இலங்கையின் 6வது ஜனாதிபதியாக மீண்டும் மகிந்த ராஜபக்ச : த ஜெயபாலன்

MR_Posters இலங்கையின் 6வது ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவது உறுதியாகி வருகின்றது. ஏற்கனவே தேசம்நெற் இணையத்தில் எதிர்வு கூறப்பட்டது போல தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீண்டும் ஆட்சிபீடம் ஏறவுள்ளார். யாழ்ப்பாண வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அமையும் என்பது மீண்டும் ஒரு தடவை நிருபணமாகி உள்ளது.

இலங்கை நேரப்படி காலை ஆறுமணி வரை வெளியான முடிவுகளில்  மகிந்த ராஜபக்ச 60 வீத வாக்குகளைப்பெற்று முன்னணியில் உள்ளார். இரண்டாவது நிலையில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா 22 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.

வெளியான தபால் வாக்குகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே முன்னணியில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

தேர்தல் – 70 வீதமான வாக்குகள் பதிவு :

ஜனவரி 26 இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களே தங்கள் வாக்குகளைச் செலுத்துவதற்கான நடைமுறையைக் கொண்டிருக்கவில்லை. சராசரியாக 70 வீதமான வாக்குப் பதிவுகளுடன் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு வன்முறையுடன் இடம்பெற்றது. ஆனால் எதிர் பார்க்கப்பட்டது போலவே தமிழ் பகுதிகளில் வாக்குப் பதிவுகள் மந்தமாகவே இடம்பெற்றுள்ளது.

தேர்தல் ஜனவரி 26 காலை ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன. இக்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தப்படாத போதும் யாழ் மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய தேர்தலில் பிரதான வேட்பாளரான சரத்பொன்சேகா தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் காணப்பட்டார். தேர்தலில் ஒருவர் வாக்களிக்க முடியாது இருப்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கான காரணமாக அமையாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரட்ண வாக்களிக்க வந்த போது தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அதனால் அவர் தேர்தல் ஆணையாளரின் விசேட அனுமதியின் கீழ் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 14 088 500 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் 761340 வாக்காளர்கள் புதிதாக வாக்களிப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். மொத்த வாக்காளர்களில் சராசரியாக 70 வீதமானவர்கள் வாக்களித்து உள்ளனர். தமிழ் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்:

Jaffna  721,359
Vanni 266,975
Batticaloa 333,644
Digamadulla 420,835
Trincomalee 241,133

தமிழ் வாக்காளர்களின் முக்கிய மாவட்டமான யாழ் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு 21 வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்காமல் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு பிரச்சாரம் செய்ததிருந்த போதும் தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நிராகரித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரித்த போதும் தமிழ் மக்கள் வாக்களிப்பை பெரும்பாலும் நிராகரித்துள்ளனர்.  

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Comments

  • Nethaji
    Nethaji

    வாக்கே இல்லாத சரத்துக்கு வாக்களிக்க கேட்ட புலிப் புத்திசீவிகள் தமிழர் கூத்தமைப்பு புலன்பெயர் புத்திசீவிகள் சூரிச் மாநாட்டார் வியன்நா மாநாட்டார் தகவல் நடுவங்கள் வட்டுக்கோட்டை பேய்க்காட்ல்கள் எல்லாருக்கும் முள்ளிவாய்க்காலே சரியான மடம்.

    Reply
  • Rohan
    Rohan

    /தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை தேர்தலை பகிஸ்கரிக்காமல் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு பிரச்சாரம் செய்ததிருந்த போதும் தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நிராகரித்துள்ளனர். /

    ஆனால், குடானாட்டில் போடப்பட்ட வாக்குகளில் மிகப் பெரும்பான்மை எங்கே போயிருக்கிறது என்று பார்ர்க்கலாமே?

