ஜப்பானிய டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம் தமது கார்களில் சிலவற்றை மீளப்பெறும் மற்றுமொரு நடவடிக்கை குறித்து தாம் கவனம் செலுத்துவதாக கூறுகிறது.
இந்தத்தடவை தமது பிரபலமான டொயோட்டா கொரலா கார்களில் பவர் ஸ்டியரிங்குகளில் ஏற்பட்ட பிரச்சினைகளாலேயே கார்கள் திரும்பப்பெறப்படவுள்ளன.
என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்ற விபரம் இன்னமும் தெளிவாகவில்லை என்று கூறியுள்ள ஒரு மூத்த டொயோட்டா அதிகாரி, அவை குறித்து நூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகளே வந்துள்ளதாகவும் கூறுகிறார்.