வன்னி யிலுள்ள அரச வங்கிகளில் பணமாகவும் நகையாகவும் சொத்துக்களை வைப்புச் செய்து அதுதொடர்பான ஆவணங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
வன்னியில் இயங்கிய இலங்கை வங்கி மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் கிளைகளில் வன்னிமக்கள் தமது பணத்தினை வைப்புச் செய்திருந்ததுடன் தமது நகைகளை அடைவுவைத்து கடனும் பெற்றிருந்தனர்.
ஆயினும் வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக வங்கிகள் சேதமடைந்ததுடன் பெருமளவு ஆவணங்களும் அழிவடைந்துள்ளன. தமது வைப்பு தொடர்பான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாகவே அவர்களது வைப்புக்களை அல்லது அதன் பெறுமதியை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் தமது ஆவணங்களை தொலைத்தவர்கள் தொடர்பாக மத்திய வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் விரைவில் ஓர் சாதகமான அறிவிப்பினை விடுக்கும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார
பார்த்திபன்
அப்ப எங்கடை தமிழீழ வைப்பகத்தில் வைப்பிலிட்டவைக்கு நாமம் கொடுப்பினமோ??
palli
பார்த்திபன் அது தலைவர் இருக்கும் போதே கொடுத்துவிட்டு போய்விட்டார், (அமைப்பு நட்டத்தில் போவதாக) நாசமாய் போகபோவது தெரியாமல்,
NANTHA
தமிழீழ வைப்பகம் என்பது ஒரு one way traffic. காசு போடலாம் ஆனால் எடுக்க முடியாது. நல்ல காசை “வைப்பு” செய்தவர்கள் மீள கேட்டபோது “புலிகளால் அச்சடிக்கப்பட்ட “சிவகாசி” நோட்டுக்கள் கொடுக்கப்பட்டன. அதைவைத்து அப்போதே ஒன்றும் செய்ய முடியாமல் முழி பிதுங்கிய அப்பாவிகள் அநேகர் உண்டு.
அடைவு கடை நடத்திய ‘முதலாவது” விடுதலை இயக்கம் புலிகள் என்ற வகையில் “தமிழர்களுக்கு” நாமம் கிடைத்ததுதான் வரலாறு. பின்னர் வந்த செய்திகளில் “நல்ல” நோட்டுக் கட்டுக்களோடு புலி பிரமுகர்கள், குடும்பங்ககள் தப்பியோட முனைந்து பிடிபட்ட செய்திகளும் உண்டு.
BC
இலங்கை வங்கிகளில் உள்ள உங்கள் காசை சிங்களவன் அப்படியே எடுத்துவிடுவான். தமிழீழ வைப்பகத்தில் பணத்தை போடுவது தான் ஒரே ஒரு பாதுகாப்பு என்று அப்பாவிகளை புலிகள் பயப்படுத்தியது ஞாபகத்துக்கு வருகிறது.
thurai
இப்போது ஜிரிவி யில் யாழ்ப்பாணத்து வங்கிகளில் பணம் போடவேண்டாம், அரசாங்கம் தமிழர் பணங்களை சூறையாட திட்டம் போடுவதாக பிரசாரம் செய்கின்றார்கள்.
காரணம் புலிகளை திரும்பவும் புலத்தில் பணம் திரட்ட ஆயத்தப்படுதுவதாக அர்த்தமாக இருக்குமோ?
துரை
பார்த்திபன்
துரை,
நீங்கள் கூறிய நிகழ்ச்சியை ஜிரிவி யில் நானும் பார்த்தேன். ஜெகனின் “உறவுகளின் சங்கமம்” நிகழ்ச்சியை, ஏற்கனவே தினேஷ் “வடம் பிடிப்போம் கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி நடாத்துவதால், பேசாமல் “பணம் சேர்ப்போம் பை நிரப்புவோம்” என மாற்றி விடலாம். காரணம் அந்த நிகழ்ச்சியில் ஜெகன் வன்னி மக்களைச் சாட்டி அடிக்கடி அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென கதையளந்து பணம் சேர்க்க பலதடவை முயன்றார். அதற்காகவே இப்படி யாழில் அரச வங்கிகள் தமிழர்களின் பணங்களை அபகரிக்கத் திட்டமென்று கதையளந்தது மட்டுமல்லாமல், தற்போது வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளும் வர ஆரமம்பித்து விட்டன என்றும் கூறினார். ஆனால் அவர்கள் தமிழர்களின் பணங்களைத் தமது நாடுகளுக்கு கடத்த முயல்கின்றனர் என கதையளக்க மறந்து விட்டார்……