புதிய திசைகள் அமைப்பினரின் ‘இலங்கையின் இன்றைய அரசியல் நிலைகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு லண்டன் லூசியம் சிவன்கோயில் மண்டபத்தில் பெப்ரவரி 6ல் இடம்பெற்றது. மே 18க்குப் பின் உருவான பல்வேறு அரசியல் அமைப்புகளின் தோற்றத்தில் புதிய திசைகள் லண்டனில் உருவான ஒரு அமைப்பு. முன்னர் தமிழீழ மக்கள் கட்சி என்று அறியப்பட்ட அமைப்பின் ஒரு பிரிவினர் இவ்வமைப்பை மே 18க்குப் பின்னதாக உருவாக்கி உள்ளனர். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தாமே தமது உரிமைகள் பற்றிய நிலைப்பாட்டை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் அதற்கான பின்புல ஆதரவை லண்டனிலிருந்து வழங்குவது என்ற கோட்பாட்டுடனேயே இந்த அமைப்பு செயற்ப்பட ஆரம்பித்துள்ளதாக இதன் ஸ்தாபகர்களில் ஒருவரான மாசில் பாலன் தெரிவித்தார்.
கூட்டம் ஈழப்போராட்டத்தில் அர்ப்பணிப்பு செய்த போராளிகள் பொதுமக்கள் எல்லோருக்குமான ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது.
கூட்டத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களும் முட்டி மோதியது. நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு போராட்டங்களை செய்ய முடியாது என்றும் நாட்டிலுள்ள மக்களே தமது அரசியல் போராட்டங்களை தீவிரப்படுத்தி செயற்பட வேண்டும் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர்கள் நாம்தான் அவர்களுக்கான ஆதாரதளம் என்றும் எம்மிடையே தான் அதற்கான பல பொறுப்புக்கள் உள்ளது என்றும் எமது ஆதரவின்றி அவர்களால் செயற்ப்பட முடியாது என்றும் தெரிவித்தனர். இதனிடையே நாங்கள் தான் கடந்த காலங்களில் போராட்டங்களை இங்கிருந்து செயற்ப்பட்டு மக்களை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள் என்றும் ஆகவே இங்கிருந்து செயற்ப்படுவது என்பது மிகவும் ஆபத்தானது, இங்குள்ளவர்கள் அங்குள்ள மக்களின் அரசியல் நலன்களிலும் பார்க்க தங்கள் அரசியல் அடையாளத்தையே முன்னிறுத்திச் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே பதிலளித்த புதிய திசைகள் கூட்ட ஏற்பாட்டாளர் புவி நாம் இங்கிருந்து தலைமை தாங்குவது என்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்பதில் மிகத்தெளிவாக இருக்க விரும்புகிறோம் என்றும் புதிய திசைகள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு அமைப்பாகவே இப்போதைக்கு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
புலிகளின் கடந்தகாலத் தோல்விகளையும் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைககளையும் பேச முற்ப்படும்போது கூட்டத்தில் இருந்த சிலர் பலமான விசனங்களை எழுப்பினர். புலிகளின் கடந்தகால நடவடிக்கைகள் சிலவற்றை வாதத்திற்கு எடுத்துச் சென்ற போது விவாதம் உணர்ச்சிகரமானதாக மாறியது. குறிப்பாக விடுதலை அமைப்புகளை அழித்தமை இறுதி யுத்தத்தில் தமிழ் பொது மக்கள் மீது தாமே தாக்குதலை நடாத்தி அரசியல் செய்ய முற்பட்டமை, மே 18 வரை இருந்த புலிகளின் சொத்துக்கள் மாயமாக மறைந்தமை, வன்னி மக்கள் முகாம்களில் வாட பல்லாயிரம் பவுண்கள் செலவில் மாவீரர் தினத்தை நடாத்தி பணத்தை விரயமாக்கியமை போன்ற விடயங்கள் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டது.
