மிகவும் பின்தங்கிய கிராமங்களில் சுகாதார சிகிச்சை மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களில் இந்த சிகிச்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதாரம் மற்றும் போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்பித்திருந்தார். இத்திட்டத்துக்கு அரசாங்கம் 55.7 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.