ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் என்ற பதவியை இதன்பின்னர் மாவட்ட அமைப்பாளர் பதவி என மாற்றியமைக்குமாறு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷää கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்;.
தனிப்பட்ட அபிப்பிராய வாக்குகளை பெறும் போட்டி நிலையை தவிர்த்துக்கொள்வது உட்பட புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது மற்றும் மக்கள் அபிமானத்துடன் கூடிய அரசியல்வாதிகள் குழுவொன்றை உருவாக்குவது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும். மேலும் ஒரு குழு என்ற ரீதியில் செயற்பட்டு தமது வாக்கு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக அதிகரிப்பதையும எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை செயற்படுத்தப்பட்ட தொகுதி அமைப்பாளர் பதவி ஊடாக சிலர் அபிப்பிராய வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு போட்டி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்ததே. இவ்வாறான போட்டி நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் அதிருப்தி நிலையை தோற்றுவித்துள்ளது. சமூக ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இது பெரும் தடையாக உள்ளது. இந்த குறைபாட்டை நீக்குவதற்கு மாவட்ட அமைப்பாளர் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒழுக்க விழுமியங்களை பேணும் அதேவேளை ஒருங்கிணைந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது அதிகார பிரதேசத்தை மீளமைப்பது இந்த செயற்பாட்டின் மற்றொரு நோக்கமாகும்.