இதில் முக்கியமாக புலிகளினால் நடாத்தப்பட்ட மாவீரர் தினம் பற்றியும் அதன் செலவுகள் பற்றியும் குறிப்பிடும்போது மாவீரர் தினம் ஒன்று தான் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் தினமாக இருக்கும் என்றும் அது தமிழ் மக்களுக்காக போராடிய அத்தனை பேருக்குமானது என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். இதனை இடைமறித்து அந்த மாவீரர்தின விழாவில் சிறீசபாரத்தினம், உமா மகேஸ்வரன் மற்றும் போராளிகளது படங்கள் இல்லை என்றும் அவையும் இருந்திருந்தால் இது பொதுவான தமிழ்ப் போராளிகளுக்கான தினமாகலாம் என்றும் கருத்து வைக்கப்பட்டது. அங்கிருந்த யாரும் மாவீரர்களை குறைத்து மதிப்பிடவோ கொச்சைப்படுத்தவோ இல்லை. ஆனால் மாவீரர் தினத்தை பணத்தைக் கொட்டி விரயமாக்கும் களியாட்ட நிகழ்வாக அல்லாமல் ஆக்கபூர்வமான நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து வலுவாக வெளிப்பட்டது.
இதனை தொடரந்து மாற்றுக் கருத்தாளர்களின் கடந்த காலங்கள் பற்றியும் குறிப்பாக மாற்றுக் கருத்தாளர்களில் பலர் புலிகளை தேசிய சக்தியாக ஏற்றுக்கொண்டு செயற்பட முனைந்தபோதும் புலிகளால் அந்த அமைப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றியும் இதில் தீப்பொறி என்எல்எப்ரி போன்ற அமைப்புக்களுக்கு நடந்தவை பற்றியும் சில கருத்துக்கள் வெளிப்பட்டது. புலிகளின் தந்திரோபாயமே இணைவது போன்று இணைவதும் பின்னர் அவர்களை அழிப்பதும் அதிலும் தாம் மட்டுமே தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்பதை உறுதிப்படுத்துவது பற்றியதுமான கருத்துக்கள் பல எழுந்தன. இதனிடையே புலிகளை எதிர்ப்பவர்கள் அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக செயற்ப்பட்டனரே அன்றி தமிழர்க்கு ஆதரவான போராட்டங்களை செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை நிராகரித்து கருத்து வெளியிட்ட சிலர் புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாம் அரச ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்படுவதை முட்டாள்தனமானது என்றனர். அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் புலிகளால் துரோகிகள் என்று பட்டம் சூட்டப்பட்டதை சிலர் அங்கு சுட்டிக்காட்டினர்.
புலிகளின் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் பற்றி கருத்துக்கள் எழும்போதெல்லாம் நெருப்பின் மேல்நின்ற சிலர் இன்னும் புலிகளின் போராட்ட தவறுகள் பற்றியோ புலிகளின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் பற்றியோ விளங்கிக்கொண்டதாக இல்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
கூட்டத்தில் புலிகளின் சவுத்ஈஸ்ட் கூட்ட பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் உட்பட மற்றும் சில புலிகளின் ஆதரவாளர்களும் பிரிஎப் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறுபான்மை மக்களுக்காகப் போராடிய புலிகள் அந்த சிறுபான்மையினரை தமது இறுதி யுத்ததில் தமது ஆயுதங்களால் கொலைசெய்தும் அந்த இறப்பில் ஆதாயம் தேட முற்ப்பட்டதையும் தமிழரின் இயக்கங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக செய்த போராட்டங்கள் என்பதைவிட பயங்கரவாத்தினையே செய்திருந்தனர் என்பதையும் இந்த இயக்கங்களில் பலர் இன்னும் போராட்டம் பற்றி தவறான அடிப்படைகளையே கொண்டுள்ளனர் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. புலிகள் இறுதிக்காலப் போராட்டத்திலும் கடந்த 30 வருட போராட்டங்களிலும் பாரிய தவறுகளையும் தவறுக்கான பொறுப்புக்களையும் கொண்டவர்கள் என்பது போல மற்றைய இயக்கத்தவர்களுக்கும் இந்த தவறுகளுக்கும் பொறுப்புண்டு என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இனிமேல் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற கேள்ளிகட்கு விடைதேட முயன்றபோதும் அதனை நோக்கி கலந்துரையாடல் நகரவில்லை. தாங்கள் என்ஜிஓ அமைப்பல்ல மக்களின் அன்றாட தேவைகள் பற்றி புதியதிசைகள் சந்திப்பை ஏற்பாடு செய்யவில்லை என்று அவ்வமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் சபாநாவலன் தெரிவித்தார். தாங்கள் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி புதியதிசைகளின் நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்ட போதும் அவர்கள் தாங்கள் எவ்வித நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பது பற்றியோ அதை நோக்கி கலந்துரையாடலை நகர்த்தவோ தவறிவிட்டனர்.
