கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான கையெழுத்து சஞ்சிகைப் போட்டியினை இந்த வருடத்திலும் நடாத்துவதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் கலை-இலக்கிய ஆக்கத் திறமைகளை விருத்தி செய்யும் வகையிலும், கூட்டு முயற்சி தலைமைத்துவம் மற்றும் ஆளுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் கையெழுத்து சஞ்சிகைப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.
தரம்-03 தொடக்கம் 13 வரையான வகுப்பு மாணவர்கள் பங்குபற்றும் வகையில் 06 பிரிவுகளாக இந்தப் போட்டி நடாத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை ரீதியாகவும், வலயம் மற்றும் மாகாண ரீதியாகவும் சிறந்த ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
பாடசாலை மட்டத்திலான போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு முன்பாகவும், வலய ரீதியான தெரிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதிக்கு முன்பாகவும் நடாத்தப்படுவதுடன், கிழக்கு மாகாணத்தின் சிறந்த கையெழுத்து சஞ்சிகைகளைத் தெரிவு செய்யும் போட்டிகள் யூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாகவும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.