வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.
இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
Rajvathan
அப்பிடியாயின் தேசிய கீதத்தையும் இரண்டு மொழிகளில் இணைத்து ஒரேயொரு கீதமாக பாட ஏற்பாடு செய்வாரகளா? பிரதமர் பிரேமதாசவுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததாகவும் இதற்கு ஒலிபரப்பாளர் பி எச் அப்துல் ஹமீத் உட்பட சிலர் அழைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டதாகவும்- திரு ஹமீதே தமது நண்பர்களுக்குச் சொல்லியுள்ளார்!
Kusumpu
மும்மொழியுலும் பலகை போட்டால் தமிழர்கரின் அரசியல் தீர்வு நிவர்த்தியாகி விடுமாக்கும்
thaya
மொழிகள் இரண்டும்
ஓரிடத்தில் சமனாக இருந்தன..
அது ஓர் பெயர்ப்பலகையில்…
அது ஒன்றும் ஆச்சரியமில்லை
அயல் வீட்டவன்
யாரோ தீண்டப்படாதவனாம்
அவனை என் மகளுக்கு
திருணம் செய்து கொடுப்பதா?…
இறுதி மூச்சு உள்ள வரை
இந்த காதலை எதிர்ப்பேன்
என்றவனின் வீட்டுச்சுவரில்
தொங்குகின்றது ஒரு நாட் காட்டி…
அதில் எழுதப்பட்டிருப்பது
தமிழர்களே ஒன்று படுங்கள்
தமிழ் தேசியத்திற்காக….