வட்டுக்கோட்டை தீர்மானம் கொண்டு வருபவர்களுடன் மற்றும் புலம்பெயர் நாட்டில் தமிழீழம் அமைப்பவர்கள் போன்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு வழியில் அவர்களும் பாதையினை கொண்டுள்னர் என்றும் பலரும் பல திசைகளில் சென்று விடாமல் இவர்களுடன் இணைந்து செயற்ப்பட வேண்டும் என்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இவை பற்றிய நிலைப்பாடுகளை இனிமேல் வரும் கூட்டங்களில் இவற்றை விவாதிக்கலாம் கலந்துரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய திசைகள் போன்று பல அமைப்புக்கள குறிப்பாக தமிழர் தகவல் நடுவம் போன்றோர் சில கூட்டத் தொடர்களை நடாத்தி வந்துள்ளதையும் இவர்களையும் அழைத்து ஒருகிணைத்து செயற்ப்பட வேண்டும் என்றும் முரண்பாடு கொண்டவர்களும் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் ஒரு பொதுவான வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் சமூகத்தில் இப்படியான யதார்த்த நிலைப்பாட்டுடனேயே செயற்பட முடியும் என்ற கருத்துக்களும் வெளிப்பட்டது.
எங்கிருந்து தொடங்குவது என்ற கருத்து பகிர்வின்போது புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடங்குவது என்ற பதத்திற்கு ஒரு அர்த்தம் இல்லாது உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. புலிகளில் புலம்பெயர்நாட்டு தலைவர்கள் நிதிப்பொறுப்பாளர்கள் அரசியல் பொறுப்பாளர்கள் எனப் பலர் உள்ளபோதிலும் இன்று வரையில் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா? புலிகள் இயக்கத்திற்கு என்ன நடந்தது? அல்லது தம்மிடையே உள்ள பணத்தின் நிலை என்ன? மக்கள் இவ்வளவு கஸ்டப்படம் போதும் அந்த நிதி வளங்கள் அந்த மக்களுக்கு உதவி செய்யபோக முடியாமல் போனதின் காரணம் என்ன? புலிகளின் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? போன்ற விபரங்களை இன்று வரையில் வெளியிடாதது புலிகளின் கடந்த 30 வருட மக்களுக்கான போராட்டம் என்ற பதத்தையே கேவலப்படுத்துகிற செயலாகவே உள்ளது என்றும் அங்கு குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வாறு பல்வேறுபட்ட கருத்துக்கள் முட்டி மோதி இவ்வாறான கருத்துப் பகிர்வுகள் தொடர வேண்டும் என்றளவில் இச்சந்திப்பு நிறைவுபெற்றது.
palli
//வட்டுக்கோட்டை தீர்மானம் கொண்டு வருபவர்களுடன் மற்றும் புலம்பெயர் நாட்டில் தமிழீழம் அமைப்பவர்கள் போன்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு வழியில் அவர்களும் பாதையினை கொண்டுள்னர் என்றும் பலரும் பல திசைகளில் சென்று விடாமல் இவர்களுடன் இணைந்து செயற்ப்பட வேண்டும் என்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இவை பற்றிய நிலைப்பாடுகளை இனிமேல் வரும் கூட்டங்களில் இவற்றை விவாதிக்கலாம் கலந்துரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.//
ஆக வட்டுகோட்டை பக்கம் இந்த திசை காட்டும் கருவி(அமைப்பு) கை நீட்டுகிறதோ?? அல்லது அவர்களுடன் முரன்பட்டு கொண்டு தெற்க்கு திசை நோக்கி பயணிக்க போகிறதா?? பொறுத்துதான் பார்ப்போமே;
santhanam
வட்டுகோட்டையும் நாடுகடந்த அரசும் சொத்துக்களை காபந்து செய்யவும் புலம்பெயர் காசு பறிப்பிற்கும் தமிழனை என்னும் முட்டாள்கள் ஆக்கவும் செய்துகொள்ப்பட்ட ஒப்பந்தம் தலைமைக் டாடா காட்டிவிட்டு புலம்பெயர்ந்து அந்த 13 கொமிற்றி உறுப்பினர்களும் மாபியாதனமாக இயங்கி அங்குள்ள மக்களை பலிக்கடா ஆக்க போகிறார்கள்.
