லண்டன் தமிழ் சொலிடாரிட்டி தனது இலங்கைத் தேர்தல் சம்பந்தமான கருத்துப்பகிர்வினை சோசலிசக் கட்சியின் தொடர் கூட்டத்தில், பெப்ரவரி 4ல் பகிர்ந்து கொண்டது. தமிழ் சொலிடாரிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சேனன் தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டை அங்கு வெளியிட்டார்.
”இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஒரு சிறு கதை ஒன்றினை இங்கே சொல்ல விரும்புகிறேன் இலங்கையில் புலிகள் அரசுடன் போராடினார்கள் அந்த புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகள் இருவரை அரசும் எதிர்க்கட்சியுமாக சேர்ந்து பிரித்தெடுத்து அரசு தனது அமைச்சரவையிலும் மாகாண சபையிலும் அமைச்சர்களாக்கியுள்ளது. பின்னர் இவர்களின் உதவியுடனும் புலிகளுக்கு எதிராக சண்டையிட்ட புலிகளை அரசு முற்றாக அழித்துள்ளது. இந்த இறுதி யுத்தத்தில் 250 ஆயிரம் பேர்கள் அகதிகளாக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும் பாரிய பொருளாதார இழப்புக்களும் நடைபெற்றது. இந்த பாரிய யுத்தத்தை ஆட்சியிலிருந்த மகிந்தாவும் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். அதன் பின்னர் தமது வெற்றி விழாக்களையும் கொண்டாடினர்.
புலிகளால் உருவாக்கப்பட்ட ரிஎன்ஏ என்ற தமிழ் கட்சிகளின் கூட்டணியினர் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்த இராணுவத் தளளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்து அரசை மாற்றுங்கள் என்று யுத்தத்தில் பாதிப்புற்று நலிவடைந்திருந்த மக்களைப் பார்த்து வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் மக்களில் மிகச் சிறுபான்மையினர் இந்த தேர்தலில் பங்கு பற்றி தமது மக்களை கொன்றொழித்த அந்த இராணுவத் தளபதிக்கே வாக்களித்துள்ளனர். இப்போது மகிந்தா அரசு இதன் காரணமாக தமிழர்கள் மீது சீற்றம் கொள்ளலாம் எனவும் தற்போது பயப்பிடுகின்றனர்.
இந்த ரிஎன்ஏ யினர் தாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே புலிகளின் பின்னர் தமிழ் மக்களின் ஏகபோகபிரதிநிதிகள் என்றும் தம்மைவிட யாருக்கும் தமிழர் பிரச்சினை பற்றி பேச முடியாது என்றும் வாதிடுகின்றனர்.”
இந்த சிறுகதையை உங்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம். காரணம் இங்குள்ள பலருக்கு இலங்கையில் அரசியல் கட்சிகளின் தன்மை பாரம்பரியம் என்பன பற்றி தெரியாதவர்கள் அங்குள்ள கடந்த சில வருட நிலைமைகளை தெளிவுபடுத்தவே இதை கூறினேன்.
யாருமே மக்களின் நலனில் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதில் கடந்த 40 வருடமாக தமிழர்களுக்காக போராடுகிறோம் என்ற ரிஎன்ஏயும் என்றுமே சாதாரண மக்களின் பிரச்சினையில் அக்கறையில்லாமல் உள்ளனர். தாம் தமது குடும்பங்களை சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இவர்களது கவலை.
தனது ஆட்சிக் காலம் இரண்டு வருடங்கள் உள்ள போதும், இரண்டு வருடங்களின் பின்பு வரவேண்டிய தேர்தலை மகிந்தா அரசு இன்றே தனது புலிகளின் அழிப்பு வெற்றியுடனேயே நடாத்துகிறது. இந்த வெற்றி தனக்கு சாதகமானது என்பதை பயன்படுத்தவே இந்த தேர்தல் இந்த தேர்தலை அடுத்து பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட உள்ளது.
இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் அரச ஊடகங்களையும் மக்களின் பொதுச் சொத்துக்களையும் பயன்படுத்தியே தனது வெற்றியை தீர்மானித்துள்னர். எதிர்க்கட்சிகளும் மற்றய 20 வேட்பாளர்களின் படங்களைக்கூட மக்களால் பாத்துக்கொள்ள இடம் அளிக்காமல் இந்த தேர்தலை நடாத்தி முடித்துள்ளனர்.
தேர்தல் காலங்களில் முகாம்களில் இருந்தவர்களில் 40 சதவிகிதமானவர்களே வாக்களிக்க தம்மை பதிவு செய்தனர் என்றும் ஆனால் தேர்தல் வாக்களிக்கும் இடங்களுக்கு எடுத்துவர பஸ்கள் இல்லை எனக் காரணம் காட்டி மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ப்படவில்லை.
இந்த 57 சதவிகித தேர்தல் வெற்றிக்கு பின்னர் மகிந்தா அரசு தொடரந்து தனது ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளை தொடர ஆரம்பித்துள்ளது. பத்திரிகைகளுக்கு மூடுவிழா செய்துள்ளது. பத்திரகையாளர்களை கைது செய்துள்ளது. ஆதரவளிக்காதவர்களை அடித்தும் இம்சைப்படுத்தியும் உள்ளனர்.
தேர்தல் காலங்களில் வெளிவந்த பத்திரரைகளின் செய்திகளில் சில
கருணா பிள்ளையான் சிங்களம் படிக்கிறார்கள். மகிந்தா தமிழ் பேசக்கூடியவர் ஆனால் பொது இடங்களில் பேச முடியாதுள்ளது!
சர்வதேச நிதிஉதவிகள் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை!
இலங்கையில் சிறுபான்மை என்ற இனமே இல்லை நாம் எல்லோரும் இலங்கையர்களே!
இப்படியெல்லாம் செய்திகள் வந்த பிறகு புலிகளுக்கு பல தளபாடங்களையும் பேச்சுவார்த்ததைக்கு என்று கூறி கூட்டி வந்து புலிகளை அடியோடு இல்லாதொழித்த எரிக்சொல்கேயிம் மகிந்தாவிற்கு வாழ்த்துச்செய்தி அனுப்பினார்.
இலங்கை தற்போது உலகின் மிகமுக்கிய உல்லாசப் பிரயாணிகளின் இடம். இது நியுயோர்க் ரைம்ஸ் செய்தி.
இலங்கையில் மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தமது ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் தற்போது ஜனநாயகம் முழுமையாக மக்களால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். – இது அமெரிக்கா வால்ஸ்ரிற் பத்திகைகளின் செய்திகள்.
இப்படி சர்வதேசங்களின் பார்வை இலங்கையில் இருப்பது ஒன்றும் ஒளிவு மறைவு அல்ல. நிறையவே குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் படையுள்ளது. இதை பயன்படுத்தவும் இலங்கையில் உள்ள சந்தையை நிரப்பவுமே சர்வதேசம் முனைப்பாக உள்ளதும் இதன் அடுத்த பக்கத்தை சீனாவும் இந்தியாவும் நிறைவு செய்யவுமே போட்டிகள் நடைபெறுகின்றன” என தமிழ் சொலிடாரிட்டியின் சார்பில் சேனன் கருத்துத் தெரிவித்தார்.
இதனிடையே சபையிலிருந்து எழுந்த கேள்விகளில்: தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் தெருக்களுக்கு வந்து போராடியுள்ளனர், யுத்தத்ததை நிறுத்த முடியவில்லை, போராட்டங்களுக்கு நாம் ஆதரவு அளித்தோம் ஏன் என்று விளங்கிக் கொள்ளவில்லை, ஈராக் யுத்த்தை ஆதரிப்பவர்களை அழைத்து கூட்டம் போட்டு தமக்கு ஆதரவளிக்கும்படி கேட்கிறார்கள், இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்க ஒப்புக் கொண்டவர்களை அழைத்து விருந்து கொடுத்து தமக்கு உதவும்படி கேட்கிறார்கள், இவர்கள் எல்லாம் தமிழர்களுக்காகவா போராடினார்கள்? இவர்களுக்கு போராட்டத்தின் அர்த்தம் புரியவில்லை என்று கருத்துக்கள் எழுந்தன.