    தமிழர்கள் வாக்களிக்க இம்முறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள ஏன் மறுக்கிறோம்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கை சென்ற ஜெயபாலன், இறுதியில் கொஞ்சம் தடுமாறியிருந்தார். சரத் வென்றிருந்தால் தனது வானொலிப் பேட்டியில் யாழிலிருந்து சொன்னதை சரியான கணிப்பென்று எழுதியிருப்பார். ஆனால் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறுவதை உணர்ந்து, பழைய பல்லவியையே துணைக்கழைத்து விட்டார். இறுதியில் ஜெயபாலனை நம்பி பல்லியும், சோதிலிங்கமும் ஏமாந்தது தான் மிச்சம். எனிப் பல்லி தனது சரத் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை தேசத்தில் எடுத்து விடலாமே……….

    Reply
  • rasathati
    rasathati

    மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளேன்.

    Reply
  • Naane
    Naane

    நேதாஜி சொன்ன மடத்தில் சேர்க்கப்படவேண்டிய அமைப்புகள் இன்னும் பல உலமெங்கும் இருக்கு.அடுத்த ஆறு வருடத்தில் மகிந்தா அதைச் செய்வார் என்று எதிர்பார்கின்றோம்.

    Reply
  • Jeyabalan
    Jeyabalan

    //தமிழர்கள் வாக்களிக்க இம்முறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள ஏன் மறுக்கிறோம்?//
    தேர்தல் தினமான ஜனவரி 26ல் நான் யாழ்ப்பாணத்திலேயே நின்றிருந்தேன். யாழ்ப்பாணத்தில் பலருடனும் பேசியதில் அவர்கள் பெரும் அளவில் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது. தேர்தலில் வாக்களிக்கச் சென்றவர்களையும் வாக்களிக்க விரும்பாதவர்களையும் சந்திக்க முடிந்தது.

    நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் யாழ் சமூகம் ஒரு ஜனநாயக நடைமுறையில் ஆர்வம் கொண்ட சமூகம் அல்ல.

    த ஜெயபாலன்

    Reply
  • Jeyabalan
    Jeyabalan

    //இலங்கை சென்ற ஜெயபாலன் இறுதியில் கொஞ்சம் தடுமாறியிருந்தார். சரத் வென்றிருந்தால் தனது வானொலிப் பேட்டியில் யாழிலிருந்து சொன்னதை சரியான கணிப்பென்று எழுதியிருப்பார். ஆனால் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறுவதை உணர்ந்து பழைய பல்லவியையே துணைக்கழைத்து விட்டார்.// பார்தீபன்.

    நுனிப்புல் மேயவது என்று அறிந்திருப்பீர்கள் பார்த்தீபன் உங்கள் கருத்தும் அதனையே தெரிவிக்கின்றது.எங்கு தடுமாறினேன் என்று கூறுகின்றீர்கள். உங்கள் கருத்தை அல்லது உங்களுக்கு விருப்பமான கருத்தை கொண்டிருக்கவில்லை என்றால் தடுமாற்றம் என்று ஆகாதே. யாழில் சொன்னதும் ரிபிசியில் சொன்னதும் தேசம்நெற்றில் சொன்னதும் ஒரே விடயமே. மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு பொதுவாக அல்லாமல் எங்கு எனது கருத்து தடுமாறியுள்ளது என்று குறிப்பிடவும்.

    Reply
  • Rohan
    Rohan

    ஆனால், சிவாஜியும் தோத்தார், டக்ளசும் தோத்தார். சித்தரும் தோத்தார், கருணாவும் தோத்தார். பிள்ளையானும் கூடவே தோத்தார்!

    ஓரளவுக்கு, கூட்டமைப்பினரும் தோத்தார் (அவர்களுக்கு மீசையில் மண் படவில்லை என்ற சமாதானம் இருக்கிறது).

