கண்டியில் நாளை நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கால வரையறையின்றி குறித்த சங்க சம்மேளன கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக கண்டி மல்வத்த, அஸ்கிரிய மற்றும் ராமன்ய பீடாதிபதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டி மஹா மலுவலவில் இந்த கூட்டத் தொடர் நடத்தப்படவிருந்தது.நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும், பௌத்த பிக்குகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாநாயக்கத் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.