காலன்னாவை எண்ணெய் சுத்தேகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலம் எரிபொருள் விநியோகிப்பதற்கான திட்டத்தின் கீழ் மாற்றுக் குழாய்கள் பொருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். 18.7 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்கு செலவிடப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தக்கு சர்வதேச விலைமனுக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பௌசி சமர்பித்த மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு தறைமுக விஸ்தரிப்பு வேலை காரணமாக நிருக்கடியால் செல்லும் எரிபொருள் விநியோகக் குழாய் இடமாற்றப்படவுள்ளது. அதற்கு 432 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளதுடன் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்குகிறது.