இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகா இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
msri
ரஷ்ய பல்கலைக்கழகம் மகிந்தாவை “சர்வதேச சமதானக் கலாநிதி” ஆக்கியபொழுது> அவர் இலங்கையின் “ஜார் மன்னன்” என்ற விடயம் உங்களின் ஆய்விற்கு அகப்படவில்லையோ? உங்களின் பட்டத்தின் பயன்பாட்டை அவர் பொன்சேகாவிற்கு ஊடாக இலங்கையில் பிரயோகிக்கப் போகின்றார்
palli
இதுக்காகத்தான் டாக்ட்டர் பட்டமெனில் கருதெழுத்கவே கஸ்றமாக உள்ளது, இதுக்கும் புலிக்கும் ஏது வேறுபாடு, புலியை விட கேவலமானதுதான்
சிங்கம் என்பது இன்று புரிகிறதா?? நம்மவர் இதையுலம் நியாயபடுத்துவார்கள், அவர்களுக்கு தேவை;;
துவாரகன்
பயங்கரவாதம் இலைங்கைத்தீவில் முடிந்து விட்டது என்பதன் இன்னொரு சான்று தான் இது. இதுவும் எதிர்பார்க்கப்பட்டது ஒன்றுதான். ஊடகவியலாளர் வித்தியாதரன் கைது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் “நாகரீகமான ஆங்கிலத்தில்” ஒரு ஜனநாயக அறிக்கை விட்டாரே அது போல ஒன்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Banndarawanniya
This is very bad…. we vehemently condemned this kind of act
IS this the MR’s democracy?? Who is the real IDI AMIN ? the real idi amin now in action ….. oh my god
Mahinda you did a foolish thing and the reward will follow you soon. Better you stay in Russia.!!
He made one mistake, that is “brought the truth to the light”. God will punish MR and brothers for the killing of million innocent civilans and behave like this. At this point, if we don’t take any action, we better forget democracy and all be slaves …
Hello people
This is unbelievable. We have eradicated terrorism as MR says but Lanka is less free now than ever before.The rulers are the terrorists what else can u expect?
No more democracy in Sri Lanka
“Y was I born in this country. shame!!
End of democracy and HR is SL? soon or later MR and Gotabaya will learn good lesson. world is watching the situation very closely it’s not 1978 but 2010. Now the next news will be that SF tried to run away and the military shot him … END of SF …? The way things are going, all those who voted for SF too, will soon be arrested for ‘being a threat to national security.’ That means some 38% of our population will soon be in prison. ‘Beautiful’ democracy! INCULED NORTH & EAST
rohan
சரத் பொன்சேக கைது செய்யப்பட்ட விதம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?
ராஜபக்ச சகோதரர்களிடம் நேர்மையையும் மனிதத் தன்மையையும் எதிபார்க்கும் எல்லோர்க்கும் சமர்ப்பணம்.
santhanam
ரத்வத்தை யாழ்ப்பாணத்தை பிடித்து மண் கொண்டு போய் மருமகளுடன் கொடுத்தவர் அதன் பின் அவர் கோட்டுக்கும் யெயிலுக்குமாக அழைந்தார் இப்ப பொன்சேக அன்கோ என்றிருந்து முள்ளிவாய்காலில் ஆயுதத்தை மெளனமாக்கிய பெருமையை தட்டி சென்று 90 நாட்களில் அன்கோ பிளவு பின் தேர்தல் எனி இவருக்கும் ரத்வத்தையின் நிலைதான்.
தமிழ்வாதம்
பிரபாகரன் கருணா மீது விட்ட தவறை, சிங்களப் பிரபாகரன்(மகிந்த) சரத்திற்கு கயிறாக் போடப் போகிறார். அதென்னமோ அவர் இல்லாத நேரமாப் பார்த்து முக்கியமான விசயம் நடக்குது. மாத்தையா மாத்தையாவேதான். வாழ்க மன்னராட்சி.
Kusumpu
இலங்கையில் நடப்பது குடியரசா? காலம் பூராகவும் ஒரு கட்சியை மற்றப்கட்சி பிடித்துத் தின்று வருகிறார்கள். இங்கே தலையுறுட்டப்படுவது தமிழர்களின் தலைதான். இது குடியரசல்ல வெறியரசு. ஜனாதிபதி ஆட்சி என்பது சர்வாதிகார ஆட்சிதான்.
மாயா
சரத், இணைந்திருப்பது, JVP யோடு. JVP யின் பெரும்பாலான உறுப்பினர்கள் யுத்த காலத்தில் இராணுவத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். இது சிறீலங்காவின் அடுத்த பயங்கரவாதம் தலையெடுக்க முக்கிய காரணியாக எதிர்பாக்கப்பட்டது. அடுத்த அச்சுறுத்தல் அதுவாகவே இருக்கும். எனவே இராணுவத்தை பலப்படுத்தவும், அவர்களை கழையவும் வேண்டியுள்ளது. இவர்களை வைத்து சரத் , ஒரு புரட்சியை முன்னெடுக் திட்டமிட்டதோடு , அவரது பேச்சுகளும் அந்த நோக்கிலே அமைந்தது. அதுவே அவரை உள்ளே தள்ள வழி செய்தது.
மேளம்
சரத்தின்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ராசபக்ச அன் கோவை அழித்து நாட்டைப்பிடிக்க திட்டமிட்டது என்பதும் ஒன்று. அப்ப எதிர்க்கட்சிகளின் தலைவர்மார் பாடும் டங்கணக்காதானா? தள்ளாத வயதில சம்பந்தரப் புடிச்சடைச்சா. பாவம் தாங்கார்… ரணில் கொஞ்சம் பரவாயில்ல தெம்பா இருக்காரு. சோமவன்ச கோவிந்தா.கக்கீம் வேண்டவே வேண்டாம்.. மனோகணேசன் கொஞ்சம் இளம்புள்ளதான்… எது எப்புடியோ வாற எலக்கனில நமக்கேன் இந்த வம்பு தும்பு எண்டுபோட்டு வீணையையும்> > படகையும் கொண்டுபோய் மகிந்தாட கொட்டிலுக்குள்ள ஒளிச்சுப்போட்டு இரண்டுபேர் வரத்தான் போறாங்க…. பொறுத்திருந்து பாருங்கோ.
மேளம்
rohan
“சரத், இணைந்திருப்பது, JVP யோடு. JVP யின் பெரும்பாலான உறுப்பினர்கள் யுத்த காலத்தில் இராணுவத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். இது சிறீலங்காவின் அடுத்த பயங்கரவாதம் தலையெடுக்க முக்கிய காரணியாக எதிர்பாக்கப்பட்டது.” என்றெல்லாம் முண்டு கொடுக்க ஆள் இருக்கும் போது மகிந்த காட்டில் மழை தான்.
ஊடகக்காரர்களுக்கு இந்த அரசு காட்டாத பயங்கரவாதமா புதிதாக முழைக்கப் போகிறது?
msri
சிலரது பின்னூட்டங்கள்> பொன்சேகாவிற்கு எதிரான> வாக்குமூலங்களாக சாட்சியங்களாக அமைகின்றன. இவைகள் ராணுவ நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றால்> நீதிபதிக்கு தீர்ப்பு வழங்க இலகுவாக அமையும்! மகிந்தாவும் மட்டில்லா மகிழ்வுறுவார்! எனக்கு புலம்பெயாவில் இப்படியான சாட்சியங்களா? என.
palli
//ஜனாதிபதி ஆட்சி என்பது சர்வாதிகார ஆட்சிதான்.// இதையே பல்லி தேர்தலுக்கு முன் சொன்னேன்;
//ஒரு புரட்சியை முன்னெடுக் திட்டமிட்டதோடு , அவரது பேச்சுகளும் அந்த நோக்கிலே அமைந்தது. அதுவே அவரை உள்ளே தள்ள வழி செய்தது//
இதை பல்லி போல் பாமரன் சொல்லலாம் ஆனால் ராணுவபயிற்ச்சி (புலிபோல் இல்லாமல்) ராணுவ சட்ட திட்டங்களுக்கு அமைய எடுத்த மாயா சொல்வது மாயாவின் பின்னோட்டமும் அரசியல் ஆகிறதோ என பயமாக உள்ளது;
//எது எப்புடியோ வாற எலக்கனில நமக்கேன் இந்த வம்பு //
மேளம் உங்கள் கணிப்பே எனதும்; பாராளமன்ற தேர்தலுக்கான ஒரு எச்செரிக்கைதான் இந்த கைது, ஆனால் இந்த கைதும் எதிரணியினருக்கு ஒரு பலம் என்பது அவசரகாரர்க்கு தெரியவில்லை;
//ஊடகக்காரர்களுக்கு இந்த அரசு காட்டாத பயங்கரவாதமா புதிதாக முழைக்கப் போகிறது?//
புலிகள் மட்டுமல்ல அரசும் பயங்கரவாதிதான் என்பதை உலகம் அறியட்டும், இந்த இரு பயங்கரவாதிகளிடத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் நிலையை உணரட்டும்;
// எனக்கு புலம்பெயாவில் இப்படியான சாட்சியங்களா? என.//
இருக்கலாம் சரத் தனது நிலையை தனது நண்பர்களான பலநாட்டு ராணுவ தளபதிகளிடம் எழுத்து மூலம் கொடுத்து விட்டதாகதானே செய்தி, ஆக சரத்துக்கு உதவ எந்த நாட்டு தளபதிகள் முன்வருவார்கள் என்பதே இன்றய கேள்வி?,,
சாந்தன்
சரத்தின் மனைவி சொல்கிறார் ஸ்ரீலங்கா பெண்கள் எல்லோரும்“பெண்களாகவும், ச்கோதரிகளாகவும், தாய்மார்களாகவும்’ தனது கணவனின் விடுதலைக்காக குரல்கொடுக்கட்டாம். அத்துடன் இவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் மன்றாடி இருக்கிறார்.
கடந்த வருடம் திரு. மனோ கணேசனின் முயற்சியால் அழைத்து வரப்பட்ட ஐ.நா மனித உரிமைக்கான பெண் அதிகாரி ஒருவரின் முன்னிலையில் தமிழ்ப்பெண்கள் அழுத காட்சி ஞாபகம் வருகிறது. அப்போது இவர் ஸ்ரீலங்கா ரி.வியில் தோன்றி தேசிய பாதுகாப்புக்குள் வெளிநாட்டவர் தலையீடுகள் பற்றிச் சொன்ன கதைகள் எவ்வளவு? ஊடகவியலாலர்களுக்கு இவர் விட்ட எச்சரிக்கைகள் எவ்வளவு? இன்று அவர் ‘கழுத்தைப் பிடித்து ஒரு மிருகம்போல் தள்ளிச் செல்லப்ப்ட்டார்’ என துணிச்சலுடன் வெளியே சொல்லி இவருக்காக போராடும் அதே மனோ கணேசனுக்கு இவர் விடுத்த பயமுறுத்தல்கள் தான் எவ்வளவு?
