பொன்சேகாவை 5 வருடங்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgதேசத் துரோகத்திற்காக உடனடியான இராணுவ நீதிமன்ற விசாரணையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்கொள்வாரெனவும் அவரை ஐந்து வருடங்களுக்கு சிறை வைத்திருக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் பேட்டியொன்றிலேயே கோதாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ ஆட்சியை அமுல்படுத்த பொன்சேகா திட்டமிட்டிருந்ததாகவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகப் போட்டியிட்டமைக்கு அமெரிக்கா,நோர்வே ஆதரவளித்திருந்ததாகவும் சிங்கப்பூரின் ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது பெற்ற இராணுவ வெற்றியில் பொன்சேகா முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அவர் உரிமை கோரியிருப்பதை கோதாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். “அவர் வெற்றியடைந்ததை நாங்கள் வேறு யாராவது தளபதி மூலம் செய்து முடித்திருப்போம். வேறு சிறப்பான அதிகாரிகளும் இருந்துள்ளனர  என்று கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இராணுவச் சட்டத்தின் கீழ் பொன்சேகா மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற ஆறு மாதங்களுக்குள் இராணுவச் சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு அதிகாரி மீதும் நடவடிக்கையெடுக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார். ஏனைய விடயங்களும் உள்ளன. சிவில் நடைமுறையின் கீழ் அவற்றை நாம் செய்வோம். சாட்சியங்களை ஒன்றுதிரட்டிய பின் உடனடியாக இராணுவ நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஏனெனில், இது வழக்கறிஞர்களிலேயே தங்கியுள்ளது. ஆனால், இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நாம் விரும்புகிறோம். சில சமயம் ஆறு மாதங்களுக்குக் குறைவானதாகக் காலமெடுக்கக்கூடும். குற்றச்சாட்டுகளின் தன்மை மிகவும் கடுமையாக உள்ளது. அவரை ஐந்து வருடங்களுக்கு சிறைவைக்கக் கூடியதாகவும் இருக்கலாம் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

படைகளின் பிரதானியாக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகளுடன் பொன்சேகா செயற்பட்டதாகவும் அது முற்றுமுழுதாகத் தவறானது என்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ஏனென்றால் பாதுகாப்புச் சபை கூட்டங்களில் அமர்ந்திருந்த அவர் அரசியல்வாதிகளுடன் தொடர்புபட்டிருப்பது தவறானதென்றும் இது துரோகத்தனத்தின் அளவைக் கொண்டதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இராணுவ ஆட்சிக்குத் திட்டமிட்டிருந்தார். அரசியலை தனிமைப்படுத்திவிட்டு நாட்டை வேறுபட்ட பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சித்தார். இராணுவத் தளபதியாக அவரிருந்த இறுதிக் கட்டங்களின் போது அவருடைய ஆட்களை கொழும்புக்குக் கொண்டுவர ஆரம்பித்திருந்தார். அவருடைய படை அணியை மற்றும் அவருடைய சிரேஷ்ட படையணி ஆட்களை சகல இடங்களிலும் அமர்த்தியிருந்தார். இந்த விடயங்கள் யாவும் இராணுவ சதிப்புரட்சியைப் போன்றதாகக் காணப்பட்டதென்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேசமயம், மேற்குலகின் ஒரு பிரிவினர் பொன்சேகாவுடன் இணைந்து சதி செய்ததாக கோதாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது போர்க்குற்றங்களை இழைத்ததாக ராஜபக்ஷ சகோதரர்களை மேற்குலகின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். “குறிப்பிட்ட நலன்களைக் கொண்டிருந்த மேற்குநாடுகள் அவருக்கு (பொன்சேகா) ஆதரவளித்தன என்பதில் நூறு சதவீதம் நாம் நம்புகின்றோம். அமெரிக்கா,நோர்வே போன்ற நாடுகள் அவரின் பிரசாரத்திற்காகப் பெருந்தொகை பணத்தைச் செலவழித்திருந்தன.

அரசாங்கத்திற்கு எதிராக எழுதுவதற்காக ஊடகவியலாளர்களுக்கு நோர்வே அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்கியதற்கான ஆதாரத்தை நான் வைத்திருக்கின்றேன். அவர்கள் குறிப்பிட்ட நலன்களை வைத்திருந்தனர். தமிழ்ப் புலிகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கியிருந்தனர். அத்துடன், அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிக்கு பொன்சேகாவுக்கும் அவர்கள் ஆதரவளித்திருந்தனர் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக பொன்சேகாவை கோதாபய ராஜபக்ஷ தொடர்புபடுத்தியுள்ளார். “வேறு எவருமில்லை என்பதை நாமறிவோம்.சூழ்நிலைகளை நீங்கள் கண்டுகொள்ளலாம்.அவரையோ அல்லது நெருக்கமானவர்களையோ தவிர,வேறு எவரை விமர்சித்த எந்தவொரு ஊடகத்துறையினரும் இம்சிக்கப்படவில்லை. என்னையோ, ஜனாதிபதியையோ விமர்சித்தவர்களுக்கு எதுவும் நடந்திருக்கவில்லை. அவர் எவரைப் பயன்படுத்தினார் என்பதற்கான துப்பை நாம் வைத்திருக்கின்றோம். அதில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். உண்மையில் எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஐந்து அல்லது ஆறு விடயங்களுக்கு திட்டவட்டமாக நிச்சயமாக அவர் பொறுப்பாகவிருந்தார். ஊடகத்துறையினர் சம்பந்தப்படுகின்ற ஐந்து அல்லது ஆறு விடயங்களில் அவர் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருந்தார். உண்மை மிக விரைவில் வெளிவரும் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • palli
    palli