சுட்டமண்ணும் பச்சைமண்ணும் எப்படி சேர முடியும். 13 அலிபாக்களில் நீங்கள் எந்த அலிபாப. பிள்ளைகளை மக்கள் பணத்தில் இந்தியாவில் சர்வதேச பாடசாலையில் படிப்பிக்கும் அலிபாபா யார். தேர்தலை குழப்பும் தந்திரமா. ஒன்று சேரல்
chandran.raja
காற்றில் இழுபட்டு அலைகழிக்கப் படும் சருகள் போல அந்தரத்தில் திரிகிறார்கள் தமிழர்கள் என்றால் அது ஈழத்தமிழர்கள் அல்ல. புலம்பெயர் தமிழர்களே!. அதன் ஒரு வடிவமாகவே வட்டுக்கோட்டை தீர்மானம். வாக்கெடுப்பு தீர்மானம். “நாடுகடந்த தமிழீழம்” என்று கடைசி தரிப்பு நிலையத்தை வந்தடைந்திருக்கிறது. இதுவே புலம்பெயர்தமிழர்கள் ஈழவாழ்தமிழ் இனத்திற்கு இத்தனை ஆண்டுகளாக தேடிக் கொடுத்தது (அழிவுமட்டுமே) யாரும் மறுப்பீர்களா?
ஆயுதம் எடுத்தவன் அழிந்துபோனதுதான் வரலாறு!. இதற்கு வல்லரசுகளும் விதிவிலக்கல்ல. அதற்குள் ஒரு இனம் எம்மாத்திரம்?. புதியதிசைகளைத் தேடாதீர்கள் மறைக்கப் பட்ட திசைகளை கண்முன்னே கொண்டு வாருங்கள். அதுவே ஈழத்தழிழருக்கு தேவையானது. இன்று ஈழத்தமிழருக்கு தேவையானது சமதானமான கூட்டுவாழ்க்கையே. கல்வி மருந்து பயம்மில்லாத எந்தத்திசையும் பயணிக்கும் நிலை. புலம்பெயர் அறிவாளிகளிடம் இருந்து அவர்கள் எந்த அரசியல் ஆலோசனைகளையும் அவர்கள் எதிர்பார்கவில்லை. அப்படி வந்தாலும் இனிவரும் காலத்தில் ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை.
இங்கிருந்து கொண்டு இலங்கையரசை தமிழ்மக்களுக்கெதிராக “பகையாளி” ஆக்க சித்தரிரிக் முயலாதீர்கள். அது அவர்களுக்கு அழிவையே தேடிக் கொடுக்கும். அவர்கள் கல்வி மருந்து பொருளாதார உதவிகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறார்கள். அப்படி அவர்கள் எதிர்பார்பதற்கும் அவர்களுக்கு ஒரு நியாயம் உண்டு. கொடுக்கல் வாங்ககல்களுக்கு ஒருபற்றுச்சீட்டு உண்டு. நன்கொடையாகக் கொடுத்தாலும் அதற்கும் பதில் சொல்ல வேண்டிய கடைமைப்பாடு உண்டு. இதைத்தான் புலம்பெயர்தமிழர்கள் கந்றுக்கொள்ள வேண்டும். யாரும் எவரும் தம்விருப்பிய படியே உதவிகள் செய்ய உரிமையுண்டு. ஒவ்வொரு சதத்திற்கும் கணக்கு என்ன பழக்கத்தை கொண்டு வாருங்கள் அல்லது அதற்கு ஆரம்பத்தில் இருந்தே போதிய அளவு பயிற்ச்சி எடுங்கள். இதை போதியயளவு “லிட்டில்எயிட்” எப்படி? என்பதை கற்றுத் தந்துள்ளது என்றே நினைக்கிறேன்.
thurai
ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கப்புறப்பட்டவர்களா? அல்லது ஈழத்தமிழர்களிற்கு துயர் கொடுக்க புறப்பட்டவர்களா? இவர்களென்பது காலப்போக்கில்தான் தெரியும்.
இலங்கையில் தமிழரை ஆழ முடியாவிட்டாலும் புலத்தில் வாழும் தமிழரை தமது கட்டுப்பாட்டுக்குள்வைத்திருக்க வேண்டுமென்பதே தமிழீழ விரும்பிகளின் ஆவல். இதற்காக இவர்கள் படும் பாட்டிற்கு ஆதாரம்:
உலகைத் திருப்திப்படுத்த ஒரு அறிக்கையும்: எங்களைத் திருப்திப்படுத்த இன்னொரு அறிகையுமா? நாடுகடந்த அரசமைக்கும் குழுவுக்கு ஒரு திறந்தமடல்!
