லுமூம்பா Lumumba (2000)
இயக்குநர்: Raoul Peck
06-02-2010 அன்று தேடகத்தினால் லுமூம்பா திரைப்படமும் கலந்துரையாடலும் ஒழுங்குசெய்யபட்டுள்ளது. அனைவரையும் அழைக்கின்றோம்.
இத் திரைப்படம் 1960களில் பெல்ஜியத்திலிருந்து விடுதலைபெற்ற கொங்கோவின் முதல் பிரதமர் பற்றீசியா லுமும்பாவின் இறுதி நாட்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. விடுதலை பெற்ற கொங்கோ, இரு மாதங்களுக்குள் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் துணையுடன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, லுமும்பா உள்ளிட்ட தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்கள்.
இத் திரைப்படம் France, Belgium, Germany,Haiti கலைஞர்களால் இணைந்து எடுக்கப்பட்ட போதும், கொங்கோவின் அரசியல் நெருக்கடிகளால் இது Zimbabwe, Beira, Mozambique போன்ற நாடுகளிலேயே எடுக்கப்பட்டது.
…வரலாறு ஒருநாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஐ.நா.விலோ வாசிங்டனிலோ பரிசிலோ பூருலசிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக, காலனி ஆதிக்கத்திடமிருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆபிரிக்கா தனது சொந்த வரலாற்றைத் தானே எழுதும். அது சகானா பாலைவனத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதைச் சொல்லும் வரலாறாக இருக்கும்.
(லுமூம்பா தனது மனைவிக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் இருந்து)
“லுமூம்பா: இறுதி நாட்கள்” (மொழிபெயர்ப்பு: எஸ். பாலச்சந்திரன். விடியல் பதிப்பகம்)
Lumumba_Poster
தொடர்புகட்கு thedakam@gmail.com
தேடகம்.
nantha
தேடகம் நல்ல திசை வழி செல்கிரது