    ஒரு நம்பிக்கையில் வாக்களித்த தமிழ் மக்களும் தோத்தார். ஆனால், அவர்கள் ஒன்றாய் நின்றதன் மூலம் பலரைத் தோற்கடித்தனர்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ஏற்கனவே மே 18 அழிவிலிருந்து, மீள்கட்டுமானத்தில், பெருமளவு உலோகங்கள், குறிப்பாக பித்தளை மற்றும் செம்பு “ஸ்க்ராப்” பெருமளவு “கிளியர்” செய்யப்பட்டு விட்டன. மகிந்த அவர்களின் வெற்றிக்குப் பிறகு, சோனியா காந்தியின் “முந்தானையைப் பிடித்துக் கொண்டிருக்கும்”,”பச்சோந்திகள்” எத்தனைப் பேர் “மக்கள் ஞாபக மறதியுடையவர்கள்” என்பதை அறிந்து, “செக்கென்ன சிவலிங்கமென்ன”(சீனா – இந்தியா என்ன மேற்குலகமென்ன), என்றிருக்கும் “அரசியல் வியாபாரிகள்”, சீன கலைஞர்களைக் கொண்டு “தற்போது”(வரலாற்றில் என்றுமே இல்லாமல்)”நட்சத்திர இரவு நடத்தி” தங்கள் “வண்ணங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்” என்பதை, “மேற்குலகம், கிழக்குலகம்” என்று கிறுக்குத் தனமாகப் பேசி, தங்கள் “அரசியலை சூது விளையாடிய” அடிமுட்டாள்கள்தான் உணர்ந்துக் கொள்ளவேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு இதனால் நஷ்டமேதுவும் இல்லை!. இனியென்ன, “பச்சோந்திகள்” கணக்கு வழக்குகளைப் பார்த்து, “வண்ணங்களை மாற்றிக் கொண்டு”, புதிய வியாபாரங்களை துவங்கி விடுவார்கள்!.

    Reply
  • thurai
    thurai

    //நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் யாழ் சமூகம் ஒரு ஜனநாயக நடைமுறையில் ஆர்வம் கொண்ட சமூகம் அல்ல.//த ஜெயபாலன்

    மண்ணாசை,பொன்னாசை கொண்டவர்களே அதிகம். புலத்தில் காணி வீடு, கொழும்பில் காணி வீடு, யாழ்ப்பாணத்தில் காணி வீடு. யார் எங்களை ஆண்டாலும் பரவாயில்லை எங்களிற்கு அடிக்காமல் இருந்தால் போதும் என்ற எண்ணமே பெரும்பாலானோரிற்கு.

    எங்கள் மண், எங்கள் மக்கள் என்று சிந்தித்து வாழ்வோரை விட, நான் எனது குடும்பம் என வாழ்வோரே அதிகம். இந்த நிலமை தமிழரிடத்தில் மாறும்வரை இலங்கைத்தமிழரை கடவுளாலும் காப்பாற்ர முடியாது. தமிழர்களின் மனங்களில் மாற்ரம் வரும் வரை மொழியுருமை, விடுதலை, தமிழ்தேசியம் பற்ரிப் பேசாமல் இருப்பதே தமிழரை அழிவிலிருந்து காப்பாற்றும்.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் யாழ் சமூகம் ஒரு ஜனநாயக நடைமுறையில் ஆர்வம் கொண்ட சமூகம் அல்ல…//

    ஜெயபாலன்,
    மேலேசொன்ன கருத்து கொஞ்சம் குழப்பமாகவும் எழுந்தமானமாகவும் இருக்கிறது கொஞ்சம் தெளிவு படுத்த முடியுமா?

    Reply
  • BC
    BC

    //ஜெயபாலன்-நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் யாழ் சமூகம் ஒரு ஜனநாயக நடைமுறையில் ஆர்வம் கொண்ட சமூகம் அல்ல.//

    அவர்களின் ஆர்வம் எல்லாம் துப்பாக்கி வெடிகுண்டுகளிலும் கொடூரமானவனை, பயங்கரமானவனை தலைவனாக தலயில் துக்கிவைத்து கொண்டாடுவதிலும் தான் இருக்கிறது.
    நல்ல காலமாக யாழ்ப்பாண பெரும்பான்மை வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் அமைவது அமைதியான வாழ்வை விரும்பும் தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு.

