வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பத்தவர்களின் பிள்ளைகளுக்கென புதிய பாடசாலையொன்று இன்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது.
வவுனியா காமினி வித்தியாலயத்தில் இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு அவர் உரையாற்றுகையில், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக கல்வியை இழந்த வடபகுதி சிறுவர்களுக்கு தெற்கில் வாழும் சிறுவர்களைப்போன்று சுதந்திர கல்வியை வழங்கும் ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைய இப்புதிய பாடசாலை இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
மீள்குடியேற்றக் கிரமங்களில் இவ்வாறான பல பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சும் பிராந்திய கல்விக் காரியமும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குகின்றன.
வவுனியா காமினி வித்தியாலயத்தில் மேலும் 2600 மாணவர்களுக்கு கல்வி போதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள். பாடசாலைத் தளபாடங்கள் என்பனவற்றை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படடுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.