பாடசாலைகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் தகவல் தொழில் நுட்ப பாட போதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய பாடசாலை சமூகத்தினருக்கு கணனிதொடர்பான அறிவினைப் போதிக்கும் நோக்கத்துடன் தகவல் தொழில்நுட்பக் கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கணனிக் கல்வியைப் போதிப்பதற்கு வசதியாக பாடசாலைகளில் கணனி வள நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய கல்வியாண்டில் தகவல் தொழில்நுட்ப பாடபோதனைகளை மேலும் திறன்பட முன்னெடுக்கும் நோக்கத்துடன் விசேட செயற் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இதேவேளை தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய தகவல் தளமொன்றினை அறிமுகம் செய்வதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.