இன்று இவரின் மகள் ஒரு புளொக் ஒன்று ஆரம்பித்திருக்கிறார், தனது தந்தை எங்கே எனக்கேட்டு, இத்தனைக்கும் அவர் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார், அவரைச் சந்திக்க அவர்மனைவிக்கு அனுமதி உண்டு என அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் இன்று வரை விசாரனை இன்றிச் சிறையில் வாடும் அப்பாவி இளைஞர்கள்/யுவதிகள் உயிருடனாவது இருக்கிறார்களா எனச் சொல்லும் படி அரசிடம் கேட்டதனை உதாசீனம் செய்தவர் இவர். அப்போது இவர் மனைவி ‘ஒரு தாயாக , சகோதரியாக, மனைவியாக’ இவருக்கு என்ன சொன்னார் என அறிய ஆவலாயுள்ளேன்!
BC
முன்னாள் தளபதி மீது சிலருக்கு பாசம் பொங்கி வழிகிறதே!
thaya
அழைத்துச்செல்வதற்கு பதிலாக இழுத்துச்சென்றார்களாம்….
நல்ல வேளை கொண்டு வாருங்கள் என்று சொன்னதற்கு பதிலாக கொன்று சென்றிருக்கவில்லை…
அது சரி…தரகு முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டாளி கட்சிகள் இனி என்ன செய்யப்போகின்றன…
புலிகளை விடவும் மேசம் என்கிறார் பல்லி…
புலிகளின் அகராதியில் கைது செய்யும் பழக்கம் இல்லையே…
கண்ட இடத்தில் போட்டுத்தள்ளுவது..
குற்றவாளி என்று கருதும் ஒருவரை கைது செய்வது தவறாகவும் இருக்லாம்.
ஆனாலும்> அது நாகரீகம்.. கண்ட இடத்தில் சுட்டுக்கொல்வது காட்டுமிராண்டித்தனம்….
நடுநிலை என்று காட்டுவதற்காக எதையும் எழுதிவிடக்கூடாது… கூட்டுச்சேர்ந்து கூட்டுத வறிழைப்பவர்கள் இறுதியில் உடந்து சிதைந்து போவார்கள்…
NANTHA
இலங்கையிலும் சரி வேறு எந்த நாட்டிலும் சரி இராணுவத்தினருக்கு சில விசேட சட்ட திட்டங்கள் உண்டு. சாதாரண “சிவிலியன்களை விட” இராணுவத்தினருக்கு “இராணுவ” இரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு “விதி” உண்டு.
இலங்கையில் இராணுவத்தினர் பதவி விலகினாலும் “இரகசியங்களை” 6 -12 மாதங்களுக்கு வெளியிட முடியாது என்பது சட்டம். அமரிக்காவில் வாழ் முழுதும் வெளியிட முடியாது. இருபது வருட சிறைத் தண்டனை உண்டு.
அடுத்தது பதவி வகிக்கும் அதிகாரிகள் இலங்கையில் “அரசியலில்” ஈடுபட முடியாது. பொன்சேகா இரண்டையும் மீறியிருக்கிறார் என்றே நம்பப் படுகிறது.
அவரை கைது செய்தது பற்றி “சத்தம்” வைப்பவர்கள் சட்டங்களோ இராணுவ விதி முறைகள் பற்றியோ அறியாதவர்கள் என்றே நம்புகிறேன்.
rasaththi
பொதுவான கருத்து ஒன்றுக்கு வருமுன்னர் நாம் கருத்துநிலையில் நிர்வாணமாகவேண்டும். எக்ஸ் என்ற ராணுவ தளபதியில் தவறுஇருந்தால்(?) அதை எப்படிக் கையாள்வது? சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் சிறுபிள்ளைத்தனமானவை. தனக்குத்தானே சுருக்குப்போடக்கூடியவை. அரசு எதிர்ப்பு – மகிந்தா எதிர்ப்பு கோசம் எல்லா இடத்திலும் பொருந்திப்போகா.
மாயா
எனது கருத்தை விட யதார்த்தத்தை எழுதுவதே , எப்போதும் நியாயமானது. தவிர , இங்கே சரத்துக்கோ அல்லது மகிந்தவுக்கு சார்ப்பும் இல்லை. எதிர்ப்பும் இல்லை.
ஜேவீபியில் இருந்தவர்கள் அரச படைகளாலும் , போலீசாராலும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்த காலத்தில், அதாவது சந்திரிகா காலத்திலேயே , சிறீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்களாகி தமக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் , வெளியில் சுதந்திரக் கட்சியனராகவும், உள்ளே ஜேவீபியாகவும் இருப்பவர்கள். அன்றைய ஐதேகட்சி ஜேவீபியை வீடு வீடாக தேடி அழித்து வந்தது. இந்த நடவடிக்கை பிரேமதாஸ காலத்தில் உச்சத்தில் இருந்து , குறைந்தாலும் தொடரவே செய்தது. எனவே தாங்கள் ஜேவீபியினர் அல்ல சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் காட்டிக் கொள்ள இந்த நடிப்பு உதவியது. ஜேவீயினரின் பிளவுகள் இவற்றையும் காட்டிக் கொடுத்தன. பின்னர் புலிகளுக்கு எதிரான போரின் போதும் , படை வீரர்கள் தேவைப்பட்ட போதும் , அதிகமாக இராணுவத்துக்குள் உள் நுழைந்தவர்கள் ஜேவீபியினர்தான். ( தமிழீழம் காணப் புறப்பட்ட தமிழ் இளைஞர்கள் , தம்மைக் காத்துக் கொள்ள, தாம் எதிர்த்த அரசோடு இணைந்து தம்மைக் காத்துக் கொண்டு, புலிகளுக்கு எதிராக செயல்பட்டது போல எடுத்துக் கொள்ளலாம்) ஜேவீயினர் சிறீலங்காவின் தேசியவாதிகள் என்பதால் , இவர்கள் புலிகளையும், தமிழீழத்தையும் ஒரு போதும் அங்கீகரித்தவர்கள் இல்லை. எனவே இவர்கள் புலிகளுக்கு எதிராக போராடியதிலும் பெருமை கொண்டார்கள். நல்ல பயிற்சியையும் பெற்றார்கள்.
இந்த வகையில் அரசினால் கொல்லப்படக் கூடிய ஜேவீபியினருக்கு , படை வீரர்கள் என்ற அந்தஸ்த்து, உயிர் பாதுகாப்பை அளித்தது. அடுத்து இலவச இராணுவ பயிற்சியையும், தமது தாக்குதல் எல்லைகள் குறித்த தெளிவையும் கொடுத்தேயிருந்தது. இராணுவத்தில் அதிகமாக இணைந்த இளைஞர்கள் , பெரும்பாலும் சிங்களக் கிராமப் புறங்களில் இருந்தே சென்றுள்ளார்கள். இந்தக் கிராமங்களில் ஜேவீபியின் ஆதரவாளர்கள் உள்ளதை இலகுவில் உணரலாம். இராணுவத்தை விட்டு ஓடிய பெரும்பாலான இளைஞர்கள் இப்படியான கிராமத்து இளைஞர்களேயாகும். அவர்கள் ஓடும் போது கூட பெரும்பாலும் ஆயுதங்களோடு ஓடியிருக்கிறார்கள். இப்படி ஓடி கைதானவர்கள் , மோசமான நிலையில் கைதாகி ஒரே அறைக்குள் 50 முதல் 100 வரை குவித்து அடைத்து வைத்துள்ளது குறித்து சிங்கள ஆங்கில செய்திகளில் வந்துள்ளது. தமிழில் இல்லையென்றே சொல்லாம். இவர்களது வேதனைகளை , அவர்களது குடும்பத்தினர் பீபீசியின் சிங்கள சேவையில் கூட பகிர்ந்து கொண்டார்கள். நாட்டுக்காக சேவை செய்யப் போனவர்களுக்கு இப்படி ஒரு நிலையா? என பொதுவாகப் பார்த்தால் உணர முடியும். (தமிழீழத்துக்காக போராடப் போன இளைஞர்கள், அதை வெறுத்து வெளியேற முயன்ற போது அவர்கள் இணைந்த இயக்கங்கள் நடத்தியதைப் போல எனக் கொள்ளலாம்)
இவர்கள் கைதாகும் போதெல்லாம், இதே சரத் இவற்றை சரியென ஏற்றுக் கொண்டார். அவரது கட்டளையை மீறி , இவை நடக்கவில்லை. அதை அங்கீகரித்தார். அதே போல புலிகளோடான போரில் , முன்னரங்குகளில் இறந்தவர்களில் பெரும்பாலானோர், இப்படியான கிராமத்து இளைஞர்களேயாகும். சிலர் சிறு குழந்தைகள் போலக் காணப்பட்டனர். சரத், மகிந்தவால் ஒதுக்கப்படும் போது , அவர் இணைந்து கொண்டது, இந்த இளைஞர்களை தலைமைத்துவம் ஏற்கும் ஜேவீபியோடுதான். எனவே ஓடிய இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக சரத் தேர்தலின் போது பகிரங்க அறிக்கை ஒன்றைக் கூட விடுத்தார். அதே போல , “மகிந்தவை அடக்க , தமக்கும் ஒரு படை இருக்கிறது” என சிங்களத்தில் உளறித் தள்ளினார். அதை மகிந்த, முறியடித்த போது சரத், குழம்பிப் போனார். தேர்தல் காலத்தில் ” குற்றவாளிகளை , கோல்பேஸ் திடலுக்கு கொண்டு வருவேன்.” என்பதெல்லாம் பேசியது சற்று டூமச்தான். இவை தவறிய போது கைதாக ஒருநாள் முன்னர், அனைத்து உண்மைகளையும் சர்வதேசத்துக்கு கூறுவேன் என இராணுவ இரகசியங்களை வெளியிட முனைந்தது சரியென என்னால நினைக்க முடியவில்லை.
இதே சரத், “புலிகளுக்கு எதிரான போரின் அனைத்து வெற்றிக்கும் தனதே” எனக் கூறி, “அனைத்து தமிழர்களையும் தொடர்ந்தும் முகாமில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் இராணுவ கிராமங்களின் நடுவிலும் ஒரு இராணுவ முகாம் அமைய வேண்டும். அதற்காக ஒரு லட்சம் இராணுவ வீரர்களை இராணுவத்தில் இணைக்க வேண்டும்” எனக் கூறியவர்தான். இவருக்கு பணம் கொடுத்ததும், சம்பந்தர் முட்டுக் கொடுத்து , மூட்டுவலியோடு இருப்பதையும் நினைத்தால் வாயால் சிரிக்க முடியவில்லை. மோட்டுத் தமிழினம் சரத்துக்காக வாதாடுகிறது இன்று? என்ன கொடுமை? அன்று அவர் வீசிய அதே பந்து அவரை நோக்கி இன்று வந்துள்ளது.