    Reply
  • Ra.ruban.
    Ra.ruban.

    வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் நல்லமுடிவுகளே! ஒவ்வோரு கட்சிகளும் தமது தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

    இதில் மறுதலையாக இன்னொருவிடயமும் உள்ளது. பெரும்பான்மை இன மக்கள் அமைதியைவிரும்புகிறார்கள். சிறுபான்மையின மக்கள் பழிவாங்கத்துடிக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் யுத்தத்தை விரும்புகிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜெயபாலன்,
    நான் நுனிப்புல் மேய்ந்துவிட்டு கருத்தெழுதவில்லை. சென்ற ஞாயிறு வானொலியில் தங்கள் கருத்தை நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் மறைமுகமாக மகிந்த தேர்தலை வன்முறைக் களமாக மாற்றியிருப்பது போலவே தங்கள் கருத்தும் இருந்தன. தங்கள் கருத்தையே அன்று ராம்ராஜ் மற்றும் சோதிலிங்கம் தமக்குச் சாதகமாக்கி ஏன் சரத் வரவேண்டுமென்ற தமது வாதங்களை எடுத்து வைத்தனர். அப்போ அவர்களும் நுனிப்புல் மேய்ந்தனரோ??

    நான் எந்தக் களத்தில் கருத்தெழுதினாலும் முடிந்தவரை தாயக நிலைமைகளை அங்கிருப்பவர்களிடம் தொலைபேசி மூலமறிந்தே பெரும்பாலும் கருத்துகளை வைத்து வருகின்றேன். அந்த வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து மகிந்தவே முன்பை விட அதிகமாக வாக்குகளைப் பெற்று தமிழர்களின் வாக்குகளின் தேவையேற்படாமல் பெற்றி பெறுவாரென்பதை தொடர்ந்தும் பதிந்து வந்தேன். அது சரியென நிரூபிக்கப்பட்டுமுள்ளது. கூத்தமைப்பு மீண்டுமொரு வரலாற்றுத் தவறை புரிந்துள்ளது. நேற்று இரவு தீபம் தொலைக்காட்சியில், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பிரித்தானியாவில் இன்று வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் ஜெயானந்தமூர்த்தி, வெளிநாட்டில் தம்மை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் சில தமிழர்களின் அழுத்தங்களினால்த் தான், சம்மந்தர் சரத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுத்தாரென்ற உண்மையை ஒப்புக் கொண்டார். இபபடியான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை முதலில் தமிழ் மக்கள் ஓரம் கட்ட வேண்டும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /அந்த வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து மகிந்தவே முன்பை விட அதிகமாக வாக்குகளைப் பெற்று தமிழர்களின் வாக்குகளின் தேவையேற்படாமல் வெற்றி பெறுவாரென்பதை தொடர்ந்தும் பதிந்து வந்தேன். அது சரியென நிரூபிக்கப்பட்டுமுள்ளது./-பார்த்திபன்.
    — “பச்சோந்தித்தனம்” என்பதை யாராவது,பொருமையாக,பக்கச்சார்பில்லாமல், “இலங்கைப் பிரச்சனை கன்டக்ஸ்ட்டில்” “விரிவாக ஆராய்ந்து” வெளிப்படையாக வெளியிட்டால்,சமுதாயத்திற்கு பலனுள்ளதாக இருக்கும்!.