உலகின் பல நாடுகளில் கொலைகளை செய்த பாராளுமன்றம் முன்போய் நீதி கேட்டது எவ்வளவு தூரம் சரியானது என்று இவர்கள் சிந்திக்கவில்லை?
தமிழர்களின் தலைமைகள் தமிழர்களை கேலிக் கூத்தாக்கியுள்ளனர். இன்றும் தமிழர்கள் யுத்தத்தில் தோல்வியடைந்த மனோநிலையில் இருப்பதையும் இதன் பின்னர் இந்த தேர்தலில் தமது தலைவர்களால் தாம் கேவலப்படுத்தப்பட்டதையும் நினைத்து தலைகுனிவுடன் உள்ளனர் என்றும் கருத்துக்கள் எழுந்தது.
ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் சிங்கள மக்கள இணைந்து வாழ்வதற்கான அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் இக்கூட்ட கருத்துப்பகிர்வு முடிவடைந்தது.
chandran.raja
சேனன் நீங்கள் உலகத் தொழிலாளர் பக்கம் நிற்கிறீர்களா? உலக முதாலித்துவ பக்கம் நிற்கிறீர்களா??. ஐரோபிய பாராளுமன்றம் யார் பக்கத்திற்கு சார்புடையது? ஐரோப்பிய தொழிலாளிவர்கத்திடம் நியாயம் கோராது இந்த பாராளுமன்றத்திற்கு போனது ஏனோ?
உங்கள் சிந்தனையின்படி ஆய்வின்படி ஐரோப்பிய பாராளுமன்றம் ஜனநாயகத்திற்கு உரியதென முடிவாகி விட்டதா?. அப்படியானால் வரும் காலங்களில் தொழிலாளி வர்கத்கத்திற்கான அரசியல் நடவடிக்கைகள் ஏதுவுமே ஐரோப்பாவில் தேவைப்பட மாட்டாதா?.
ஒரு இனத்தை பற்றியோ மதத்தைப் பற்றியோ ஒருநாட்டைப் பற்றியோ என்றால் நான் சாதாரணமாக விட்டுவிடுவேன். இது ஒரு வர்க்கத்தை பற்றி கேள்வியுமல்லாமல் இந்த வர்க்கம் அதிகாரத்தை தம் கைவசப்படத்தும் கேள்வியும் ஆகும். இதற்கு பொறுப்புடன் பதில் சொல்வது உங்கள் கடமைப்பாடாகும்.
விக்கி
திரு சந்திரன் ராசா
மகிந்த அஈசு யார் பக்க சார்புடையது? டக்லஸ், கருணா கள்ளக் கொம்பனி எந்த வர்க்க சார்புடையது?
ஐரோப்பிய பாராளுமன்றம் முதலாளித்துவம். இலங்கை பாராளுமன்றம் என்ன? சீனா, ரஷ்யா, இந்தியா தவிர்ந்த நாடுகள் விசேடமாக ஐரோப்பா, அமெரிக்க தான் முதலாளித்துவமோ?
chandran.raja
ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளிவர்க்ககட்சி சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்டுகிறது. தற்போதிய காலத்தில் இது எண்ணிக்கை அல்ல முக்கியம். தமது சுயாதீனமான வேலைத்திட்டமே கவனிக்கப் படவேண்டியது தாகும். சொந்த நாட்டு முதளாலிவர்கத்துடன் கணக்கு தீர்க்காமல் தொழிலாளிவர்கம் தலைநிர்ந்து நிற்கமுடியாது என்பதை கவனத்தில் எடுக்கவும் விக்கி!.