அம்மையீர், ஐயன்மீர்
வணக்கம்!
தைத்திருநாளில் நீங்கள் வெளியிட்ட அறிக்கை கண்டோம்.
இழந்துபோன எமது தேசத்தின் நிலங்களையும், இறையாண்மையையும் இராசரீக வழிகளில் வென்றெடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என்று நீங்கள் அன்று சபதமெடுத்த பொழுது நாம் புளகாங்கிதமடைந்தோம்.
முள்ளிவாய்க்கால் அவலத்தால் வெதும்பிப்போயிருந்த எங்களுக்கு உங்களின் வாக்கு வேதவாக்காக ஒத்தடமளித்தது உண்மைதான். தமிழீழ மக்களவையும், நாடுகடந்த தமிழீழ அரசும் எதிரியைத் தாக்கும் இருபேராயுதங்கள் என்று நீங்கள் உரைத்தபொழுது நாம் மெய்மறந்தே போனோம். இக்கால பூகோள-அரசியல் தமிழீழத் தனியரசு நிறுவப்படுவதற்கான புறச்சூழலை தோற்றுவித்திருப்பதாக அன்று நீங்கள் பிரகடனம் செய்த பொழுது நாங்கள் உச்சிகுளிர்ந்ததும் உண்மைதான். ஆனால் இன்று…
நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு பல்தேசிய வணிக நிறுவனம் போன்று இயங்கும் என்கின்றீர்கள்.
தேசம்கடந்து இயங்கும் அரசுசாரா அமைப்புப் போன்று அது செயற்படும் என்கின்றீர்கள். போதாக்குறைக்கு உங்கள் கற்பிதத்திற்கு உவமையாக Cண்ண், Mஇச்ரொசொfட் போன்ற முதலாளிய நிறுவனங்களையும் துணைக்கு அழைக்கின்றீர்கள்!
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை அறிந்துள்ளோம். ஆனால் அரசு தேய்ந்து வணிக நிறுவனமாக மாறப்போகும் கதையின் சூத்திரத்தை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தயைகூர்ந்து விளக்குவீராக!
நிற்க…
உருவாகப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசு ஒரு அஞ்ஞாதவாச அரசு அல்ல என்கின்றீர்கள். அங்கீகரிக்கப்பட்ட சிறீலங்கா அரசுக்கு விரோதமாக இயங்கும் ஒரு அஞ்ஞாதவாச அரசுடன் உலகம் தொடர்புகளைப் பேணவிரும்பவில்லை என்றும் கூறுகின்றீர்கள். அதனால்தான் அஞ்ஞாதவாச அரசுடன் நாடுகடந்த அரசை ஒப்பிடுவது தவறு என்கின்றீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். சிறீலங்கா அரசுடன் முரண்பட விருப்பமில்லை என்றால் நாடுகடந்த சிறீலங்கா அரசு என்று நீங்கள் பெயர்சூட்டிக் கொள்ளலாமே? பிறகெதற்கு தமிழீழம்?
நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக உலக நாடுகளுடன் பேசுவதாக நீங்கள் அன்றுகூறிய பொழுது மயிர்க்கூச்செறிந்தது. உங்களது முயற்சியை உலக இராசதந்திரிகள் வரவேற்பதாக நீங்கள் பிரகடனம் செய்த பொழுது எங்களது மயிர்க்காம்பெல்லாம் புல்லரித்துப் போனது.
ஆனால் ஆறு மாதங்களுக்குள் அந்தர்பல்டி அடித்து இப்பொழுது புதுக்கதை கூறுகின்றீர்கள்.
வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் மட்டும் பேசிக்கொண்டிருப்பதாக அறிக்கை விடுகின்றீர்கள்.
அரசியல் – இராசதந்திர வழிகளில் பரப்புரை செய்வோம் என்று அறிவிக்கின்றீர்கள்.
எப்பொழுதும் அகிம்சை வழியில் உங்களது செயற்பாடு அமையும் என்று உறுதிபூணுகின்றீர்கள்.
ஆயுதப் பலம் தீண்டத்தகாதது என்று அருவருக்கின்றீர்கள்.
ஒவ்வொரு நாடுகளின் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு இயங்கப் போவதாக சத்தியம்செய்கின்றீர்கள்.
அருமை! அருமையிலும் அருமை. இருந்தாலும் ஒரு சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன.