    Reply
  • palli
    palli

    இலங்கை குடிமகனாய் பளயஜனாதிபதி புதியஜனாதிபதி ஆகியதுக்கு வாழ்த்துக்கள்;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மத்தியதர வர்க்கம் ஊசலாட்டத் தன்மைமிக்கதுமல்லாது தனது சுயநலப் போக்கால் துரோகத்தனத்தையும் அடக்கியுள்ளது. இதுவே இனவாதப் போக்கிற்கு இடமளித்து சிறியதீவுக்குள் இனவெறிப் போக்கையும் பழிவாங்கும் அரசியலையும் கொண்டிருக்கிறது.
    ஏகாதிபத்திய போக்கோ முதாலித்துவ அரசியலோ இவர்களுக்கு தெரியாது என்று அர்த்தப்படுத்துவதல்ல “தெரியாது” என்று மக்களுக்கு நடித்துக் கொண்டிருக்கிறது.

    அறுபதுவருடகாலமோ பின்வந்த முப்பதுவருடகாலங்களே தமிழ்மக்களுக்கிருந்த தலைமைகள் இவையே. இந்த தலைமைகள் இருந்த தொழில்சங்கள் விசாசாயக் களகங்களை அழித்துவிட்டதும் அல்லாமல் இடதுசாரிகளை வேட்டையாடியும் நாட்டைவிட்டும் துரத்திவிட்டார்கள். இந்த தேர்தலின் முடிவுகள் இதை துல்லியமாக தெளிவுபடுத்துகின்றன. இன்றுயுள்ள நிலைமைகள் முழுமையாக தமிழ்மக்கள் இந்த மத்தியதர வாகத்தில் இருந்து விடபடாவிட்டாலும் அதிலிருந்து விடுபட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறதையே காட்டுகிறது. அடக்கியொடுக்கப் பட்டமக்களிடமும் தொழிலாளர்வர்கத்திடம் அரசியல் செல்லும் போதுமட்டும் தான் தமிழ்மக்களுக்குரிய தலைமை உருவாகும்.இனியும் தமிழ்மக்கள் இந்த மத்தியதரவர்கத்திடம் இந்த அரசியல் ஆளுமையை விட்டு வைக்கமாட்டார்கள் என்பதையே காட்டுகிறது. துவேசம் இனவெறி நாட்டை பிளவுபடுத்துதல் போன்ற கைங்ககரியங்களில் ஈடுபடவிடாமல் உழைப்பாளிவர்க்கம் தன்தலைமையை கைகளில் எடுக்கும். இந்த நம்பிக்கையை தம்மனத்தில் கொண்டே எதிர்கால ஐக்கியஇலங்கை சந்திப்பதுமல்லாமல் டக்ளஸ்தேவானந்தா சித்தாத்தன் சிறீதரன் பிள்ளையான் கருணா மற்றும் அபுயூசுப் போன்றவர்களின் அரசியலையும் புரிந்துகொள்ள முடியும். வர்க்கஆய்வில்லாத அரசியல் குருடன் ஒருஇலக்கை நோக்கி நடப்பது போன்றதே!.

    Reply
  • தீப்பொறி
    தீப்பொறி

    கொழும்பு நகரில் தான் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி பெருமளவில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னைக் கைது செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் பிபிசியிடம் சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்தார். பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, பொன்சேகாவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். ராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் பொன்சேகா அந்த ஹோட்டலில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “அவர்களது எண்ணம் என்ன என்பது தெரியவில்லை. பாதுகாப்புக் கருதியே அங்கு ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்., ஹோட்டலுக்கு உள்ளே செல்வோரும், வெளியே வருவோரும் பரிசோதிக்கப்படுகிறார்கள்” என்றார் உதய நாணயகார.

    இதனிடையே, சற்று நேரத்துக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், பொன்சேகா கைது செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார். ஹோட்டலுக்கு வெளியே ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு பதற்றம் நிலவுவதாகவும், அவர்களைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாக அன்பரசன் கூறுகிறார்.
    தீப்பொறி:

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // பெரும்பான்மை இனமக்கள் அமைதியை விரும்புகிறார்கள். சிறுபான்மை மக்கள் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.புலம்பெயர் தமிழர் யுத்தத்தை விரும்புகிறார்கள்// இரா.ரூபன்.
    இதுவே! அப்பட்டமான உண்மை.குறுகிய மொழியில் குறளாகத் தந்ததிற்காக நன்றி ரூபன். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்கிறோம்.