அதற்காக ஐரோப்பிய முதாலித்துவ அரசை பலவீனமான இலங்கையரசுக்கு எதிராக நிலைநிறுத்துவதல்ல. இதுவொரு வகைகாட்டிக் கொடுப்பே! ஏகாதிபத்தியங்களுக்குள் மறைந்து கொண்டு பலவீனமான நாடுகளை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை-குயுக்தி. டக்கிளஸ் கருணாவையோ சீனா இந்தியாவையோ ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்?. கேள்வி- தொழிலாள வர்க்கத்தைப் பற்றியல்லவா?.
விக்கி
திரு சந்திரன் ராசா
தேசம் நெட்டில் நீங்கள் எழுதும் கருத்துக்கள் மகிந்த அரசினையும், அதன் அடியாக்களையும் நியாயப் படுத்துவதாகவே எப்போதும் இருக்கின்றது. தற்போது தொழிலாளர்கள் அரசியல் பற்றி கருத்து சொல்கின்றீர்கள். இது இரண்டும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதது. உங்களுடைய கடந்தகால கருத்துக்கள் தொழிலாளர்களுக்கு எதிரானது.
மகிந்தவின் அரசினையும் டக்லஸ், கருணா மட்டுமல்ல பொன்சேகா, UNP, JVP, TNA உட்பட்ட அனைத்து முதலாளித்துவ கன்னைகளுக்கும் எதிராக தொழிலாளர்கள் போராட வேண்டும். இந்த கன்னைகளில் இருந்து தனித்துவமான அரசியல் செய்ய வேண்டும். இலங்கை அரசின் பலம், பலவீனத்தில் இருந்து தொழிலாளர்களின் அரசியல் தொடங்குவதில்லை. இலங்கை அரசிற்கு ஆதரவு எந்த காரணம் கொண்டும் கொடுப்பது தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானது.
உலக அரசுகள் ஐரோப்பா உட்பட தமிழ் மக்களின் படுகொலைக்கும், தொழிலாளர்களின் சுரண்டலுக்கும் இலங்கை அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தன, செய்கின்றன. ஐரோப்பிய, அமெரிக்க அரசுகள் தற்போது மகிந்த அரசுக்கு சிறிய எதிர்ப்பு தெரிவிப்பது இலங்கையின் முதலளிதுவத்திட்கு எதிராக இல்லை. மகிந்த அரசு மேற்கு நாடுகளின் நலன்களுக்கு முரண்பாடாக சீனா, இந்தியாவுடன் வைத்திருக்கும் உறவுகளுக்கு எதிரானது. இந்த அடிபிடிக்குள் தொழிலாளர்களுக்கு ஒரு சொந்த நிலைப்பாடு வேண்டும். அது இலங்கை அரசு உட்பட்ட அனைத்து முதலாளித்துவ அரசுகளையும் நிராகரிப்பதாக மட்டுமே இருக்க முடியும்.
இந்த நிலைமைகளில் மகிந்த அரசுக்கு தொழிலாளர்கள் ஆதரவு கொடுப்பது மகிந்தவினை முதலாளித்துவ அரசியலில் இருந்து திருப்பும் என்று கருதுவது தற்கொலைக்கு சரியாகும். தேசிய முதலாளித்துவத்தின் ஒரு கன்னை மகிந்த அரசினை ஒரு “ஏகாதிபத்திய எதிர்ப்பு” ஆட்சியாக கட்ட முயலும் சதி தொடர்பாக தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
NANTHA
தொழிலாள வர்க்கப் பிரச்சனை எப்போதும் தமிழர்களால் “எள்ளி” நகையாடப்பட்டதே வரலாறு. “சமத்துவம்” என்பது எப்போதும் தமிழர்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இலங்கையில் காணாமல் போகப்பண்ணியதில் “தமிழ்” அரசியலுக்கு முக்கிய பங்குண்டு.