ஆறு மாதங்களாக வெளிநாட்டு அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் எதற்காக வெளிநாட்டு அரசியல் தலைவர்களை இன்னும் அணுகவில்லை? அதற்கான இராசதந்திரக் கதவுகள் இன்னமும் திறக்கவில்லையா? அல்லது உங்களால் அவற்றைத் திறக்க முடியவில்லையா?
இராசதந்திரம் என்பது பலத்தில் தங்கியிருப்பது. பரப்புரை என்பது இராசதந்திரத்திற்கு உறுதுணை நிற்பதே தவிர அதுவே இராசதந்திரமாகிவிடாது. யதார்த்தம் அடிப்படியிருக்கும் பொழுது அகிம்சை வழியில் என்னதான் இராசதந்திரம் செய்யப் போகின்றீர்கள்? காந்தியடிகளின் உப்புச்சத்தியாக்கிரகமா?
வெஸ்ட்மின்ஸ்டர் திடலிலும், ஜெனீவா முன்றலிலும், பாரிசிலும் வெள்ளைக்காரனிடம் அடிவாங்கியதை நாமென்ன மறந்துவிட்டோமா? நீங்கள் மறந்திருக்கலாம்… ஏனென்றால் அடி எங்கள் மீதல்லவா விழுந்தது!
அகிம்சை வழியில் நீங்கள் செயற்படுவது நல்லதுதான். நீங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து வாழ்வதும் போற்றத்தக்கதுதான்.
ஆனால்… ஆயுதபலத்தை நீங்கள் அருவருக்கின்றீர்களோ இல்லையோ எங்கள் தேசியத் தலைவன் ஒருபொழுதும் போரை விரும்பியதில்லை என்பது மட்டும் உண்மை. அது உங்களுக்கும் தெரியும். உங்களுக்கு பின்னால் நிற்போருக்கும் தெரியும். அனாதையாக அந்தரித்து நின்ற எமது மக்களுக்காக எம் தலைவன் ஆயுதமேந்தியதை நீங்கள் இப்பொழுது சிறுமைப்படுத்திப் பேசுவதுதான் நகைப்புக்கிடமானது.
இவைதான் போகட்டும்.
உலக அங்கீகாரத்தை நாடுகடந்த தமிழீழ அரசு பெறுவது சாத்தியமில்லை என்கின்றீர்கள். அப்படியென்றால் எதற்காக நாடு கடந்த அரசு அமைக்க வேண்டும்?
தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வைப் பெறுவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசு உழைக்கும் என்கின்றீர்கள். தமிழீழம் கிடைத்தால்… என்றும் இழுக்கின்றீர்கள்.
அப்படியென்றால் தமிழீழம் அமைப்பது உங்களின் நோக்கமே இல்லையா? அல்லது தமிழீழம் அமையும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா?
இறுதியாக ஒரு கேள்வி.
எமது உடன்பிறப்புக்களான இஸ்லாமியத் தமிழர்களை தேசிய இனம் என்கின்றீர்கள். தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கான பிராந்தியங்கள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையுடையவர்கள் என்கின்றீர்கள். தமிழீழம் அமைந்தால்… அவர்கள் விரும்பினால் தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று தனியரசு அமைக்கலாம் என்கின்றீர்கள்.
தமிழீழத்தில் இருந்து பிரிந்துசென்று தனியரசு அமைக்கப் போவதாக எப்பொழுது எமது இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் உங்களுக்கு அறிவித்தார்கள்?
இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்த தமிழர்களைக் கொண்ட தேசம் தமிழீழ தேசம். அதை இருகூறாக்கி இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஒருதேசம், முஸ்லிம்களுக்கு ஒரு தேசம் என்று துண்டாடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்?
அதுசரி, ஆங்கிலத்தில் நீங்கள் வெளியிட்ட அறிக்கைக்கும், தமிழில் வெளியிட்ட மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய கருத்துக் குழப்பங்கள் காணப்படுகின்றதே? உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
lankasri.eu/ta/link.php?3m4340SdMgb6eEIcQ372
துரை
உமை
//என்ஜிஓ அமைப்பல்ல மக்களின் அன்றாட தேவைகள் பற்றி புதியதிசைகள் சந்திப்பை ஏற்பாடு செய்யவில்லை என்று அவ்வமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் சபாநாவலன் தெரிவித்தார்.//
சபாநாவலன் தமிழ் மக்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு அமையும் என்பதில் அதிக கரிசனை செலுத்த வேண்டுமே அன்றி புலர்பெயர் சூழலில் அரசியல் செய்யக்கூடாது.
