ஹெயிட் டியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் அப் பிரின்ஸ் நகருக்கு மேற்கே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்ஸ்டர் அளவில் இது 4.7 ஆகும். சேத விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
ஏற்கனவே போர்ட்-அப்-பிரின்ஸ் நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணியில் பன்னாட்டு மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இருந்தும் இடிபாடுகளில் பிணங்கள் கருகி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வீடுகளை இழந்த இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய சுகாதார வசதி அங்கு இல்லை எனவே ஹெய்டியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர் கண்களை இழந்துள்ளனர். கால், கைகளையும் இழந்து தவிர்க்கின்றனர் தலைக் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் முகாம்களிலும் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.