நாட்டில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசர காலத்தை நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 87 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐ.தே.க., தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் மனோகணேஷனும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார். பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட சமயம் மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.