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    தம்பி ஜெயபாலன் தயவுசெய்து டக்கெண்டு ஒருக்கா கொழும்புக்கு ஓடிப்போய் சினமன் ஹொட்டலிலை தடுத்து வைத்திருக்கிற சரத்திட்டை இனியாவது சத்தியமா சரணடைஞ்ச ஆட்களை ஏன் கொண்டவர் எண்டு கேழுங்கோ! மற்றது முடிஞ்சால் சம்பந்தரிட்டை கேழுங்கோ வெட்கம் மானம் சூடு சுரணை ஏதாவது இருக்கோ எண்டு! மற்றது கஸ்டம் தான் முடிஞ்சா மகிந்தரிட்டை கேழுங்கோ இனி ஒரு ஜனாதிபதி தேர்தல் வருமோ எண்டு?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    த.வி.மு தொடர்ந்தும் பிழைகளை விட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. குண்டிச்சட்டிக்குள் குதிரைஓடாமல் சிங்களமக்களது எண்ணத்தையும் கருத்துகளையும் கிரகித்து வலக்கூடிய ஜனாதிபதியைக் கண்டறிந்த தமிழ்மக்களின் அபிலாசைகளை சில உடன்பாட்டுடன் இணக்கத்துக்குக் கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டது. ஒரினத்தின் காரியமாக வேண்டும் என்றால் காலைப்பிடிப்பது தவறில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    DEMOCRACY,
    என்ன உங்கள் கனவுகள் பாழடிக்கப்பட்டதால், இப்போ பச்சோந்தித்தனம் பற்றி ஆராய புறப்பட்டு விட்டீர்களா?? பச்சோந்தித்தனத்திற்கு சரியான எடுத்துக்காட்டு வேண்டுமானால், முன்பு புலிகள் உயிரோடிருந்தவரை புலிப்பினாமிகளாக வெளிநாடுகளில் கோலோச்சிய தங்களைப் போன்றவர்கள், புலிகள் அழிந்ததும் தம்மைக் காப்பாற்ற அவசரம் அவசரமாக கொழும்பு சென்று மகிந்தவின் காலில் விழுந்து பாவமன்னிப்புக் கேட்டதைச் சொல்லலாம்……

    Reply
  • palli
    palli

    மகிந்தாவின் வெற்றியோ அல்லது சரத்தின் தோல்வியோ தமிழருக்கு அமைதியான வாழ்வை கொடுக்க முடியாது; சிலவேளை சிலருக்கு வாழ்வோ அல்லது ஏமாற்றமோ இருக்கலாம்; ஆனால் மகிந்தாவின் வெற்றி இந்தியாவுக்கு ஏற்புடையதா? அது இங்கு முக்கியமாகிறது; சீனா இலங்கை உறவையே மகிந்த அரசு விரும்பும் என நினைக்கிறேன்; காரனம் நிபந்தனை இல்லாமல் உதவ சீனா எப்பொதும் வரும்; ஆனால் இந்தியா அப்படி இல்லை, அடிக்கடி சில நிபந்தனைகளை வைக்கும்; இருப்பினும் மகிந்தா இந்தியாவிடம் அனுசரித்துதான் போக வேண்டும்; இதுக்காக இந்தியா தனது பலத்தை காட்டவே செய்யும்; இதுக்கிடையில் சரத்துக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா முன்வருவதுக்கும் சில காரணங்கள் இருக்கலாம், மகிந்தா அரசுடன் இந்தியா பல வழியில் ஒத்துபோக மறுக்கும்; அதுக்கு அத்திவாரமாக வடக்கே அல்லது கிழக்கே இந்தியா தனது தூதரகத்தை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடதக்கது; இத்துடன் அமைப்புகள் இல்லாத ஒரு மகாநாட்டையும்(தமிழர்) விரைவில் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன; இதை அனைத்தையும் தாண்டி அரசை கொண்டு செல்லும் அரசியல் திறன் மகிந்தாவுக்கு உண்டெனிலும்; கடந்த கால போர் குற்றம், கூட இருப்பவர்களின் தவறான போக்கு ,சரத்தின் எதிர்ப்பு இத்தனையும் அவரை தடுமாற செய்யலாம்; எது எப்படியோ மகிந்தாவுடன் இணைந்து செயல் படும் தமிழ் அமைப்புகள் ஆனாலும் சரி இல்லை அவரை விலகி சென்று அரசியல் செய்வோரானாலும் சரி இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த மக்கள் அடிப்படை உரிமைகளுடனாவது வாழ வழி செய்ய வேண்டும்

