வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை புனரமைப்பதற்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமாப்;பித்திருந்தார்.
ஜப்பான் அரசாங்கம் இத்திட்டத்துக்கு 2298 மில்லியன் யென் நிதியை உதவியாக வழங்குகிறது. சத்திரசிகிச்சைக் கூடத்திற்கான புதிய கட்டடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு நரம்பியல் மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவு உட்பட பல பிரிவுகள் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.
sintha
யாழ் போதனா வைத்தியசாலை மிகவும் முக்கியமாக திருத்தம் செய்யப்பட வேண்டும். இவ்வைத்தியசாலை யாழ்மாவட்ட மக்களுக்கு மட்டும் சேவை ஆற்றுவது மட்டுமன்றி கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கும் சேவை ஆற்றுகிறது. அபிவிருத்தி நடவடிக்கைகளில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைக்கு முன்னூரிமை கொடுக்கப்பட வேண்டும்