தவறுகள் யார் விட்டாலும் தண்டணை ஒன்று உண்டு. அது எப்படி? எப்போது? யாரால் என்று சொல்ல முடியாது. அது இயற்கையாகக் கூட இருக்கலாம். பிரபாகரனுக்கும் அதே, சரத்துக்கும் அதே, சம்பந்தருக்கும் அதே, மகிந்தவுக்கும் அதே. அதில் மாற்றம் இல்லை. இதுவே இயற்கையின் தண்டனை.
என்னைப் பொறுத்தவரை தமிழருக்கான தீர்வொன்று தேவைப்படும் சமயத்தில், மகிந்த போன்ற (சிங்களத்து பிரபாகரன்) ஒருவரே இலங்கை தேசத்துக்கு சரியானவர். தமிழருக்கான தீர்வுகள் அனைத்தும் இடையில் கிழித்து எறியப்பட்டதற்கு காரணம் பலமான ஒரு சிங்களத் தலைமை இலங்கையின் அரசியல் பீடத்தில் இல்லாததே. எனவே ஆளும் கட்சி, எதைக் கொண்டு வந்தாலும் , எதிர்க் கட்சிகள் அன்று எதிர்த்து கிழித்து எறிய வீதிக்கு வந்து, தனது அரசியலை நடத்தின. இதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற பேதம் இல்லை. எல்லாம் ஒன்றுதான். அரிசி ஒன்றுதான், கடை வேறாக இருக்கலாம். இன்றைய நிலை தொடர்ந்தால்தான் , தமிழருக்கான தீர்வொன்றை மகிந்த வைக்கும் போது , அதை எதிர்க்க எவரும் முன் வர மாட்டார்கள். நாட்டின் சுபிட்சம் மற்றும் முன்னேற்றத்துக்கு இனவாதம் தொடரலாகாது. அதற்கான தீர்வொன்று தேவை. அது வரும் போது இன்னொரு புரட்சி உருவாகக் கூடாது. அது நாட்டை வறுமைக் கோட்டுக்கு கொண்டு சென்றுவிடும். பிரபாகரனின் காலத்தில் கிடைக்காத தமிழீழம், இனி ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. அதுவே எனது எண்ணமாக இருந்தது. தமிழீழம் என ஒன்று கிடைத்தால் அது பிரபாகரன் காலத்தில்தான். இல்லையென்றால் அது கானல் கனவுதான் என பலரிடம் சொல்லியிருப்பேன். பல முரண்பாடுகளுக்குள்ளும் என்னால் சொல்ல முடிந்தது. அது முடிந்துவிட்டது. இப்போதைய குத்தாட்டங்கள் பணம் பறிக்கும் காபரேக்கள். அடுத்து, மகிந்தவின் காலத்தில் , தமிழர் வாழ்வில் மாற்றம் ஒன்று வர வேண்டும். அடுத்தவரது வயிற்றுப் பிழைப்புக்காக அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளின் குள்ள நரித்தனங்களுக்கு எம்மை இந்நேரத்தில் அடகு வைக்கக் கூடாது.
இன்று, புலிகளின் போருக்குப் பின்னான , அடுத்த சதி அல்லது புரட்சியொன்றின் போக்கு , சரத்தின் கைதால் தடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு வித்தியாசமான சிந்தனையொன்று தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை. மகிழலாம்.
palli
//இலங்கையிலும் சரி வேறு எந்த நாட்டிலும் சரி இராணுவத்தினருக்கு சில விசேட சட்ட திட்டங்கள் உண்டு. சாதாரண “சிவிலியன்களை விட” இராணுவத்தினருக்கு “இராணுவ” இரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு “விதி” உண்டு.//
தெரிந்ததுதான்; அதே ராணுவ சட்டத்தில் ஒரு ராணுவ வீரரோ அல்லது அதிகாரியோ தவறுவிடும் பட்ச்சத்தில் அதை விசாரிக்க ராணுவ கோடு, ராணுவ பொலிஸ் இருக்கு அவர்கள்தான் கைது செய்யவோ விசாரிக்கவோ முடியும், அதேபோல் ராணுவம் போர்குற்றம் செய்யகூடாது எனபது சர்வதேச சட்டம் என்பதும் நந்தா புராயதல்ல;
//அது சரி…தரகு முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டாளி கட்சிகள் இனி என்ன செய்யப்போகின்றன…//
இப்போ புரிகிறதா?? ஏன் கைது என்பது,
//அடுத்தது பதவி வகிக்கும் அதிகாரிகள் இலங்கையில் “அரசியலில்” ஈடுபட முடியாது. பொன்சேகா இரண்டையும் மீறியிருக்கிறார் என்றே நம்பப் படுகிறது. // இதுபற்றி எனக்கு தெரியவில்லை, ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் பலர் பதவி வகித்தவர்கள் மட்டுமல்ல அரசியலிலே இருக்கும் போதே பதவிகளையும் வகித்தவர்கள்,
//முன்னாள் தளபதி மீது சிலருக்கு பாசம் பொங்கி வழிகிறதே!//BC
இன்னாள் ஜனாதிபதியின் நாசவேலையில் பலருக்கு நாட்டம்இருக்கும் போது தளபதி மீது பாசம் வைப்பது போல்தான் படும், எம்முடன் இனையாத யாவரும் துரோகிகள் அன்று புலி சொல்லியது, மகிந்தாவின் மகிமைகளை வணங்காத யாராயினும் ;;;; இது இன்று புலியை திட்டியவர்கள் சொல்லுவது;
//சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் சிறுபிள்ளைத்தனமானவை. தனக்குத்தானே சுருக்குப்போடக் கூடியவை.//
இருக்கலாம் ஆனால் அந்த அறிக்கைகள் எமக்கு தேவையானவை என்பதுதான் என வாதம், எப்படி என்பது உங்கள் கேள்வியாயின்? ஏன் இந்த கைது என்பதுக்கான விடையை தேடுங்கள்;
மாயா;;
உங்கள் கருத்துடன் என்னால் உடன்பட வில்லை, காரனம் எனக்கு இந்த உலக நாட்டு சங்கதிகள் பெரிதாய் தெரியாது, ஆனால் ஓர் அளவு ராணுவ விடயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன், அதுக்கான காரனம் இந்திய ராணுவ அதிகாரி (கடல்படை) ஒருவருடன் பழகும் சந்தர்ப்பம் இந்தியாவில் வீணாய் திரிந்தகாலத்தில் கிடைத்தது; இன்றுவரை அவரது நட்ப்பு இருக்கிறது, உங்களுக்கும் அவரை தெரிந்து இருக்கலாம்; சரி விடயத்துக்கு வருகிறேன், பதவி காலம் முடிந்த ஒருவரை நீதான் புலியை அடக்க சரியான ஆளு என மேலதிகமாக பதவியை நீடித்து சரத்தை மகிந்தா குடும்பம் வைத்திருந்ததை இங்கே சுட்டி காட்டுகிறேன்; சரத் நல்லவர் கிடையாது என்பதில் எனக்கு கருத்து முரன்பாடு இல்லை, ஆனல் இன்று அவரது வாக்குமூலங்கள் தமிழருக்கு தேவை என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறியள்; புலியை கருனா பிரியாவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது, புலியை அழிக்க மகிந்தா கருனாவுக்கு கொடுத்த பதவியோ அல்லது சுகந்திரமோ மிக மேலானது, காரனம் அவரது பார்வையில் கருனாவின் குற்றத்தை விட புலி அழிப்பே வலுவாக இருந்தது; கருனாவோடு ஒப்பிடும் போது சரத் எந்தவகையில் சிங்கள ராணுவத்துக்கு கெடுதல் செய்து விட்டார், அதையும் விட ராணுவ சூழ்ச்சி என்பது மிக கவனமாக நீண்டகால தொடர் வேலைகளை செய்து வருவது; அப்படி சரத் செய்திருக்க வாய்ப்பில்லை; காரனம் இலங்கை ராணுவம் சரத்தின் கட்டுபாட்டில் மட்டும் இல்லை என்பது பலர் அறிந்த உன்மை; மகிந்தாவும் சரத்தும் சம்பந்தி அளவுக்கு நட்ப்பாய் இருந்தவர்கள்; போர் வெற்றி என்பது ஒரு தளபதியால்தான் முடியும்,ஆனால் இங்கே மகிந்தா குடும்பம்தான் எல்லாவற்றையும் நடத்தி முடித்ததாக சொல்லுவது எப்படி சாத்தியமாகும், எதற்க்கெடுத்தாலும் அமெரிக்காவையும் புலியையும் திட்டி பளகிய நாம் யதார்த்தத்தை புரிந்து கொள்ள என்னும் பலகாலம் எடுக்கும்தான்; எது எப்படியோ அனைத்து அதிகாரம் உள்ள ஒரு ஜனாதிபதிதான் மகிந்தா என்பதை உலக்குக்கு மகிந்தா புரிய வைத்துள்ளார்,
தமிழ்வாதம்
“..எதற்கெடுத்தாலும் அமெரிக்காவையும் புலியையும் திட்டி பழகிய நாம் யதார்த்தத்தை புரிந்து கொள்ள இன்னும் பலகாலம் எடுக்கும்தான்…..”
palli on February 10, 2010 11:39 am
உண்மைகள் வெளிவருகின்றனவோ!
“அவரை கைது செய்தது பற்றி “சத்தம்” வைப்பவர்கள் சட்டங்களோ இராணுவ விதி முறைகள் பற்றியோ அறியாதவர்கள் என்றே நம்புகிறேன்.”
NANTHA on February 10, 2010 6:08 am
உள்வீட்டுச் செய்தி: இந்த விதி முறைகள் மகிந்தவிற்கே டாக்டர் பட்டம் கிடைத்த பிறகுதான் தெரிய வந்ததாம்.
rasaththi
உலகத்தில் குறிப்பாய் இலங்கைபோன்ற நாடுகளில் சுத்தமான தலைவர்களைக்க hண்பதரிது. இருக்கிறவர்களுக்குடாகத்தான் ஏதாவது ஆகவேண்டியிருப்பது தலைவிதி. எல்லாவற்றிலும் சந்தேகம் குற்றம் சொல்லிக்கொண்டிருப்வர்களால் எதுவும் ஆகிப்போவதில்லை. மகிந்தா அரசால் ஒப்பீட்டளவில் சிலவிடயங்கள் சாத்தியமானது என்று நம்புகிறேன். மாற்றுச் சிங்களத்தலைமை இதைவிட சாத்தியம் என்றால் அதைக்காட்டுங்கள். எம்மைச்சரி செய்யத் தயார். வெறும் பழிவாங்கும் அரசியல் வேண்டாம். இதற்காக மகிந்தாமீது விமர்சனம் இல்லை செய்க்கூடாது என்பதல்ல. எந்த இடத்தில் நின்று செய்கிறோம் என்கிற பொறுப்புத் தேவை.
