உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக் கென விஷேடமாக பள்ளேகல சூரியவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச விளையாட்டு மைதானங் களின் தரம் திறமையான முறையில் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
2011ம் ஆண்டில் உலக கிரிக்கெட் கிண்ணத்துக்கான 12 போட்டிகள் இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இதனை முன்னிட்டு இவைகளின் தரங்களை பார்வையிட அண்மையில் இலங்கை வந்த பிரதிநிதிகள் குழுவினரே இவ்வாறு கருத்துத் தெரிவித் தனர்.
இம்மூன்று மைதானங்களின் நிர்மாணப் பணிகளைப் பற்றி குறை கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் இணைப்பதிகாரி திராஜ் மல் ஹோத்ரா குறிப்பிட்டார்.
தாங்கள் எதிர்பார்ததை விட பல மடங்கு திருப்த்தியளிக்கும் வகையில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி வருகின்றமையிட்டு மகிழ்ச்சியடைவ தாகவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு இறுதியில் சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானத்தில், மேற்கு இந்திய அணியுடனான போட்டியொன்றை நடாத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றது என இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் இடைக்காலச் சபையின் தலைவர் டீ. எஸ். த. சில்வா தெரி வித்தார்.