    //சில சமயம் ஆறு மாதங்களுக்குக் குறைவானதாகக் காலமெடுக்கக்கூடும். குற்றச்சாட்டுகளின் தன்மை மிகவும் கடுமையாக உள்ளது.//
    சரத்தின் பாராளமன்றதேர்தல் கனவு அம்பேல்!! எல்லாமே பிளான் பண்ணி (அந்த பண்ணி அல்ல) செய்யிறாங்கப்பா;

    //அமெரிக்கா,நோர்வே போன்ற நாடுகள் அவரின் பிரசாரத்திற்காகப் பெருந்தொகை பணத்தைச் செலவழித்திருந்தன.//
    கடனாகவா?? அல்லது அன்பழிப்பா?? ஆக சில நாடுகள் உங்களுக்கு இப்போ எதிராக நிற்ப்பதாக சொல்லுறியள்; இதை நீங்கள் சொல்லும் போது நம்பிதான் ஆக வேண்டும்; ஆனால் இதையே பல்லி பலமுறை சொன்னாலும் சிலர் நம்பமாட்டினமாம்:

    // அவரை ஐந்து வருடங்களுக்கு சிறைவைக்கக் கூடியதாகவும் இருக்கலாம் என்று கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.//
    அடடா அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கும் சரத்துக்கு ஆப்புதானா?? அதுவரை பிக்குகளை எப்படி சமாளிக்க போறியள்; தமிழரை தூக்கி போட்டு மிரியுங்க பிக்குகளும் அடங்கி விடுவார்கள்; அல்லது நாலு பிக்குகளை தூக்கி சரத்துக்கு உதவியாய் போடுங்க உள்ளே;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அடடா அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கும் சரத்துக்கு ஆப்புதானா?? //

    பல்லி, உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி மகிந்தவின் 2வது பதவிக்காலம், இந்த வருடம் கார்த்திகை 19 அன்று தான் தொடங்குகின்றது. அப்போது தான் மகிந்தவும் பதவிப்பிரமானம் எடுக்கவுள்ளார். அதனால் அவர் 2016 கார்த்திகை வரையில்த் தான் பதவி வகிப்பார். சரத்திற்கு இராணுவநீதிமன்றம் 5 வருடங்கள் தீட்டினால், அப்பீலில் சிலவேளை குறைக்கலாம். அப்படி முடியாவிட்டாலும் 2015 வரையே அவர் சிறையில் இருக்க வேண்டிவரும். அதனால் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட தடையேதும் இருக்காது. ஆனால் அவர் வெளியில் வரும்போது, அடுத்த அதிபர் தேர்தலிலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலிலோ போட்டியிடும் மனநிலையிலிருப்பாரா என்பதே கேள்விக்குறி??

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    /தேசத்துரோகத்திற்காக உடனடியான இராணுவ நீதிமன்ற விசாரணையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்கொள்வாரெனவும் அவரை ஐந்து வருடங்களுக்கு சிறை வைத்திருக்க முடியுமெனவும்…../
    விசாரணைக்கு முதலே தீர்ப்பா? தேசத்துரோகத்திற்கு ஆக ஐந்து வருசந்தானா?

    /ஊடகத்துறையினர் சம்பந்தப்படுகின்ற ஐந்து அல்லது ஆறு விடயங்களில் அவர் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருந்தார்./
    இதுவும் தேசத் துரோகத்தில் அடங்குமோ? இது இராணுவ நீதிமன்ற விசாரணைக்குள் அடங்குமோ? அல்லது சிவில் நடைமுறையில் சரத்தின் ஆயுள் சிக்குமோ? நூறு சதவீதம் நம்புகிற ஆதாரங்களை அமெரிக்கா,நோர்வே நாடுகளுக்கு எதிராக ஏன் வெளியிடக் கூடாது? அல்லது சரத்தின் கைது இவர்களோடு பேரம் பேச எடுத்த நடவடிக்கையா? அல்லது ‘நாடு கடந்தவர்கள்’ மேல் விடுகின்ற மிரட்டலா இந்த நாடகம்? அதையும் சொல்லுங்கோ கோதபாயா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //‘நாடு கடந்தவர்கள்’ மேல் விடுகின்ற மிரட்டலா இந்த நாடகம்? // தமிழ்வாதம்,
    உங்கள் வாதம் எனக்குப் புரியவில்லை?? சரத் கைது எப்படி நாடு கடந்தவர்களை மிரட்டும் என்பதை விளக்குவீர்களா??

