சரத் பொன்சேகா உறவினர் வீட்டில் 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மீட்பு!

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் தயாரான அசோகா திலகரத்னவின் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து ஐந்து லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்  100 ஸ்டேலிங் பவுண்கள்  15 மில்லியன் ரூபா இலங்கை நாணயம் என்பனவற்றை  அங்கு தேடுதல் நடத்திய பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடக அறிவிப்பாளர் பிரசன்ன ஜயகொடி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்ற மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இத்தேடுதல் நடத்தப்பட்டதாவும் அவ்வீட்டிலிருந்து நான்கு பாதுகாப்பு பெட்டகங்களில் இப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    தலைப்பு: 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மீட்பு
    வியப்பு: அடப் பாவமே,அமெரிக்காவும்,நோர்வெயும் இத்துனூண்டு பணமா சரத்திற்கு கொடுத்தார்கள்!
    செய்தி:ஐந்து லட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் 100 ஸ்டேலிங் பவுண்கள் 15 மில்லியன் ரூபா இலங்கை நாணயம்.. .கைப்பற்றியதாக.
    வியப்பு: அடப் பாவிங்களா! இம்மாம் பணத்தை,சட்ட நடவடிக்கை முடியும் வரை முடக்கிறீங்களே!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நீங்களும் வெற்றிப்பாதையில் முன்னேற வாய்புண்டு. நவீன சட்டதிட்டங்களை ஏற்று நீ வாழும் நாட்டையோ கண்டத்தையோ அர்ப்பணிக்க தயாராக நிலையில் இந்த வாய்ப்பு உன்னையும் கிட்டலாம். கவனிக்கப் படவேண்டியது. தற்போது இருக்கும் அரசாங்களில் அவர் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்க வேண்டும். அரசியல் என்பது அவசியம் இல்லை. இதில் சூனியமானவர்களே விரும்பத்தக்கது. சிறந்த உதாரணம் சரத் பொன்சேகரா. தமிழ்மக்களில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் தலைமறைவு தாதாக்களுக்கு உரிமை கோருகிற உருத்திரகுமாரே சொல்ல முடியும். ஈழத்தில் இப்படியான தகுதியுடையவர் சம்பந்தனை விட அடைக்கலமும் சுரேஸ்சுமே தொழில்ரீதியாக அனுபவமானவர்கள். இது எனது தனிப்பட்ட சிபார்சு மட்டுமே! மிகுதி உங்கள் சிந்தனைக்கு.

    Reply