” தமிழரின் தாகமாக முன் வைக்கிறார்கள். சிங்களவர்கள் “இராணுவ அரசியல் சிந்தனைகளை” உருவாக்குகிறார்கள்!. தமிழர்களில் ஒருசிலர் “பில்லினேயர்கள் ஆவதற்கு” பலர் வறுமையில் தள்ளப்படுவதே இதன் இயங்கியல்!. சிங்களவர்களின் “சமூக இராணுவ இயந்திரத்திற்கு” வேலைவாய்ப்பு வழங்குவதற்கு “புது,புது அரசியல் பிரச்சனைகளை ” உருவாக்குவதுதான் வருங்கால அரசியல்!. இதில் “பெண்களின் உள்ளாடைகளை”, இலங்கைத் தயாரிப்பை மேற்குலகத்தினர் வாங்கக்கூடாது என்ற “அரசியல் வியாபார கருத்து” எந்த தமிழரின் தாகம்!. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை!.

    Reply
  • BC
    BC

    மாயா, புலிகளின் குப்பை கொட்டும் இணயதளங்கள் இந்த விபசார விளம்பரத்தை பெருமையுடன் பிரசுரித்துள்ளன. புலிகளின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு இது உதாரணம்.
    தமிழர்கள் ரிவி, சினிமா பார்த்து தமிழ் கலாச்சார சீரழிவு ஏற்படுகின்றது என்று புலிகளுக்கு மிக பெரிய கவலையாம். என்ன ரிவி, சினிமாவுக்கு கொடுக்கும் காசையும் தங்கள் பொக்கற்றை நிரப்ப தரலாமே என்பதும், கேட்பது புலி பாடலாகவும்,பார்ப்பது புலிப்படமாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் தான்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    The Rajapakse regime has commenced working the “caste” campaign within Army rank and file in a bid to dent and damage the solidarity shown by soldiers to Fonseka. There are also rumours that some officers from the Karawe caste group are being treated shabbily. It remains to be seen as to how successful this “caste campaign” would be. But once again the politicisation process of the military continues this time on crude, caste lines./ -dbsjeyaraj.com/dbsj/archives/1315

    /Rise of a Govi caste elite in the late 19th century
    By the 19th century, large numbers of traditional chiefs had been killed in successive battles with Portuguese, Dutch and British over 400 years of colonialism and the status of the remaining traditional chiefs had been reduced to that of Colonial servants. The Dutch in the 18th century and the British in the 19th century had actively sought ways to curb the power and influence of the native chiefs and headmen.

    The late British period saw the proliferation of native headmen and a Mudaliyar class resembling English country squires, complete with large land grants by the British, and British granted native titles. (Mudaliyar is a South Indian and Tamil name for ‘first’ and a person endowed with wealth. The Mudaliya class was created by the Portuguese colonials in the 17th century by enlisting natives of other castes form the coastal areas, who were most likely to serve the Portuguese masters with utmost loyalty)/–wikepedia.

    தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் குடும்பம், ஜாதிகளுக்கு இடையே சிண்டுமுடித்து விடுவதில், தன் இருப்பின் அங்கமான தந்திரோபாயமாக கையாள்வது பலருக்கு தெரியாது. 1950 களில்,இருபது பேர்கூட வாசிக்காத கையெழுத்துப் பிரதியாக இருந்த “முரசொலி கையேட்டின்” பெயரை பலர் ஜாதியைப்பற்றி யோசிக்காத காலத்தில், தன் ஜாதியான “மேளக்காரர்களை(டமாரம்)” பிரதிபலிப்பதாக தேர்ந்தெடுத்தது பலருக்கு இப்போது வியப்பளிக்காதது மிகையில்லை!. அதெல்லாம் சரி தற்போது அவசரமாகவும், ஆபத்தாகவும் இருப்பது, இலங்கை “கன்டக்ஸ்ட்டில்” இவர்கள் மூக்கை நுழைக்கும் விஷப்பரிட்ஷை!.

    Reply
  • soosai
    soosai

    வடக்கு கிழக்கு பகுதிகளில் புதிதாக 25 இராணுவ முகாம்கள் நிறுவப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பிரதேசங்களில் இந்த புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

    மல்லாவி, பூநகரி, இரணைமடு, முல்லைத்தீவு மற்றும் முக்கிய நிலைகளில் இந்த புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட வன்னிப் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை அமைக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

    இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட விமான ஓடுதளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழீவிடுதலைப்புலிகளின் ஊடகத்துறை

    இந்த ஊடகத்துறையின் முகவரியை தந்தால் நல்லது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நாளை மகிந்த மீண்டும் வென்று வந்தவுடன், தாங்கள் மூக்குடைபட்டதை மறைக்க, தமது லோகோவைப் பாவித்து யாரோ விசமப்பிரசாரம் மேற்கொண்டுள்ளதாக சரத் பொன்சேகா பாணியிலேயே மறுப்பறிக்கை வரும்.

    Reply
  • thurai
    thurai

    புலிகளின் தலைவர் எங்கேயென்றால் தெரியாது. புலிகளின் தலைமைச்செயலகத்திற்கு முகவரியில்லை தமிழீழம் கடல் கடந்த ஈழமாக மாறிவிட்டது. மாமனிதர் பட்டம் கொடுக்க கொலைகளில்லை மாவீரர் தினமும், துக்கதினமும் கடல் கடந்த தமிழீழமுமே புலிகளின் பொழுதுபோக்கு.

    துரை

    Reply