NANTHA
பல்லி பொன்சேகாவை கைது செய்தவர்கள் யாரென்பதை அறியவில்லை போலிருக்கிறது. Military Police அவரை கைது செய்துள்ளது. ஆனால் பொன்சேகா தன்னை “போலிஸ்”தான் கைது செய்யல்லாம் என்று வாதிட்டிருக்கிறார். பொன்சேகா பதவி விலகி ஆறு மாதங்கள் முடியவில்லை. இராணுவ நீதிமன்றம் அவரை விசாரிக்கும். சாதாரண கோர்டில் அவர் தோன்ற முடியாது.
தற்போது புலம் பெயர்ந்த “புலி வால்கள்” கூறும் “போர் குற்றம்” என்பது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உருவாக்கபட்டது. ஜெனிவா தீர்மானம் என்று அதனைக் கூறுவார். அதனை விசாரிக்க சம்பந்தப்பட்ட நாடு “சம்மதம்’ தெரிவிக்க வேண்டும். எந்த நாட்டிலும் சாதாரண இராணுவ வீரர்கள் “இந்த ஜெனிவா தீர்மானத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல!”
இராக் படையெடுப்பு அமெரிக்காவால் “சகல” உலகத்துச் சட்டங்களையும் மீறி நடத்தப்பட்டது. ஐ நா தீர்மானத்தையே உதாசீனம் செய்து அமெரிக்கா அதனை செய்தது. அங்கு யுத்தம் இன்றும் நடைபெறுகிறது. இந்த “போர் குற்றம்” பற்றிய விசாரணைகளை செய்ய முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது. தவிர அமெரிக்க காங்கிரஸ் தங்கள்” படைகளை “மனித உரிமை மீறல், போர் குற்றங்கள்” ஆகியன தொடர்பாக விசாரிக்க முடியாது என்று “சட்டம்” வேறு இயற்றியுள்ளது.
அதிகாரிகள் என்று நான் குறிப்பிட்டது இராணுவத்தில்” உள்ளவர்களை பற்றியது. ஆயினும் சிவில் சேவையிலுள்ள அதிகாரிகளின் சில பிரிவினரும் அரசியலில் ஈடுபட முடியாது. முன்னர் “விதானைகள்” கூட அரசியலில் ஈடுபட முடியாது என்று சட்டம் இருந்தது, முப்படைகளும் , பொலிசாரும் இன்றும் அரசியலில் ஈடுபட முடியாது.
பல்லி “அரசியல் செய்த அதிகாரிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.
Anwer
புலிகளை அழித்த பொன்சேகாக் காப்பாற்ற புலத்து சிங்கங்கள் தயாரா? மகிந்தரிடமும் ஜனநாயகம் இல்லையா? ‘நாமல்’ ராஜபக்ஷவை அரசியல் வாரிசு ஆக்க, பொன்சேகா இடையூறாக இருப்பார் எண்டு மகிந்தர நினைத்திருப்பார். இதுதான் நடக்கிறது.
msri
மகிந்தப்புலியின்> ஜனநாயக மறுப்பை- பாசிச சர்வாதிகாரப் போக்குப்பற்றி கேட்டால்> இராணுவச்சட்டம் பற்றி தெரியாதோ>அரசியல் சட்டத்தை புரட்டிப்பாருங்கள் என்கின்றார்கள் சில சட்டவல்லுனர்கள்! மகிந்தாவும் பொன்சேகாவும் > ஜனாதிபதியாக+ராணுவத்தளபதியாக யுத்தத்தை ஆரம்பித்து-முடித்தபோது> மனிதப் படுகொலையில் பாசிச சர்வாதிகாரத்தில்>இருவரும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்களே! ஜனநாயக விரோத- மக்கள் விரோதப் பொன்சேகாவை > ஜனநாயகவாதியாக்கியதும்-ஜனாதிபதி வேட்பாளாராக்கியதும்> மகிந்த+கோத்தபாயபா சகோதரர்களின் அரசியல் பாமரத்தனமே! பொன்சேகாவின் தற்போயை கைது> அடுத்தொரு அசல் கோமாளித்தனமே! இதற்கு அரசு சொல்லும் “மகிந்தாவை கொலை” ராணுவச்சதி>என்பது வெறும் அரசியல் கோமாளிப் பூச்சாண்டிகளே! சரத்தின் கைது> இன்று மக்களுக்கு எதிரான ஜனநாயாயக விரோத>சர்வாதிகார அடக்குமுறை அரசியலாகியுள்ளது. அதன் தொழிற்பாடே> பொலீசாரரின் உதவியுடன் > மகிந்தக் குண்டர்கள் ஓர் ஆயுத வாகனத்தையே கொண்டுவந்து >நியாயம் கேட்ட சத்தியாக்கிரகப போராளிகளை் தாக்கியது! முட்டாள்கள் பாறாங்கல்லை துர்க்குவது தங்கள் காலில் போடுவதற்கே!
Kusumpu
என்ன சுருக்கமாய் சொல்லப்போனால் இராணுவம் என்பது தளபதிக்குத் தலையாட்டுபவர்கள். தளபதியே அரசியல்வாதிகளுக்கு தலையாட்டும் தலைமைகள். இராணுவத்தில் இருந்தவர்கள் என்று சுயபுத்தியில் இயங்கினார்கள். புலிகளும் இராணுவ உடுப்புத் தரித்ததால் சுயபுத்தி இழந்து முள்ளிவாய்காலில் முக்காடு போட்டார்கள். மகிந்தர் ஒரு சட்டத்தரணி என்பதை அறியாமல் சட்டத்தை சரிவர ஆலோசிக்கமாமல் செய்த வினைதான் இது. மகிந்தர் பிள்ளைகளைக் கிள்ளி விட்டு விட்டு தொட்டிலை ஆட்ட இரஸ்சியா சென்று விட்டார். சனத்துக்கு நல்ல பிள்ளையாகிறார். மகிந்தருக்குத் தொடர்வில்லாமலேயே எல்லாம் நடந்ததாக முடியப்போகிறது. புலிகளையே பிடித்து வடகம் போட்ட மகிந்தவுக்கு சரத்து என்ன சங்கூதவா முடியும். பல ஐரோபியநாடுகளில் அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எவரும் 100வருடத்துக்கு மனிதர்களின் தனிப்பட்ட விடயங்களை வெளியில் சொல்லக் கூடாது. வேலைமாறினாலும் பொத்திய வாய் பொத்தியதுதான்.
palli
//பல்லி பொன்சேகாவை கைது செய்தவர்கள் யாரென்பதை அறியவில்லை போலிருக்கிறது.//
சந்தோஸம்; நந்தா பிடித்தவர்கள்தான் பொலிஸ் என சொல்லும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு, ஆனால் பிடித்தவர்கள் யார் என்பது சரத்துக்கு மட்டுமே தெரியும்; ஆக இது விசாரனையில் வெளிவரும் சமாசாரம்,
//பல்லி “அரசியல் செய்த அதிகாரிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.//
அன்று அமிர் இருந்து இன்று உரித்திரகுமார்வரை, ஏன் இதில் பஸில் பச்சாவையும் சேர்க்கலாம் தப்பில்லை,
பல்லியும் நந்தாவும் மட்டும் இந்த கைது பற்றி பேசவில்லை, உலகத்தில் பல சட்டனிபுனர்கள் இதுபற்றி விவாதிக்கிறார்கள்; சரத்தின் கைது இலங்கையில் நாம் யாரையும் எதுவும் செய்யமுடியும் என்பதை மட்டுமே இன்று விளக்குகிறது, ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது பல்லிக்கு தெரியாது, ஆனால் சர்வதேசம் இதை ஏற்று கொள்ளுமா? என்பது கேள்வியே; எந்த ஒரு ராணுவ தளபதியும் இதை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்; சரத்துக்கு சட்டம் தெரியாது என்பது போல் வாதிடுவது சரியல்ல; இதில் மகிந்தா ரஸியாவில் இருந்துகொண்டு சரத்தை கைது செய்தது அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்; அமெரிக்காவை சார்ந்தே ஜரோப்பா இந்தியா பயணிக்கும் என நினைக்கிறேன்; இந்திய ராணுவ தளபதியும் சரத்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், அவர் இதுவரை (இந்திய தளபதி) எதுவும் சொல்லாமல் இருப்பதும் இன்னும் கேள்விகளை உருவாக்குகிறது, எது எப்படியோ இந்த பிரச்சனை தீரும்வரை மகிந்தா தூக்கம் கெடுவது உன்மை;
NANTHA
பல்லி:
பொன்சேகாவை பகிரங்கமாக அவரது அலுவலகத்திலிருந்தே கைது செய்துள்ளனர். இது எல்லா ஊடகங்களிலும் வந்த செய்தி. இதனை “ஜனாதிபதி” வந்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதில்லை.
PROVOST MARSHALL BRIGADIER விஜேஸ்ரீ தலைமையிலான மிலிட்டரி போலிஸ் கைது செய்துள்ளது. இது பரமரகசியம் அல்ல. இந்த பதவியின் அர்த்தத்தை பல்லி எங்காவது படித்து தெரிந்து கொள்வது நல்லது. சாதாரண போலீசுக்கும், மிலிட்டெரி போலீசுக்கும் உள்ள வேறுபாடு கூட பல்லிக்கு தெரியவில்லை. தமிழ் என்று கத்தும் பலருக்கு சிறு உண்மைகள் தெரிவதில்லை.
அமிர், உருத்திரகுமாரன் என்பவர்கள் ” அரச அதிகாரிகள்” என்ற பின்னரும் பல்லியின் பின்னூட்டங்களை படிக்க வேண்டுமா என்பதுதான் இன்றைய கேள்வி.
