நுஆ கட்சியின் தலைவியும், அமைச்சருமான பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இன்று இணைந்துகொண்டார். இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபமொன்றில் பேரியல் அஷ்ரபும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அங்கத்துவ உரிமை பெற்றுக்கொண்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார்.