அவுஸ் திரேலிய அரசாங்கம் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள சுமார் 250 மில்லியன் ரூபா பெறுமதியான் ஐந்து தன்னியக்க இயந்திரங்களை அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகள்ää மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்குடன் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்லோவேக்கியா நாட்டுத் தயாரிப்பான பொஸேனா 4ரக ஐந்து இயந்திரங்களும் நேற்று தேச நிர்மாண அமைச்சின் செயலாளரிடம் இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் கையளித்தார்.
கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்துள்ள அமரர் பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கருகே கையளிப்பு வைபவம் நடைபெற்றது.
மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கää ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே உட்பட. ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகள் உட்படää அவுஸ்திரேலிய தூதரகத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.