எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று (16) முதல் ஏற்கப்படுவதாக தேர்தல் திணைக் களம் தெரிவித்தது. 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கே இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள் ளதாகவும் திணைக்களம் கூறியது.
இம்முறை தேர்தலில் கூடுதலான அரசாங்க ஊழியர்களை தேர்தல் கடமையில் ஈடுபடுத்த தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது. இதன்படி 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு சகல அரச நிறுவனங்க ளிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்க 22ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.