Raj
பல்லிக்கு
இதுவரை தங்கள் கருத்துகளை ஏற்று மற்றவர்களுடனும் பகிர்ந்துவந்தேன். ஆனால் போகப்போக ஜிரிவி சாம்பிரதீபன் போன்று ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டு மறுபக்க நன்மைகளை பார்க்கமாட்டேன் என அடம்பிடிப்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை{புலிப்பாணியில்}.உ-ம் கருணாவை அடிக்கடி வம்புக்கிளுக்கும் நீங்கள் கருணா பிரிந்தவேளை தமிழர் நன்மை கருதி குரல்கொடுத்தீர்களா அல்லது இன்று திட்டித்தீர்க்கும் எவரும் முயற்சித்தார்களா? பிள்ளைகளை கொண்டுவந்து தாரைவார்த்த நேரம்மட்டும் கருணா வீரனோ? சமுதாயத்தை மதித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எம்முள் எளும்வரை மீட்சியில்லை.
palli
//அமிர், உருத்திரகுமாரன் என்பவர்கள் ” அரச அதிகாரிகள்” என்ற பின்னரும் பல்லியின் பின்னூட்டங்களை படிக்க வேண்டுமா என்பதுதான் இன்றைய கேள்வி.//
வேண்டாம்; யார் சொன்னது படிக்கசொல்லி; எனது பின்னோட்டம் படிக்கவும் சிலர் இருப்பார்கள், எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன்; ஆனாலும் முடிவில் யார் என்ன செய்தோம் என்பது புரியும்; ராணுவத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் அதிகாரிகள் என நந்தா சொன்ன பின்புதான் எனக்கு தெரியும், ஆனாலும் சரத் மட்டும்தான் அதிகாரி என சொல்லாத வகையில் மகிழ்ச்சிதான், நான் சொன்ன இருவரையும் வக்கிலாகதான் நந்தாவுக்கு தெரியும் என நினைக்கிறேன்; அதுவும் சரிதான் பல்லி போல் சிலர் இல்லாவிட்டால் உங்கள் ஆராட்ச்சிக்கு தடையேது, பல்லியின் பின்னோட்டம் நந்தா படிக்க வேண்டாம்; நந்தாவின் எழுத்துக்களை பல்லி படிப்பேன், அதுக்கான கருத்தும் கிறுக்குவேன்;
//விஜேஸ்ரீ தலைமையிலான மிலிட்டரி போலிஸ் கைது செய்துள்ளது. இது பரமரகசியம் அல்ல.//
கொழும்பில் உள்ள எதிர்கட்ச்சியினருக்கு தெரியாத பல ரகசியம் நந்தாவுக்கு அத்துபடி மிலிட்டரி பொலிஸ் எவரையும் நாகரிகம் இல்லாமல் அசிங்கம் செய்து கைது செய்யாது, கைது செய்யபடுபவர் குற்றவாளி என நிருபிக்கும் மட்டும் அவரை ராணுவத்தை போல்தான் நடத்துவார்கள் (சிறையிலும்) ஆனால் கீழே கவனிக்கவும் (இது இனியொருவின் செய்தி)
//இலங்கைத் தலைநகரில் அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவப் போலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரசு தரப்பில் கூறப்பட்டது.கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார். ராணுவப்போலிசார் இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர். கைது செய்யப்படுவதற்கு முன்னர் , திங்கட்கிழமை, ஜெனரல் சரத் ஃபொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.//
::// சாதாரண போலீசுக்கும், மிலிட்டெரி போலீசுக்கும் உள்ள வேறுபாடு கூட பல்லிக்கு தெரியவில்லை. தமிழ் என்று கத்தும் பலருக்கு சிறு உண்மைகள் தெரிவதில்லை. //
உன்மைதான் உங்களை போல் பல நூற்றாண்டுக்கு முன்பு நடந்த உன்மைகள் எமக்கு தெரியாது, தமிழ் என்று கத்துவது தப்பில்லை; ஆனால்;;;;; என்பதுதான் தப்பு, நான் அம்மாவை அம்மா என அழைக்கிறேன்; நீங்க (நிலமை கருதி) வேலைக்காரிதான் இவ என நையாண்டி செய்யிறியள்; இது உங்கள் தவறா அல்லது நீங்கள் வாழும் சூழல் அப்படியா என்பது பல்லிக்கு தெரியாது,
palli
//இதுவரை தங்கள் கருத்துகளை ஏற்று மற்றவர்களுடனும் பகிர்ந்துவந்தேன். //
நன்றி; பல்லி தவறு விட்டால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கிறேன்; முடியாது என அடம் பிடிக்க நான் புத்திஜீவியல்ல;
//ஜிரிவி சாம்பிரதீபன் போன்று ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டு மறுபக்க நன்மைகளை பார்க்கமாட்டேன் என அடம்பிடிப்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை//
மற்றவர்களுடன் பல்லியை ஒப்பிடுவது தவறு. நான் ஒரு வழிபோக்கன் அம்முட்டுதான்; ராஜ் இப்படி சொல்லுறியள் பல்லிக்கு புலி பக்கத்தாலும் அரசபக்கத்தாலும் பாராட்டுக்கள் (அவமானங்கள்)அடிக்கடி வருவதை கவனியுங்கள்; பக்கசார்ப்பு இல்லாததுதான் பல்லிக்கு பலரால் பிரச்சனையே,
// நீங்கள் கருணா பிரிந்தவேளை தமிழர் நன்மை கருதி குரல்கொடுத்தீர்களா அல்லது இன்று திட்டித்தீர்க்கும் எவரும் முயற்சித்தார்களா? //
இது எனக்கு புரியவில்லை ;ஆனாலும் நான் புரிந்தபடி பதில் எழுதுகிறேன் கருனா பிரிந்தவுடன் நான் அவரை ஆதரித்தேன்; காரனம் அவரது பிரிவு புலி பலம் இழக்க ஒரு வாய்ப்பாய் இருக்கும் என்பதாலும் (மற்றய இயக்கங்களின் அனுபவத்தில்) கரும்புலிகளை இறக்குமதி செய்யும் கருனா புலியில் இருந்து பிரிவதால் பல உயிர்கள் தப்ப வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவரது பிரிவை ஆதரித்தேன், கருனாவும் மகிந்தாவுடன் அரசில் இருப்பதால் மட்டும் திட்டி தீர்க்கவில்லை, அவரது புலிகுணம் இன்னும் மாறவில்லை என்பதால்தான் எழுதுகிறோம்;
//கருணாவை அடிக்கடி வம்புக்கிளுக்கும் நீங்கள்//
அவரை அடிக்கடி பிள்ளையானை சண்டைக்கு இழுப்பதை நிறுத்த சொல்லமாட்டீர்களா?? இந்த ஆள் கடத்தல் விளையாட்டை விட சொல்லுங்கோவன்;
//பிள்ளைகளை கொண்டுவந்து தாரைவார்த்த நேரம்மட்டும் கருணா வீரனோ?//
அப்படி பல்லி சொல்லுவேனா?? முட்டாள் முட்டாள் என பலதடவை கேலி செய்தேன், அதே மாமா வேலையைதான் இன்றும் கருனா செய்கிறார், அல்லது அவருக்காய் உயிரை வெறுத்து புலம்பெயர் தேசத்தில் இருந்து வேலைசெய்ய போனவர்களை பிள்ளையான் பாட்டியென போட்டுதள்ள முடிவு செய்வாரா??
//சமுதாயத்தை மதித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எம்முள் எளும்வரை மீட்சியில்லை.//
இதுவே எனது நிலை, அதனால்தான் தமிழ் சமுதாயத்தின் முதிகில் மிதிப்பவர்களுடன் மல்லுகட்டுகிறேன்;
அதுசரி உங்க பார்வையில் கருனா நல்லவாரா கெட்டவரா? சொல்லவேயில்லையே;;
பார்த்திபன்
பல்லி,
என் கணனியில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகளால், சில நாட்களாக வரமுடியாமல் போய் விட்டது. அதனால் இன்று தான் வரமுடிந்தது.
மேலே தாங்கள் சரத்தை கைது செய்தது சாதாரண பொலிசார் தான் என வாதிடுவது வேடிககையாக இருக்கின்றது. சரத்தைக் கைது செய்தது இராணுவப் பொலிசார் என்பதை, கைது செய்யப்பட்ட போது கூட இருந்த மனோகணேசன், ரவூக் கக்கீம் போன்றவர்கள் கூட பேட்டியில் சொல்லியதை தாங்கள் பார்க்கவில்லையா?? அத்தோடு சரத்தின் மனைவி கூட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை இராணுவத் தளபதி மற்றும் கைது செய்த இராணுவ அதிகாரிகள், பாதுகாபபுச் செயலர் போன்றவர்களுக்கு எதிராகத் தான் போட்டுள்ளாரென்பதைக் கூடவா தாங்கள் அறியவில்லை??
மேலும் சரத் பொன்சேகா தன்னை கைது செய்ய இராணுவப் பொலிசாருக்கு அதிகாரமில்லையென அடம்பிடித்ததால்த் தான், அவரை இராணுவப் பொலிசார் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சரத்தே தன்னைக் கைது செய்தது இராணுவப் பொலிசார் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பல்லியின் அடம்பிடிப்பு ஏன் என்பது தான் புரியவில்லை?? அதிபர் தேர்தல் முடிய, தனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை தேசம்நெற்றில் தொடர்வதாகச் சொன்ன பல்லி, ஏன் இன்னும் அதைச் செய்யவில்லை??
palli
பார்த்திபன் நான் எங்கே சாதாரன பொலிஸ் என எழுதினேன்; ராணுவ பொலிஸா அல்லது ராணுவமா? என்பதுதான் எனது சந்தேகம்; பார்த்திபன் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இந்த கைதில் மகிந்தாவின் அரசியல் இல்லையா என?
//கைது செய்யப்பட்ட போது கூட இருந்த மனோகணேசன், ரவூக் கக்கீம் போன்றவர்கள் கூட பேட்டியில் சொல்லியதை தாங்கள் பார்க்கவில்லையா?? //
இதை தேசத்தில் போட்டது பல்லி என்பதை பார்த்திபன் கவனிக்கவில்லையா? இன்று நத்தாவுக்காக போட்டேன் ,சரத் கைது செய்த மறுநாளே இனியொரு செய்தியை பல்லி சுட்டி காட்டியிருந்தேன்,
// மனித உரிமை மீறல் மனுவை இராணுவத் தளபதி மற்றும் கைது செய்த இராணுவ அதிகாரிகள், பாதுகாபபுச் செயலர் போன்றவர்களுக்கு எதிராகத் தான் போட்டுள்ளாரென்பதைக் கூடவா தாங்கள் அறியவில்லை??//
எல்லாம் தெரிந்த்ததுதான் அதனால்தான் எனக்கு சந்தேகம் ராணுவ பொலிசார்தான் கைது செய்தார்களா? அல்லது பாதுகாப்பு செயலரின் விசேட ராணுவம் கைது செய்ததா??
நாமேன் இதுக்காக நேரத்தை வீண்செய்வான், இன்னும் சில தினங்களிலோ அல்லது மாதங்களிலோ ,வருடங்களிலோ முடிவு தெரியதான் போகிறது, அப்போது தொடர்வோம்; திரும்பவும் சொல்கிறேன் நான் சாதாரன பொலிஸ் என எழுதவில்லை; அப்படி நான் எழுதியிருந்தால் அது தவறுதான் ,
palli
//மேலும் சரத் பொன்சேகா தன்னை கைது செய்ய இராணுவப் பொலிசாருக்கு அதிகாரமில்லையென அடம்பிடித்ததால்த் தான், அவரை இராணுவப் பொலிசார் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. // இது எப்போ,,??
