பல்வேறு வங்கிகளில் 75 மில்லியன் ரூபா பணம் வைப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கல்கிசை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்செய்யப்படட் பின்னரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாதெனவும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பி;த்துள்ளது.
பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்தை வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக, தனுன திலகரட்னவின் தாயார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
2000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதிகொண்ட வெளிநாட்டுப் பணத்தை ஒருவர் வைத்திருப்பது இலங்கை நிதிச் சட்டப்படி பெருங்குற்றமாகும். அதற்கு அவர் மத்திய வங்கியிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.