    //தம்பி ஜெயபாலன் தயவுசெய்து டக்கெண்டு ஒருக்கா கொழும்புக்கு ஓடிப்போய் சினமன் ஹொட்டலிலை தடுத்து வைத்திருக்கிற சரத்திட்டை//
    யார் தடுத்து வைதிருக்கிறார்கள்,,?? ஏன் அப்படி வைத்திருக்கிறார்கள்; சரி இதுகான பதிலை அவர் எப்படி சொன்னாலும் அதுக்கான பொறுப்பை அரசு தான் பொறுப்பேற்க்கவேண்டி வரும்(போர் குற்றம்) அந்த அரசின் நாயகனும் இன்றய ஜனாதிபதியும் வேறு வேறா??? பல்லி முன்பே சொன்னேன் சரத் வென்றாலும் தோற்றாலும் பிரச்சனை மகிந்தாவுக்குதான்,

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.பார்த்திபன் நீங்கள் கூறுவது ஓரளவுக்கு சரி!.”புலி” என்றால் உண்மையில் என்ன அர்த்தம் என்று பலமுறை விளக்கி விட்டேன். இலங்கை வரலாற்றில் “துட்ட கைமுனு – எள்ளாளன்” வரலாற்றை பிரபலமாக கூறுகிறார்கள். மகிந்தா அவர்ககளை,துட்ட கைமுனுவாக தற்போது பிரபலமாக விமர்ச்சிக்கிறார்கள்.”சமுதாய உணர்வு” என்பது பிரஞ்கையுள்ள சிந்தனையில் பிறப்பதல்ல!, “கலாச்சாரம் போன்று”,” பிரஞ்கையில்லாத செயல்பாடுகளிலேயே” வெளிப்படும். இவ்வுணர்வு உள்ளவர்கள், “அரசியல் பாதுகாப்பு” தேட விழையும் போது, அவர்களையறியாமல் “சமுதாயம் பாதுகாக்கப்படும்”. ஆனால் இலங்கை தமிழர்களில் நடந்தது என்ன?, “தனிப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கே” வழிகோலியது!. அதனால்தான் அவ்வுணர்வுடன், “பாதுகாப்பு” என்று நான் குறிப்பிடுவது, மகிந்த ராஜபக்ஷே, உண்மையில், துட்டகைமுனுவாக நடந்துக் கொள்ளவேண்டும் என்பதுதான்!.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    பார்த்திபன் ஏன் இப்படி கருத்து எழுதினீர்களோ தெரியவில்லை.
    ஜெயபாலன் எது சொன்னாலும் சோதிலிங்கம் கேட்பவர் என்றும் ஜெயபாலன் மூலம் தான் நான் செய்தி எடுத்துள்ளேன் என்றும் நீங்கள் கருதினால் அது தவறு நான் ஏற்கனவே எழுதிய சம்பந்தரின் சாணக்கியம் கட்டுரையில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் ரிபிசி ரேடியோவில் பேசும் போது இரண்டுபேர் சம்பந்தமாகவும் அவர்களால் எமக்கு என்ன? என்ற அடிப்படையிலேயே பேசியிருந்தேன்.

