ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தனுனவின் தாயாரான திருமதி அசோக திலகரட்ன 16 பெப்ரவரி 2010 குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு விவகாரங்களில் இவருக்கு தொடர்புள்ளதையடுத்து, அவரை கைது செய்து விசாரிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்தனர்.
ஆயுத ஊழல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் தனுன திலகரட்னவின் தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்