    Reply
  • NANTHA
    NANTHA

    இராணுவத்தில் இருந்தவர்களுக்குத்தான் இராணுவ நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் பற்றி அபிப்பிராயம் சொல்ல முடியும். கோத்தபாயா சொல்வதில் உண்மை உண்டு.

    நோர்வேக்கும், அமெரிக்காவுக்கும் பொன்சேகா கைது பற்றிய காரணங்களோ ஆதரங்களோ சொல்லப்பட வேண்டும் என்பது விபரம் தெரியாதவர்களின் கதை. இலங்கை அமெரிக்காவின் அல்லது நோர்வேயின் கொலனி என்று தமிழர்கள் எண்ணிக் கொண்டிருப்பது பரிதாபம்.

    Reply
  • palli
    palli

    //அவர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட தடையேதும் இருக்காது. ஆனால் அவர் வெளியில் வரும்போது, அடுத்த அதிபர் தேர்தலிலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலிலோ போட்டியிடும் மனநிலையிலிருப்பாரா என்பதே கேள்விக்குறி??//

    பார்த்திபன் சொல்லுறார் பல்லி நம்புகிறார், ஆனால் மனநிலை பற்றி பார்த்திபன் கருத்து சரியா?? புலியின் இருபது வருட திறந்த சிறையில் இருந்த நாம் இப்போ இப்போ!! அதுபோல் சரத்தும் புது பொலிவுடன் வந்திட்டால்?? அதுசரி வந்தா பார்ப்போம்;

    Reply
  • மாயா
    மாயா

    இது மாதிரி காட்சிகளை எல்லாம் இனி காண முடியும்.
    http://www.lankadeepa.lk/2010/02/12/front_news/08.html
    புத்த பிக்குகளுக்கு , காக்கிச் சட்டைகளின் கவனிப்பு இப்படி?

    சில வேளை , சரத் பொண்சேகா உடல் நலமின்றி , பல வைத்தியர்களது சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என ஒரு செய்தி வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. லண்டனில் இருந்து பண மூடைகளை அள்ளிக் கொடுத்த புலிகளும் , சரத் வந்து மாற்றம் வர வேண்டும் என வாக்குகளை கொட்டிய தமிழர்களும் , குறிப்பாக யாழ்பாணிகள் ஆவென்று இருக்க வேண்டிய காலம். இதில் வேறு இந்து சமயம்தான் ஏதோ முதன்மையானது என எழுதும் சில பேர்கள் , இந்த பெத்த தலைவர்களுக்கே இந்தக் கதி என்றால் , இந்து மதவாதிகளுக்கு என்ன கதி என யோசிக்க வைக்கும் என நினைக்கிறேன். இன்னும் 20 வருடங்களுக்கு மகிந்தவின் குடும்ப(சிங்கள பிரபாகரனின்) ஆட்சிதான்.

    தமிழ் கட்சிகளுக்கு , ஏற்கனவே காதில் சங்கூதி இருக்கிறார்கள். இந்த இனவாதக் கட்சிகளை தூக்கி குப்பையில் போட்டு விட்டு தேசியக் கட்சிகளான சுதந்திரக் கட்சியியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலோ சேருமாறு கோட்டாபய. அதை மீறினால் பிரபாகரனை சாவடித்த தளபதிக்கே இந்த நிலையென்றால் , நம் தமிழீழ குறு மன்னர்கள் நிலை சொல்ல வேண்டியதில்லை. இதுவே சரியான நேரம்.

    பிரபாரனதும் , புலிகளதும் அழிவு , சிங்கள தேசத்தின் உண்மை பிரச்சனைகளை வீதிக்கு கொண்டு வர வழி வகுத்துள்ளது. இனி தமிழர்கள் சற்று அமைதியாக இருந்தாலே போதும். அவர்களது பிரச்சனை தீரும் வரை. இதற்குள் தமிழர் தலை போட்டால் , இருக்கும் மொட்டையையும் வழித்து கதிர்காமத்துக்கு அனுப்பி விடுவார்கள். அதன் பின்னர் பலி ஆடுகளாக இருக்கும் தமிழரும் சாக நேரிடும். தமிழர் அமைதி காக்க அல்லது மகிந்த கட்சியில் சேர்வதே இப்போதைக்கான புத்திசாலித் தனம். இல்லை , உடனடியாக வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோர வேண்டியதுதான். சிறீலங்காவில் அரெசியல் செய்ய புலத்தில் இருந்து போவதெல்லாம் , அடுத்த முட்டாள்தனம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    மாயா:
    சரியான “போடு” போட்டுள்ளீர்கள். நல்லது. அமைதி காக்க.. நா காக்க….

    Reply