கைது செய்யப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த இன்று விடுதலை செய்யப்பட்டாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
கங்கொடவில நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபின்னர் விடுதலையானார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி சந்தன சிறிமல்வத்த கைதுசெய்யப்பட்டார். இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்;படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவைக் கேட்டிருந்தார்.