மிஞ்சிருந்த கொஞ்ச நஞ்ச தொழிலாள வர்க்க சிநேகிதர்களான இடதுசாரிகளை புலிகள் தங்கள் “முதலாவது கொலை ரவுண்டில்” தமிழர் பகுதிகளில் போட்டுத் தள்ளியுள்ளனர். தற்போதுள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை எவர் கொடுக்கிறார்களோ அவர்களை அவர்கள் ஆதரிப்பார்கள். ஆனால் “தமிழ்” என்று விஷம் குத்தியுள்ள நிலையில் அவர்கள் இன்னமும் “சிங்களம்” என்று சிந்தித்து தங்கள் வாக்குகளை வீணாக்கவே செய்வர்.
chandran.raja
நிச்சயம் அப்படித் தான் விக்கி! நான் மகிந்தா அரசைப் பாதுகாக்கிறேன். மகிந்தாவால் தான் இலங்கையில் உள்நாட்டுயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நீங்கள் மறுக்கிறீர்களா? புலிகளை வேறுஎந்த ரீதியில்லாவது வழிக்கு கொண்டு வந்திருக்க முடியுமென்று நீங்களோ உங்களுக்கு பின்நிற்பவர்களோ நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?.
கேட்ட கேள்விக்கு பதில் இல்லாமல் இப்ப வேறுபக்கம் திரும்புகிறீர்கள். ஒருபலவீனமான ஒரு தீவை ஒரு பலமுள்ள நாட்டுக்கெதிராக திசை திருப்பி விடுவது எந்தளவு நியாயபூர்வமானது?.இதற்கான பதிலையே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். சொல்லவேண்டியது உங்கள் கடமைப்பாடு.
எனது கடந்தகாலக் கருத்துக்கள் தொழிலாளர்களுக்கு எதிரானது என்பதை நீங்கள் நிரூபித்தே ஆகவேண்டும். வடக்கு கிழக்கேயுள்ள போக்குவரத்து மீன்படி விவசாயக் கழகங்களை தொழில்சங்கங்களை புலிகள் “புலிச்சங்கங்கள்” ஆக்கி வைத்திருக்கிறது என்று தேசம்நெற்டில் குரல் கொடுத்தவன் இந்த சந்திரன்.ராஜா தான் என்பதை ஏன் இலகுவாக மறைந்து விடுகிறீர்கள்?.தொழில்சங்கமே இல்லாமல் தொழிலாளருக்கு எப்படி குரல் கொடுக்கமுடியும்?.நீங்களோ அதை சுயநிர்ணஉரிமை என்ற சூத்திரத்திற்குள் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தீர்கள். இல்லையா? விக்கி.
விக்கி! இருபதுவருடங்களுக்கு பேர்ளின் நகரில் “நான்காம்அகிலத்தின் முன்நோக்கும் பணி” என்ற உலகமகாநாடு நடந்து நினைவிருக்கிறா?அதில் டேவிட் நோர்த் விஜயடயஸ் எல்லோரும் வந்திருந்தார்கள். நானும் ஒரு விருந்தினராக இரண்டு நாள் பொழுது குந்தியிருந்தேன். இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் இந்த இருபது வருடங்களில் இதுவரை இலங்கைகிளை (சமத்துவக்கட்சி) சாதித்ததை விட டக்கிளஸ் கருணா சாதித்தவை எந்தவிதத்திலும் பெறுமதி குறைந்தவை இல்லை என்பதற்காகவே.
இலங்கையில் சோசலிசம் வேண்டுமென்பதற்காக ஏகாதிபத்திய முகாமுக்குள் புகுந்து கொண்டு தொழிலாளவர்க்க குரல் எழுப்பாதீர்கள்.ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குந்தியிருந்துகொண்டு ஐரோப்பியதொழிலாளி வர்க்கத்திற்கு முறையிட்டால் ஏற்றுக்கொள்ள கூடியதே! நீங்களோ ஈராக் ஆப்பானிஸ்தான் யூக்கோசுலாவக்கியா போன்ற நாடுகளை தின்றுமுடித்துவிட்டு அடுத்ததை எதை பிடித்துத்தின்றால் பசியாறும் என்றிருக்கும் நரிகளுக்கல்லவா மகிந்தாவின் நடவடிக்கையும் கிட்லர் வதைமுகாம்களுக்கு ஒப்பானது என கதைக்குறீர்கள். இதை ஒருபாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.திருந்த மறுத்தீர்களோ வரலாறு உரிய தண்டணையை உங்களுக்கு வழங்கும்.
thurai
வடக்கில் விளைவிக்கப்படும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் கஸ்டப்படுகின்றார்கள். காரணம் தெற்கிலிருந்து குவியும் விளைபொருட்கள்.
