ஜனாதிபதி யின் மகன் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளர். இது தொடர்பான விண்ணப்பத்தை அவர் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாக ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடகச் செயலாளர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ தமது 16 வயதிலிருந்தே பொதுநல சேவைகளில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். ‘இளைஞருக்கு நாளை’ என்ற அமைப்பின் ஊடக அவர் இளைஞர் சமுகத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளார்.