தாமிரா மீனாஷி
ஊர்ப்பணத்தில் வயிறு வளர்ப்பவர்கள், கஞ்சாவுக்கும், விஸ்கிக்கும் பணம் வாங்கிக் கொண்டு கட்டுரை எழுதுபவர்கள், ஊர் மற்றும் சாதி அனுமானங்களுக்காக சில அமைப்புக்களுக்கு உயிர் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்,இது போன்ற கூட்டங்களில் எக்ஸிகியூட்டிவ் டயறிகளுடன் கலந்துகொண்டு வாய்ச் சவடால் அடிப்பவர்கள் ஆகியோர்தான் இன்றைய புலம்பெயர் தமிழ் ஆர்வலர்கள்..பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களைத்தான் தமிழரின் பிரதிநிதிகளாக அழைக்க வேண்டும் என்று ஓயாமல் வேண்டுகோள் விடுப்பவர்கள்…தீபத்திலும், ஜீரிவியிலும் திருமுகம் காட்டும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குபவர்கள்… அதையும் விட மோசமானது.. இலங்கைத் தூதரகரத்திலிருந்தும், தமிழ் தகவல் நடுவத்திலிருந்தும் எப்போது ஓசி டிக்கட் வரும் என்று காத்து கிடப்பவர்கள்..இவர்களுக்கு மக்களின் நன்மை மீதான அக்கறை இருப்பதாக நினைத்துக் கொண்டு இத்தகைய கூட்டங்களுக்கு வரும் அப்பாவிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது…அன்று ஆயுதம் தாங்கி ஈழப் போராட்ட வாண வேடிக்கை நடாத்திய இயக்கத் தலைவர்கள் சிலர் இன்று “புலம்பெயர்ந்து” எக்கவுன்டன்சி படிக்கப் போய்விட்டார்கள் என்பது இவர்களுக்கு இன்னும் தெரியாமல் இருப்பதை நினைக்க வேதனையாகவும் இருக்கிறது..
தாமிரா மீனாஷி
palli
/அன்று ஆயுதம் தாங்கி ஈழப் போராட்ட வாண வேடிக்கை நடாத்திய இயக்கத் தலைவர்கள் சிலர் இன்று “புலம்பெயர்ந்து” எக்கவுன்டன்சி படிக்கப் போய்விட்டார்கள் என்பது இவர்களுக்கு இன்னும் தெரியாமல் இருப்பதை நினைக்க வேதனையாகவும் இருக்கிறது..//
ஆனால் உலக புரட்ச்சி புடுங்கல்கள் பற்றி மட்டும் பக்கம் பல எழுதுவார்கள், மகிந்தா துப்பினாலே அது பன்னீர்தான் என சொல்வோர் இன்று பலர், ஆனால் இவர்களே போராட்ட சதிராட்டமென தொடங்கியவர்களும்; புலி இறுமிச்சாம் அதனால் மகிந்தா வீட்டில் தூங்குகிறார்களாம்,
Kandaswamy
பல்லி,
சரியாக சொன்னீர்கள். எங்கள் அரசு மட்டும் ஒழுங்காக இருந்தால், இன்று ஒரு உதவிகளும் எங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தேவை இல்லை. பிரபாகரன்/புலி யும் தேவை இல்லை… தேசம்நெட்டும் தேவை இல்லை… இனி இப்படி தான் இலங்கையும் இருக்கும்.. வெளிநாடுகளும் இருக்கும்…நாங்களும் இருப்பம்.
santhanam
/ஆனால் உலக புரட்ச்சி புடுங்கல்கள் பற்றி மட்டும் பக்கம் பல எழுதுவார்கள், மகிந்தா துப்பினாலே அது பன்னீர்தான் என சொல்வோர் இன்று பலர், ஆனால் இவர்களே போராட்ட சதிராட்டமென தொடங்கியவர்களும்; புலி இறுமிச்சாம் அதனால் மகிந்தா வீட்டில் தூங்குகிறார்களாம்/
தமிழ்செல்வன் புலித்தேவனும் தான் முதலில் மகிந்தாவின் எச்சில் தேன் என்று குடித்தவர்கள். அவர்கள் குடிக்கிறதை பார்த்த தலைவரும் ஒருபடி மேல போய் அவரை யதார்த்தவாதி என்று சொன்னவர். இங்க வந்து முழங்காலிற்கும் தலைக்கு முடிச்சு போடவேண்டாம்.
