இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்ளிப்பதற்கு விண்ணப்பிப் பதற்கான காலம் நாளை மறுதினம் 17ம் திகதியுடன் முடிவடையவிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் தாம் தங்கியுள்ள கிராமசேவைகர் ஊடாக தங்களது விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் செயலகத்திற்கு 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் :- இடம்பெயர்ந்திருப்பவர்கள் பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக பொதுத் தேர்தல் சட்டப்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகவே பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் நாளை மறுதினம் 17ம் திகதிக்கு முன்னர் தாங்கள் தங்கி இருக்கும் பிரதேச கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.