:/சரத்தே தன்னைக் கைது செய்தது இராணுவப் பொலிசார் என்பதை மறுக்கவில்லை// இதுவும் பல்லிக்கு புதிது;
//பல்லியின் அடம்பிடிப்பு ஏன் என்பது தான் புரியவில்லை?? // அதுதான் பல்லி,
//அதிபர் தேர்தல் முடிய, தனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை தேசம்நெற்றில் தொடர்வதாகச் சொன்ன பல்லி, ஏன் இன்னும் அதைச் செய்யவில்லை??// கட்டுரை மட்டும்தான் பல்லி எழுதுவதாக சொன்னேன்,ஆராட்ச்சி எல்லாம் பல்லிக்கு வராது, கட்டுரை எழுத பல்லி தயார்தான், ஆனால் தேசத்துக்கு நாம் யார் என்பதை அறிமுகம் செய்துதான் கட்டுரை எழுத முடியுமாம், அதனால் தான் பல்லி யோசிக்கிறேன்; அறிமுகம் செய்து தர்மடி வாங்குவதா?? வேண்டாமா என, இருப்பினும் அவசரம் வேண்டாம் ஆறுதலாய் எழுதுகிறேன், அதுவரையும் சின்ன சின்ன பின்னோட்டம் மட்டும் போதும்; கண்டிப்பாக எழுதுவேன் பார்த்திபன்,
BC
//பல்லியின் அடம்பிடிப்பு ஏன் என்பது தான் புரியவில்லை??//
அவர் இப்படி அடம்பிடிப்பது முன்பும் நடந்துள்ளது.பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டுக் கொண்டு உண்ணாவிரத போரட்டம் என்று ஏமாற்றிய செய்தி தேசத்தில் வந்த போது பரமேஸ்வரனை கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்பது நியாயம் அல்ல என்றார். அவர் பேகர் சாப்பிட்டால் தனக்கு மகிழ்ச்சி என்றார்.
அம்புறிஷ்
புலியும் இப்படி பிழை செய்தவர்களை தண்ட சோறு சாப்பிட வீட்டிற்கு அனுப்பாமல் கைது செய்து தண்டனை வழங்கியிருந்தால் முத்த உறுப்பினர் என்று தம்பட்டம் புலத்தில் வந்து பீத்தமாட்டார்கள்.-அம்புறிஷ்
NANTHA
// கொழும்பில் உள்ள எதிர்கட்சியினருக்கு தெரியாத பல ரகசியம் நந்தாவுக்கு அத்துபடி மிலிட்டரி பொலிஸ் எவரையும் நாகரிகம் இல்லாமல் அசிங்கம் செய்து கைது செய்யாது, கைது செய்யபடுபவர் குற்றவாளி என நிருபிக்கும் மட்டும் அவரை ராணுவத்தை போல்தான் நடத்துவார்கள் (சிறையிலும்//
நந்தாவுக்கு இது “ரகசியம்’ அல்ல. மிலிட்டரி போலிஸ் என்பதும் இராணுவத்தின் ஒரு பகுதியே என்பது பல்லிக்குத் தெரியாது. தவிர “கைது” செய்யப்படுபவர் “இராணுவக் கைதியே “தவிர” இராணுவ அதிகாரியல்ல. ஒரு சந்தேக நபருக்குரிய “அந்தஸ்த்துக்கள்” மட்டுமே அவருக்கு கிடைக்கும். அது இப்போதும் கிடைக்கிறது. இராணுவ உயர் அதிகாரிகளின் கட்டளைகளையே “மிலிட்டரி போலிஸ்” நிறைவேற்றும். அவர்கள் “ஹக்கீமுக்கும்” மற்றவர்களுக்கும் “விளக்கம்” சொல்லத் தேவையில்லை.
//எல்லாம் தெரிந்ததுதான் அதனால்தான் எனக்கு சந்தேகம் ராணுவ பொலிசார்தான் கைது செய்தார்களா? அல்லது பாதுகாப்பு செயலரின் விசேட ராணுவம் கைது செய்ததா??//
பாதுகாப்புச் செயலருக்கு விசேட இராணுவம் இருக்கிறதா? அதன் பெயரை சொன்னால் நன்றாக இருக்கும்.
இலங்கை இராணுவம் என்ன புலிகளின் “திருட்டு” கும்பல்களா? கணக்கு வழக்கில்லாது கூத்தடிக்க? சில வேளை பல்லி, புலிகளின் “இராணுவ” பாரம்பரியங்கள்தான் இலங்கை இராணுவத்திடமும் இருப்பதாக கற்பனை செய்வதாக தெரிகிறது.
//நான் அம்மாவை அம்மா என அழைக்கிறேன்; நீங்க (நிலமை கருதி) வேலைக்காரிதான் இவ என நையாண்டி செய்யிறியள்; இது உங்கள் தவறா அல்லது நீங்கள் வாழும் சூழல் அப்படியா என்பது பல்லிக்கு தெரியாது,//
இது என்ன புதுக் கதை?
பார்த்திபன்
//பார்த்திபன் நான் எங்கே சாதாரன பொலிஸ் என எழுதினேன்; ராணுவ பொலிஸா அல்லது ராணுவமா? என்பதுதான் எனது சந்தேகம்; பார்த்திபன் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இந்த கைதில் மகிந்தாவின் அரசியல் இல்லையா என? – பல்லி //
பல்லி,
ஏற்கனவே உங்கள் வாதம் சரத்தை இராணுவப் பொலிசார் கைது செய்யவில்லை என்பதாக மட்டுமே அமைந்துள்ளது. இராணுவம் கைது செய்ததாக சந்தேகப்படுவதாக எங்கும் நீங்கள் எழுதவில்லை. அப்படியாயின் சாதாரண பொலிசார் கைது செய்ததாக தாங்கள் சந்தேகப்படுவதாகவே நாங்கள் புரிந்து கொள்ள முடியும். அதனை உறுதிப்படுத்துவது போலவே “நந்தாவால் சாதாரண போலீசுக்கும், மிலிட்டெரி போலீசுக்கும் உள்ள வேறுபாடு கூட பல்லிக்கு தெரியவில்லை” என்ற கேள்விக்கும் தாங்கள் சாதாரணமாகவே பதிலளித்துள்ளீர்கள். அதையே நான் சுட்டிக்காட்டியவுடன் தாங்கள் அப்படியே பல்டி அடிக்கலாமா??
மகிந்தவின் அரசியல் மட்டுமா சரத்தின் கைதில் உண்டு?? சரத் எந்தவிதத் தப்பும் செய்யவில்லையா என்று தங்கள் மனச்சாட்சியிடமும் பல்லி ஒருமுறை கேட்டுப் பார்க்கலாமே?? சரத்தின் நடவடிக்கைகளே, தனக்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகளாக மாற்ற மகிந்தவிற்கு உதவியுள்ளதென்பதே உண்மை. இன்று போர்க்கால இரகசியங்களை வெளியிடுவேனென்று சரத் பேட்டி கொடுத்ததெல்லாம், தமிழ் மக்கள் மேல் கொண்ட பாசத்தினால் என்று சில புலன் பெயர்ந்தவர்கள் விடும் புலூடாக்களை, பல்லியும் நம்புகின்றீர்களா?? அதுவும் அவரது நேரடிச் சாட்சியுமில்லை அடுத்தவர்கள் சொல்லிக் கேட்டவையாம். அடுத்தவர்கள் சொல்லிக் கேட்டவை எந்த அரங்கில் எடுபடும்?? இன்று சரத் மட்டும் செய்வது என்ன பல்லி?? அது அனைத்தும் அரசியல் தானே?? மகிந்த அரசு தவறு செய்கின்றது என்பதை இவர் உணர்ந்திருந்தால் போர் முடிந்ததும் பதவி விலகி மகிந்த அரசின் குட்டுகளை அம்பலப்படுத்தி இருக்கலாமே?? இன்று தனது அரசியல் ஆசைகளுக்கு மகிந்த தடையாகி விட்டாரென்பதால் இவர் அடிக்கும் பல்டிகளை எதில் சேர்க்கச் சொல்லுகின்றீர்கள்??
ஆமா அடிக்கடி சரத்திற்கு பல நாட்டு இராணுவத்தளபதிகள் நண்பர்கள் (குறிப்பாக இந்திய இராணுவத் தளபதி)என்று எடுத்து விடுகின்றீர்கள். அந்த இராணுவத்தளபதிகள் என்ன படைதிரட்டி வந்து சரத்தை மீட்டுச் சென்று விட முடியுமா?? பதவியிலிருக்கும் போது நட்புப் பாராட்டுவது வேறு அதுவே பதவி போனதும் மாறிவிடும். இனி சரத்தின் அன்றைய நண்பர்கள் எல்லாம் புதிய தளபதியின் நண்பர்களாகிவிடுவார்கள். சரத்திற்கு வெறும் முன்னாள் நண்பர்களே. முன்பு இந்திராகாந்தியும் சிறிமாவும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். ஆனால் இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடர்ந்த போது, சிறிமரின் நிலைப்பாடு என்னானது?? நட்பு வேறு அரசியல் வேறு.
மேலும் சரத்தை; அவர் இராணுவப்பொலிசாருடன் செல்ல மறுத்ததால் இராணுவப் பொலிசார் அவர் காலிலும் கையிலும் பிடித்துத் தூக்கியே சென்றார்களென்பதை, அவர் கூட இருந்தவர்களே பிபிசி தமிழோசையில் சொன்னதை பல்லி கேட்கவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?? திருமதி அனோமா சரத்தே பத்திரிகையாளரகள் சந்திப்பில் தனது கணவரை இராணுவப் பொலிசாரே கைது செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவரை கைது செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றே கூறியுள்ளார். இபபடி எல்லோரும் ஒரு தகவலைக் கூற, பல்லி மட்டும் அடம்பிடிப்பதற்காக இன்னொன்றை எடுத்து விட்டால்?? உண்மைகளை வெளிக் கொணர்வதற்காக அடம்பிடிப்பது தேவையானது. ஆனால் எதற்கெடுத்தாலும் அடம்பிடித்தால் நாளை பல்லியின் அடம்பிடிப்பே கேலியாகிவிடும்………
NANTHA
படைத் தளபதிகள் நண்பர்கள் என்றால் ஏதாவது “சம்பந்தங்கள்” செய்து கொண்டாடலாமே ஒழிய பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் இலங்கை மன்னன் மான வர்மாவுக்கு அடைக்கலமும் படையும் கொடுத்தது போல பொன்சேகாவை காப்பாற்ற கொழும்பு துறைமுகத்துக்கு இந்திய போர் கப்பல்களை அனுப்பமுடியாது என்ற சில்லறைக் காரியங்கள் பல்லிக்கு தெரியவில்லை போலிருக்கிறது.