palli
::// தமிழ்செல்வன் புலித்தேவனும் தான் முதலில் மகிந்தாவின் எச்சில் தேன் என்று குடித்தவர்கள். அவர்கள் குடிக்கிறதை பார்த்த தலைவரும் ஒருபடி மேல போய் அவரை யதார்த்தவாதி என்று சொன்னவர்.//
இது என்ன வேடிக்கை புலி தவறு அதன் கொள்கை தவறு; கொலை தவறு இதில் நானும் உடன்படுகிறேன்; ஆனால் புலி முதல் செய்தது நாங்கள் இப்போ செய்கிறோம் எனபதுபோல் இருக்கே உங்கள் எழுத்து, புலி செய்ய யாவற்றையும் நாமும் செய்ய வேண்டுமாயின் என்னும் ஒரு 30 வருடம் வேண்டுமே; பரவாயில்லையா??
palli
::// தேசம்நெட்டும் தேவை இல்லை… இனி இப்படி தான் இலங்கையும் இருக்கும்.. வெளிநாடுகளும் இருக்கும்…நாங்களும் இருப்பம்.//வாழ்த்துக்கள் அந்த மக்களும் அப்படியே
பட்டினியாய் பரதேசியாய் பாவபட்டமக்களாய் இருக்கட்டும்;
santhanam
அந்த மக்களை அவர்களாக இருக்கவிட்டால் காணும் அந்த மக்களை யார் இதுவரை உதவ வேண்டும் என்று சிந்தித்தீர்கள் நீங்கள் மக்கள் மக்கள் என்று சொல்லி விதவைகளையும் அனாதைகளையும் அங்கவீனர்களையும் ஏதிகளையும் புலத்திலிருந்து களத்தில் உருவாக்கிகொண்டு உதவி உதவி என்று தனிநபர்களின் கைகளிற்கு மாறியதுதான் மிச்சம் சேர்த்தவனிற்கும் தெரியாது கொடுத்தவனிற்கும் தெரியாது எங்கே போய் சேர்ந்தது என்று??
NANTHA
“வெளி நாட்டு” தமிழர்களுக்கு ஒரு அடையாளம் தேவையாக உள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் குறைந்த பட்சம் “இலங்கை” அரசுடன் அங்குள்ள மக்களுக்கு உதவ என்ன “தொடர்புகளை” வைத்துள்ளனர் என்பது இன்றும் தெரியாத விடயம்.
இலங்கை அரசுக்கு தெரியாமல் “அங்குள்ள” தமிழர்களுக்கு உதவ உள்ளோம், பணம் தாருங்கள் என்று புறப்படுவது ஏற்கனவே “விட்ட கரடி”யாகும்.
எதிர்காலத்தில் சிலவேளைகளில் மஹிந்த அரசு ஏதாவது “மாநாடு” அல்லது கூட்டம் நடத்தினால் “தங்களையும்” அழைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த “வெளி நாட்டு” தமிழர்களிடம் உள்ளதோ தெரியவில்லை.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்(99.9 %) மீண்டும் இலங்கைக்கு போகப் போவதில்லை. எனவே இந்த “மகாநாடுகள்” எந்த விதமான “உதவிகளையும் அங்குள்ள மக்களுக்குச் செய்யப்போவதில்லை.
kumar
இந்தக்கூட்டத்தை ஒழுங்கு செய்த கீபோட் மாக்ஸிஸ்ட்டுக்கள் அதிகம்போனால் கீபொட் இருக்கும் மேசைக்கு வெளியே எதுவும் செய்மாட்டார்கள் என்பது எமக்கு தெரியும் ஆனால் 30 வருடங்களின் பின்னர் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாக்காதுத விட்டால் சரி.
மக்களுக்கு சேவை என்றால் மக்களுடன் இருக்க வேண்டும் மக்கிடம் இருந்து பிரப்பத மீனை தண்ணீரில் இருந்து எடுப்து போன்று என்று தோழர் மாவோ சொல்லியுள்ளார்.
பல மாக்ஸஸிஸ்ட்டுக்கள் அரச உதவிப்பணங்களை திருவதிலும் இங்கிருந்து கொண்டு எக்ஸ்போட் பண்ணவும் முனைவதும் எந்த அளவுக்கு சரியானத என்பதை கவனிக்க!