சாதாரண மக்களிற்கு புலம்பெயர்நாடுகளிலிருந்து கிடைக்கும் பணத்தில் மலிவாக யார் விற்ராலும் வாங்குவார்கள். விவசாயிகள் மண்வெட்டியை போட்டு விட்டு புலத்தில் வாழும் உறவினர்களிடம் பணம் கேட்கின்றார்கள். இது தான் இன்றைய நிலமை.
ஈழத்தமிழர்களின் வாழ்வை புலத்துப்பணமும், தெற்கின் உணவும் தீர்மானித்துக் கொண்டிருக்கையில், நாங்கள் இங்கு எதற்காக உருமை பற்ரியும், அரசியல் பற்ரியும் பேசுகின்றோம் என யாரவது கூறுவீர்களா?
துரை
விக்கி
திரு சந்திரன் ராசா
மகிந்த அரசு அல்லது எந்த ஒரு அரசின் அரசியலும் எப்போதும் தொழிலாள வர்க்க நலனுக்கு ஏன் எதிரானது என்பதை நான் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கின்றேன். இது தொடர்பாக ஒருவித சமரசதிட்கும் இடமில்லை.
அப்படியான ஒரு அரசினை பாதுகாப்பது தொழிலாளர் அரசியல் என்று சொல்லும் அரசியல் என்ன என்பதனை தேசம் வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்கு மேலதிக கருத்துக்கள் /விவாதங்கள் எனது பக்கத்தில் இருந்து தேவை இல்லை. இது அரசியலின் அரிச்சுவடி
thurai
அரசியல் என்பது பொய்கழும், எமாற்றுகழும், சந்தர்ப்பவாதமும் பழிவாங்கல்கழும் நிறைந்த ஒருவிடயம். ஈழத்தமிழர்களின் வாழ்வுடன் தமிழ் அரசியல்வாதிகள் விளையாடுகின்றார்கள்.
தமிழரிடம் தோன்றவேண்டியதும், தற்காலத்திற்கு அவசியமானதும் முதலில் தீர்க்கதரிசனமிக்க, நீண்டகால தூரநோக்கம் கொண்ட சமூக, பொருளாதார, அரசியல் முன்னெடுப்புக்களேயாகும்.
துரை
palli
//மகிந்த அரசு அல்லது எந்த ஒரு அரசின் அரசியலும் எப்போதும் தொழிலாள வர்க்க நலனுக்கு ஏன் எதிரானது என்பதை நான் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கின்றேன். இது தொடர்பாக ஒருவித சமரசதிட்கும் இடமில்லை.//
இந்த கருத்துடன் நானும் உடன்படுகிறேன், காரனம் இலங்கை அரசியலில் பேச்சள்வில் மட்டும்தான் தொழிலாளர் நலஙள்; ஆனால் தொழிலாளர் மத்தியில் இருந்து அரசியல் செய்ய போவோர் கூட முதலாளிகளின் அன்புக்கு உரியவர்கள் ஆகி விடுகிறார்கள், மகிந்தாவுக்கு கோவில்கட்ட துடிக்கும் நபர்கள்கூட தொழிலாளர்க்கு குடிசை கட்ட முயற்ச்சிக்கவில்லை என்பதும் எம்மிடத்தில்தான் நடத்தது, புலம்பெயர் தேசத்தில் ஓரளவு தொழிலாளர் மதிக்க படுகிறார்கள், அவர்கள் கூட இலங்கையை பொறுத்த மட்டில் பயங்கரவாதத்தை அல்லது அரசைதான் ஆதரிக்கின்றனர், சந்திராவின் நோக்கம் சரியாயினும் அது தற்ப்போது இலங்கையில் சாத்தியமல்ல;
NANTHA
சந்திரன்.ராஜா:
இலங்கையில் “தமிழ்” என்று அரசியல் செய்யும்/செய்த கட்சிகள் “தொழிலாளர்” என்ற சொல்லைக் கூட பயன்படுத்த மிகவும் கஷ்டப்பட்டனர். ஏனென்றால் அது” தங்களை” இடதுசாரிகள்” என்று அடையாளப்படுத்திவிடும் என தயங்கினார்கள்.