palli
//தாங்கள் அப்படியே பல்டி அடிக்கலாமா??//
இது தெரியுமாயின் பல்லி யாரிடமும் திட்டுவாங்க வேண்டியதில்லை, பார்த்திபன் சின்னபிள்ளைதனமாய் எழுதி உங்கள் நேரத்தை பல்லிக்காய் செலவு செய்ய வேண்டாம்;பல்லிக்கு ஒரே நோக்கம் தமிழ் சமூகம்தான் அதுக்காக ஜனாதிபதியிருந்து பார்த்திபன் வரை பின்னோட்டம் விடுவேன்,உங்கள் சான்றிதழ் பற்றி எனக்கு கவலையில்லை;
//ஆமா அடிக்கடி சரத்திற்கு பல நாட்டு இராணுவத்தளபதிகள் நண்பர்கள் (குறிப்பாக இந்திய இராணுவத் தளபதி)என்று எடுத்து விடுகின்றீர்கள். அந்த இராணுவத்தளபதிகள் என்ன படைதிரட்டி வந்து சரத்தை மீட்டுச் சென்று விட முடியுமா?? //
நாம் இரவிரவாய் பின்னோட்டம் இடுவது மகிந்தா பார்க்கவா? அல்லது அதுதான் அரசியல் தீர்வா?? இந்தியாவில் புலிகள் வளர்ச்சிக்கு உதவியவர் எம் ஜி ஆர், ஆனால் அவருக்கு உதவியது மோகனதாஸ் என்னும் பொலிஸ் கமிஸ்னர் என்பதை பார்த்திபனுக்கு பல்லி சொல்ல வேண்டுமா?? ஒரு நம்பியார், நாராயணன் ;மேனன்; போன்றோரால் ஈழப்ப்ராட்டத்தை தடுக்க முடியுமாயின் ஒரு ராணுவ தளபதியால் இன்னொரு ராணுவ தளபதியை காப்பாத்த முடியாதா? என்னும் நப்பாசை என இப்போதைக்கு பார்த்திபன் எடுத்துகொள்ளுங்கள்;
//ஏற்கனவே உங்கள் வாதம் சரத்தை இராணுவப் பொலிசார் கைது செய்யவில்லை என்பதாக மட்டுமே அமைந்துள்ளது. இராணுவம் கைது செய்ததாக சந்தேகப்படுவதாக எங்கும் நீங்கள் எழுதவில்லை. //
இதே போல் உங்கள் வார்த்தைகளை வைத்து வாதம் என்னாலும் செய்ய முடியும், ஆனால் நான் உங்களை ஜெயிப்பது எனது நோக்கமல்ல; எனது நோக்கம் என்ன என்பது பலர் புரியகூடும் என நினைக்கிறேன், அல்லது அதுக்கான விடை சரத்தின் தீர்ப்பின் பின்னோ அல்லது வரவின் பின்னோதான் தெரியும்;
//மகிந்தவின் அரசியல் மட்டுமா சரத்தின் கைதில் உண்டு?? //
இது எனது கேள்வி அதுக்கான விடை தங்களிடம் இல்லையா?? இருப்பினும் உங்கள் கேள்விக்கான விடைகீழே தருகிறேன்,
//பதவியிலிருக்கும் போது நட்புப் பாராட்டுவது வேறு//
இது புலியெதிர்பாளர் பண்பாடு, எம்மை போல் யாவரையும் நினைக்கலாமா??நம்பியார் கூட ரஜீவ்காந்தியின் அன்றய நண்பர்தான், ஆனால் தனது பதவியையும் மறந்து புலியழிப்புக்கு உதவவில்லையா??
// மேலே குறிப்பிட்ட எல்லாதகவலும் மாற்றுகருத்தாளர் எழுத்தில் சகஜம் என்பது பல்லிக்கு அத்துபடி(உங்கள் மொழிபெயர்ப்புதான்) ஆனாலும் பல்லி அதே அடம்பிடிப்புடன் தொடர்வேன் காலம் பதில் சொல்லும்வரை,
//நாளை பல்லியின் அடம்பிடிப்பே கேலியாகிவிடும்………// இதுதான் கேலிஎனில் அதையே பல்லி தொடரும்; பல்லியின் கருத்தாய்,
//முக்கியமான உங்கள் கேள்வி சரத் குற்றமற்றவரா?? மகிந்தாவின் போர் குற்றங்கள் எல்லாவற்றுக்கும் நாயகன் இவர்தான், ஆனால் இவரை மாட்டிவிட்டு மகிந்தா தப்ப நினைக்கலாமா? அதனால் இவரை வைத்தே மகிந்தா&கோ விசாரிக்கபட வேண்டும், சரத் மகிந்தாவின் எதிரியே தவிர தமிழர்கள் நண்பன் அல்ல?? தொடர்வேன் பார்த்திபன்,
palli
BC
இதென்ன விளையாட்டு சாப்பிடாமல் சாக வேண்டும் என சொல்லியவர்களை விட்டு சாப்பிட்டால் பரவாயில்லை என சொல்லிய பல்லியை வம்புக்கு இழுப்பது, மாவீரர் ஆக்குவதிலேயே புலிபோல் கவனாமய் இருக்கிறியள்; பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டால் பல்லிக்கு மகிழ்ச்சியல்ல; பட்டிணியாய் கிடப்பவன் எதை சாப்பிட்டாலும் பல்லிக்கு மகிழ்ச்சிதான்;
பார்த்திபன்
பல்லி,
என்னை சின்னப்பிள்ளைத் தனமாக எழுதுவதாகக் கூறும் தாங்கள், உங்கள் எழுத்தை திருப்பிப் பார்ப்பதில்லையா?? நான் எழுதியவற்றிற்கு தாங்கள் அளித்திருக்கும் பதில்களே வினோதமாக இருக்கின்றது.
இந்தியாவில் எமது இயக்கங்கள் வளர முதலில் உதவியவர் இந்திராகாந்தி. அந்தப் பின்னணியில் தான் எம் ஜி ஆரும் குறிப்பாக புலிகளுக்கு உதவினார். அதுவும் தனது சுயநலத்தின் அடிப்படையிலேயே. நான் சுயநலமெனக் குறிப்பிடுவது என்னவென்று தெரியாதிருந்தால், அந்த நேரத்தில் இந்தியாவிலிருந்த மாயா போன்றவர்களைக் கேளுங்கள் தெளிவாக விளக்குவார்கள். மற்றும்படி நீங்கள் குறிப்பிடும் தமிழக உளவுத்துறைக்கு பொறுப்பாகவிருந்த மோகனதாஸ், இயக்கங்கள் விடயத்தில் எம் ஜி ஆருக்கு உதவியதை விட, எம் ஜி ஆருடன் நடித்த நடிகைகள் வேறு எந்த நடிகருடன் தொடர்புகள் வைத்திருக்கின்றார்களென்ற தகவல்களைச் சேகரித்து எம் ஜி ஆருக்கு அனுப்பதிலேயே தன் சேவையை பெரும்பாலும் ஆற்றினார். ஒருமுறை நடிகை லதா ஒரு தெலுங்கு நடிகருடன் சுற்றுவது உண்மையா என்பதை அறிய, ஆந்திராவிற்கே நடிகை லதாவை படப்பிடிப்பின் போது கண்காணிக்கச் சென்றிருந்ததை, அவரே ஓய்வு பெற்ற பின் ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்தார். அத்துடன் எம் ஜி ஆர் தன்னிடமே உனக்கு நடிகைகளுடன் நட்பு வைத்திருக்க விரும்பமா எனக் கேட்டதாகவும், தான் அதனை விரும்பவில்லையென மறுத்ததாகவும் சொல்லியிருந்தார். மக்கள் பணம் என்னென்ன அலுவல்கள் பார்க்கப் பயன்பட்டுள்ளது. புலிகளுக்கு உதவியதற்காக எம் ஜி ஆரின் மறுபக்கத்தை மறைத்து புலியாதரவாளர்கள் தான் அவரை உத்தமர் என்று போற்றிப் புகழ்ந்தார்கள். ஆனால் அந்த மறுபக்கம்??
//பதவியிலிருக்கும் போது நட்புப் பாராட்டுவது வேறு – பார்த்திபன்//
//இது புலியெதிர்பாளர் பண்பாடு, எம்மை போல் யாவரையும் நினைக்கலாமா??நம்பியார் கூட ரஜீவ்காந்தியின் அன்றய நண்பர்தான், ஆனால் தனது பதவியையும் மறந்து புலியழிப்புக்கு உதவவில்லையா?? – பல்லி//
இதில் நீங்கள் என்ன கூற வருகின்றீர்கள் என்பது தெளிவாகப் புரியவில்லை. தனது நண்பரை அழித்தவர்களை அழிக்க நம்பியார் உதவினார் என்று சொல்ல வருகின்றீர்களா?? அல்லது வேறு விதமாகவா?? இதில்க் கூட இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கே நம்பியார் உதவினார் என எடுக்கலாமே தவிர தன்னிச்சையாக அவர் செயற்பட்டு அவர் புலிகளை அழித்ததாகச் சொல்ல முடியுமா??
//முக்கியமான உங்கள் கேள்வி சரத் குற்றமற்றவரா?? மகிந்தாவின் போர் குற்றங்கள் எல்லாவற்றுக்கும் நாயகன் இவர்தான், ஆனால் இவரை மாட்டிவிட்டு மகிந்தா தப்ப நினைக்கலாமா? அதனால் இவரை வைத்தே மகிந்தா&கோ விசாரிக்கபட வேண்டும், சரத் மகிந்தாவின் எதிரியே தவிர தமிழர்கள் நண்பன் அல்ல?? தொடர்வேன் பார்த்திபன். -பல்லி //
போர்க்குற்றங்கள் என்று எடுத்தால் இரு தரப்பிலும் சமமான குற்றச்சாட்டுகளே உள்ளன. மகிந்த தான் தப்புவதற்காக சரத்தை மாட்டிவிட முயற்சிக்கவில்லை. மகிந்த அரசு போர்க்குற்றங்களைச் செய்ததாகவும், அத்தகவல்களை தனது பத்திரிகை நண்பர்கள் மூலமாக அறிந்ததாகவும் அம்புலிமாமா பாணியில் கதை சொல்லத் தொடங்கியதே சரத் தான். ஒரு இராணுவத்தளபதி தனது இராணுவத்தில் நடந்த போர்க்குற்றங்களை பத்திரிகை நண்பர்கள் மூலமறிந்ததாக உதார் விடுவது பல்லிக்கே கேலிக்கூத்தாகத் தெரியவில்லையா??