    அந்த கலந்துரையாடலின் இறுதியில் மகிந்தாதான் வருவார் என்றும் காரணம் மகிந்தா அதிகாரத்தில் இருக்கிறார் எல்லாவித வளங்களையும் பாவிக்கின்றார் சிங்கள் மக்கள் இன்றும் தமிழருக்கு ஏதாவது இவர்கள் கொடுத்து விடுவார்களோ என்ற பயத்தினால் உள்ளனர் சிங்கள மக்கள் மகிந்தாவை மிககுறைந்த விகிதாசாரத்தில் வெற்றிபெறவைப்பர் மகிந்தா வெற்றி பெறுவார் என்றே கூறினேன்.

    இது மகிந்தாவை ஆதரிக்க நான் கூறியதில்லை இது தான் நாட்டின் நிலைப்பாடு என்ற எனது கருத்துக்களையே வைத்தேன் இநத இரு வேட்பாளர்களில் ஒருவர் தமிழரின் அரசியல் உரிமைப்போராட்டத்ததை ஆதரித்து சிங்கள் மக்களிடம் கூறியிருந்தால் நான் ஆதரித்திருக்கக் கூடும் புலிகளின் அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றிய கவலையே இல்லாமல் தேர்தலை சரத் மகிந்தா சம்பந்தர் ரிஎன்ஏ நடாத்தினார்களே! இது தான் எனது மனதில் இருந்தது.

    இப்போ என்ன நடக்கப்போகிறது தமிரின் அரசியல் உரிமைகள்? தமிழ் பிரதேச அபிவிருத்தி? சிறையில் இருக்கும் புலிகளின் நிலை?

    அடுத்த தேர்தல் வரும் வரை மீண்டும் ஒரு முறை இப்படியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கப்போகிறார்கள் ரிஎன்ஏ!!

    அடுத்த பா/உ தேர்தலுக்காகவே ரிஎன்ஏ தன்னை தயார்படுத்துகிறது அதில் தமது பாராளுமன்ற கதிரைகளுக்கான சண்டையை மிக விரைவில் ரிஎன்ஏ யினுள் எதிர்பார்க்கலாம்.

    பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்காது விட்டவர்கள் இந்த அரசியலில் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை தாம் உண்டு தமது பாடு உண்டு என்றே இருக்கிறார்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /புலிகளின் அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றிய கவலையே இல்லாமல் தேர்தலை சரத் மகிந்தா சம்பந்தர் ரிஎன்ஏ நடாத்தினார்களே! இது தான் எனது மனதில் இருந்தது./–டி.சோதிலிங்கம்.
    இதை ஒப்பிட்டு, இந்தியாவுக்கு வெளியிலிருக்கும் என் நண்பருக்கு ஒரு கதையை கூறுவேன்!. இஸ்ரேலில், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு “சாலமன்” என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் சபையில் இரு பெண்கள் ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடி, அது தன் குழந்தை (தமிழ், புலி)என்று வழக்கை கொண்டு வந்தனர். குழம்பிய சாலமன் சிறிது யோசித்த பிறகு, வாளை எடுத்து குழந்தையை வெட்ட சென்றான், அதை கண்டு பதறிய உண்மையான தாய், ஓடி வந்து குழந்தையை வெட்ட வேண்டாம், என்னை வெட்டுங்கள் என்றார்!. சிரித்தபடி சாலமன் குழந்தையை அத்தாயிடம் ஒப்படைத்தார்!. இதுதான் “சமுதாய உணர்வு என்பது”!- “இண்டிவியூஜுவல் பிரஸ்பெக்டிவ்” அல்ல!.

    Reply