யுஎன்பி கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழ் கட்சிகள் மாத்திரமின்றி “புலிகளும்” ஆதரித்து யு என்பி யின் எடுபிடிகளாகவே செயல்பட்டனர். ஒருமுறை ஆஸ்பத்திரி ஊழியர்களின் சங்கம் வேலை நிறுத்தம் செய்தபோது யு என் பி அரசு அந்த தொழிலாளர் சங்க அங்கத்தவர்களை குண்டர்களை வைத்து தாக்கினார்கள். புலிகள் யாழ்ப்பாணத்தில் அதே வேலையை தமிழ் ஊழியர்களுக்கு எதிராக செய்தனர்.
இலங்கையில் “வேலையே” செய்யாதவர்கள் வெளிநாடு வந்து முதன் முதலில் “வேலை” செய்து கூலி பெற்றவர்கள் இலங்கைத் தொழிலாளர் பிரச்சனை பற்றி கதைப்பது பரிதாபம்.
மகிந்தவின் சுதந்திரக் கட்சிதான் 1956 ஆம் ஆண்டு பத்து தொழிலாளர்கள் ஒரு தொழில் சங்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சட்டம் கொண்டு வந்ததுடன் “மே தினத்தை” விடுமுறையாகவும், தொழிலாளர் தினமாகவும் பிரகடனம் செய்தது.
தொழிலாளர் விரோத சட்டங்கள் அனைத்துக்கும் செல்வநாயகம் கும்பல்கள் ஆதரித்தே வாக்களித்தனர்.
மஹிந்த வெற்றி பெற்றது “பிடிக்காத” தமிழ் சிங்கங்கள் (புலிகள்) ” தொழிலாளி வர்க்க நலன்” பற்றி கதைப்பது மிகவும் வேடிக்கையான விஷயம். ஜனாதிபதி தேர்தலில் சகல தொழில் சங்கங்களும் மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
Gajapal
//எமாற்றுகளும் சந்தர்ப்பவாதமும் பழிவாங்கல்களும் நிறைந்த ஒருவிடயம். ஈழத்தமிழர்களின் வாழ்வுடன் தமிழ் அரசியல்வாதிகள் விளையாடுகின்றார்கள்.//துரை
கூட்டணி ஒருகாலத்தில் சிங்கவனின் முதுகுத்தோல் உரிப்து முதல் கொண்ட செய்த அத்தனையும் தமது பாராளுமன்றத்திற்காகவே தவிர வேறு எதற்றகாகவும் இல்லை இன்றும் சம்பந்தன் தலைமையில் மீண்டும் வந்து விட்டார்கள் இந்த கூட்டணி கூட்டம் அத மட்டுமல்ல டக்ளஸ் ரெலோ ஈபி ஆர புளொட் ஈரோஸ் எல்லோரும் கடையை பூட்டிக்கொண்டு போக வேண்டியது தான்.
மக்கள் தமக்கு தெரிந்தவர்களை சிலவேளை சிங்கள வர்களையும் தெரிவு செய்யட்டும். கூட்டணி உட்பட எல்லா இயக்கங்களும் தமிழர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். சம்பந்தர் -சங்கரிக்கு தாம் கடைசி மூச்சு உள்ளவரை தமிழர்கள் தங்களைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நினைப்பு. அடுத்த தலைமுறைக்கு இடம்கொடுக்கவே மாட்டார்கள்.