சர்வதேச நீதிமன்றங்களில் கூட தான் அறிந்த செய்திகளை சாட்சியங்களாக அளிக்கத் தயாரென்று, இவர் தனது போர்க்குற்றங்களையும் மகிந்த அரசின் மீதும் ஏனைய இராணுவத்தினர் மீதும் கூறி அவர்களை மட்டும் மாட்டிவிட முனைவது தர்மமாக பல்லிக்குத் தெரிகின்றதோ?? தவளையும் தன் வாயால் கெடுமென்று சொல்வது போல், இன்று சரத்தின் இந்த நிலைக்கும் காரணம் அவரின் வாய் தான் என்பது பல்லிக்கும் தெரியாததல்ல. சரத் அதிபர் தேர்தலில் வென்று வந்திருந்தால்க் கூட இதே நிலைப்பாட்டை, மகிந்த மற்றும் அவரது சகோதரர்களுக்கு எடுத்திருப்பார். சர்வதேசரீதியான ஒரு விசாரணையை அவர் ஒரு போதும் எடுத்திருக்க மாட்டார். காரணம் அங்கே பல இராணுவ அதிகாரிகளும் மாட்டுப்பட வேண்டிய நிலை தோன்றும். எனவே வெறுமனே உள்நாட்டு விசாரணைகளை மகிந்தவிற்கும் மகிந்தவின் சகோதரர்களுக்கும் எதிராக நடாத்தி, அவர்களுக்கு தான் நினைத்த மாதிரி தண்டனை பெற்றுக் கொடு்கவே முனைந்திருப்பார். தற்போது நடப்பது ஒரு அரசியல் சதுரங்கம். அதில் சரத்தும் பல்லியும் நினைத்தது நடக்காமல் வேறு விதமாக சென்ற அதிபர் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டதே பலரது கடுப்பிற்குக் காரணம். நாளை இதே நிலை மாறி இன்னொருவர் அதிபராக மாறும் போது அது மகிந்தவிற்கு எதிரான நடவடிக்கைகளாக மாறுவதற்கும் சந்தர்ப்பம் உண்டு. மற்றும்படி பல்லிக்குச் சான்றிதழ் வழங்க, நான் இன்னும் பல்கலைக்கழகமொன்றும் நடாத்தவில்லை. அப்படி நடாத்தச் சந்தர்ப்பம் கிடைத்தாலும், ஒருவருக்கும் ஓசியில் சான்றிதழ் கொடுக்க மாட்டேன்…………..
palli
மோகனதாஸ் பற்றிய விபரத்துக்கு நன்றி; இதில் மாயாவிடம் கேக்க வேண்டிய தேவை பல்லிக்கு இல்லை; காரனம் அந்த காலத்தில் தெரு பொறுக்கியாய் பல்லியும் இந்தியாவில் இருந்தேன்; அதனால் உங்கள் கதைகள் சின்னதிரைக்கு உதவலாமே தவிர யதார்த்தம் அதுவல்ல; பார்த்திபன் போல் புத்திகூர்மை உள்ளவர்களுடன் எழுதும்போது கவனமாகவே இருக்கிறேன்; அதனால்தான் இந்திரா காந்தி சொன்னால் பல அமைப்புகளையும் சொல்ல வேண்டும், நான் சொல்லியது புலி அமைப்பு அதுக்கான உதவிகளை; நாம் விடயங்களை எழுத புத்தகங்கள் படிக்க தேவையில்லை, தேசத்தை தொடர்ந்து படித்தாலே பலவகை உணவுகள் ரெடி;
//. சரத் அதிபர் தேர்தலில் வென்று வந்திருந்தால்க் கூட இதே நிலைப்பாட்டை, மகிந்த மற்றும் அவரது சகோதரர்களுக்கு எடுத்திருப்பார்.// அப்போதும் எனது பின்னோட்டம் சரத்துக்கு எதிராகவும் மகிந்தா குடும்பத்துக்கு ஆதரவாகவும்தான் இருக்கும்;
//போர்க்குற்றங்கள் என்று எடுத்தால் இரு தரப்பிலும் சமமான குற்றச்சாட்டுகளே உள்ளன.//
இரு தரப்பு என சொல்லுவது புலியும்; அரசுமா? அல்லது மகிந்தாவும் சரத்துமா??
// அதில் சரத்தும் பல்லியும் நினைத்தது நடக்காமல் வேறு விதமாக சென்ற அதிபர் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டதே பலரது கடுப்பிற்குக் காரணம்.//
பல்லி நினைத்தது நடக்காமல் போனதில் பல்லிக்கு வருத்தம் இல்லை, பல்லி அப்படி எதையும் நினைக்கவில்லை, தேர்தலை பொறுத்த மட்டில் பல்லியின் கணிப்பை போல்தான் தமிழ்மக்களும் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் சொன்ன பின் பல்லிக்கு என்ன கடுப்பு;(விபரமாய் பின்பு பேசுவோம்) சரத் புலிகளிடமே பல தடவை தோற்றவர், அதனால் மகிந்தாவிடம் ஒருமுறை (அதுவும் அரசியலுக்கு புது முகம்) தோற்பதில் கடுப்பாவாரா??
//மகிந்த அரசின் மீதும் ஏனைய இராணுவத்தினர் மீதும் கூறி அவர்களை மட்டும் மாட்டிவிட முனைவது தர்மமாக பல்லிக்குத் தெரிகின்றதோ?? தவளையும் தன் வாயால் கெடுமென்று சொல்வது போல், இன்று சரத்தின் இந்த நிலை//
இதில் பல்லியின் பதிலும் உண்டு, சரத்தும்தான் குற்றவாழி;
// மகிந்தவிற்கு எதிரான நடவடிக்கைகளாக மாறுவதற்கும் சந்தர்ப்பம் உண்டு//
அதுவரை பல்லி பல்டி அடிக்கமாட்டேன் அடம்தான் பிடிப்பேன் சரியென அல்ல சரியாக இருக்குமென, பல்லிமட்டுமா சரத்துக்காய் எழுதுகிறேன் ரயாகரனும் எழுதுகிறார்;
NANTHA
எம் ஜி ஆர் இன்னொரு “தகிடுதத்தம்” செய்த மலையாளி. இலங்கையில் பிறந்ததாக சரடு விட்ட இந்த மலையாளிக்கு “கண்டி” கச்சேரியில் பிறப்புச் சாட்சிப் பத்திரம் கிடையாது.
எம் ஜி ஆர் பகிரங்கமாக கொடுத்த “பணத்துக்கு” எங்காவது” கணக்கு காட்டி இருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் அந்த பணம் அமெரிக்காவிலுள்ள பஞ்சாட்சரம் கோஷ்டியினால் எம் ஜி ஆர் கையினால் கொடுக்கப்பட்டது. அந்த நாட்களில் இருந்த யு என் பி அரசு அமெரிக்காவின் நண்பன் என்பதால் அந்த அமெரிக்க “தமிழர்கள்” அந்த விளையாட்டை நடத்தினார்கள்.
Roman
போன்செகவிட்கும், ராசபக்சவிட்கும் இடையில் இருக்கும் முரண்பாடு ஒன்றும் பெரிதல்ல அடுத்த ஜனாதிபதி தேர்த்தல் மட்டும் நீடிக்கக் கூடியதல்ல. கீ போட் முதலாளிகள் செய்யும் ஆய்வுகள் இரண்டில் ஒரு பகுதிக்கு வால் பிடிப்பதால் கண்ணுக்குள் மண்ணை தூவும் அரசியலை முன் வைகின்றது.
இரண்டு நபர்களும் சாதாரண சிங்கள, தமிழ் மக்களில் தொடங்கி பத்திரிகை ஆளர்கள் வரையும் கொண்டு குவித்தவர்கள். இரண்டு கொலைகாரர்களும் மூன்று மாதத்திற்கு முன்னர் வரை போட்டி போட்டு சேர்ந்து கொலை செய்தவர்கள்.
இவர்களுக்குள் இருக்கும் முரண்பாடு போர் குற்ற விசாரணை வந்தால் யாரை பலிகொடுப்பது என்பதிலேயே இருக்கின்றது. இன்றைய நிலைமையில் பொன்சேகாவின் கழுத்தில் கயிறு போடுவதன் மூலம் ராஜபக்சே பிரதேர்ஸ் தப்ப முயல்கின்றனர்
அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
போன்செகவினை போட்டுத் தள்ளின பின்னர் போர்குற்றங்கள் அம்பலமானால் என்ன என்ற கேள்வி மகிந்தவின் நித்திரைக்கு பிரட்சனை கொடுக்கும் விசயமாகும். எனவே ஒரு உடன்பாட்டுக்கு வருவதை அனைவரும் விரும்புவர். போர் குற்றம் சுமத்தும் நாடுகளும் ஏற்டுக்கொள்ளும்.
கீ போட் முதலாளிகள் விளங்க வேண்டிய முதலாளித்துவ அரசியல் அரிச்சுவடி, “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை”
தமிழ்வாதம்
நந்தா!
/எம் ஜி ஆர் பகிரங்கமாக கொடுத்த “பணத்துக்கு” எங்காவது” கணக்கு காட்டி இருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் அந்த பணம் அமெரிக்காவிலுள்ள பஞ்சாட்சரம் கோஷ்டியினால் எம் ஜி ஆர் கையினால் கொடுக்கப்பட்டது./
அமெரிக்காவிலுள்ள பஞ்சாட்சரம் கோஷ்டியினால் களவாகக் கொடுத்த பணத்துக்கு அவர்களும் எங்காவது கணக்கு காட்டி இருக்க வேண்டும்.அப்படி எதுவும் செய்யவில்லை.அது ஏன்? அல்லது இந்த பஞ்சாட்சரம் கோஷ்டி பாதிரிக் கோஷ்டியோ?
உங்கள் கருத்துகள் எல்லாம் அவையளோடை இருந்து, பிறங்காலல் தள்ளப்பட்ட வேதனையில் எழுதுற மாதிரி இருக்குது. ஜாதி நயம் மலிந்த நல்ல மதம் பிடிச்ச கருத்துகள்.
nallurkanthan
Very interesting. SF was too much. He told that the politicians in Tamilndadu were comedians. After defeating LTTE he wanted to increase the Army by 100,000 and establish more military camps in the north. He was very controversial. After a heavy defeat in the pre election he was shouting- I am the real president. Then the white flag story. SF is self contradictory. If SF won the country would have been in chaos. Even Ranil would not have any respect from SF. Wait for the supreme court decision.
palli
//எம் ஜி ஆர் இன்னொரு “தகிடுதத்தம்” செய்த மலையாளி. //
தயவு செய்து நீங்கள் இந்த மலையாளி; கத்தோலிக் காவடியை இறக்குங்கோ; எனக்கே பயமாக உள்ளது, பல்லியும் சரத்தும் உறவுக்காரர்தான் என உங்கள் வெத்திலையில் மை தடவும் ஆய்வில் கிடைத்து விடுமோ என; காலபோக்கில் நந்தா தவிர்ந்த யாரும் தமிழனாயோ அல்லது;;;; இருக்க முடியாது போல் இருக்கு; நந்தா பல்லி மூத்த வினாயகர் கோவிலடியை பிறப்பிடமாக கொண்டவன்; உங்கள் ஆய்வின்படி மலையாளியாக இருக்கலாம்; ஆனாலும் எனது பிறப்பு பத்திரத்தில் தமிழன் எனவே இருக்கு, அதை இறப்பு பத்திரத்தில் மாற்றிவிட முயற்ச்சி செய்யாதீர்கள், உங்கள் கல்வி அறிவுக்கு ஆய்வு செய்ய வேண்டியவை பல, அதைவிட்டு புலிக்கு அம்புவிடுவதாய் நினைத்து அனைத்து தமிழ் சமூகத்தையும் கேவலபடுத்த வேண்டாம்; உங்கள் பின்னோட்டம் அனைத்திலும் மலையாளி; புலி; பாரிதியார்; இல்லாமல் இல்லை; ஆக ரோமன் சொன்னதுபோல் நீங்கள் அவர்களால் பாதிக்கபட்டதால் அதயே வேதவாக்காய் சொல்லுவது மீண்டும் புலியை வளர்க்க மட்டுமே உதவும்; தயவுசெய்து கருத்துடன் வாங்க மதத்துடனோ அல்லது இனத்துடனோ வர வேண்டாமே;