கண்டி பள்ளேகலவில் தற்போது நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிடும் இறுதி திகதி எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நேற்று (7) மாலை அறிவித்துள்ளார்.
கடந்த 4ம் திகதி முதல் 10ம் திகதி வரையும் மேற்படி கண்காட்சி இடம்பெறுவதாக அறிவித்திருந்த போதி லும் பொதுமக்களின் வேண்டு கோளுக்கி ணங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினது ஆலோசனையின் பேரில் இந்த திகதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.